.

Pages

Wednesday, May 8, 2013

[ 10 ] தொழில் புரிவோம் வாருங்கள் !

ஒரு குடும்பத்திற்கு தாய், தந்தை. யார் முக்கியம் என்றால் என்ன பதிலோ அதுவே தொழில் சிறந்தோங்க கல்வியா அனுபவமா என்ற வாதத்திற்கும் பதிலாகும் ஒரு நபர் நல்ல நிறுவனத்தில் பலவருடம் பணி செய்கிறார் எல்லா வகையிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பார் ஆனால் அவரால் உயர் பதவிக்கு வர இயலாது காரணம் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களில் பட்டயப்படிப்பின் Certificate தேவைப்படும் அது இவரிடம் இல்லாது இருக்கும் அந்த சமயம் படிப்பின் அருமை உணர்வார் இவரை பொறுத்தவரை படிப்புதான் முக்கியம் என்பார் [ உண்மைதானே ]
         
படித்ததற்கான வேலை கிடைத்து இருக்காது சர்டிபிக்கேட்டோடு நேர்முகத்தேர்வு சென்றால் அனுபவம் இருக்கா என்பார்கள் அப்பொழுது வருமே ஆத்திரம் எங்கள் கல்லூரியில் படித்தவுடனே வேலை என்று விளம்பரத்தை நம்பி பணம் காசுகளைஅள்ளிக்கொடுத்தது படிக்க வைத்தார்களே நம் தாய்,தந்தையர்கள் அவர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கவலையில் படிப்பாவது மண்ணாவது என்ற கோபத்தில் அனுபவமே சிறப்பு என்பார்கள்.
   
ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த   அனுபவத்தை வைத்துக்கொண்டு சுயமாய் தொழில் செய்து முன்னேறியவர்கள் சொல்வார்கள் அனுபவமே சிறப்பென்பார்கள். 
                   
ஒரு சிறுகதை படிப்பை குறை சொல்பவர்கள் சொல்லும் கதை... 

கல்லூரி படிப்பை முடித்த மகன் வீட்டுக்கு வருகிறான் தந்தை உணவு அருந்திக்கொண்டு இருக்கிறார் வெளியில் செக்கு இழுத்துக்கொண்டு இருக்கிறது மாடு. மகன் தந்தையிடம் கேட்டானாம் அப்பா மாட்டை செக்கிழுக்க வைத்து விட்டு வந்து விட்டாயே அது செக்கிழுக்காமல் நின்று விட்டால் தமக்கு எப்படி தெரியும் என்று கேட்டானாம்  தந்தை சொனார் அதன் கழுத்தில் மணி கட்டி வைத்து உள்ளேன் மணி சத்தம் நின்று விட்டால் இங்கிருந்தே சத்தம் போடுவேன் மாடு மறுபடியும் செக்கிழுக்கும்! மகனின் மறு கேள்வி, சரி மாடு செக்கு இழுக்காமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தால் மணி சத்தம் கேட்குமே அப்பொழுது என்ன செய்வாய் என்றான் தந்தை மகனை பார்த்தார் மகன் தேரிவிட்டான்! மகனே நான் உன்னை மட்டும்தான் படிக்க வைத்தேன் மாட்டை படிக்க வைக்க வில்லை!!!! என்று சொன்னாராம் [ படித்தவர்கள் கோபப்பட கூடாது ]

அமெரிக்க மாகாணத்தில் பெரிய டிப்பார்ட்மெண்ட்  ஸ்டோர் 5 கடைகளுக்கு சொந்தகாரர் ஆல்பர்ட் வின்ஸ்டன்ட் ஒவ்வொன்றும் வெவ்வேறு பெயர்களோடு ஒரு கடை மற்ற கடைகளோடு போட்டி போடும் விதமாக offer கள் கொடுத்தும் வியாபார ஸ்டைல் வித்தியாசமாகவும் இருக்கும் அப்படி யுக்திகள் கொண்டதாய் தனது வியாபாரத்தை செய்து கொண்டிருக்கின்றார் அந்த மாகாணத்தில் அத்துணை கடைகளும் பிரபல்யம் ஒரு சமயம் தொழில் மலர் வெளியிடும் நோக்கோடு ஒரு பத்திரிகை நிறுவனம் அந்த முதலாளியை பேட்டி கண்டத
     
அவர் தமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறினார் நான் ஒரு சர்ச்சில் மணி அடிக்கும் வேலையை பார்த்து வந்தேன் சர்ச்சின் பாதிரியார் இறந்துவிட வேறு பாதிரியார் வேலைக்கு அமர்த்தப்பட்டார் அவர் சேர்ந்த ஒரு வாரத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே இந்த சர்ச்சில் வேலை என்று ஒரு சட்டத்தை போட்டார் நானோ ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன் எனக்கும் அங்கு வேலை பறிபோனது மணி அடிக்கும் வேலை எனக்கு ஆத்ம திருப்தி தந்ததால் நான் எவ்வளவோ போராடினேன் இருந்தும் வேலையை விட்டு அகற்றப்பட்டேன் படிப்பின் அருமை அன்று புரிந்தது இருந்தும் நான் சோர்ந்துவிட வில்லை ஏதாவது சாதித்து காட்டவேண்டும் என்ற என்னம் எனக்குள் வந்தது சர்ச்சுக்கு வந்து போகும் மனிதர்களில் ஒருவரை அனுகி டிப்பார்ட்மென்ட் கடியில் சேர்ந்தேன் கடின உழைப்பு செய்தேன் அங்கு பணிபுரியும் சக பனி ஆட்களால் நான் மணி அடிக்கக்கூட லாயக் இல்லாதவன் என்று தூற்ற பட்டேன்

படித்தவர்கள் என்னைப்பார்த்து மூக்கில் விரல் வைக்கும் வன்னம் சாதித்து காட்ட வேண்டும் என்று அந்த கடையைவிட்டு விலகி சிரிதாக வீட்டு மளிகை சாமான்கள் விற்கும் கடை திறந்து Home Delivery செய்தேன் சிறிய பொருள்களுக்கு ஏஜன்சி எடுத்தேன் அப்படியாக வளர்ந்ததுதான் எனது இத்தனை நிறுவனங்களும் நான் மட்டும் படித்திருந்தால் சத்தியமாக மணி அடித்துக்கொண்டு தான் இன்றுவரை இருந்திருப்பேன்.

எது மைனஸ் என்று நினைகின்றோமோ அது சில சமயம் + ஆகும் சிலநேரம் + / - ஆகலாம் வின்ஸ்டன்ட்டின் மைனஸ்  + ஆனது அவர் படித்திருந்ததால் ஆத்ம திருப்தி என்று வாழ்நாள் முழுவதும் மனியடித்துக் கொண்டுதானே இருப்பார்முயற்சிகளோடு வாழவேண்டும் குறிக்கோள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் சிறந்த வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

9 comments:

  1. ஆர்வத்துடன் (ஈடுபாட்டுடன்) அயராத தளராத கடின உழைப்பு எதையும் சாதிக்கும் என்பதை சொல்லி விட்டீர்கள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உழைப்பால் உயர்ந்தவர்களும் இவ்வுலகில் உண்டு. உயர்படிப்பால் உயர்ந்தவர்களும் உண்டு.

    சாதிக்கும் எண்ணமுடையோன் நிச்சயம் சாதித்துக்காட்டுவான். அதற்க்கு சமமான படிப்பறிவும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் வாதம்.

    ReplyDelete
  3. நல்ல அக்கம்

    தாக்கம் தரும்

    ReplyDelete
  4. இறைவனின் நினைப்பு+கடின உழைப்பு= வெற்றி

    ReplyDelete
  5. நல்லுதாரணங்கள்!
    இறைவனின் நினைப்புடன் தன்னம்பிக்கை+ஆர்வத்துடன் கடின உழைப்பு = வெற்றி

    ReplyDelete
  6. தன்னம்பிக்கையை வளர்க்கும் நல்லதொரு தொழில் படைப்பு !

    கட்டுரையாளர் பிறர் தொழில் தொடங்க நல்லதொரு உதாரணமாகத் திகழ்கிறார்.

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. பயனுள்ள அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. தன்னம்பிக்கையை வளர்க்கும் நல்லதொரு தொழில் படைப்பு

    எல்லோரையும் கவரக்கூடிய ஆக்கம் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. கருத்திட்ட அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் வரும் வாரத்தோடு இத்தொடர் முடிவுறுகின்றது இதை படித்த அத்துனை நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை கூருகின்றேன்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers