..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான்
வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற
...வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்
மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்
...மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப்
பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப்
...பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை !
கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக்
...காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால்
பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள்
...பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை
மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச வேண்டும்
....மலிந்துவரும் இக்கொடுமை நீங்க வேண்டி
கண்ணிமைபோல் பெண்களையும் காத்து நிற்கும்
....காலத்தின் கட்டளையாம் பர்தா என்பேன்
ஆதிவாசி அன்றிருந்தாள் அறியா வேளை
...ஆடைகளை உடுத்தவுமே தெரியா மூளை
ஓதியோசித் துணரத்தான் தந்தான் திட்டம்
...ஓரிறையின் மறைதனிலே ஆடைச் சட்டம்
ஆதிவாசிப் போலிருந்தால் கூழாங் கல்லு
...ஆறறிவு பெற்றவளா நீயும் சொல்லு
பாதிபாதி உடையணிந்தால் உன்றன் மேனி
...பார்ப்பவர்கள் கண்கட்குத் தானே தீனி !
குறிப்பு : இந்த கவிதைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. தடாகம் கலை இலக்கிய வட்டம் சார்பாக சர்வதேச மட்டத்தில் நடத்திய கவிதைப்போட்டியில் தடாகம் கவிதை தொகுப்பு மலருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற சிறப்பை பெறுகின்றது.
குறிப்பு : இந்த கவிதைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. தடாகம் கலை இலக்கிய வட்டம் சார்பாக சர்வதேச மட்டத்தில் நடத்திய கவிதைப்போட்டியில் தடாகம் கவிதை தொகுப்பு மலருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற சிறப்பை பெறுகின்றது.
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
// இந்த கவிதைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. தடாகம் கலை இலக்கிய வட்டம் சார்பாக சர்வதேச மட்டத்தில் நடத்திய கவிதைப்போட்டியில் தடாகம் கவிதை தொகுப்பு மலருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற சிறப்பை பெறுகின்றது.//
ReplyDeleteவாழ்த்துகள் கவிக்குறள் !
நமக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்றது
இதுபோன்ற சாதனைகள் பல பெற்றிட மீண்டும் என் வாழ்த்துகள்...
ஜஸாக்கல்லாஹ் கைரன் விழிப்புணர்வு வித்தகரே! நேற்றிரவு என் முகநூல் முகவரியைத் தேடி வந்த இம்மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்தேன்; உடன் நீங்களும் தெரிவு செய்யப்பட்ட இச்செய்யுளை இவ்விடம் பதிவது கடன் என கண்ணும் கருத்துமாய்ப் பதிவிட்டிருக்கின்றீர்கள். இலங்கை மற்றும் சில நாடுகளில் தற்பொழுது பர்தாவுக்குத் தடை விதிக்கும் ஓர் அச்சமுள்ள அரசியல் விவகாரத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள இத்தருணத்தில் அதே இலங்கையில் உள்ள தடாகம் இலக்கிய வட்டம் சர்வ தேச மட்டத்தில் வைத்த கவிதைப் போட்டிக்கு இக்கவிதையே பொருத்தமாகும் என்று எண்ணினேன்; அனுப்பினேன்; அல்லாஹ்வின் அருளால் வெற்றியை ஈட்டினேன். இத்தடாகம் இலக்கிய வட்டம் தெரிவு செய்து கவுரவிக்கப்பட்ட மற்ற இருவரும் நமதூர்க்கு அருகில் உள்ளவர்களான, முத்துப்பேட்டை மலிக்கா ஃபாரூக் என்னும் என் அன்புத் தங்கை மற்றும் ஒரத்தநாடு (தற்பொழுது கனடா நாடு) கவிஞர் புகாரி ஆகியோரும் அடங்குவர். முதற்பரிசை வென்ற முத்துப்பேட்டை மலிக்கா ஃபாரூக் அவர்கட்கு “கவியருவி’ என்னும் பட்டம் கொடுத்து கவரவித்துள்ளார்கள், இவ்விலக்கிய வட்டத்தின் நிறுவனர் தங்கத் தாமரை- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி என்னும் என் அன்புச் சகோதரி அவர்கள். உங்களின் துஆவும் அவாவும் இன்ஷா அல்லாஹ் விரைவில் நிறைவேறும்; சிகரத்தை நோக்கி- உங்களின் ஆசிகளைத் தேக்கி.
Deleteபர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லுரி மாணவியின் அனுபவம் !
ReplyDeleteஒரு நேரத்தில், பர்தா அணிவதைப் பற்றி மிகவும் அச்சம்கொண்டிருந்தேன். பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும்‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர் ?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.
தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச்செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக,வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன்.பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும்அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது. எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும்,உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
வகுப்பு இடைவேளையின் போது சகமாணவிகள் பர்தாவைப் பற்றி பலகேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை.
இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால்அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை. ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும்.
பர்தா பற்றிய வியத்தகு அனுபவங்கள் எனக்கு ஏற்பட்ட போதிலும்,மற்றவர்கள் எவரும், எவரையும் வற்புறுத்துவது கூடாது எனக் கருதுகிறேன். அடிக்கடி பர்தா அணிவது பற்றிய தவறான, வழிதவறிய அழுத்தம் தரப்படுகிறது. பர்தா அணியாதவர்கள் ஏதோ பெரும் தவறிழைத்துவிட்டனர் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடக் கூடாது. மாறாக, பர்தா ஏன் அணிய வேண்டும் என்பதை மென்மையாக எடுத்துச் சொல்ல வேண்டும். மக்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமேயல்லாது, அவைகள் பற்றி கட்டாயப்படுத்தக் கூடாது.
பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப்பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும்.
ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானதுஎன்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது. வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன.பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும்ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா?’ அல்லது ‘கெட்டவரா?’என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.
(இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் இது. கட்டுரையின் தமிழாக்கம்: டாக்டர், பீ. ஹாமிது அப்துல்லாஹ் அவர்கள்
அன்பான விழிப்புணர்வு வித்தகரே அஸ்ஸலாமு அலைக்கும். நீண்டதொரு விளக்கம் அளித்து என் கவிதைக்கு மேலும் “சத்துணவு ஊட்டும்” உங்களின் இனிய பின்னூட்டம் கண்டு பேருவுகை உற்றேன்; உங்களிடமிருந்து நிரம்ப விடயங்களைக் கற்றேன்.
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் அழகான கவிதை, அதுவும் பர்தாவைக் கருவாக வைத்து எழுதியது அதைவிட அழகு.
எது எப்படி இருந்தாலும் இந்த கவிதை மூலம் பல பயனுள்ள உண்மைகள் சொல்லப்பட்டிருப்பது ஒரு படி மேல்.
மேலும் தொடர பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அன்பு மச்சானின் அருமை வாழ்த்துக்கு அகமகிழ்வான நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன்.
Deleteஉங்களுக்கு மிகப்பெரிய அங்கிகாரமைய்யா
ReplyDeleteநீடுழி வாழ்க
படைத்தவன் என்னை எதற்காகப் படைத்தானோ, அத|ற்காக என்னை அங்கீகரிக்கும் தொடர் நிகழ்வுகள் இறைவன் நாடினால் தொடர்ந்து எனக்கு வரும் அய்யா. இறைவன் நாடினால் இன்னும் சிகரத்தை நோக்கி- உங்களின் ஆசிகளைத் தேக்கி முன்னேற்றம் காண்பேன் அய்யா.. அமீரகத்திலும் எனக்கு முழுமையான அங்கீகாரங்களும், பட்டங்களும் வழங்கப்பெற்று வருகின்றன;இலண்டன் மற்றும் இலங்கையிலும் நேரில் கலந்து சிறப்பிக்க அன்பான அழைப்புகள் வருகின்றன. இவைகள் எல்லாம் இறைவன் என் மீது காட்டும் பேரருள் என்ற என் “கடவுள் நம்பிக்கை” மற்றும் அயராத என் கடின உழைப்பும் அதற்காக என் ஆசான்கள் காட்டிய வழிகளும் , பிழைத்திருத்தங்களும் தான் காரணியமாக அமைகின்றன என்பதை எண்ணும் போதில், அவ்வாசான்கள் எல்லார்க்கும் என் வெற்றிகளைக் காணிக்கையாக்குகிறேன் அய்யா.
ReplyDeleteஉங்களின் ஆசான்கள் மீது இவ்வளவு பற்றுதலை கொண்டுள்ளீர்கள். உங்களை என் ஆசானாக பறைசாற்றிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் அய்யா
Deleteஇறையருளால் 1981 ஆம் ஆண்டு முதல் இற்றை நொடி வரை அடியேனும் ஓர் ஆசானாகவே இருந்து வருகின்றேன். யாப்பிலக்கணம், ஆங்கில இலக்கணம், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களை இலவயமாகவே நடத்தி வருகின்றேன்; என்னிடம் பயின்றவர்கள் அயல்நாடுகளில் உயர் பதவிகளில் பலர் உளர்; சிலர் பெரும் வணிகர்களாகவும் , பேராசிரியராகவும் உளர். என் உளத்தூய்மையான இச்சேவையால் அவர்களின் உள்ளத்தில் இன்றும் ஆசானாகவே பரிணமிக்கிறேன்; எல்லாப் புகழும் இறைவனுக்கே. நீங்களும் என் மாணவராய் இருப்பதை நீங்களே விரும்பிக் கேட்பதை அடியேன் மறுப்பதற்கில்லை.
Deleteஎன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க.
பர்தாவில் முகம் மறைத்து
ReplyDeleteபாதையோரம் நீ சென்றால்
பார்ப்போரும் போற்றிடுவர்
பகையோரும் புகழ்ந்திடுவர்
பணிவான பெண்மணி நீயென்று
பர்தாவின் முகம் மறையா
பாரினில் நீ நடந்தால்
பணிவோடு நடப்பவரும்
பாதகனாய் உருவாகிடுவர்
பழிபோட்டு பேசிடுவார்
பர்தாவை முன்வைத்து
பளிச்சென்ற கவி வடித்து
பார்போற்ற புகழ் மணக்கும்
பகட்டில்லா கவியன்பரை
பாராட்ட வார்த்தையில்லை
அன்பான மெய்சா
ReplyDeleteஅன்பாலே தைத்தாய்
அழகான் கவிதையாய்
அதனையே ஆடையாய்
அன்புடன் ஏற்கிறேன்!
வினோதினி ..காவ்யா ..இன்னும் பல சகோதரிகள்
ReplyDeleteஇழப்பு ..புர்காவின் அருமை புரியும்
மதுரை ஆதினம் அவர்கள் கூட வலியுறுத்திய செய்தியும் யாம் அறிவோம். உங்களின் வருகைக்கும் வினொதினி, வித்யா ஆகியோரின் இழப்புக்கும் - காமுகர்களின் ஈர்ப்புக்கும் காரணம் பர்தா இல்லாமல் செல்வது தான் என்பதை நினைவு படுத்தியமைக்கும் மிக்க நன்றி.
Deleteபெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
ReplyDeleteமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.
நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.
மாமியாறிக் கொடுமைப் படுத்தும் மருமகள் மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார் விதம் விதமான ஐடியாக்களில் கொலை செய்வது எப்படி என்று வ்த்தியாசம் மற்றும் விரசம் வீட்டுக்குள்ளேயே எந்த நேரமும் காட்டும் தொலைக்காட்ச்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதி.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
-இந்தியன் குரல்
9444305581
அன்புச் சகோதரர் பால சுப்ரமணியன் அவர்களின் கோரிக்கைகள் அரசால் நிறைவேற்றப்பட்டால் நாடு நாடாக இருக்கும், இல்லையெனில் மனித உருவில் மிருகங்கள் நடமாடும் காடாகத் தான் விளங்கும். உங்களின் வருகைக்கும் நீண்ட விளக்கத்திற்கும் நன்றிகள்.
Deleteவிழிப்புணர்வு ஆக்கம் பதித்தமைக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteபர்தா காமுக்கனின் பார்வைகள் தாழ்த்தபடுக்கின்றது கவர்ச்சிகள் மறைக்கபடுக்கின்றது அசபாவிதக்கள் அழிக்கபடுக்கிறது. நிச்சயம் பெண்கள் அனைவரும் அணியவேண்டும் இந்த பர்தா.
அன்பு நேசர் ஹபீப் அவர்களின் இனிய கருத்துரைக்கு என் உளம்நிறைவான நன்றி.
ReplyDelete