இது ஆசிரியரின் பார்வைக்கு…
எத்தனை ஆசிரியர்க்கு சென்றடையும் என்று தெரியவில்லை தயவு செய்து இக்கருத்தை சேர்த்துவையுங்கள்.
எத்தனை ஆசிரியர்க்கு சென்றடையும் என்று தெரியவில்லை தயவு செய்து இக்கருத்தை சேர்த்துவையுங்கள்.
சரி விசயத்திற்கு வருகிறேன்…
மாணவர்களின் பின்னணியை நான்கு வகையாகப் பார்க்கிறேன் .
1. வசதியான படித்த தம்பதியர்களின் பிள்ளைகள் .
2. வசதியான வீட்டு பிள்ளைகள் ஆனால் பெற்றோர் படிக்காதவர்கள் .
3. வசதியற்ற வீட்டு பிள்ளைகள் ஆனால் பெற்றோர் படித்தவர்கள்
4. வசதியற்ற வீட்டு பிள்ளைகள் படிக்காத தம்பதிகளின் பிள்ளைகள்
இந்த மாணவர்களின் மனநிலை எப்படி ? உள்ளத்தில் பாடங்களை எந்த அளவிற்கு பதியவைக்க முடியும் என்பதை பார்போம்...
* படித்த வசதியான பெற்றோர்களின் பிள்ளைகள் மன நிலை உற்சாக
மான நிலையில் இருக்கும் .தான் உயர்ந்த நிலைக்கு கல்வியே
காரணம் என்பதால் பிள்ளைக்கு கல்வியின் மகத்துவத்தை
வீட்டிலும் போதிப்பதோடு பிள்ளையின் சூழலை உன்னிப்பாக
கவனிப்பது ..ஆசிரியரிடம் பிள்ளையை பற்றி கேட்டு அறிந்து
கொள்வது போன்ற நடவடிக்கைகளால் முதல் தர மாணவராக
திகழ வாய்ப்புண்டு. பள்ளிக்கு உற்சாகமாய் வருவார்கள் .அவர்களின்
உள்ளம் உற்சாகத்தில் திகழும் .இது பொதுவான கருத்து
* வசதியான வீட்டு பிள்ளை ஆனால் பெற்றோர்கள் படிக்காதவர்கள்
இம்மாதிரியான பிள்ளைகள் வீட்டில் உற்சாகமாக இருக்கும்
ஆனால் பள்ளிக்கூடத்தில் சோபிப்பத்தில்லை. இவர்கள்
உள்ளத்தில் மன சோர்வு சிறிது காண பட்டாலும் வீடுதிரும்பியதும்
மனசோர்வு திரும்பி உற்சாக நிலைக்கு திரும்பி விடுவர் .
* வசதியற்ற வீட்டு பிள்ளை ஆனால் பெற்றோர்கள் படித்தவர்கள்
பிள்ளைக்கு படிப்பின் மகத்துவம் ஊட்டி வளர்ப்பதால் வீட்டில்
பயிற்சி பள்ளியில் உற்சாக வரவேற்ப்பு உள்ளம் துள்ளும்
படிப்பின் மீது ஆர்வம் More... More... என்று உள்ளம் கூறும்.
* வசதியற்ற படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகளின் நிலை மிக பரிதாபமானது வீட்டிலும் வறுமையின் கோரப்பிடி ..தத்தி தப்பி பள்ளிக்கு வரும் பிள்ளைக்கு மனச் சோர்வால் வதங்கிய பிள்ளைகளுக்கு பாடங்களை கவனிக்க இயலாத நிலை !
இதனை எப்படி சரி செய்வது ? அடுத்த வாரம் காண்போம்...
இன்னும் வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
அழகிய ஆய்வும்... அதற்குரிய தீர்வும்...
ReplyDeleteசமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன.
மாணவர்களுடைய அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதோடு அவர்களின் எதிர்காலத்தையும் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஆசிரியப் பெருமக்களே !
மாணாக்கர்களிடேயே சாதி, குலப்பெருமை, ஏழை - பணக்காரன், அறிவுடையான் - அறிவற்றவன் ஆகியவற்றில் பாகுபாடு காட்டாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது ஆசிரியப்பெருமக்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.
தம்பி நிஜாமின் கூற்று மிக சரி
Deleteஆசிரியரின் பங்கு வாழ்நாளில் மறக்க முடியா ஒன்று
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇதனை எப்படி சரி செய்வது?
என்னுடைய வாழ்நாளில் நான் எத்தனையோ எத்தனையோ பார்த்ததுண்டு, கேட்டதுண்டு, படித்ததுண்டு, எழுதியதுண்டு, பேசியதுண்டு.
ஆனால், உண்மையாகவே மெய்யாகவே இன்றுதான் அதுவும் இதுதான் நான் முதன் முதலாக படிக்கும் ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கப்பட்டு எழுதிய ஆக்கமாகும்.
சகோ, சித்திக் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இன்னும் சொல்லப்போனால் எனக்கு கடுமையான பொறாமையாக இருக்குது. பயந்து விட வேண்டாம். என் பொறாமை குளுமையானது.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மிக்க நன்றி ..
Deleteஜமால் காக்கா அவர்களே ..!
தங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப படைப்பை மெருகேற்ற
என் உள்ளம் கேட்கிறது MORE என்று
பதில் கொடுத்ததற்கு நன்றி.
Deleteதற்போதைய சூழலில் தேவையான அருமையான
ReplyDeleteகருத்தை முன்வைத்து பதிவைத் தொடர்ந்திருக்கிறீர்கள்
துவக்கம் அருமை.தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ ரமணி அவர்களே
Deleteஆசிரியர் - பெற்றோர் - மாணவர் புரிந்துணர்வு அவசியம். இதில் யாராவது ஒருவரிடம் குறைபாடு காணப்பட்டால், பாதிக்கப்படுவது மாணவர் ஆவார்.
ReplyDeleteநன்றி ..சகோ தமிழன் அவர்களே
Deleteஅன்பு நண்பரே நம் பள்ளி பருவத்தில் தாம் சொன்ன அத்துணை பேர்களையும் கண்டிருப்போம் அவர்களைப்பற்றி பெரிதாக யோசித்திருக்க மாட்டோம் தாம் விபரமாக எழுதப்போகும் கட்டுரையை எதிர் நோக்கி காத்திருக்கின்றேன் மற்றவர்கள் போல
ReplyDeleteநன்றி ..
Deleteநண்பா ...நல்ல பல கருத்து தம்மிடமும் எதிர் பார்கிறேன்
ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களும் படிக்க வேண்டிய கட்டுரை. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன். நன்றி!
ReplyDeleteநன்றி சகோதரி ..
Deleteஒவ்வொரு வாரமும் வித்தியாசமான உளவியல் ஆக்கங்களைகொடுத்து ஊக்கப்படுத்தி அனைவரையும் சிந்திக்க வைக்கும் அன்புச்சகோதரர் அதிரை.சித்திக் அவர்களுக்கு என் அன்பான சலாமும் நன்றியும்.
ReplyDeleteஇந்தவாரம் சொல்லப்படத் தங்களின் கருத்துக்கள் சற்று அதிகம் சிந்திக்க வைத்துவிட்டது.
வாழ்த்துக்கள்.
நன்றி சகோ அதிரை மெய்சா அவர்களே ..
Deleteபத்திரிகைத் துறை உங்கட்கு நன்றாகவே கை கொடுப்பதை ஒவ்வொரு வாரமும் புதிய சிந்தனயுடன் பூக்கும் உங்களின் ஆக்கம் ஒரு சான்றாகும்!
ReplyDeleteநன்றி ..கவியன்பரே
Deleteதங்கள் கருத்திற்கு நன்றி
அனைத்தும் பொதுவான கருத்து சொல்லி உள்ளீர்கள்... உண்மை அதுவல்ல என்பதை அடுத்த பகிர்வை முடித்தவுடன் பகிர்ந்து கொள்வோம்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றி சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களே ..
Deleteதங்களின் மேலான கருத்தை எதிர்பார்கிறேன்
இன்றைய சூழலுக்கு ஏற்ப முக்கியமான கருத்தை பகிர்ந்துள்ளீர்கள். நிச்சயம் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் சகோதரி
Deleteநல்ல பதிவு இன்றைய சூழ் நிலையில் மாணவர்கள் கொஞ்சம் படிகிறார்கள் இருந்தாலும் பெற்றோர்கள் அதனை சிலர் வழிநடத்தவில்லை.
ReplyDeleteஆம் ..சகோ ஹபீப்
ReplyDeleteசூழ்நிலை கேற்ப மாணவர்கள் வழி நடத்த பட
வேண்டும் ..தங்களின் கருத்திற்கு நன்றி