முன்னை முழுமுதலாய் முழுமனத்தில் போற்றிடுவோம்
மின்னும் முழுநிலவாய் முழுவதுமாய் ஏற்றிடுவோம்
பின்னும் குழப்பங்கள் பின்னோக்கித் தள்ளிடுவோம்
என்னை வழிநடத்தும் எம்முன்னோர் வாழியவே!
முட்டாள்கள் அல்லரென்பேன் முன்னோர்கள் என்போரே
தட்டாமல் அவர்வழியில் தடம்பதித்துச் செல்வோமே
திட்டாமல் அவர்மொழியை தினம்தேடிக் காண்போமே
பட்டாற்றான் அறிவுவரும் படித்தவர்கள் சொன்னாரே!
முதியோர்கள் நடந்தபாதை முட்களான சோதனையே
புதியோதோர் வழிகாணப் புறப்பட்ட சாதனையே
மதியாமற் போனதாலே மடிவதெல்லாம் நாம்தானே
சதிகாரர் வலைதன்னில் சரிந்திடாதே நீயும்தான்!
பெரியோரை மதிக்காமற் பெரிதாய்நீ சாதிக்கத்
தெரியாமல் விழிபிதுங்கித் திசைமாறிச் செல்கின்றாய்
புரியாமற் பிறழ்கின்றோர் போதனையால் வாழ்க்கையைநீ
கரியாக்கிப் போனதனால் கவலைதான் கொண்டேனே !
"கவியன்பன்"
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
தனது தாய் தந்தையர் மீது எந்தளவு பாச நேசம் வைத்திருந்தால் இந்தளவு எழுதத் தூண்டும் எனபதற்கு எடுத்துக்காட்ட அமைந்த கவிதை.
ReplyDeleteகவிக்குறளின் எழுத்து உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்...
முக்காலும் உண்மைதான், ஆம். விழிப்புணர்வு வித்தகரே! அடுத்து என் உம்மாவை நினைத்து ஓர் அற்புதமான கவிதையை இயற்றியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பதிவில் காணலாம்!
Deleteஉலகின் 100 வயதை கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 3.16 லட்சம் என்கிறது ஆய்வு அறிக்கை !
ReplyDeleteகுழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தும், தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தும் அவர்களின் எதிர்கால இல்லற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் பெற்றோர்களை உதாசீனப்படுத்துகிறது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளன. ஆடம்பரமாக வீட்டைக் கட்டி அதற்கு தாய் தந்தையர் பெயரைச் சூட்டி மகிழும் பிள்ளைகள் அவர்களை கவனிக்கத் தவறி விடுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை !
வருவாய் இழந்து, உடல் தளர்ந்து, நோய்வாய்பட்ட சூழ்நிலையில், அவர்களின் மனம் புண்படும்படி கொடுமைகள் நடப்பது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.
1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....
ReplyDelete2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...
3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...
4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்....
5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...
6. தேவையான நேரத்தில் உன்ன உணவுக் கொடுக்காமல் பசிக் கொடுமையால் அவதிப்படுபவர்களாகட்டும்...
7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...
8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...
9. பிள்ளைகள் மூலம் முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு அன்றாட பொழுதுகளை துயரத்துடன் கழிப்போரும்...
10. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
வயதான தாத்தா - பாட்டி ஆகியோருக்கு ஆதரவாக சட்ட திட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை என்பதால், கொடுமைகள் வெளியில் தெரியாமலே போய் விடுகிறது. அனாதைகளைப் போல நடத்துவதை சமூக அவமானமாகக் கருதி, அவர்களுக்கு வயதான காலத்தில் அன்பும், பரிவும், பாசமும், உயிர்வாழ உணவும், இருக்க இடமும், உடுத்த உடையும் வழங்குவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.
ReplyDeleteமூத்த தலைமுறையினரின் வாழ்க்கை அனுபவங்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடாது என்பதையும் இளம் வயது அறிவுக்கு புலப்படாத பல விசயங்களை மூத்தவர்களின் அனுபவத்தால் நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசின் சார்பாக வருமான வரிவிலக்கு, ரயில், விமான பயணங்களில் கட்டண சலுகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித்தொகை போன்றவற்றை வழங்கி கெளரவிக்கும் போது, நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்/தந்தையருக்கு நமது கடமைகளை செலுத்த மறந்துவிடுகின்றோம்.
ReplyDelete1. குறிப்பிட்ட நேரத்தில் சத்தான உணவு
2. போதுமான உடற்பயிற்சி, ஓய்வு
3. நண்பர்கள், குடும்பத்தினருடன் பழகுதல்
4. குழந்தைகளுடன் விளையாடுதல்
5. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை
6. சமூக சேவைகளில் ஈடுபடுதல்
போன்றவற்றில் அவர்களை கவனம் செலுத்தவைத்து, அவர்கள் படும் கஷ்ட/நஷ்டங்களை நன்கு புரிந்து அதற்கேற்றார் போல் அவர்கள் மீது பரிவு/பாசத்துடன் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்வோம்.
இன்றைய இளைஞன்-இளைஞி ! நாளைய தாத்தா - பாட்டி !!
வாழ்க தாத்தா - பாட்டி ! வளர்க அவர்களின் ஆரோக்கியம் !!
மூத்த கவிஞ்சரின் முதிர் வரிகள் படித்து
ReplyDeleteமுகம் சிவந்து போனேன்.
ஏக்கம் என் தகப்பனார் உருவிலும்
தாக்கம் என் தயார் உருவிலும்
கண்டேன்.
மாற்றம் கொள்ளும் மனிதன்
மறவாமல் ஆதரித்து
முதியோரை போற்ற வேண்டும்.
முழு மனதாய் ஏற்கவேண்டும்
உங்களின் எண்ணமும் என்றன் எண்ணமும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன; அதனால் ஓர் உண்மையைச் சிந்திக்கின்றன என்பதை அழகாய் கவிவரிகளில் எடுத்துக்காட்டியதற்கும், என்றன் கவிதையின் தாக்கம் உங்களின் பெற்றோரை நினைவில் வைக்கும் ஆற்றல் பெற்றது என்பதை உங்களின் உளமாரந்த வாழ்த்துரையின் வழியாக அடியேன் கண்டு மட்டிலா மகிழ்வுடன் என் உளம்நிறைவான நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன், அன்பு கவிஞரே!
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஓல்ட் ஈஸ் கோல்ட். அவ்வளவுதான், அதுக்குமேல் ஒண்ணுமே கிடையாது.
மாற்றம் கொள்ளும் மனிதன்
மறவாமல் ஆதரித்து
முதியோரை போற்ற வேண்டும்.
முழு மனதாய் ஏற்கவேண்டும்
மச்சானின் கவி வரிகளை பின்தொடர்ந்து சகோ மெய்சா அவர்களின் பின்னூட்ட கவி வரிகள் தேனோடு கலந்த சுவை அமுதை போல் இருக்கின்றது.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
மிக்க நன்றி. மச்சான்.
Deleteஎன்னை இவ்வண்ணம் சிந்திக்கத் தூண்டும் எண்ணம் உருவாக எனக்கு இத்தலைப்பைத் தந்து இலண்டன் தமிழ் வானொலியில் என் தமிழை தன் தங்கக் குரலால் ஒலிக்கச் செய்யும் என் தங்கை திருமதி ஷைஃபா மலிக் அவர்கட்கு என் உளமார்ந்த நன்றிகளை உரித்தாகுகிறேன்.
உண்மைதான் முதியோரைப் பாதுகாக்கணும்.நல்ல பதிவு.
ReplyDeleteகவியாழி கண்ணதாசனார் அவர்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும் வாஞ்சை மிகு நன்றிதனை வாரி வழங்குகிறேன்!
Deleteமனைவி சொல்கேட்டு ..
ReplyDeleteதாயை தனிமை படுத்தி
முதுமையின் கோரப்பிடியில்
மறைந்த தாய்மார்களும் உண்டு
தன் தாய்வழி உறவுகளில் கிடைக்கும் மனைவிமார்களால் இப்படிப்பட்ட துயரங்கள் வருவதில்லை; காரணம், தனக்குக் கிடைத்த அற்புதமான கணவர், இந்தத் தாயின் கருவிலிருந்து வந்தவர் என்பதும்; இந்த மாமியாரும் என் உறவினரே என்ற உணர்வும் வரும்பொழுது இயல்பாகவே அம்மனைவிமார்கட்கு இப்படிப்பட்ட துயரங்களைத் தரும் எண்ணங்கள் வாரா. இருப்பினும், நீங்கள் கூறும் துயரங்கள் இன்றும் நடந்து கொண்டிருப்பதற்கான அடிப்படைக் காரணி: பண்பற்ற முறையில் வளரக்கப்படும் மகன்கள் தான் பின்னால் பெற்றோரை மதிக்காமல் இருக்கின்றாரகள். இப்பொழுதுள்ள கல்விமுறைகளில், நாம் முன்பு கற்ற நீதிபோதனை- ஆன்மீகம் கற்றுத் தரப்படாமையும், தரமான ஆசிரியர்கள் இல்லாமையும் தான் இப்படிப்பட்ட துயரங்கள் வளர்கின்றன.
Deleteஉங்களின் ஆதங்கத்தில் பங்கு கொண்டவனாக, உங்களின் பக்கம் என் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
தாய் தந்தயை மதிக்கணும்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் இன்னுயிர் இவ்வுலகை விட்டகலும் வரைக்கும், தாய் தந்தையரையும் மூத்தோரையும் மதிப்போம்.
Delete“சிறுவர்கட்கு அன்பு பாராட்டாதவனும்; பெரியோர்கட்கு மரியாதைச் செய்யாதவனும் என் சமூகத்தைச் சார்ந்தவன் அல்லன்”
“தாயின் காலடியில் சுவனம்”
தந்தையின் பொருத்தத்தில் தான் அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கும்”
இப்படிப்பட்ட நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகள் நமக்கு தப்லீக் பயானகளில் ஊட்டப்பட்டதனாற்றான், அவற்றைக் கருவாக வைத்து இக்கவிதையை என்னால் படைக்க முடிந்தது.
அப்படிப்பட்ட மார்க்கம் அறிந்த ஊரில் பிறந்த என் கவிதை வரிகள் இலண்டன் வானொலி வழியாக தமிழ்கூறும் நல்லுலகின் தமிழர்ச் செவிகளிட் சென்றடையும் பேறினை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
அன்புமிகு நேசர் ஹபீப் அவர்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள்!
முதுமை ஓர் அழகிய அனுபவம், அனைவரின் வாழக்கையிலும் இந்த இனிய அனுபவம் தொடர வாழ்த்துகிறேன்
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று
அடியேனும் அம்முதுமையை எட்டும் அனுபவம் உள்ளதால் என் மனத்தினில் பட்டும் தெரித்த வரிகள் தான் பாட்டின் இலக்கணத்தில் கேட்டிடும் தேனோசையில் ஒலிக்கும் வாய்ப்பினைப் பெற்றது இக்கவிதை என்பேன் அய்யா தமிழன் அவர்களே! மிக்க நன்றீ.
DeleteThanks uncle for your memorable poem of grandparents
ReplyDeleteFor as long as I can remember, my grandparents have always shared stories with me about their lives, and the very different childhood that they had.
Thanks you lot dear niece Parveen Ayesha,
ReplyDeleteStill I am so proud of you while reading your comments where you have remembered your grand-parents and their stories which enhanced your life style. Hence, I too be proud to know that my poem is giving you so enthusiasm like this type memories in your heart.
Thank you once again for your regular attendance.
My kind request to my niece Parveen Ayesha:
Have you heard the voice of sister Shaifa Malik of London Tamil Radio who is broadcasting my poems weekly?
If, you like this, then I want to request you to do so like reading my any one of poems in forthcoming ADIRAI BATHULMAL QURAN CONFERENCE
Will you do?
Because, while i am watching sister Shaifa Malik's progaram in London Tamil Radio (she is originally from Srilanka), I was thinking about you as you deserve all qualities to be in higher position since you had good education even you have been raised from our community who are neglecting education; this is my hear-felt appreciation, my dear niece Parveen Ayeisha.
உலகக் கவியன்பனின் மகுடத்தில் இன்னொரு வைரக்கல் இந்தக் கவிதை.
ReplyDeleteஉளம்நிறைவாய் வாழ்த்துரைத்த முனைவர் இ.அ.காக்கா அவர்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.
ReplyDeletesuper
ReplyDelete