.

Pages

Saturday, May 25, 2013

[ 11 ] உள்ளம் கேட்குமே !? MORE…[ காதல் ஸ்பெஷல் ]

காதல் வெற்றி கண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இல்வாழ்வில்  சந்தோசமாக வாழகிறார்களா ?

எத்தனை பேரின் வாழ்க்கை  வெற்றி அடைந்துள்ளது ? இப்படிப்பட்ட கேள்விகளுடன் இந்தவார ஆக்கத்தைக் காண்போம்...

பொதுவாகவே காதலர் தனிமையில் சந்தித்து பேசும்பொழுது  காதலன் காதலிக்கு பிடித்தமான செயல்களை மட்டுமே செய்வான் அந்த பெண்ணிடம் உரையாடும் பொழுது  அளவாக பேசி கவர்வான். உடை விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பான். உணவு உண்பதுகூட மிகக்குறைவாக உண்பான். என்ன தான் ருசியாக இருந்தாலும் கட்டுப்பாடாக இருப்பான். அதிர்ந்து பேச தெரியாதவன் போல் அமைதியாகக் காணப்படுவான்.

இது நாள் முழுவதும் நடைமுறைப்படுத்துவது கஷ்டம். ஓரிரு மணி நேர சந்திப்பு என்பதால் சாத்தியமாகிறது. காதலின் இலக்கு காமம்தான் ! காமம் தணிக்கும் சூழல் கிடைக்காத பொழுது கல்யாணம் செய்தால் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக தான் கல்யாணமே செய்து கொள்கிறார்கள். அப்படி கல்யாணமாகி  தம்பதிகளாய் வளம் வருபவர்கள் கொஞ்சிக்குலாவி வாழ்கையை நடத்துகிறார்களா ? என்றால் நிச்சயமாக இல்லை.

உற்றார் உறவினர் உதவி இல்லாது ஏதோ தான் உழைக்கும் உழைப்பின் வருவாயை வைத்து காலம் கடத்தும் சூழல் அமையும். அத்தருவாயில் ஏதாவது ஒரு காரணத்திற்காக கணவன் மனைவியை கடிந்து கொள்வான்.  அதற்கு அவள், என் அப்பா அம்மா பார்த்துக்கல்யாணம் செய்து தந்திருந்தால் சண்டை என்று வந்தால்  போய் சொல்லி அழுவேன் ! இப்போது  எந்த நாதியும் இல்லா நிலையில் இருக்கிறேன் என்ன செய்வேன் என்பாள்.

பல காதல் மணம் புரிந்த கணவன்மார்கள்  மிக இலகுவாக கேட்கும் கேள்வி ‘உனக்கு என்னை பிடித்து விட்டது என்று இருபது ஆண்டு கூட இருந்த அம்மா அப்பாவை விட்டு விட்டு என்னோடு  வந்து விட்டாய் இப்போ என்னை பிடிக்கவில்லை என்று யாரோடாவது ஓடி செல்ல மாட்டாய் என்பது கூட சாத்தியம் தானே’ என்பான்  கால சூழல் அதிகமாக காதலன் பக்கமே சாதகமாக  இருக்கும். அப்படியே அதன் காரணமாக அடங்கி போகவே செய்வாள் காதலி. "மலரை போன்றவளே  என்று வர்ணித்த அவனின் வர்ணனை மலரின் வாழ்நாள் போன்று  குறுகிய கால வயதை கொண்ட அன்பேயாகும்.

குறிப்பாக இந்த காலத்தில் பல பெண்ணை மயக்குவது பெரிய சாதனையாகச் சொல்லித்திரியும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். பெண்களே எந்தக் காரணம் கொண்டும் ஏமாந்து விடாதீர்கள். சிலர் காதலர்களாக இருப்போம் ஆனால்  கல்யாணம் வேண்டாம் எனக்கூறும் இளைஞர்களும் உண்டு. ஆனால் கல்யாணமாகி வாழ்வில் வசந்தம் வீசும் தருவாயில் புயலாய் பழைய காதலன் நுழைவான் உள்ளம் தடுமாறும் எனவே உள்ளம் கேட்கும் எல்லாம் நல்லதல்ல.... மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்ற பழமொழிக்கேற்ப வாழ்வோம்.

காதல் வலை வீசும் இடங்கள் ஒரே சூழலில் தினமும் சந்திக்கும் இடங்கள் மனதை தடுமாற செய்யும் சூழலாகும். உள்ளத்தின் வாசல் கண்களே .தினமும் ஒரே நபரை பார்ப்பது

அவன் அல்லது அவளுக்கு நல்லதல்ல ..கண்களை பாதுகாத்துக்கொள்ளல் நல்லது நவீன கால ஊடகம் முகநூல் வலைதளங்கள் உள்ளத்தை வதைக்கும் கருவியாக உள்ளது உஷார் !

ஆணோ, பெண்ணோ காதல் மூலம்  வாழ்வில் வளம் காண்பது என்பது இயலாத காரியம் ஐம்பது வருட காலமாக காதலுக்கு வக்காலத்து  வாங்கி வரும்  சினிமா காதல் ஜெயித்ததாக முடிப்பார்கள். காதலுக்கு பின் வாழ்வை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பதை காண்பிப்பதே இல்லை.

 சினிமா வேறு தன் வாழ்க்கை வேறு அல்ல  என்று வாழும் கமல் அவர்களின் காதல் வாழ்க்கை பொய்த்து போனது மட்டுமே உண்மை ! கல்யாணத்திற்கு பின் காதல் கொள்ளல் உள்ளம் கொள்ளை கொள்ளும் காதல் கண்களைப்பேணி காதலினை தவிர்ப்போம் !
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

42 comments:

  1. காதலில்லாமல் காமம் இல்லை;
    காமம் இல்லாமல் காதல் இல்லை
    காதலின் உச்ச கட்டமே காமம்தான்
    காமம் வந்து விட்டால் கல்யாணம் தான்

    என்ற கருத்தின் அடிப்படையில் ஆக்கம் தந்துள்ளீர்கள்;இஃது எல்லா சமயஙளும் கூறி வரும் பொதுவான கருத்தாக இருந்தாலும்,

    இப்பொழுது நடைமுறையில்

    “ஒருவரை ஒருவர் விரும்பிக் கட்டாயப்படுத்தாமலும்; காயப்படுத்தாமலும் காட்டும் அன்புக்கும், உறவுக்கும் தவறில்லை” என்ற போதனைகளைச் சட்டங்களாகவும், ஆசிரமங்களின் ஆசிர்வதிக்கப்பட்ட நடைமுறைகளாகவும் மாறிவிட்டச் சூழ்நிலையில், நாம்
    “பெண்ணைத் தாண்டி வருவாயா” என்று சொன்னாலும் கேட்பாரில்லை என்பதே நடைமுறைச் சிக்கலாகும்.

    கல்யாணம் ஆனாலும், ஒருவருக்கொருவர் உடன்படாமல் ஈடுபடும் அன்போ, உறவோ ஏற்றுக் கொள்ள்க் கூடியதா? அதனை அன்பென்றும் சொல்ல முடியுமா? விவாக ரத்துகள் பெருகி விட்டதே இதனை நிரூபிக்கும் சான்றுகளாகும். பெயரளவுக்குத் திருமணம், ஊருக்கும், சமுதாயத்துக்கும் கணவந் மனைவியாகக் காட்டிக் கொள்ளும் “வேடம்”; இப்படித்தான் அன்பில்லாத - காதலில்லாத இல்லற வாழ்வின் இலட்சணங்களாய் உள.

    நீங்கள் எடுத்தாளும் எல்லா ஆக்கங்களின் “கரு”க்களும் இப்படிப் பட்ட விவாதங்கட்கும், தீர்க்கமான முடிவுகளை எட்ட முடியாதவைகளாகும் இருந்தாலும், துணிச்சலுடன் நீஙகளும் இப்படிப்பட்டக் கருக்களை வைத்தே ஆக்கங்களைப் படைக்கின்றீர்கள்; இஃது உங்களின் ஆழமான சிந்தனையின் வெளிப்பாடா? சமுதாயத்தின் மீதான அக்கறையா? எதுவானாலும், இதுபோன்ற சிக்கலான விடயங்களையும் துணிவுடன் எழுதும் உங்களை வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. கவியன்பரின் ...

      கருத்தில் அன்பே கரு .

      நன்றியுடன் வாழ்த்துக்கள்

      Delete
    2. ஆம். என் எண்ணக் கருவை உள்ளபடியே உணர்ந்து கொண்டீர்; என்றும் நான் கூறும் உண்மையும் “உங்களின் எண்ணமும் என் எண்ணமும் ஒன்றே” என்பதை மீண்டும் உங்களின் மறுமொழியில் நிரூபித்தமைக்கு நன்றி.

      Delete
  2. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    அருமையான அவசியமான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா..

      தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  3. Masha Allah Brother,

    This is first time I read your article. It is good explanation against false love in real life.

    ReplyDelete
    Replies
    1. //false love in real life.//

      what a poetical words are there!

      I think you may write English Poem, why don't you try to write?

      Delete
    2. நன்றி சகோதரி ..

      இந்த நல்ல கருத்தை தங்களின் தோழியரிடம்

      பகிர்ந்து கொள்ளுங்கள் ..தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
    3. சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் ..!

      தங்களின் அறிவாற்றலை மேசுகிறேன் ..தங்களின் உண்மையான பெயரில் வளம் வருவதை விட புனை பெயர் கொண்டு வளம் வரலாமே ..!இது உளவியல் சார்ந்த அறிவுரை ...நன்றி

      Delete
  4. உஷாரான கருத்துக்கள்... அலசலுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களே ..!

      தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  5. பதிவுக்கு நன்றி.

    இந்த வருடத்தின் ஐந்து நட்சத்திர அந்தஸ்த்து பெறப்போகும் ஆக்கம் இது. வாழ்த்துக்கள்.

    சொன்னவிதம் அருமை, இருந்தாலும் இந்த கால இளசுகள் அப்பப்பா அடிக்கும் கும்மாளம் இருக்குதே அதை அப்படி சொல்வது.

    இன்று காலை 10.30 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு ஒரு நண்பரை சந்திக்கும் நிமித்தமாக சென்றேன். நண்பகல் ஒரு மணிக்கு வீடு திரும்பனும், நடந்து வந்த களைப்பு அப்படியே பட்டுக்கோட்டை நகர காவல் நிலையம் எதிர்புறம் பழைய பேருந்து நிலையம் முக்கத்தில் இருக்கும் பழம் ஜூஸ் சர்பத் கடைக்கு வந்து ஒரு லெமன் சால்ட் சோடா ஆர்டர் செய்தேன்.

    சற்று அருகில் நான்கு ஜோடிகள் ரொம்ப வண்ணமாக நின்று கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் வயது சராசரியாக பதினாறு முதல் பதினெட்டு இருக்கும். அவர்கள் அடித்த கும்மாளம் இருக்குதே அசல் டிவி சினிமாக்களில் வருமே அப்படி இருந்தது.

    பெற்றோர்கள் கஷ்டப்பட்டு பெற்று வளர்த்து பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கணும் என்று படிப்பதற்காக நம்பிக்கையோடு வெளியில் அனுப்புகின்றனர். ஆனால் பிள்ளைகளோ?

    இன்றும் ஒரு சில பிள்ளைகள் பெற்றோர்களுக்கு நல்லபெயர் வாங்கித்தரனும் என்ற ஆவலுடன் இருக்கின்றனர்.

    பெற்றோர்களே எது செய்தாலும் நிதானம் தேவை, அவசரம் வேண்டாம்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. ஜமால் காக்கா ...

      தங்களின் நட்சத்திர வாழ்த்துக்கு நன்றி

      தங்களின் ஆதங்கம் சமுதாய விழிப்புணர்வுக்கு வித்திடும்

      Delete
  6. திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் காதலிப்பது பெற்றோரை ஏமாற்றும் செயல். திருமணம் ஆன இரு ஜோடிகள் தம் துணிகளை ஏமாற்றி காதலித்தால் கள்ளக்காதல் என்போமே! முன் சொன்ன காதலும் பெற்றோரை ஏமாற்றுவது கேடுகெட்ட காதல்தான் என் பார்வையில். பெற்றோர் பார்த்து வைத்ததை காதலிப்போம் வாழ்வின் முடிவுவரை
    நண்பரின் பணி தொடர நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. திருமணமான பின் காதல் கொள் ..

      சரியான கருத்து ..பெற்றோர் காட்டும் வழியில்

      தடம் பதிக்கும் பிள்ளைகள் வாழ்வில் வெற்றி நிச்சயம்

      Delete
  7. காதல் என்ற போர்வைக்குள் காமம் ஒளிந்திருப்பதால். காதலிக்கும்போது சுவையாகத்தான் இருக்கும். அதுவே காமம் தீர்ந்ததும் அங்கே காதல் செத்துவிடுகிறது.பெரும்பாலும் இப்படி தான் இவ்வுலகில் காதல் அரங்கேறிவருகிறது. அப்படியே காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களில் அனைவரும் வெற்றிபெறுவதில்லை என்பதை அழகாக எடுத்துவந்து தந்த சகோதரர் அதிரை சித்திக் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ அதிரை மெய்சா..அவர்களே ..!

      தங்களின் எனது ஆக்கத்தின் சுருக்கம் ..

      வருகை நன்றி..!

      Delete
  8. இன்றைய சமூகச் சீரழிவுகளுக்கு முக்கிய காரணங்களாக அமைவது சினிமாவும் காதலுமே. இந்தக் காதலினால் இன்றைய இளைஞர்கள் இளைஞிகள் ஒழுக்கச் சீர்கேட்டில் முழ்கிக் கிடக்கின்றனர். இத்தகைய சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் காதலை கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..சகோ தமிழன் அவர்களே ...!

      எத்தனையோ இளம் பெண்கள் ..விபச்சாரிகளாக ..

      அன்றாடம் உணவுக்கே வழியில்லாமல் பிச்சை எடுப்பவர்களாக

      கூலி தொழிலாளியாக ..இன்னும் பிற கஷ்டங்களுக்கு

      ஆளாகும் நிலைக்கு தள்ள படுகிறார்கள் ..

      சினிமா ..காதலுக்கு கச்சை கட்டி நிற்கிறது ..காதலை பற்றி

      ஐம்பது வருடமாய் ஆதரித்து படம் காட்டுது ..

      தந்தை வில்லனாய் சகோதரன் கொடூரனாய் எப்படி எல்லாம்

      வீட்டை விட்டு வெளி ஏறலாம் என்பதை துல்லியமாக படம்

      எடுத்து இளைஞர்களின் மனதில் மாசை ஏற்படுத்துகிறார்கள்

      சினிமாவை புறக்கணிப்போம் என்ற கருத்து இந்த ஆக்கத்தின்

      வெற்றி என கருதுகிறேன் ..நன்றி சகோ ..தமிழன் அவர்களே

      Delete
  9. நல்ல நன்னெறி
    வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  10. நன்றி ...சகோதரி ..

    சக தோழிகளிடம் இவ்வாக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு உளவியல் சார்ந்த அறிவுரை ..

      தங்களின் நிஜமான பெயரில் வலைதளங்களில் வளம் வராமல்

      ஏதாவது புனை பெயரில் வளம் வருதல் நலம் ..

      தங்களின் நலம் விரும்பும் சகோதரன் ..அதிரை சித்தீக்

      Delete
    2. அக்கரை சக்கரையாய் இனிக்குது
      முகவரி காட்டாமல் வருவது பரவாயில்லைதானே!

      Delete
    3. எனது வேண்டுகோளை ஏற்று கொண்டது ..

      எனது ஆக்கத்தின் வெற்றியாக கருதுகிறேன் .நன்றி

      Delete
  11. //ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.
    அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் .
    அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் .
    ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .
    அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா.. ?
    அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி. அந்த பையனுக்கு பார்வை இல்லை. அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
    சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .
    என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ என்றான்..\\


    முகநூலில் படித்தில் பிடித்தது

    ReplyDelete
    Replies
    1. சிறு கதையாக இருந்தாலும் ..

      மனதை அறியாத கண் மூடி தனமான காதல் ..

      கண் தெரிந்த காதலி ..காதலனிடம் "என்னை கை விட்டு விட

      மாட்டீர்களே " என்று கேட்பாள் .அந்த கேள்வி மிக

      பலகீனமான கேள்வியாகவே இருக்கும் உள்ளத்தில் ஊரும்

      பாலின வேட்கையே மிகைத்திருக்கும் .கை விட மாட்டேன்

      என்ற ஒற்றை வரி வாக்குறுதியை நம்பி தன்னை இழந்து

      நடு வீதிக்கு வந்தவர்கள் ஏராளம் .

      அதே போன்று ஆண் தரப்பு பொறுப்பின்றி ..தாய் தந்தை

      உறவுகளை உதாசீனம் செய்து தான் விரும்பும் பெண் பின்னால் ஓடும் ஆண் நிச்சயமாக அந்த காதலியையும்
      கை விட்டு விடுவான் என்பதே நிதர்சன உண்மை ..
      கவியன்பரே நல்ல பதிவை தந்தீர்கள் ..
      ஆணுக்கும் ,பெண்ணுக்கும் ..காதலில் சுய நலமே
      மிகைத்து இருக்கிறது

      Delete
    2. அன்பு கவியன்பரே ...

      நீங்கள் முக நூலில் ..படித்த கதை

      "அக நூலில் எழுத வேண்டியவை "

      Delete
    3. என்னதான் அளவுகடந்த காதலாய் இருந்தாலும் இரண்டு கண்ணையும் கொடுத்து இப்படியா ஏமாறுவது

      Delete
    4. காதலுக்கு கண்கள் இல்லை என்பார்களே ..அது தானோ

      Delete
  12. காதல் வேண்டாம், வேண்டாம்
    அது கசக்கும் 'னு சரியாத் தான் சொல்லியிருக்கீங்க,
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ..நன்றி

      Delete
  13. ஸாரி சித்திக் காக்கா, முதலில் என் கருத்தை பதிவதில் வழக்கமாகக் கொண்டிருந்தாலும் நேற்று கடுமையான வேலைப் பளுவினால் உடன் கருத்திட முடியவில்லை.

    எக்காலத்திற்கும் ஏற்றதொரு உளவியல் ரீதியில் நல்லதொரு ஆக்கம். பெண்கள் மட்டுமல்ல அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.

    நேற்றையக் கவிதையில் அன்புக்கு தனி இலக்கணம் படைத்த கவிக்குறள் - இன்றோ சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் போலியான இன்றைய காதலை சாடியிருக்கும் நீங்களும் தனிச்சிறப்பை அடைகின்றீர்கள்.

    வாழ்த்துக்கள் காக்கா...

    ReplyDelete
  14. ஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் உடல் இச்சையை தனித்துக்கொள்வதே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது.

    1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்...

    2. கணவன் எங்கோ போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்...

    3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பப், சுற்றுல்லா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னாபின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்...

    4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, தொலைத்தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்...

    5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்...

    என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. கள்ள காதல் மனித இன அழிவுக்கு காரணமாகும்

      Delete
  15. பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.

    தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து... தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” ”பாசம்” “ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல விளிப்புனர்வான கருத்து

      Delete
  16. அருமையான அவசியமான பதிவு.அன்பர் சித்திக் அவர்களே வாழ்த்துக்கள்.

    முன்பல்லாம் காதலர்கள் காதலை வளர்பதற்கு பீச்சி பார்க் ஷாப்பிங் மால் தியேட்டர் போன்ற இடகளில் கூடி கும்மால்லம் அடிப்பார்கள் இப்போது வீட்டின் உள்ளேயை செய்கிறார்கள் இணைத்தளம் மொபைல் போன் போன்றவற்றில் காதலை பரிமாற்றம் செய்கிறார்கள் நூறில் ஒருவர்தான் உண்மையான வாழ்க்கை வாழ்கிறார்கள் அதுவும் இந்த உலகத்திற்காக அவர்களுக்காக இல்லை காதல் பெண்கள் பிடிவாதமாக இருப்பது வரைக்கும் தான்.அதற்குமேல் போனால் காமம் தான் மிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி ..ஹபீப் ..தங்களின் சமூக பொறுப்பு

      பின்நூட்டதிதில் தெரிகிறது

      Delete
  17. காதலிக்கும்போது மெயிண்டெயின் செய்யும் அதே ஒழுக்கம், நேரம்தவராமை, பரிவு இப்படி ஏகப்பட்டது கல்யாணத்துக்கு பிறகு அப்படியே செய்யமுடியாததாலே காதல் தோற்குது. காதலியும் காதலித்த காலத்தில் எப்படி இருந்தோமோ அதே மாதிரி வாழ்க்கை இல்லையே என்ற எண்ணத்தில் வெறுப்பு வருது. காமம் இருக்கும்வரை காதலும் இருக்கும், ஒரு கட்டத்திற்கு மேல் பணம் ஆழ ஆரம்பித்துவிடும், அப்போதான் நான் ஏன் இப்படி ஏமாந்தேன் என்ற ஏக்கம் எழ ஆரம்பித்துவிடும்... அருமையா சொன்னீங்க சகோ..

    ReplyDelete
  18. மிக நுணுக்கமான மதிப்புரை

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers