நம்ம நாட்டுக்குள்ள
ஜாதி வெறி தலைவரித்து ஆடியது
தாழ்த்தப்பட்ட ஜாதியினும்
மேல் ஜாதியென்று
பேதம் பேசும் கூட்டம் ஒன்று
ஆளும் வர்க்கத்தினை
தன்வய படுத்தி கொண்டு
மனிதனை மிருகம்போல
வதைத்ததையா
சுட்டெரிக்கும் வெயிலில்
வெறும் காலுடன்தான்
நடக்க வேண்டும்
இடுப்பு வேட்டிமட்டும்
அவனுக்கு ஆடை ஆகும்
தோளில் துண்டு போடுதல் ஆகாது
எதிரே உயர்சாதி யாரும் நடந்து வந்தால்
இடுப்பில் துணியை கட்ட வேண்டும்
கோயில் உள்ளே நுழைய கூடாது
கடுமையான கொடுமைகள்
நடந்துவந்த காலமதில்
கல்விக்கண் திறந்தது
மடமைகள் நீக்கிடவே சில
மாமனிதர் உதிதன்றே
பகுத்தறிவு போதிக்க
இயக்கங்கள் நிறுவினரே
நாடுஎங்கும் பரவிடவே
கட்சியாக மாறியது
நல்ல பல காரியங்கள்
நடந்தேறியது தாழ்த்த பட்ட மக்களுக்கு
தனி மனித சுதந்திரம் கிடைத்ததுவே
நாட்கள் செல்ல செல்ல
கட்சி பணிக்கு காசு பார்க்க
துவங்கியதால் நல்லவர்கள்
துரத்தப்பட்டு துஷ்ட்டர்கள்
நுழைந்தனரே உழைக்கும் வர்க்கத்திற்கு
நீதி கேட்க கட்சி ஒன்று பிறந்தது
இரண்டாக உடைந்து வலது இடது ஆனது
இதுபோல் பெருகி பெருகி
நீதி கேட்கும் கட்சி போகி
வீதிக்கு ஒரு கட்சி ஆனது
நடிகனெல்லாம் தலைவனென்று
நாரி போச்சு அரசியலும்
நாலு படம் ஹிட் ஆனதுமே
நான்தான் தலைவன் என்கின்றான்
நாரி போச்சு அரசியலும்
மீண்டும் சாதி பேரை சொல்லி
நாட்டாண்மை செய்யுறாங்க
நாடு எங்கே போக போவுது என்று
எனக்கும் தெரிய வில்ல
நாத்திகம் பேசுறவனும் சரியில்லை
ஆதிக்கம் பேசுறவனும் சரியில்லை
கட்சியினு சொல்லி கொண்டு
பல்லிளிக்கும் பாதகர்கள்
ஒட்டு கேட்கும் போதுமட்டும்
சாந்தமாக வந்திடுவார்
வாக்களிக்கும் போது மட்டும்
எஜமானர் நீங்கள் என்பார்
ஜாக்கிரதை ஜாக்கிரதை..!
ஏன் பிறந்தாய் தொடரும்...
அதிரை சித்திக்
// ஒட்டு கேட்கும் போதுமட்டும்
ReplyDeleteசாந்தமாக வந்திடுவார்
வாக்களிக்கும் போது மட்டும்
எஜமானர் நீங்கள் என்பார்
ஜாக்கிரதை ஜாக்கிரதை..! //
கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள்...
ஆம் ..தம்பி நிஜாம்
Deleteநமது தொகுதி MLA ஒரு உதாரணம்
பதிவுக்கு நன்றி.
ReplyDelete// ஒட்டு கேட்கும் போதுமட்டும்
சாந்தமாக வந்திடுவார்
வாக்களிக்கும் போது மட்டும்
எஜமானர் நீங்கள் என்பார்
ஜாக்கிரதை ஜாக்கிரதை..! //
கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள்...
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நடக்கும், நடந்து கொண்டிருக்கிற உண்மை வரிகள்...
ReplyDeleteநன்றாக கூறினீர்கள் ..தனபாலன்
Deleteபெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
ReplyDeleteமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.
நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.
மாமியாறிக் கொடுமைப் படுத்தும் மருமகள் மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார் விதம் விதமான ஐடியாக்களில் கொலை செய்வது எப்படி என்று வ்த்தியாசம் மற்றும் விரசம் வீட்டுக்குள்ளேயே எந்த நேரமும் காட்டும் தொலைக்காட்ச்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதி.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
-இந்தியன் குரல்
9444305581
ஜாதி சமயம் பேசி மக்களை பிரிப்போருக்கு சவுக்கடி கொடுத்துள்ளார். நமது அதிரை சித்திக்.
ReplyDeleteஜாதியும், சினிமாவும் அரசியலில் கலந்திட்ட நாட்டின் நிலையை கவிவரியில் சுற்றி காட்டியுள்ளார்.
வாழ்த்துக்கள்.
அரசியல் வாதிகளின் அக்கிரமம்
Deleteஜாதி வெறியை தூண்டி ஆதாயம் தேடும் அக்கிரமம்
ஜாதிகள் இல்லையடி பாப்பா சமத்துவம் ஒன்றே போதுமடி பாப்பா என்று உரைத்தார்கள் அப்போது நமது பாரதியார் ஆனால் ஜாதிக்களை வைத்து இப்போது கேக்கிறார்கள் ஒட்டு.அவர்களுக்கு இந்த பதிவு ஒரு வேட்டு.அருமையான பதிவு அதிரை சித்திக் அவர்களே.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாக்களிக்கும் போது மட்டும்
ReplyDeleteஎஜமானர் நீங்கள் என்பார்
ஜாக்கிரதை ஜாக்கிரதை.
அப்பட்டமான உண்மை வரிகள்.
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் சமுதாயப் பணி. தங்களின் அனுபவம் இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதலாக இருக்கும். இனி வரும் நாட்களில் நம் சந்ததிகள் நல்லவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டுமே அன்றி பணம் பண்ணும் இயந்திரங்களாக இருக்கக் கூடாது என்று கருதும் எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன். உங்களது சிந்தனைகள் செயலாக்கம் பெற துணையாக இருக்க என்னால் முடியும்.
ReplyDeleteநன்றி சகோ பால சுப்பிரமணியம்
Deleteஇந்த தளத்திற்கு எனது தொடர் வருகைக்குக் காரணம் ஒவ்வொரு படைப்பாளிகளும் சமூக அக்கரையுடன் தரமான படைப்புகளை படைத்தது வருகின்றீர்கள்.
ReplyDeleteதொடரட்டும் உங்களின் சமுதாயப் பணி. தங்களின் அனுபவம் இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதலாக இருக்கும். இனி வரும் நாட்களில் நம் சந்ததிகள் நல்லவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
நண்பரே உள்ளம் கேட்குமே மோர்
ReplyDeleteஆவலாய் உள்ளோம்
தம்பி நிஜாம் .சகோ ஜமால் காக்கா சகோ திண்டுக்கல் தனபாலன் .
ReplyDeleteசகோ அதிரை மெய்சா,சகோதரி சசி கலா சகோ பால் சுப்ரமனியன்
சகோ தமிழன் ,அன்பு நண்பர் சபீர் ஆகியோர் வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி
இதோ இன்றே எழுதி அனுப்புகிறேன்
ReplyDeleteஉள்ளம் கேட்குமே MORE..! தொடரை