.

Pages

Saturday, May 4, 2013

தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களுக்கு அழைப்பு !

நேற்று [ 04-05-2013 ] துபையில் சங்கமம் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட காப்பியக்கோ இலங்கை ஜின்னா ஷரிஃபுதீன் அவர்கள் யாத்தளித்த கவிதைத் தொகுப்பைப் பாராட்டி கவியன்பன் அபுல் கலாம் வாழ்த்துரை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீரகத் தமிழ் மன்றத் தலைவர் -நூல் ஆய்வாளர் ஆசிஃப் மீரான் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.

அந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டம் அதிரை என்ற ஊரைச் சேர்ந்த முனைவர் இப்றாஹிம் அன்சாரி அவர்கள் எழுதிய ‘மனுநீதி மனித குலத்துக்கு நீதியா’ என்ற நூலையும், சேக்கனா நிஜாம் அவர்கள் எழுதிய ‘விழிப்புணர்வுப் பக்கங்கள்’ என்ற நூலையும், ஆசிஃப் மீரான் அவர்கட்கு கவியன்பன் அபுல் கலாம் அவர்களால் வழங்கப்பட்டது.

ஆசிஃப் மீரானுக்கும், கவியன்பன் அபுல் கலாமுக்கும் இலங்கையில் நடைபெறவுள்ள தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை ஜின்னா ஷரிபுதீன் அவர்களின் மரபுப்பாக்களை ஆய்வுரை வழங்க அன்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கவியன்பன் அபுல் கலாம் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட இலங்கை ஜின்னா ஷரிபுதீன்  அவர்களிடம் அணிந்துரை மற்றும் பிழைத்திருத்தங்கள்  வேண்டி 63 கவிதைகள் அடங்கிய அச்சிடப்பட்ட காகிதங்களைக் கொடுத்துள்ளார்.




12 comments:

  1. வாழ்த்துகள் கவிக்குறள் !

    ReplyDelete
    Replies
    1. அன்பின் விழிப்புணர்வு வித்தகரே! உங்களிடம் வாக்களித்தபடி என் வாக்குறுதியை நிறைவு செய்து விட்டேன்; அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் விசேட அதீதியான என் குருநாதர் காப்பியக்கோ அவர்கட்கும், என்னைச் சின்னத்திரையில் அறிமுகம் செய்த சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் ரஃபீக் அவர்கட்கும் மற்றும் அங்கிருந்த மிகவும் பிரபலமானவர்கட்கும் உங்களிருவர்களின் நூல்களை அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

      இப்பொழுதுள்ள யு.ஏ.இ. சட்டதிட்டத்தின்படி எவ்விழாக்களும் அனுமதியின்றி நடாத்தப்பட இயலாது என்பதால் திகதி குறிப்பிட்டு இருந்த அனைத்துத் தமிழ் இலக்கிய விழாக்களும் ரத்து செய்யப்பட்டதால், இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அரசின் அனுமதி பெற்ற (licence holder) ஓர் ஊடகத்துறை என்பதால் இந்நிகழ்வுகளில் வரும் தமிழர்களிடம் உங்களிருவர்களின் நூல்களை அறிமுகம் செய்திட எண்ணினேன்; அல்ஹம்துலில்லாஹ் என் உளத்தூய்மையான எண்ணங்களை எப்பொழுதும் அங்கீகரிக்கும் அல்லாஹ்வின் உதவியால் என்னிடமிருந்த உங்களிருவரின் நூல்களை எல்லாம் வந்திருந்த முக்கியமான்வர்களிடம் கொடுத்து விட்டேன்.

      இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் விடுப்பில் வரும் பொழுது உங்களிருவர்களின் நூல்களை மேலும் பெற்றுக் கொண்டு வருவேன்; அவைகளையும் இன்னும் என்னுடன் தொடர்பில் உள்ள அனைத்துத் தமிழர்களின் கரங்களிலும் ஒப்படைப்பேன் என்றும் வாக்குறுதி அளிக்கின்றேன், இம்மாமன்றத்தின் முன்னிலையில், இன்ஷா அல்லாஹ்!

      அதிரையின் பெயர் உலமமெலாம் ஒலிக்க வேண்டும் என்பது மட்டுமே என் வேணவா என்பதை மட்டும் மனத்தினில் எல்லாரும் இருத்திக் கொண்டால் , சூழ்ச்சிகள் பின்னும் “வலைகளில்” வீழ்ந்து வீழ்ச்சிதனை அடையாமல் காத்துக் கொள்வோமாக!

      வாழ்க வளமுடன்!
      சூழ்க பலமுடன்!!

      Delete
  2. வாழ்த்துக்கள்.கவியன்பரே.!

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    மச்சான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. எங்கள் கவிமேதை அபுல் கலாம் காக்கா அவர்களே.

    தமிழ் மாநாட்டில் கலந்துக்கொண்டு அதிரைக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எங்கள் கவிமேதை அபுல் கலாம் காக்கா அவர்களே.

    தமிழ் மாநாட்டில் கலந்துக்கொண்டு அதிரைக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அன்புச்சகோதரர்கள், விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம், அதிரைக் கவிஞர் மெய்சா, அன்பு மச்சான் ஜமால் முஹம்மத், அன்பு நேசர் ஹபீப், தொழிலதிபர் சபீர் அஹ்மத் மற்றும் அதிரைத் தமிழூற்று சித்திக் ஆகியோரின்வாழ்த்துரைகள் கண்டு மகிழ்கிறேன்; உளம் நிறைந்த நன்றியை ஏற்க வேண்டுகிறேன்.

    வாழ்க வளமுடன்!
    சூழ்க பலமுடன்!!

    அன்பின் கவிஞர் மெய்சா அவர்களைக் காண ஆவலுற்றேன்; ஆனால், எமது நிகழ்வு முடிவதற்கு இரவு நேரமாகிவிட்டதால் அடியேன் உடன் அபுதபிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நிலையிலிருந்ததால் எங்களின் அன்புச் சந்திப்பி அன்று நிகழாவிட்டாலும், நகர்பேசியின் ஊடாக உரையாடினோம்; இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்; குறிப்பாக கவிஞரின் விருந்தையும் சுவைப்பேன்., எதிர்வரும் இரண்டு வாரங்கட்குள், மற்றுமொரு தமிழ் இலக்கிய நிகழ்ச்சிக்காக துபை வந்தால் தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  7. மனசு நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு...

    ReplyDelete
  8. இன்ஷா அல்லாஹ் என் உடல்நிலையும் என் பணிச்சுமைகளும் ஒத்துக் கொள்ள வேண்டும்; ஆயினும் என் குருநாதர் அவர்களின் “வல்லுவம்” எனும் கவிதைத் தொகுப்பில் மூன்று கவிதைகளை மட்டுமே ஆய்வுரை வாசித்தேன் நேற்று நிகழ்ந்த விழாவில்; அதனால், இன்ஷா அல்லாஹ் அவர்களின் மரபுப்பாக்களை ஆய்வுரை செய்து உரையாற்ற அவர்களின் சீடனாய் அவர்களால் அறிமுகப்படுத்துள்ள அடியேனுக்கு இம்மாநாட்டில் ஓர் அரிய வாய்ப்பை நேற்று அறிவித்ததில் நான் பேறு பெற்றுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்!

    உங்களின் வாழ்த்துக்கு நன்றி அன்பு தோழி!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers