பூட்டுக்கு சாவி சொந்தமா?
பானைக்கு மூடி சொந்தமா?
நெருப்புக்கு உஷ்ணம் சொந்தமா?
வயிற்றுக்கு பசி சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
மலருக்கு அழகு சொந்தமா?
தேனுக்கு இனிப்பு சொந்தமா?
இனிப்புக்கு வண்டுகள் சொந்தமா?
காற்றுக்கு ஊர் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
பருத்திக்கு நூல் சொந்தமா?
நூலுக்கு ஆடை சொந்தமா?
ஆடைக்கு தூய்மை சொந்தமா?
பணத்திற்கு பணம் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
இணையத்துக்கு தளங்கள் சொந்தமா?
தளங்களுக்கு ஆக்கங்கள் சொந்தமா?
ஆக்கங்களுக்கு சிந்தனைகள் சொந்தமா?
சிந்தனைகள் யாருக்கும் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
உணவுகளுக்கு சுவைகள் சொந்தமா?
சுவைகளுக்கு நாக்கு சொந்தமா?
நாக்குகளுக்கு உணர்வு சொந்தமா?
முகத்திற்கு அழகு சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
பேனாவுக்கு எழுத்து சொந்தமா?
தாகத்துக்கு தண்ணீர் சொந்தமா?
நோயிக்கு மருந்து சொந்தமா?
மனிதனுக்கு ஆரோக்கியம் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
வெயிலுக்கு களைப்பு சொந்தமா?
தென்றலுக்கு இன்பம் சொந்தமா?
மரக்கிளைகளுக்கு நிழற் சொந்தமா?
அரிசிக்கு தவிடு சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
தலைக்கு முடி சொந்தமா?
மலைக்கு முகில் சொந்தமா?
சோலைக்கு பறவைகள் சொந்தமா?
இரவுக்கு பகல் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
மண்ணுக்கு மரம் சொந்தமா?
வீடுகளுக்கு மக்கள் சொந்தமா?
நாட்டுக்கு அரசு சொந்தமா?
நிலவுக்கு வான் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
தாயிக்கு பிள்ளை சொந்தமா?
மனைவிக்கு கணவன் சொந்தமா?
கணவனுக்கு மனைவி சொந்தமா?
இரத்தத்திற்கு இரத்தம் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
ஆடைகள் உடலுக்கு சொந்தமா?
உடலுக்கு உயிர் சொந்தமா?
மண்ணுக்கு உடல் சொந்தமா?
ஆசைக்கு இந்த மண் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
வட்டிக்கு வட்டி சொந்தமா?
வட்டியின் குட்டி முதலுக்கு சொந்தமா?
வட்டியும் முதலும் கைகளுக்கு சொந்தமா?
வட்டியோடு விளையாடும் கைகள் மனிதனுக்கு சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
கலைஞனுக்கு கற்ற கல்வி சொந்தமா?
கவிஞனுக்கு படைத்த கவி சொந்தமா?
குயிலுக்கு குரல் சொந்தமா?
கடலுக்கு மீன் சொந்தமா?
மனிதனுக்கு எது சொந்தம்?
யாருக்கும் யாரும் சொந்தமில்லை,
எதுவுக்கும் எதுவும் சொந்தமில்லை,
எல்லாம் மறையக்கூடியது.
அப்போ மனிதனுக்கு எது சொந்தம்?
மனிதனான அவனுக்கு
செய்த நல்ல செயல்களுக்கு நன்மைகள் சொந்தம்.
செய்த தீய செயல்களுக்கு தீமைகள் சொந்தம்.
நல்லதையே நினைப்போம்,
நல்லதையே செய்வோம்,
நன்மைகளை அறுவடை செய்வோம்,
தீமைகளை விட்டு ஒதுங்குவோம்.
இறையச்சம், மரணம் குறித்து பயம், மறுமை குறித்து நம்பிக்கை
இருக்கும் இதயத்தில் எந்த ஒரு களங்கம் இல்லாமல் தூய்மை மட்டும் இருக்கும்.
வாழ்க வளமுடன்
அன்புடன்,
மனித உரிமைக்காவலர்
மனித உரிமைக்காவலர்
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
சிறப்பாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஇன்னும் நீட்டலாம், ஆனால் படிபவர்கள் கண்களின் நலன் கருதி இதோடு முடித்து விட்டேன்.
சொந்தமா-65 முறை
ReplyDeleteசொந்தமில்லை-2 முறை
சொந்தம்-2 முறை
செய்வோம்-2
நினைப்போம்-1
ஒதுங்குவோம்-1
சரியா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteநீங்கள் சொன்னது சரியே, இன்னும் எவ்வளவு சொன்னாலும் சரியாகவே இருக்கும்.
”தேடல்” என்ற ஒரு கவிதையை வனைய என் சிந்தைக் கருவறையில் ஒட்டிக் கொண்டும் இரத்த நாளங்களில் ஓடிக் கொண்டுமிருக்கின்ற ஆதாரக் கருவை- வரிகளை உங்களின் படைப்பில் கண்டதும் வியந்து விட்டேன்; என் கவிதையைப் பிரசவிப்பதா? அப்படிப் பிரசவித்தால் உங்களின் படைப்பும் என் கவிதையும் இரட்டைக் குழந்தைகளாகி விடுமோ என்று எண்ணினாலும், முந்திப் பிரசவமான உங்களின் இப்படைப்பை வரவேற்று, இன்ஷா அல்லாஹ் பின்னர் என் கவிதைக் குழந்தையைப் பிரசவிக்கிறேன்; மச்சான்! நம்மிருவரின் எண்ணங்களின் ஓட்டமும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன; அதனாற்றான் இவ்வண்ணம் ஒரே பாட்டில் சிந்திக்கின்றன!
ReplyDeleteவாழ்த்துகள் மச்சான்!
உங்கள் கருத்துக்கு நன்றி மச்சான்.
Deleteபிரசவிப்பதற்கு முன் மசக்கை எல்லாம் வந்திருக்கேமே மச்சான், இந்த மசக்கையும் மெளனமாகி விட்டதோ.
சொந்தம் ..என்றும்
ReplyDeleteசொந்தமே இல்லை
நற்செயல்கள் நமக்கு
நமக்கு என்றும் சொந்தம்
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஉண்மையில் சொந்தம் என்றும் சொந்தமே இல்லை.
66-முறை மனிதனுக்கு எது சொந்தமென கேள்வியெழுப்பி கடைசியில் சொந்தம் இதுதானென்று சொல்லி முடித்திருக்கும் விதம் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
[மனித உரிமைக்காவலர் ஜமால் காக்கவும் கவிதையில் களமிறங்கி விட்டீர்கள் போலும் வாழ்த்துக்கள்.].
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஅன்று விட்டுக் கொடுத்தவர்கள் இன்று விட்டுக்கொடுக்க மறுப்பவர்கள்.
எனவே நாம் செய்த நல்ல/தீய செயல்களே நமக்கு நாளை சொந்தமாகக்கூடியது. எனவே நன்மை மட்டுமே நமக்கு சேரும் பயன் தரும் நிரந்தர சொத்து என அருமையாய் வரிப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteதம்பி, நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை அதுவே. ஆனால் இந்த மானிடம் புரிந்து கொள்ளுமா?
அருமையான கவிவரிகள் இவ்வுலகில் எல்லாமே நிழல்தான் நமக்கு கடசியில் கிடைக்கும் அந்த ஆறு அடிதான் நமக்கும் சொந்தம் ஆனால் நம் உடலில் தசைகள் நீங்கும் வரை.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteமனிதன் சிந்திப்பானா?
யாருக்கும் எதுவும் நிரந்திரமில்லை !
ReplyDeleteஅழகிய விழிப்புணர்வுடன் கூடிய ஆக்கம்
தொடர வாழ்த்துகள்...
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteயாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை, உண்மைதான், பாவம் இந்த அப்பாவி மனிதன் சொந்தமாக்கிக்கொள்ள முயர்ச்சிக்கின்றானே.