.

Pages

Wednesday, May 15, 2013

எனக்கு நேரமே பத்தலைங்க...

எனக்கு நேரமே இல்லை’ என்று நாம் சொல்வது வாடிக்கை. ஆனால் அப்படிச் சொல்வதில் உண்மை இல்லை என்பதுதான் உண்மை. காலை எழுந்தவுடன் ஒவ்வொருவர் கையிலும் அரிதான ஒரு செல்வம், இந்த தேசத்தின் முதல் குடிமகன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. அது தான் நாளொன்றுக்கு வழங்கப்படும் 24 மணி நேரம். இந்த ஒன்றில் மட்டுமே உலகெங்கும் சம தர்மம் நிலவுகிறது.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்” என்பது குறள். இது பொருட் செல்வத்துக்கு மட்டுமன்று, நேரச் செல்வத்திற்கும் பொருந்தும் நேரத்தை அளவறிந்து செலவு செய்யாதவனுடைய வாழ்க்கை இருப்பது போல் தோன்றினாலும் இல்லாமல் அழிந்துவிடும். நேரத்தை மிகுந்த பயனுள்ளதாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் வழிமுறையைத்தான் நேர நிர்வாகம் என்கிறோம்.

எதனோடும் ஒப்பிடமுடியாத அளவுக்கு மதிப்புமிக்க நேரத்தை எப்படியெல்லாம் நிர்வகித்து வாழ்வை வளப்படுத்திக் கொள்வது என்ற விழிப்புணவர்வை ஏற்படுத்தி அதற்கான வழிமுறைகளை கோடிட்டு காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். முதலாவதாக நேரத்தை சிறந்த முறையில் கையாளுவதற்கான சில வழிறைகள்;

நேரத்தை நிர்வகிக்க நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் பட்ஜெட் தாயரிப்பது. அதாவது நேரத்திற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது. ஒவ்வொரு நாளும் வரவு 24 மணி நேரம் அதை உடல் ஆரோக்கியத்திற்கு பொருள் தேடுவதற்கு, படிப்பதற்கு, உற்சாகத்திற்கு, ஓய்விற்கு உறக்கத்திற்கு என்று ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பணிகளில் அவசரப்பணிகள் எவை என்றும் அவசியப் பணிகள் எவை என்றும் வகைப்படுத்தி செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டியவை அவசரப்பணி. நமது இலக்கை அடைய உதவும் பணிகள் அவசியப் பணிகள். அவரசப் பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அவசியப்பணிகளை ஆற அமர யோசித்து செய்ய நேரம் உண்டு.

நாமே எல்லாவற்றையும் செய்து முடிக்க முயற்சிக்கக்கூடாது. அது தோல்வியில்தான் முடியும். நம்மால்தான் சிறப்பாக செய்ய முடியும் என்று எண்ணுவது தவறு. உரிய முறையில் பொறுப்புகளைப் பிறருக்கு பகிர்ந்து அளிக்க பழக வேண்டும்.

இப்போதெல்லாம் தொலைபேசி மற்றும் அலைபேசியின் உபயோகத்தை விட தொந்தரவுகளே அதிகமாகி வருகின்றன. தொலைபேசியில் எப்போது, எப்படி, எவ்விதம் பேசுவது என்பதற்கு ஒரு நெறிமுறைவகுத்துக் கொண்டால் ஒழிய நேரத்தை சேமிக்க முடியாது.

ஒரு நல்ல செயலைச் செய்ய கால நேரம் பார்க்கக்கூடாது. நல்லதுக்கு காலமில்லை’ என்ற முதுமொழி கூறுவது இதைத்தான். ஒவ்வொரு நாளும் ராகு காலம், எமகண்டம், என்று பல மணி நேரத்தை பலர் எந்தக் காரியமும் செய்யாமல் வீணாக்கி விடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, அஷ்டமி, நவமி, பாட்டிமை, செவ்வாய்க்கிழமை என்று பல நாட்கள் வீணாக்கப்படுகிறது. இக்கணக்கின்படி ஆண்டில் 168 நாட்கள் கெட்ட நாட்கள். இப்படி நாள்தோறும் பல மணிநேரமும் மாதந்தோறும் பல நாட்களும் வீணாக்கப்பட்ட நாட்களை வாழ்நாள் முழுவதற்கும் கணக்கிட்டால் ‘வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை வீணாக்கிவிட்டோமா!’ என்று மலைப்பாக இருக்கும்.

எந்தவொரு செயலுக்கும் பொருள் மற்றும் பணத்தைப் போல காலம் என்பதுவும் ஒரு முதலீடு காலத்தின் அடிப்படையில்தான் முதலீடு ‘நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடுய என்று வகைப்படுத்தப்படுகிறது. காலச்செல்வம் அனைவருக்கும் எளிதாக, இலவசமாக கிடைக்கக்கூடிய ஒன்று. அதனை சிறப்பான வழியில் முதலீடு செய்ய வேண்டும்.

பொழுதுபோக்கு’, ‘பொழுதைக் கழிப்பது’ என்று கூறுவதே தவறு. வெற்றிக்கு முதல் தகுதி பொழுதை நல்ல வழியில் பயன்படுத்துதலே ஆகும். போனால் வராத பொழுதை நாம் போற்றி வாழ பழகிக் கொள்ள வேண்டும். கடவுளால் தரப்பட்ட அரிய கொடை பொழுது. அதன் அருமை தெரியாதவர்கள்தான் ‘பொழுது போகவில்லை’ என்று புலம்புவார்கள். காலத்தின் அருமை தெரிந்தோர் ‘பொழுது போதவில்லை’ என்று வருந்துவார்கள்.

வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற்ற உழைப்பையும் மன உற்சாகத்ததையும் விடா முயற்சியையுமே துணையாகக் கொண்டு, காலநேரம் நமக்கு சாதகமாக வரும் என்று எண்ணிக் கொண்டிராமல் கருத்துடன் சிந்தித்து செயல்பட்டு நன்னம்பிக்கையோடு முயன்று முன்னேறவேண்டும்.

மனிதன்தான் நேரத்தை நிர்வகிக்க வேண்டும். நேரம் மனிதனை நிர்வகிப்பதாக இருக்கக்கூடாது. நேர நிர்வாகம் என்பது நேரத்திற்கு அடிமை ஆவது என்பதல்ல. நேரத்தை வென்று மகிழ்வுடன் வாழ உதவும் வழிமுறை. நேரத்தை நிர்வகித்து வாழ்வது ஒரு இயந்திர வாழ்க்கை என்று பலர் நினைக்கின்றனர். அது தவறு. நேரத்தை நிர்வகித்து வாழ்வது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்க வல்லது. நேர நிர்வாக நுணுக்கங்களை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டால் நாளொன்றுக்கு 24 மணி நேரம் அல்ல 48 மணி நேரமே கிடைக்கும்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

18 comments:

  1. 'காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது'

    சமூக நலனில் அக்கறையுடன் செயல்படும் ஒருவருக்கு தன்னுடைய கடமைகள், தன்னைச்சார்ந்தவர்களின் கடமைகள், சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் போன்றவற்றிக்கு முக்கிய மூலதனம் நேரம் ஒன்றே !

    இவற்றை பயனுள்ள வகையில் செலவழித்து நாமும் நாமைச் சார்ந்தவரும், சமூகமும் மேன்மையுற உறுதுணையாய் இருப்போம்.

    ReplyDelete
  2. நேரத்தின் அருமை - பெருமை

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    படித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மனித உரிமைக்காவலரின் வித்தியாசமான சிந்தனை அருமை.

    நேரத்தை வீணாக்குவது பற்றி இதுவரை யாருடைய கவனத்திற்கும் வராத ஒன்றை கவனத்தில் கொள்ள வைத்து விட்டீர்கள்.

    பதிவை வாசித்தபோது நேரம்போனதே தெரிய வில்லை.

    வாழ்த்துக்கள் ஜமால் காக்கா அவர்களே.!

    ReplyDelete
  5. நேரத்தின் சிறப்பு அருமை... நன்றி... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. எல்லோரும் சிந்திக்ககூடிய பதிவு ஏன் என்றால் நேரமும் காலமும் மிக முக்கியம் அல்லாஹுத்தாலா தந்த இந்த நேரத்தையும் காலத்தையும் எவ்வாறு செலவு செய்தாய் என்பது மறுமையின் கேள்விகளின் ஓன்று அவன் படைத்த இந்த நேரத்தையும் காலத்தையும் வீண் விரயம் இல்லாமல் நல்லதுக்கே பயன் படுத்துவோம். இன்ஷா அல்லாஹு.

    அருமையான பதிவு தந்த ஜமால் காக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நேர நிர்வாகம் என்பது நேரத்திற்கு அடிமை ஆவது என்பதல்ல. நேரத்தை வென்று மகிழ்வுடன் வாழ உதவும் வழிமுறை.

    நேரம் பற்றிய தெளிவுபடுத்தும் விளக்கங்கள்.நன்றிங்க.

    ReplyDelete
  8. நல்ல சிறப்பான சிந்தனை ..

    நானும் சில கருத்துக்கள் பதிய எண்ணியுள்ளேன்

    நமக்குள் ஒரே சிந்தனை ...இன்ஷா அல்லாஹ் அடுத்த

    ஆக்கங்களில் பகிர்ந்து கொள்வோம்

    ReplyDelete
  9. மச்சானின் நேரம் பற்றிய சிந்தனை, மிக மிக அவசியமான- அவசரமான ஒன்று என்பதை நாம் அறிய வேண்டும்.

    திட்டமிடல்
    நேரம் ஒதுக்குதல்
    பணிகளை அட்டவணையிடல்

    இப்படிப்பட்ட விடயங்களில் கண்ணும் கருத்துமாய் உள்ளவர்களே வெற்றிக் கனியைப் பறிக்க முடியும் என்பது அனுபவ பூர்வமான உண்மயிலும் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி மச்சான்.

      Delete
  10. தம்பி ஜமால் அவர்களின் ஆக்கத்தைப் படித்துவிட்டு க் கருத்திட எனக்கு நேரமே பத்தலீங்க.

    நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி காக்கா.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers