.

Pages

Wednesday, April 17, 2013

[ 7 ] தொழில் புரிவோம் வாருங்கள் !

தொழில் என்பது ஒரு குழந்தை பிரசவம்போல் சிலருக்கு ஆண் குழந்தை சிலருக்கு பெண் குழந்தை சிலர் எவ்வளவுதான் முயன்றாலும் அந்த பாக்கியம் கிடைப்பதில்லை எல்லாம் அவன் செயல் என்று தான் நினைக்க தோன்றும் மணவி, குழந்தை, தொழில் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
     
ஒரு குழந்தையை பெற்றெடுப்பதும் ஒரு தொழிலை உண்டாக்குவதும் அதன் பின் அதுகளை வளர்த்தெடுப்பதும் தாய் தந்தையரின் கடமையாகிறது. 
     
ஒரு தொழிலின் தந்தை என்பது முதலாளி, Managing Director, Working Partner போன்றோர்தான் அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான பொருளாதாரங்கள், சீர்திருத்தங்கள் இவைகளில் கவனம் செலுத்தி தொழிலை மேம்படுத்தி கொண்டே செல்ல வேண்டும் சரி தந்தையை சொல்லி விட்டோம் தாய் யார் ?
   
தாய் வேறு யாருமல்ல அந்த தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் அத்துணை ஊழியர்களும் தான் [ மேலாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை ] அவர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தை தம் குழந்தை போல் பார்க்கவேண்டும் குழந்தைக்கு பொருளாதாரம் உடைகள் இவைகளைவிட உணவு [பால்] முக்கியம் அதை தாயால் மட்டுமே கொடுக்க இயலும் தொழிலுக்கு தாய் ஊழியர் என்றோம் ஆக ஊழியர்கள் தான் அப்பணியை     திறம்பட செய்யவேண்டும்.
   
முதலாளியும் தொழிலாளியும் ஒரு தொழிலுக்கு தாயும் தந்தையும் என்றால் தாயும் தந்தையும் கணவன் மனைவிதானே ? எந்த சந்தேகமும் இல்லை சாட்ச்சாத் கணவன் மனைவிதான் இருவரின் ஊடல்கள் எந்தனையோ இருந்தாலும் ஒற்றுமை எனும் விஷயத்தில் உறுதியோடு இருத்தல் வேண்டும். 
 
கணவனாகிய முதலாளி தம் மனைவியாகிய தொழிலாளிக்கு அரவணைப்பு, தேவையை பூர்த்தி செய்தல்,பரிவோடு கவனித்தல் போன்றவைகளை சரியாக செய்தால் தொழில் சிறந்தோங்கும் 
   
ஒரு தொழில் தொய்வு ஏற்பட்டால் பாதிக்கப்படுவது முதலாளி, என்றாலும் முதல் பாதிப்பு தொழிலாளிக்கு தான். அனுபவப்பட்டவர்களுக்கு அதன் வருத்தம் தெரியும்! உதாரணத்திற்கு துபையில் வேளை செய்யும் ஒரு தொழிலாளிக்கு அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் நிறுவனத்தை மூடுவதாக கம்பெனி அறிவித்தால் அவரின் நிலை என்ன ?  அவரின் முதலாளியின் நிலை என்ன யோசியுங்கள் !?
     
நல்ல வருமானத்தில் இருந்துவிட்டு திடீரென்று வேலை இல்லை எனும் பட்சத்தில் திரும்ப தாய்நாடு வரவேண்டும் பின் வேறு நாடோ அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேறு ஏதோ செய்ய வேண்டும் நினைத்தது அமையும் வரை மன குழப்பம் சுற்றத்தாரின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஓய்ந்து விடுவோம்.
     
ஒருவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு ஊரில் சிறிது காலம் தங்கும் சூழ்நிலையில் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் கேட்டாராம் என்ன ரொம்ப நாளா தங்கி விட்டதுபோல் தெரிகிறது? அதற்கு இவரின் பதில் ஆமாம் நான் என் வீட்டில் தான் சாப்பிடுகிறேன் என்றாராம் ! கேள்வி கேட்டவருக்கு ஒன்றும் புரிய வில்லை தம்பி நான் கேட்டது. என்று சொல்லும் பொழுதே இவர் கையை காட்டி பேச்சை நிறுத்தும்படி சைகை செய்து நான் உங்கள் விட்டில் சோறு கேட்கவில்லையே என்று பதில் உறைக்க பக்கத்து வீட்டுக்காரருக்கு முகம் மாறிப்போனது    

அடுத்த வாரம் கணவன்,மனைவி,கனவு எனும் தலைப்பில் [ தொழிலுக்கு சம்மந்தமில்லாத ] ஓர் ஆய்வு கட்டுரை...!?
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

15 comments:

  1. தொழிலாளியின் சிறப்பைப்பற்றி கூறிய விதம் அருமை !

    பதிவை படிக்கும் நண்பர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும்

    வருகின்ற வாரத்தில் கணவன் - மனைவியின் கனவை பதிவாக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோ. சேக்கனா நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும். , தங்களின் தகப்பனாருக்கு கண்சிகிச்சை செய்திருப்பது மச்சான் சபீர் அவர்கள் சொல்ல அறிந்தேன். அவர்களுக்கு பார்வையில் நல்லொளி கிடைக்க துஆ செய்கிறேன்.

      Delete
    2. மிக்க நன்றி நண்பர் ஜஹபர் சாதிக் !

      இறைவனின் உதவியால் என் தகப்பனாரின் கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று நேற்று இரவு ஊர் திரும்பினோம். கருத்திட்டும் - அலைபேசியில் கூப்பிடும் நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் உடல் நலம் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்த அன்பு நண்பர்களுக்கு - மூத்த எழுத்தாளர்களுக்கு - உறவினர்களுக்கு எனது நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நேரம் கிடைத்தால் 'கண் ஒளியை நோக்கி வாப்பாவுடன் ஒரு பயணம்' என்ற தலைப்பிட்டு எனது அனுபவத்தை தொகுத்து பதிகிறேன். [ இறைவன் நாடினால் ]

      Delete
  2. பதிவுக்கு நன்றி.

    பதிவுகள் அழகாக போய்க்கொண்டிருக்கு. பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. தொழிலையும் தொழில் சார்ந்தவர்களையும் உறவு முறை வைத்து சொன்ன விதம் அருமை. தாங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை.

    வாழ்த்துக்கள்.

    v

    ReplyDelete
  4. அருமையான ஒப்பீடு... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இவ்வளவு விரைவாக முடித்து விட்டீர்களா வணிகவியலை அன்பின் தொழிலதிபர் அவர்களே! பட்டப்படிப்பில் தான் நாங்கள் வணிகம் கற்றோம்; நீங்கள் பட்டறிவு என்னும் அனுபவப் பாடம் நிரம்பக் கற்றிருக்கின்றீர்கள்; அதனால் தொடர்ந்து வணிகவியலை எழுதுங்கள்; பின்னர் வாழ்வியலை எழுதுங்கள்!

    ReplyDelete
  6. தொழில் திறம்பட முதலாளி தொழிலாளி உறவின் அவசியத்தை தாய் தகப்பனுக்கு ஒப்பிட்டு சொன்னது மிக அருமைப் பொருத்தம்.

    ReplyDelete
  7. கவியன்பர் அவர்களே வணிகப்பாடமே நடத்தி போரடிக்காமல் இருக்கத்தான் இடையில் நீதி போதனை க்ளாஸ். வணிகப்பாடம் முடியவில்லை சகோ.செக்கன்னா வும் முடிக்க விடமாட்டார்
    ஜகபர்,தனபாலன் அவர்கள்,மெய்ஷா அவர்களும் ஒரே விமர்சனம் செய்துள்ளீர்கள் ஜசக்கல்லாஹ் ஹைர்
    கோ.மு.அ.ஜமால் முஹம்மது காக்கா அவர்களும் எனது கட்டுரையை ரசிப்பதை அறிகிறேன் சந்தோஷம்

    ReplyDelete
  8. // இவ்வளவு விரைவாக முடித்து விட்டீர்களா வணிகவியலை அன்பின் தொழிலதிபர் அவர்களே!//

    தொடர் இன்னும் முடியவில்லை கவிக்குறள் அவர்களே.... இனிதான் சுவாரசியம் நிறைந்த பயனுள்ள தகவல் பல இடம்பெறும்.

    தொடர்ந்து வாசித்து வாருங்கள்...

    இறைவன் நாடினால் தொடர் முடிவுற்றதும் மின்னூல் வடிவில் தளத்தில் கம்பீரமாக இடம்பெறும்.

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் பயனுள்ள தகவலுடன் காத்திருங்கள்

      Delete
  9. நண்பர் சபீர் கூறியது போல ..

    ஒவ்வொரு தொழிலாளியும் தான் வேலை

    பார்க்கும் நிறுவனத்தை குடும்பமாக நினைத்தால்

    இருவரும் முன்னேறலாம்

    ReplyDelete
  10. நிச்சயம் நண்பரே புரிந்துணர்வுகள் மிக அவசியம்

    ReplyDelete
  11. தொழில்லாலிக்கும் முதலாலிக்கும் உள்ள ஒற்றுமை எடுத்துக்காட்டு அருமை.தொழில் வளர இருவரும் ஓன்று படவேண்டும் உண்மையான விசயம்.தொடரட்டும் தொழில்

    ReplyDelete
  12. தொழிலதிபரின் மறுமொழியும், விழிப்புணர்வு வித்தகரின் மறுமொழியும் என் மனத்தினில் ஆறுதலை அளித்தன. நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers