மனிதனை உலகில் படைக்கும் போது அவனுக்கு நிறைய அருள்களையும் சேர்த்துதான் படைத்துள்ளான் மனிதனோ அவைகளை உணராது தன் குறைகளை மட்டுமே வெளிக்காட்டுபவனாக இருக்கின்றான்.
வாழ்வென்பது இன்ப, துன்பங்களை கொண்டதாய் உள்ளது. வழி என்பது மேடு பள்ளங்கள் கொண்டதாய் இருப்பது போல் ஒருவர் தான் எது செய்தாலும் விளங்குவது இல்லை யாரும் என்னை மதிப்பதில்லை இறைவன் எனக்கு எந்த அருளையும் கொடுக்கவில்லை நான் சபிக்கப்பட்டவனாக இருக்கின்றேன் இவ்வுலகில் வாழ்ந்தென்ன பயன் என்வாழ்வை நான் முடித்துக்கொள்ளப் போகின்றேன் என்று புலம்புவாராயின் அவரிடம் கேட்போம் தங்களிடம் இறைவன் கொடுத்த கண் இருக்கின்றதே அதன் மதிப்பு, அல்லது விலையை சொல்லுங்கள் என்றால் முழிப்பார் உங்களிடம் உள்ளது வேறு கண் குருடரிடம் இல்லையே ஒரு கண்ணை கொடுங்கள் ஒரு இலட்சம் வாங்கித் தருகிறேன் என்றால் கொடுப்பாரா ? சரி அதைவிடுங்கள் தம்மிடம் உள்ள இரண்டு கிட்னிகளில் ஒன்றை கொடுத்தால் 2 இலட்சம் தருகிறோம் என்றால் யோசிப்பார் ஒன்றை கொடுத்துவிட்டு எனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நான் உயிர் வாழ்வதெப்படி என்று நம்மிடமே கேள்வி கேட்பார்.
ஒரு கண்பார்வையற்றவர் தம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளை அனுபவிக்கும் பொழுது அழுது புலம்புவார் தம்முடைய குடும்பத்தார் பொருட்காட்சி காணச்சென்றால் இவர் மட்டும் வீட்டில் தனியாக தமக்கு பாக்கியம் கிடைக்க வில்லையே என்று தேம்பித் தேம்பி அழுவாராம் பள்ளிக்கல்வி பெற்ற தம் நண்பர்களின் அறிவை கண்டு தமக்கு கிடைக்க வில்லையே என்று அழுவாராம் எந்த நேரமும் அழுவதை மற்றவர்கள் பார்த்து பரிகாசிப்பதால் சிலசமயம் தனியாக யாரும் இல்லா இடத்தில் தட்டுத்தடுமாறி சென்று தனியாக அமர்ந்து கதறிக்கதறி அழுவாராம்.
ஒரு சமயம் தனியாக அழுது புலம்பிக்கொண்டு இருக்கையில் வேறொரு அழுகை குரல் இவர் காதிற்கு கேட்டது தனது அழுகையை நிறுத்திவிட்டு அழும் குரல் கேட்கும் இடம் நோக்கி நடந்து வந்து யார் இங்கே அழுவது ? என இவர் கேட்க எந்த பதிலும் வரவில்லை மறுபடி சப்தமாக உங்களுக்கு என்ன பிரச்சனை என்னிடம் சொல்லுங்கள் என்னை விடவா உங்களுக்கு பிரச்சனை வந்து விடப்போகின்றது என்னவென்று சொல்லுங்களேன் என்றாராம்.
அழுதவர் தம் அழுகையை நிறுத்திவிட்டு தமக்கு ஏற்பட்ட அவலத்தை பார்வையற்றவரிடம் கூறலானார், என் சோகத்தை சொல்லி உங்களை ஏன் வருத்தப்பட வைக்கவேண்டும் என யோசிப்பதாய் சொல்ல, பரவாயில்லை சொல்லுங்கள் என்றாராம், அவரும் சொல்ல ஆரம்பித்தார் எனக்கு நேற்றுதான் திருமணம் முடிந்தது, சொல்லி முடிப்பதற்குள் நிறுத்துங்கள் நேற்று கல்யாணம் நடக்க இன்று அழும் நிலை வந்தது புரியாத புதிராய் உள்ளதே ? நான் திருமணம் செய்ய முடியாமல் இருப்பதற்கு வருத்தப்படுகிறேன் என்னை குருடன் என நிராகரிப்பவரை கண்டு மனம் வேதனைப்படுகிறேன் நீங்கள் என்னவென்றால் திருமணம் முடிந்த மருநாளே அழுது புலம்புகிறீரே என்று கேட்க அழுதவர் தொடர்ந்தார் என் தாயும் தந்தையும் வரதட்சனை பணத்திற்கு ஆசைப்பட்டு குள்ளமான, கருமையான, அவலட்சனமான எனக்கு எந்த வகையிலும் பிடிக்காத ஒரு பெண்ணை திருமணம் முடித்து விட்டார்கள் என் வாழ்க்கையே சூன்யமாகிவிட்டது என்று சொல்ல பார்வையற்றவர் திரும்பக் கேட்டாராம் கருமை என்றால் என்ன ?
இவருக்கு அழுகையோடு கோபமும் வந்துவிட்டது. உன் பார்வையால் ஏற்பட்ட இருளே கருமை என்றார்.
சரி அவலட்சணம் என்றால் என்ன ?
அழுதவருக்கு கடுமையான கோபம் வந்தவராக உமக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது அதற்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை என்று கடுஞ்சொல்லால் திட்டி விட்டார்.
பார்வையற்றவர் விழுந்து விழுந்து சிரித்தவராக கண்பார்வை இருந்தால் இத்தனை பிரச்சனைகளை சந்ததிக்க வேண்டுமா இந்த பிரச்சனைகளுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லையா ! சந்தோஷம் இனி நான் பார்வை இழந்தமைக்கு நான் அழவே மாட்டேன் எது கிடைத்ததோ அது நல்லதே கிடைத்தது இருப்பதை கொண்டு போதுமாக்கி கொள்வேன் என்றவராக அந்த இடத்தை விட்டு சென்றார் .
வேறு ஒரு சம்பவம் அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஒரு மனிதர் அழுது கொண்டு இருக்க மற்றொரு நபர் சிரிப்பாய் சிரித்துக்கொண்டு இருந்தார் அந்த வழியே சென்ற ஒரு நபர் இருவரையும் பார்த்து விட்டு என்ன மனிதர் இவர் ஒருவர் அழுது கொண்டு இருக்க இவர் சிரிக்கின்றாரே என்ன வென்று கேட்ப்போம் என அவர் அருகில் சென்று ஏன் இப்படி சிரிக்கின்றீர் உங்களுக்கே சரியாக படுகிறதா மற்றவர் அழுகையில் நீர் சிரிக்கின்றீரே என்று கேட்கையில் அவர் எந்த பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே இருந்தார்
சரி அழும் நபரிடமாவது கேட்போம், என்ன சார் உங்க பிரச்சனை நீங்கள் ஏன் அழுகிறீர்கள் அவர் ஏன் சிரிக்கிறார் ?
ஏன் சார் அந்த சோகத்த கேட்கிறீர்கள் நான் இங்கு வரும்பொழுது இப்பொழுது சிரிக்கிறாரே அவர் அழுது கொண்டு இருந்தார் நான் எனது சோகத்தோடு இங்கு வந்தேன் இவரை பார்த்து ஏன் அழுகிறீர்கள் என்றேன் அவரோ எந்த பதிலும் சொல்லாமல் ஒரு காகிதத்தில் எழுதி காட்டினர் எனக்கு காத்து கேட்க்காது வாய் பேச வராது எனது பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்ய ஆசைபடுகின்றனர் ஆனால் மற்றவர்களின் ஏளனம் அவர்களை மிகவும் மனமுடைய செய்கிறது எனக்கும் நல்ல வேலை கிடைப்பதில்லை குறைந்த சம்பளத்தில்தான் வேலை கிடைக்கிறது எல்லோரையும் போல் நானும் மற்றவர்கள் பேச கேட்கணும் நாமும் சரளமாக பேசணும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்றுதான் அழுகிறேன் என்று எழுதி காட்டினார். நான் உடனே கவலைபாடாதே நான் காது கேட்பதினால் படும் அவஸ்த்தைகளை எண்ணி தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தேன் உன்பாடு என்னைவிட எவ்வளவோ மேல் என்று எழுதிகாட்டினேன் அவரோ ஆர்வமாக காரணத்தை கேட்டார் நானும் எழுதிக்காட்டினேன்
நான் சரியாக படிக்கவில்லை நான் வேலை செய்யும் இடத்தில் எனது முதலாளி எந்தநேரமும் என்னை திட்டிக்கொண்டே இருக்கிறார் சம்பளம் தருவதே வேஸ்ட் என்கிறார், வீட்டுக்கு வந்தால் என் மனைவி இன்னும் மோசமாக உனக்கெல்லாம் எதற்கு கல்யாணம், ஒரு குடும்பம், சரியா சம்பாதிக்க தெரியல என்று திட்டிக்கொண்டே இருக்கிறாள் ஆகையால் நான் தற்கொலை செய்யலாம் என்றுதான் இங்கு வந்தேன் என்று நான் எழுதியதை படித்ததுதான் தாமதம் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார் என்று நடந்ததை சொல்ல வந்த முன்றாவது நபருக்கு ஞானம் பிறந்தவராக தன்னுள் சிரித்துக்கொண்டார்.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் ஒரு பணக்காரர் தமக்கு நிம்மதி இல்லை ஏழைகளிடம் பணம் இல்லாவிட்டாலும் கட்டாந்தரையில் படுத்தாலும் உறங்குகின்றனர் நாமோ பஞ்சனை இருந்தும் துயில் கொள்ள முடியவில்லை என்று புலம்புவார். ஏழையோ பணம் இருந்தால் எதையும் விலைக்கு வாங்கி விடலாம் பணம் இல்லை என்றால் நாய் கூட மதிக்காது என்பர் தம்மிடம் இருப்பது பெரிதாக தெரியாது இல்லாதது பறித்தாய் பெரிதாக தெரியும். மனிதனின் குரங்கு புத்தி
கிடைத்ததை நலமென்போம் கிடைக்காததை இந்த பழமும் புளிக்குமா என்போம் !?

மு.செ.மு.சபீர் அஹமது
தன்னம்பிக்கையைத் தரும் நல்லதொரு கட்டுரை !
ReplyDeleteஒவ்வொன்றும் அழகிய உபதேசம்
தொடர வாழ்த்துக்கள்...
அல்லாஹ் எனக்களித்த எழுத்து திறமை,அதை வெளிக்கொணர ஓர் வலைத்தளம் ஜசக்கல்லாஹ் ஹைர்
Deleteஞானத்தின் வாயிலாம் உங்களின் ஆக்கத்தின் உள்ளே சென்று யானும் கற்றுக் கொண்டேன் பாடங்களை என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteதொழிலதிபரை எழுத்தாளராக்கி எமக்கெல்லாம் அரிய- பெரிய விடயங்களை அறிவதற்கு வாய்ப்பளித்த விழிப்புணர்வு வித்தகர்க்கும் பாராடுகள்!
என்றுமே உங்களது பாராட்டுக்கள் மன மகிழ்வை தருபவையாக உள்ளது உங்களது வாழ்வு சிறக்க எமது துஆக்கள்
Deleteவாழ்வியலை
ReplyDeleteஎளிதாய் புரிய வைத்த ஆக்கம்
எண்ணத்தின் வெளிப்பாடு எழுத்து ..
நல்லெண்ணம் கொண்ட நண்பனை பெற்ற
பெருமிதம் எனக்கு
பெருமிதம் கோள்வதிலும் பெருமிதம் வேண்டும் பெருமிதம் கொண்ட பெருமிதமிக்கவரை பெற்றமைக்கு பெருமிதம் கொள்கிறேன் [விசுவால் வந்தவினை]
Deleteசற்று வித்தியாசமான முறையில் சிந்திக்கப்பட்ட நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.
ReplyDeleteஇறைவனின் படைப்பினங்களில் உயர்ந்த படைப்பு மனிதப்படைப்பு அதை நாம் பெற்றிருப்பதே பெரிய அருளாகும்.
அடுத்துச்சொல்லப்போனால் இறைவன் நமக்குத் தந்துள்ள பகுத்தறிவு.அதைக்கொண்டு உலகில் அத்தனை விதமான எண்ணிலடங்கா கண்டுபிடிப்பு இப்படி இறைவனின் அருளை அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தனையும் தந்த இறைவனை நாம் அனுதினமும் நினைக்க வேண்டும் வணங்க வேண்டும். ஆனால் அதை விடுத்து மனிதன் குறைகூறுபவனாகவே உள்ளான்.
மனிதர்கள் சிந்தித்துபார்த்து உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்த நல்லதொரு ஆக்கம். நன்றி சகோதரர் சபீர் அவர்களே.
நம் வலைதளமே வித்யாசமான ஆக்கங்களை கொண்டதுதான் கருத்திட்டமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன் ஹபீபி
Deleteஎதிலும் திருப்தி இல்லாத வாழ்க்கை நரகம்... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteதி.தனபாலன் அவர்களே இக்கரைக்கு அக்கரைப்பச்சை பழமொழி கேள்விப்பட்டு இருப்போமே அதுதான் எனது ஆக்கத்தின் மூலக்கரு
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த ஆக்கம் என்னைப்பார்த்து எச்சரிக்கின்றது.
கிடைத்ததை வைத்து சந்தோசப்படு.
ஆசைப்படுவது கிடைக்காவிட்டால் அதுவும் நல்லதுக்கே என்று எண்ணிவிட வேண்டும்.
எதிபாராமல் கிடைத்துவிட்டால் அதுவும் நல்லதுக்கே என்று எண்ணிவிட வேண்டும்.
எது நடந்தாலும் நன்மைக்கே என்று எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்ல பழகிக் கொள்ளவேண்டும்.
நாளையை நினைத்து கவலைப் படக்கூடாது, நாளைக்கு வெள்ளிக்கிழமையா, அந்த வெள்ளிக்கிழமை நம்மைப் பார்த்து கவலைப்படணும்.
ஆக மொத்தத்தில் நாள் ஆக்கம். வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
எப்பொழுதும் அப்படி எண்ணிவிட்டால் எல்லாப்பழங்களும் இனிக்கும். ஏன் புளிகூட இனிக்கும்.
Deleteபுளிக்கு இருக்கும் புளிப்பு சுவையை சகித்துக் கொண்டால் மட்டும் இனிக்கும், இல்லையேல் புளிக்கும்.
Deleteவாழ்வில் உண்டாகும் எல்லா சூழ்நிலைகளிலும் தராசு முள்போல் நிலையாக நிற்க பழக்கிக் கொள்ளவேண்டும்.
Deleteஒவ்வொரு ஆன்மாவும் விதிகள் நிர்ணயிக்கப்பட்டுத்தான் உலகில் பிறக்கின்றனர் எது நடந்தாலும் விதிப்படிதான் நடக்கின்றது என்று பொருந்திக்கொள்ளவேண்டும்
Deleteசிரமங்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனைகளை கேட்டு பயனடையலாம் நம் செயலையும் நல்லவைகலாக்கி.
இறைவசனத்தில் ஒன்று கூருக்கிறேன்
உனக்கு உனது வாழ்வில் நல்லது நடந்ததால் அது நாம் உமக்களித்த அருல்கொடை அதுபோல் உமக்கு ஏதும் கேடு ஏற்பட்டால் அது தாமாகவே தம் தீய செயலால் தேடிக்கொன்ற ஒன்று-அல் குரான்
K.M.A.J,காக்காவின் கருத்து சரியானதே
அல்லாஹ் நமக்கு தந்திருப்பதை வைத்தே திருப்தி கொள்ள நமக்கு பாடம் சொல்லும் தன்னம்பிக்கை கட்டுரை!
ReplyDeleteM.H.J.வின் வருகை நல்வரவாகுக தமது கருத்துதான் கட்டுரையின் சாராம்சமே
Deleteதன்னம்பிக்கையைத் தரும் நல்லதொரு அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் சபீர் காக்கா அவர்களே.
நமக்கு கிடைக்காத ஓன்று மற்றவருக்கு கிடைத்தால் அதுவும் நமக்கு கிடைத்தால் நல்லது என்று நினைபவர்கள்.
நமக்கு கிடைத்த ஓன்று மற்றவருக்கு கிடைக்க வில்லை இதுவே நமக்கு பெரிய பாக்கியம் என்று நினைத்தால் வாழ்கையில் முன்னேரலாம்.
நமக்கு மேல் உள்ளவர்களை பார்க்க வேண்டாம் நமக்கு கிழ் உள்ளவர்களை பாருங்கள்.
தம்பி ஹபீப் உங்கள் வருகை கருத்து வரவேற்கிறேன்
Deleteமனம் ! அமைதி தவழும் இடமாக என்றும் இருக்க வேண்டும் !
ReplyDeleteஎளிய விளக்கத்தில் எண்ணற்ற போதனைகள்
வளர்க அண்ணனின் எழுத்துப்பணி
உங்களை போன்றோரின் தேற்றுதல் தான் எங்களை போன்றோரின் எழுத்தும் சிறக்கின்றது மேலான உங்கள் பணியும் தொடரட்டும்
Deleteஅடுத்த தலைப்பு என்ன வென்று ஆவலாய் கேட்ட சகோதரி அதிரை அசீனா எங்கே காணோம்?
ReplyDeleteதேடலுக்கு நன்றி.
Deleteநல்ல தன்னம்ப்பிக்கை கட்டுரை, வாழ்த்துகள்