.

Pages

Wednesday, April 24, 2013

[ 8 ] தொழில் புரிவோம் வாருங்கள் [ கணவன் (.=.) மனைவி ] !

தொடர்சியாக 7 வாரங்கள் வணிகப் பாடம் நடத்தியே போரடித்து விட்டேன் ஒரு மாறுதலுக்காக வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தங்களை கணவன் மனைவியாகப்போகும் ஆண் பெண்களின் உள்ளக்கனவு எப்படி என்பதை பாருங்கள்....

தாய், தந்தையரின் பாசத்தில், ஆதரவில்,அரவணைப்பில் வாழ்க்கையை துவங்கிய ஆண்,பெண் இருபாலரும் பதின் பருவத்தை கடந்ததோ அல்லது முடிவிலோ தமக்கென்று பல ஆசைகளோடு மனதில் ஆசைகளை வளர்த்துக்கொண்டு இருப்பர் முக்கியமாக தமது பேச்சுலர் காலம் முடிவில் கல்யாண கனவுகளோடு பல எதிர்பார்ப்பில் கனவுகளை வளர்த்துக்கொள்வர். அந்தவகையில் ஆண் தன் எதிர்பார்ப்பை எப்படி மனதில் நினைப்பார் பெண் தன் ஆசைகளை எப்படி நினைப்பார் என்பதனை வரிசையாய் பார்ப்போம்...

 ஆண் : தமக்கு வர இருக்கும் பெண் துணை அழகாய் இருக்கவேண்டும் என்று முதல் ஆசையை நினைப்பார் [ பொது ஆசை ] அடுத்து படித்த பெண்ணாய் இருப்பது இன்றைய கால இளைஞர்களின் திறமான ஆசையாய் உள்ளது [ காலத்திற்கு ஏற்ற ஆசை ] தம் பேச்சை எக்காலத்திலும் தட்டாது கேட்க வேண்டும் என்ற ஆசை ஒருவர் தவறாது அனைவரது ஆசையாக இருக்கும்[ பேராசை ] தம் தாய், தந்தையருக்கு பணிவிடை செம்மையாய் செய்ய வேண்டும் [ நியாயமான ஆசை ] என்னை மட்டுமே காதலிக்க [ அன்பு செலுத்துதல் ] வேண்டும் ! என் குடும்பத்தாரை போற்றி பழக வேண்டும் [ ஆசை தோசை ] வேலை முடித்து வீட்டு லேட்டாக வந்தால் என்ன ஏதுன்னு துருவித்துருவி கேள்வி கேட்க கூடாது !!!

 பெண் :  தமக்கு அமைய இருக்கும் துணைவன் அந்தஸ்தானவனாக இருக்கவேண்டும், நல்ல சம்பாத்தியம் கொண்டவனாய் இருக்கவேண்டும் [ அப்போ சம்பாத்தியம் குறைவானவர்களின் நிலை ] நான் எதை கேட்டாலும் வாங்கித்தருபவராக இருக்க வேண்டும், [ சர்தான் ] என் தாய் தந்தையரை தம் தாய் தந்தையரை போல் கருதவேண்டும், என்னை மட்டுமே காதலிக்க [ அன்பு செலுத்துதல் ] வேண்டும்,என் குடும்பத்தாரை மதிக்கவேண்டும், வேலை முடிந்ததும் உடனே வீட்டிற்கு வந்திட வேண்டும் [ ஆசை தோசை அப்பாளம் வடை ]
    
இப்படி இருவரும் தமது சுய நலத்தோடு சிந்திக்கையில் எதிர் பார்ப்புகள் அதிகமாகின்றது எதிர் பார்ப்பு நிறைவேறவில்லை எனில் சண்டைகளும் சச்சரவுகளும் பெரிதாகி விபரீத முடிவுகள் சமுதாய சீர்கேடுகள் கோர்ட் படி ஏறும் நிலை. இதற்கு என்னதான் முடிவு !? மாத்தி யோசிப்போம் ??!!
ஆண் யோசித்ததை பெண்ணும் ! பெண் யோசித்ததை ஆணும்!!  மாத்தி யோசித்தால் எல்லாம் சரியாகிவிடும்.
  
 ஆண் : தன் மனைவி,அவள் குடும்பம் ஆகியோரிடத்தில் அந்தஸ்தோடு நடந்து கொள்ள வேண்டும், கை நிறைய சம்பாதித்து மனைவி மக்களை மகிழ்விக்க வேண்டும் அவள் ஆசை பட்டதை தட்டாமல் வங்கி கொடுபவனாக இருக்கவேண்டும், அவளின் பெற்றோரை என் பெர்ரோற்போல் மதித்திடுவேன் அவள் அவள் சார்ந்த குடும்பத்தை ஆதரிப்பேன் அனுசரிப்பேன்.வேலை முடிந்ததும் சுனக்கமில்லாமல் வீடு வந்து சேர்வேன்.

 பெண் : என் அழகை அவருக்கு மட்டுமே காண்பிப்பேன், என் கல்வி அறிவு அவரின் தொழில், மற்ற பிரச்சனைகளுக்கு பயன் தரும் வகையில் பயன்படுத்துவேன், அவரின் ஆசை, கட்டளைகளுக்கு கட்டுப்படுவேன், அவரின் பெற்றோர் என் பெர்றோராவார், அவர் குடும்பம் என் குடும்பமாகும். அலுவலகம் சென்ற கணவன் வீட்டிற்கு லேட்டாக வந்தால் அவர்மனம் கோணாது அவரிடம் அனுசரணையாய் கம்பனியில் பிரச்சனையா சரியாகிவிட்டதா என்பதாய்  கேட்டு அவரின் தாமதத்தை அறிந்துகொள்வேன்.
என்று இரு பாலாறு சபதம் மேற்கொள்ள வேண்டும் ஆசை படுவதை விடுத்து சபதம் மேற்கொள்ளல் வேண்டும் வாழ்வும் வளமாகும் விட்டுக்கொடுத்தல் கெட்டுப்போவதர்க்கில்லை கணவன்,மனைவி என்பதுதான் ஒரு குடும்பம் நீ நான் என்பதல்ல நாம் நம் என்று சொல்லிப்பழகுங்கள் பிரச்சனைகள் என்பது நம் வாழ்வில் இராது

நாம் முன்பு சொன்னது போல் கணவன் = முதலாளி.  மனைவி = தொழிலாளி. கூட்டி கழித்து பாருங்கள் எல்லாம் சரியாகப்படும் நமக்கு தேவையானதை மட்டும் சிந்தித்து சுயநலமில்லாய் ஆகாமல். முதலாளியின் நலனில் தொழிலாளியும் தொழிலாளியின் நலனில் முதலாளியும் அக்கறை காட்டினால் தொழில் சிறக்கும்.

ஒரு மாணவன் தென்னை மரம் பற்றிய கட்டுரையை மனனம் செய்திருந்தான் தேர்வில் வந்த கேள்வியோ பசு மாடு பற்றியது மாணவன் அசரவில்லை தாம் படித்த தென்னை மரம் பற்றி முழுவதுமாக எழுதிவிட்டு கடைசியாக அந்த தென்னை மரத்தில் தான் மாட்டை கட்டுவார்கள் தென்னை மட்டையை உணவாக இடுவார்கள் என்று எழுதி முடித்தானாம். புரிகிறதா !?
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

17 comments:

  1. புதிய முயற்ச்சி கணவன் மனைவி எதிர்ப்பார்ப்பு ஏக்கம் பாசம் தேவை ஆசை இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.எல்லோருக்கும் எதிர்பார்த்தது அமைவது கிடையாது கிடைத்தை நல்லப்படியாக அமைத்து கொல்லுவது அவர்ரவர் கையில்.

    வாழ்த்துக்கள் சபீர் காக்கா அவர்களே.

    ReplyDelete
  2. கணவன் = முதலாளி. மனைவி = தொழிலாளி.

    ஆஹா ! வித்தியாசமான கோணத்தில் தந்திருக்கும் அருமையான ஆக்கம் !

    ReplyDelete
  3. கணவன் மனைவியின் உறவை மேம்படுத்தும் விதத்தில் நல்லதொரு ஆக்கம்.

    கடைசியில் தென்னமரத்தையும் பசுமாட்டையும் இணைத்து கதை சொல்லியவிதம் புதுமை.

    வாழ்த்துக்கள்.! தொடரட்டும்....தாங்களின் தொழில் பதிவு.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    கணவனுக்காக மனைவி நினைப்பது.
    மனைவிக்காக கணவன் நினைப்பது.

    பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் நினைப்பது.
    பெற்றோர்களுக்காக பிள்ளைகள் நினைப்பது.

    நன்றாக இருக்குது.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் ஓகே, இனி நமதூரில் நூறு சதவிகிதம் மாப்பிள்ளைமார்கள் பெண் வீட்டாரிடம் வீடு கட்டி வேணும் என்று கேட்காமல், நாங்களே மனைகளை வாங்கி வீடுகட்டி உங்கள் பெண்ணுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொடுக்க தயாராக இருக்கின்றோம் என்று வந்தால் எப்படி இருக்கும்?

      இதை நான் விளையாட்டுக்காக எழுத வில்லை, படு சீரியசாக எழுதுகிறேன்.

      Delete
    2. நல்லாத்'தேன்' இருக்கும் :) காக்கா

      Delete
    3. உங்களை போன்று பலபேர்களுக்கு இந்த ஆதங்கம் இருக்கின்றது காலம் தான் இதற்க்கு பதில் சொல்லும்

      Delete
    4. காலம் நம் கையில் இருக்கும்போது, அது எப்படி பதில் சொல்லும்.

      காலம் = நமக்கு கொடுக்கப்பட்ட ஞானம்.

      Delete
    5. காலம் பதில் சொல்லும் என்பது விலைவாசி ஏற்றம் மார்க்க அறிவு நம்மை போன்றோரின் விழிப்புணர்வு பிரச்சாரம் இளைஞ்சர்களின் மனமாற்றம் இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதிரையர்களின் வீடு கொடுக்கும் கொள்கைகள் மாற சிறிது காலம் ஆகும் அதைத்தான் காலம் தான் பதில் சொல்லும் என்றேன்

      Delete
    6. உங்கள் வார்த்தையை மதிக்கின்றேன். அந்தக்காலம் வெகு சீக்கிரமே வரவேணும்.

      Delete
  5. சமைத்து,துவைத்து சகல வேலைகளும் செய்து முடித்து
    சற்றே ஓய்வெடுக்க நாடும் மனைவி;
    உழைத்து, சலித்து களைத்து விட்டதால்
    ஊர்ச் சுற்றி மனைவியோடு உல்லாசம் காண நாடும் கணவன்...!
    எத்தனை எதிர்பார்ப்பு? ஏனிந்த எதிர் மாற்றம்என்றுமே மாறா ஏமாற்றம்...................................
    இத்தரை மீதினில் இப்படித்தான் ஒட்டாதோ?
    இதற்கு ஒரு தீர்வு கிட்டாதோ?

    மறுமை வாழ்வில் மட்டுமே நினைத்தது கிட்டுமே
    மாய இவ்வுலகில் நிறைவே கிடையாது
    பொறுமை உனக்கு வேண்டும் மனிதா!
    படைத்தவன் விதியை மாற்றுவது எளிதா?


    என்று பாடத் தூண்டியது உங்களின் ஆக்கத்தைப் படித்ததும், அன்பின் தொழிலதிபர் அவர்களே! பாராட்டுகள். வணிகவியல், வாழ்வியல், அப்புறம்... எத்தனை விடயங்கள் உள்ளடக்கி வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.மாஷா அல்லாஹ்!

    ReplyDelete
  6. தென்னை மரம் ..பசு மாடு கதை

    அந்த மாணவன் நல்ல வியாபாரியாக வருவான்

    சந்தையில் எதையும் விற்று காசாக்கி விடுவான் நண்பா

    ஒரு வேலை நீயாக இருக்குமோ ...

    ReplyDelete
  7. ஒருவரின் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் மனைவியின் ஒத்துழைப்பு அவசியம் இருத்தல் வேண்டும்

    ReplyDelete
  8. கூட்டி கழித்து பார்த்தா எல்லாம் சரியாத்தான் வருது...!!

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. நீங்க சொன்ன மாதிரி அப்படியே திருப்பி (மாத்தி) யோசித்தால் இந்த உலகமே உருப்பட்டுமே.... படிக்க சொல்ல கேக்க நல்லாத்தான் இருக்கும்...

    ஆனால் தொழிலுக்கு வாழ்க்கைத்துணையின் உதவி அவசியமானது...

    ReplyDelete
  10. என் அன்பு இணைய நண்பர்களே மனைவியின் மகத்துவத்தை அநேகபேர்கள் ஆதரித்துல்லிர்கள் அதுதான் உண்மை ஆவதும் அழிவதும் யாராலே
    வரும் வியாழனில் தங்கள் அனைவரையும் நீதிபதியாக்கி தீர்ப்பு தங்கள் கையில் ஒப்படைக்க உள்ளேன் காத்திருங்கள்

    ReplyDelete
  11. அவனின் அவளின் உள்ளம் எப்படி? நல்ல தொகுப்பு!
    அடுத்தவாரம் எல்லாரையும் நீதிபதியாக்கினால் தீர்ப்பை நினைத்தால் பயமாயிருக்கு!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers