.

Pages

Saturday, May 4, 2013

[ 8 ] உள்ளம் கேட்குமே !? MORE...!

சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும் ! நான் கூறிய பள்ளி மாணவ, மாணவியரின் குடும்ப பின்னணி அடிப்படையிலேயே  அவர்களின் மன நிலையும் அமைந்து இருக்கும் உயர் நிலை பள்ளி படிப்பை முடித்து மேல் நிலை பள்ளி படிப்பை தொடர முனையும் இளைஞர்களின் மனதில் உதிக்கும் நிலையை விளக்க விரும்புகிறேன்...

எதிர்காலத்தில் என்ன  தொழில் செய்ய போகிறோம். அதற்கு என்ன பாடம் எடுக்க வேண்டும்..என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உயர்நிலை பள்ளி பருவத்தின் கடைசி பருவத்தில் இருக்கும் இளம் சிறார்களின் மனநிலை. அதிலும் ஏழ்மை நிலையில் கிராம புறங்களிலிருந்து வரும் மாணவ மாணவியர்களிடம் ஒரு விதமான போலி கெளரவம் தொற்றி கொண்டிருக்கும் சக மாணவியரிடம் தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள எத்தனிப்பர் இதன் காரணமாக கூட  மாணவியருக்கு ஒருவிதமான பிரச்னை ஏற்படும். கிராமங்களிருந்து வரும் மாணவனுக்கு வேறுவித மான பிரச்சனை எந்த வடிவில் என்று பார்போம்…

மிருதுவான உள்ளம் கொண்ட மாணவியர்களின் மன அழுத்தங்கள் சில சமயங்களில் கூடுதலாக காணப்படும். வீடுகளில் பெற்றோரின் கண்டிப்பு. அப்படி செல்லாதே... இதை செய்யாதே... என்ற பல கட்டளை ! அதே போன்று நகர்புற  வாழ்வில் உள்ள நவீனரக வாழ்வு நம்மிடம் இல்லையே என்ற வேதனை !

பள்ளி கூடத்தில் ஆசிரியர்கள் இடும் கட்டளைக்கு சரியாக செயல் படாத நிலையில் ஆசிரியர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி மனதளவில் மிகவும் பலகீனம் அடைந்த  உள்ளம் ஆறுதல் தேடும் ! தமக்கு சாய்ந்து கொள்ள ஒரு தோல் வேண்டும் என்று அந்த சிறு உள்ளம் கேட்கும் MORE... MORE... என்று அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி காதல் வலை வீசுவர்.

தடுமாறும் உள்ளம் சில சமயங்களில் தஞ்சம் அடையும் வல்லூறுகளின் கொடும் பசிக்கு ஆளாகும் கோழி குஞ்சுகளாய் இரையாகி போகும் நிலை ! பாவம் அதன் பின்னர் கல்வி கேள்வி குறியாக மாறி போகும். இதே போன்றே இளம் மாணவனின் நிலைமையும் புகைத்தல்... பிறரை எளிதில் பகைத்தல்... கொடியவர் சகவாசம் என்று கல்வி மறந்து தடுமாறும் நிலை இதற்கு காரணம் என்ன ? தீர்வுதான் என்ன ?
இன்னும்  வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

19 comments:

  1. வாரத்திற்கு வாரம் உளவியல் ஆய்வு மெருகேறிக்கொண்டே செல்கிறது. இறுதியில் இவற்றை புத்தகமாக தொகுத்து வெளியிடுவோம்.

    நீங்கள் கூறும் அனைத்தும் சமூகத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருகின்றன.

    பாடதிட்டத்தில் மாற்றம் தேவை. இதற்கு அரசு -ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம்.

    ReplyDelete
  2. பத்திரிக்கைத்துறை "நிபுணர்" (?) அதிரை சித்திக் அவர்களே... முதலில் தமிழ் கற்றுக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.,.

    சேக்கனா M. நிஜாம் அவர்களே... வாசித்தீர்களே... எப்படி..? இல்லை தவறு எங்கே தெரிகிறதா... ?

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ திண்டுக்கல் தனபாலன்அவர்களே ..!

      தமிழ் மொழி பெருங்கடல் ...

      எனது எழுத்து சிறு துளியே ...

      எனது கருத்தை மட்டுமே பதிகிறேன்

      மொழி புலமையை பதியவில்லை

      சொல்லில் குற்றமா ...?

      பொருளில் குற்றமா ...

      எழுத்தில் வல்லினம் மெல்லினத்தில் குற்றமா ..

      எழுத்து நடையில் புள்ளி ,kama..,இடம் மாறி உள்ளதா..

      அல்லது ஒன்றுமே புரிய வில்லையா ..

      தங்களின் கருத்து அறிந்து என் எழுத்தை மெருகேற்றி

      கொள்கிறேன் ...விளக்கம் அறிய விளைகிறேன் ..

      ஆவலுடன் எதிர் பார்கிறேன் ..நன்றி

      Delete
    2. தவறாக எண்ண வேண்டாம்... ஆனால் தவறாக எண்ண வாய்ப்புண்டு...

      /// தமக்கு சாய்ந்து கொள்ள ஒரு தோல் வேண்டும் ///

      நன்றி...

      கருத்து தவறு இருந்தால் மன்னிக்கவும்...

      சிறு உள்ளம் கேட்கும் MORE... MORE... தொடரட்டும்...

      Delete
    3. // சேக்கனா M. நிஜாம் அவர்களே... வாசித்தீர்களே... எப்படி..? இல்லை தவறு எங்கே தெரிகிறதா... ?//

      அன்புச்சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தொடர் வருகைக்கும் தங்களின் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி !

      எழுத்துப் பிழையை சுட்டிக்கட்டியமைக்கு தங்களுக்கு மீண்டும் நன்றி - தவறு திருத்திக் கொள்ளப்படும்.

      எனினும் கட்டுரை ஆசிரியர் கூற வந்த கருத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. மேலும் மொழியில் புலமை அடைந்தவர்கள் மாத்திரம் பத்திரிக்கைத் துறையில் சிறந்தவர்கள் என்பது தவறான கருத்து எனினும் மொழிப்புலமையும் பத்திரிக்கைத்துறையில் சிறந்துவிளங்க ஒரு அங்கமாக இருக்கிறது.

      Delete
    4. // தவறாக எண்ண வேண்டாம்... ஆனால் தவறாக எண்ண வாய்ப்புண்டு...//

      ஹா... ஹா... சரியாகச் சொன்னீர்கள்

      Delete
  3. எதிர்காலத்தை திட்டமிடாமல் எல்லோரையும் போல் உயர்கல்வி கற்றால் மட்டும் போதும் என்று நினைக்கும் மாணவ, மாணவியர்களுக்கும், மனக்கட்டுப்பாடு இல்லாமல்,குடும்ப ஏழ்மையின் மன அழுத்தத்தில் மனதை காதல் வலையில் சிக்கவைக்கும் மாணவ மாணவியர்களுக்கும் உணர்த்தும் அழகிய விழிப்புணர்வு ஆக்கம்.

    வாழ்த்துக்கள். சகோ.அதிரை.சித்திக் அவர்களே. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ அதிரை மெய்சா அவர்களே

      தங்களின் ஆதரவிற்கு நன்றி

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம், நன்றாக இருக்குது. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ..கருத்திற்கும் நன்றி

      Delete
  5. தவறாக எடுத்துக் கொள்வீர்களோ என்று நினைத்திருந்தேன்... அப்படி இல்லை... நன்றி... Google Translate செய்யும் போது இப்படி நடப்பதுண்டு... பதிவை எழுதுவதை விட பதிவை திருத்தத் தான் நேரம் அதிகம் ஆவதுண்டு... எனது பதிவுகளிலும் - வீட்டில் குழந்தைகள் 'ப்' இல்லை 'த்' இல்லை 'ச்' என்பார்கள்... (ஹிஹி) முடிந்தளவு திருத்தி விடுவேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ..விமர்சனம் படைப்பாளிக்கு ஊக்கம் அளிப்பதும்

      மெருகேற்றியும் வருவதை அறிவோம் ..நன்றி

      எழுத்து பிழை தவிர்க்க முயற்ச்சிக்கிறேன் .நன்றி

      Delete
  6. சில பத்திரிகைகள் என்ன படிக்கலாம் என்ற செய்தியோடு exhibition ல் மாணவர்களுக்கு பல கல்லூரிகள் கலந்துகொண்டு கலந்துரையாடலில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறார்கள் ஆசிரியரின் ஆக்கத்திலும் சாய்ந்துகொள்ள தோள் வேண்டும் என்பதைப்போல்

    ReplyDelete
  7. சாய்ந்து கொள்ள ஒரு தோல் ..வேண்டும் என்பதன்

    பொருள் ஆறுதல் தேடும் உள்ளம் என்றே பொருள்

    அதாவது நடை பருவத்தில் உள்ள குழந்ததகளை

    உற்றார் உறவினர் அதட்டிநாளோ .சிறு அடி பட்டாலோ குழந்தை அழுதுகொண்டே இருக்கும் வீட்டில் உள்ள உறவுகள் ..அம்மா ,அப்பா ,தாத்தா
    பாட்டி ,மாமா ,போன்றோர் வாரி அனைத்து ..தூக்கி
    தோளில்போட்டு முதுகை வருடினால் குழந்தை அப்படியே நம் தோளில் சாய்ந்து கொள்ளும் விசும்பி
    விசும்பி அப்படியே அழுகையை நிறுத்தி கொள்ளும்
    இது உள்ளம் கேட்கும் மருந்து ...

    வயதிற்கு தகுந்தார் போல் ஆறுதலின் நிலை பாடு
    மாறுபடும் உள்ளத்தின் ஆறுதலின் தேடல் ஐம்பது
    வயது வரை நிலை கொள்ளும் .தளராஉள்ளம்
    சூழ்நிலையால் வெற்றி கொண்ட உள்ளத்தின் நிலை பாடு வேறு வித மானது ...எனவே ஆறுதல் தேடும் மன நிலைக்கு சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும் என்ற தமிழ் சொல் உண்டு

    ReplyDelete
  8. பாடதிட்டத்தில் மாற்றம் தேவை. இதற்கு அரசு -ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ .ஹபீப் அவர்களே

      தங்கள் கருத்திற்கு ..வருகைக்கும் நன்றி

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers