.

Pages

Tuesday, May 21, 2013

மின்சாரத்தின் சாதனையும்... நுகர்வோர்களின் வேதனையும்...


திருமண அழைப்பு
மணமகன் : மின்சாரம்                                                                     மணமகள் : நுகர்வோர்

இன்றைய காலங்களில் மின்சார சம்பந்தப்பட்ட தேவைகள் எவ்வளவு அதிகரித்துள்ளதோ அந்த அளவுக்கு மின் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. மின் நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப மின்சார விநியோகம் செய்ய முடியாமல் மின்சார வாரியம் பல வருடங்களாக திண்டாடி வருகின்றது, இதற்க்கு யார் காரணம், மின்சார வாரியமா அல்லது மின் நுகர்வோர்களாகிய மக்களா, இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டால் இரண்டு பக்கமும் தவறு இருக்குது, அதாவது மின் உற்பத்தியிலும் தவறு நடக்குது, மின் நுகர்வதிலும் தவறு நடக்குது.  இது இந்தியா முழுக்க தவறாமல் நடந்து வருகின்றது.

ஒரு பக்கம் பார்த்தால் மின்சார வாரியத்தை நோக்கி மக்கள் குறை கூறிக்கொண்டே இருக்கின்றனர், மறு பக்கம் பார்த்தால் மக்களை நோக்கி மின்சார வாரியம் குறை கூறிக்கொண்டே இருக்கின்றது, குறை கூறுவது பெரிய காரியமாக இருந்தாலும் அதை கூறுவதற்கு முன் எந்த குறைகளும் தன்னிடம் இல்லாமல் மின்சார வாரியமும் நுகர்வோர்களும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மின்வாரியமும் நுகர்வோர்களும் சேர்ந்து செய்யும் தவறுகளை எனக்கு தெரிந்தது மட்டும் இங்கே எழுதி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகின்றேன்.

மின் நுகர்வோர்கள்
வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்போது வீடுகளில் உள்ள மின் சாதனங்களைப் பொறுத்து ஒரு முனை மின் இணைப்பு அல்லது மும்முனை மின் இணைப்பு பெறுவது வழக்கம். ஒரு முனை மின் இணைப்பு பெற 25 வாட்ஸ் முதல் 3900 வாட்ஸ் வரை மின் பளு இருக்கலாம், மும்முனை மின் இணைப்பு பெற3901 வாட்ஸ் முதல் 5500 வாட்ஸ் வரை இருக்கலாம் அதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் கட்டணமும் இதர கட்டணங்களும் செலுத்த வேண்டும், அதற்குமேல் போகும் ஒவ்வொரு 1000வாட்ஸ் மின் பளுவுக்கும் ரூபாய் 600 வீதம் கணக்கிட்டு கூடுதலாக செலுத்த வேண்டி வரும்.

மேலே சொன்னதுபோல் வியாபாரகடைகள், தொழிற்சாலைகள், வழிபாட்டுஸ்தலங்கள், அடக்கஸ்தலங்கள், திருமண மண்டபங்கள், பொதுஇடங்கள், விவசாயங்கள், இன்னும் பிற மின் நுகரப்படும் இடங்கள் இவைகள் அனைத்துற்கும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின் பளுவை கணக்கிட்டு கட்டணங்களும் செலுத்தப்பட்டு டாரிப் விகிதப்படி மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது.

வீடுகள் :
ஒரு முனை மின் இணைப்பு (சிங்கிள் பேஷ்) கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர், பரிசீலனைக்கு பின் மின் இணைப்பு கொடுக்கப்படுகின்றது. விண்ணப்பிக்கும்போது 3500  வாட்ஸ் மின் பளு என்று எழுதி கொடுக்கப்படுகிறது. அந்த மின் பளுதான் மின் வாரியத்தில் பதிவாகும், ஆனால் அதற்க்கு பின்பு என்ன நடக்குது தெரியுமா கொஞ்ச நாட்கள் கழித்து பிரிஜ், மின் மோட்டார், கிரைண்டர், ஏசி, டிவி, டிவிடி, சவுண்ட் சிஸ்டம், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், பிரிண்டர், இன்வேர்டார், வட்டார் ஹீட்டர், ரைஸ் குக்கர், அயன்பாக்ஸ், உடல் எடையை குறைக்க நடக்கும் கருவி, ஏர்கூலர், இப்படி படிப்படியாக மின் பளுவை 7000 வாட்ஸ் வரை கூட்டி வைக்கப்படிகிறது. இந்த கூடுதல் மின் பளு 3500 வாட்ஸ் மின் வாரிய கவனத்திற்கு வருவதில்லை.

விவசாயம் :
மும் முனை மின் இணைப்பு (த்ரீ பேஷ்) கேட்டு விண்ணப்பம் செய்கின்றனர், பரிசீலனைக்கு பின் மின் இணைப்பு கொடுக்கப்படுகின்றது. விண்ணப்பிக்கும்போது 5HP மின் மோட்டார் பளு என்று எழுதி கொடுக்கப்படுகிறது. அந்த மின் பளுதான் மின் வாரியத்தில் பதிவாகும், ஆனால் அதற்க்கு பின்பு என்ன நடக்குது தெரியுமா கொஞ்ச நாட்கள் கழித்து 5HP மோட்டாரை வெளியில் எடுத்து விட்டு 7.5HP மின் மோட்டார் பொறுத்தப்படுகிறது. மேலும் இதே மிசாரத்தை அனுமதிக்கப்படாத வகையில் வேறு உபயோகத்திற்கும் பயன்படுத்துகின்றனர், இந்த கூடுதல் மின் பளு2.5HP  மற்றும் அனுமதி இல்லாமல் வேறு காரணங்களுக்கு நுகரப்படும் மின்சாரம் இவை அனைத்தும் மின் வாரிய கவனத்திற்கு வருவதில்லை.

மேலே சொன்னதுபோல் வியாபாரகடைகள், தொழிற்சாலைகள், வழிபாட்டுஸ்தலங்கள், அடக்கஸ்தலங்கள், திருமண மண்டபங்கள், பொதுஇடங்கள், விவசாயங்கள், இன்னும் பிற மின் நுகரப்படும் இடங்களில் மின் வாரிய கவனத்திற்கு தெரியாமல் மின் பளுவை கூட்டிக்கொண்டே போகின்றனர். இப்படியே கூட்டிக்கொண்டே போனால் கூடுதல் மின்சாரம் தேவைப்படும், ஆனால் மின் விண்ணப்பத்தில் என்ன மின் பளு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டதோ அந்த மின் பளுவுக்கு ஏற்ப ட்ரான்ஸ்பார்மர்களை நிறுவி மின் விநியோகம் செய்யப்படுகின்றது.

மேலே சொன்னபடி ஏற்படுகின்ற கூடுதல் மின் பளு, ஓவர் லோடாக மாறுகின்றது, ஓவர் லோடாக மாறும்பொழுது பியூஸ் தாங்குவது இல்லை, ட்ரான்ஸ்பார்மர் கூடுதல் மின் பளுவை தாங்க முடியாமல் பயங்கர சூடாகி வெடிக்கவும் செய்கின்றது, அதிக மின் பளுவால் மின் கம்பிகள் சூடாகி அறுந்து விழுந்து பொதுமக்கள் உயிரை வாங்கி விடுகின்றது, மேலும் மின்சாரத்தை திருடுவது, இன்னும் அனேக குற்றங்களை நுகர்வோர்கள் செய்வதினால் பல அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது.

மின் நுகர்வோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
மின் நுகர்வோராகிய நாம் மின் இணைப்புகளையும், மின் மீட்டருக்கும் மின் கம்பத்திற்க்கும் இடையில் உள்ள சர்வீஸ் ஒயர்களையும், எர்த் இணைப்புகளையும்  வருடத்திற்கு இரு முறை அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரைக் கொண்டு பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக மின் பளு தேவைப்பட்டால் மின் வாரியத்தை அநுகி ஆலோசித்து அதற்கான வழிமுறைகளை சரிசெய்து கொள்ள வேண்டும், தலைக்குமேல் மின் கம்பிகள் செல்லும் பகுதிகளில் அதற்க்கு நேராக செடிகளையோ, மரங்களையோ நடுதல் கூடாது, மின்சாரத்தை தவறுதலாக உபயோகப்படுத்தக் கூடாது, மின் கம்பிகளில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உரசுவதுபோல் இருந்தால் உடனே மின்வாரியத்தை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் தொடும் உயரத்தில் மின் சாதனங்களை வைத்தல் கூடாது.

விவசாயத்திற்கு மின்சாரம் முற்றிலும் இலவசம், இலவசமாகக் கிடைக்கும் மின்சாரத்தை பல இடங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது கடுமையான குற்றம், நுகர்வோர்கள் இது விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மின் வாரிய கவனத்திற்கு :
அ) மின் இணைப்பு கொடுக்கும் முன், விண்ணப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை சரிபார்த்தல் வேண்டும்.

ஆ) கட்டிடம் முழுவதுமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

இ) ஒயரிங் சம்பத்தப்பட்ட அனைத்து இணைப்புகளும் எர்த் உள்பட சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

ஈ) விண்ணப்பிக்கப்பட்ட மின் பளுவுக்குமேல் கூடுதலாக வேறு ஏதும் மின் பளு பொருத்தப்பட்டுள்ளதா என்று உறுதி படுத்தவேண்டும்.

உ) மின் இணைப்பு கொடுத்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மின் பளு ஏதும் கூடி இருக்கின்றதா என்று பரிசோதனையில் இறங்க வேண்டும், அப்படி நுகர்வோர்கள் யாரேனும் தவறு செய்து இருந்தால் தக்க அபராதம் விதிக்க வேண்டும்.

ஊ) மின் வாரியத்திற்கு தெரியாமல் நுகர்வோர்கள் மின் பளுவை அதிகரித்தால் சட்டப்படி குற்றம், ஆகவே கூடுதல் மின் பளு தேவைபட்டால் மின் வாரியத்திற்கு தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ளுங்கள், போன்ற விழிப்புணர்வு விளம்பரங்களை நுகர்வோர்களுக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

எ) அந்தந்த பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மர்களில் எவ்வளவு மின் பளு நுகரப்படுகின்றது என்பதை கருவிகள் கொண்டு அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

ஏ) மாதாந்திர பராமரிப்பிற்காக எடுக்கும் நேரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும்.

ஐ) தங்குதடையின்றி பணிகள் நடைபெற மின் வாரிய ஊழியர்களுக்கு தேவையான மூலப் பொருள்களையும் உதிரிப் பாகங்களையும் தடையில்லாமல் வழங்க வேண்டும்.

ஒ) மின்சார வாரிய அலுவலகங்களில் இரவு நேர பணிகளுக்கு ஆட்கள் கிடையாது, அப்படி ஆட்கள் இருந்தாலும் அவசர தேவைகள் நிமித்தம் நுகர்வோர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு  முறையான பதில் கொடுப்பது கிடையாது, அல்லது தொலைபேசி ரெசிவரை எடுத்து கீழே வைத்து விடுவது, இது மாதிரி தரங்கெட்ட செயல்கள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

இன்னும் நிறைய எழுதலாம், வேண்டாம் இதுவே போதும், அப்புறம் அதுவே ஓவர் லோடாக மாறிவிடும்.

மேலே சொல்லப்பட்ட அனைத்தும் முறையாக நடக்குதா அல்லது தவறுதலாக நடக்குதா ? மின் வாரியமும் மின் நுகர்வோகளும் சிந்திக்க வேண்டும்.

இனி யாரை யார் குறை கூறப்போகின்றனர் ?

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

20 comments:

  1. ஜமால் காக்காவின் மின்சார ஆக்கம் படித்து ஷாக் அடித்து விட்டது.

    ஓவர் லோடு இல்லாத அறிந்து கொள்ளவேண்டிய தகவலுடன் கூடிய பதிவு.

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

      இன்றைய நிலையில் எல்லாமே ஓவர் லோடுளில்தான் ஓடிக்கொண்டிருக்கு.

      Delete
  2. திருமண சீசனுக்கு ஏற்றாற்போல் தலைப்பிட்டு இருக்கிரீர்கள்
    வீட்டி உபயோகிக்கும் மின் சாதனங்கள் isi iso சான்றிதழ் பெற்ற சாதனங்கள் உபயோகித்தால் eb bill குறைவாக வரும்
    வீட்டில் எர்த் குழி அமைத்து அதில் கரி உப்பு போட்டு ஜல்லி மணல் போட்டு மூடி வைத்து அடிக்கடி தண்ணீர் ஊற்றினால் mcb trippar நன்றாக வேலைசெயும் நல்ல மின்சாரமும் கிடைக்கும்
    FAN களுக்கு வருடம் ஒரு முறை பேரிங் மாற்றினால் EB BILL குறைவாக வரும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி தம்பி.

      FAN லொடக் லொடக் என்ற சப்தத்தோடு ஓடுமே அதை மறக்கமுடியுமா?

      Delete
  3. எப்படியெல்லாம் யோசித்து இப்படி ஓர் அழகான- அருமையான- கல்யாண “சீசன்” க்கு ஏற்றாற்போல் தலைப்பிட்டு அவசியமான- அவசரமான ஓர் அறிவுரையை வழங்கி விட்டீர்கள், என் அருமை மச்சானே!

    உங்களின் சமூக சேவையைப் போலவே, உங்களின் எழுத்தாற்றலும், வயதைப் போல் வளர்ந்து கொண்டேயிருக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி மச்சான்.

      இரண்டிலும் எப்போதும் பிரச்சனைகள் வந்து போகுதே மச்சான், அதான் அப்படி யோசித்தேன்.

      Delete
  4. இம்மாத நட்சத்திர கட்டுரை ...

    மக்களிடம் விழிப்புணர்வு பெற துண்டு பிரசுரமாய்

    வெளியிடலாம்

    ReplyDelete
  5. அய்யா நீங்கள் மின்சாரத்துறையில் பணி புரியும் அதிகாரியா ?
    அ முதல் ஒ வரை பட்டியலிட்டு அறிவுரை வழங்கியவிதம் அருமை அய்யா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி அய்யா.

      அய்யா, நான் மின் வாரியத்தில் பணி புரியவில்லை, மின் வாரியத்தோடு நட்பாக இருந்து வருகின்றேன் அய்யா.

      Delete
  6. பயனுள்ள தகவல்கள். தம்பி ஜமால் அவர்களே! பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி காக்கா.

      நீங்கள் ஊரிலா அல்லது வெளியூரிலா?

      Delete
  7. இதைத்தொகுத்து நூல் வடிவில் வெளியிடலாம். நுகர்வோர் பயன்தரும் தகவல்கள் ஏராளம் உள்ளது.

    தொடர வாழ்த்துக்கள் மனித உரிமை ஆர்வலர் அவர்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி விழிப்புணர்வு வித்தகரே.

      இன்ஷா அல்லாஹ், நிச்சயமாக நூல் வடிவில் வெளியிடலாம், இன்னும் நிறை சங்கதிகலை சேர்த்து விட்டால் போதும்.

      Delete
  8. நல்ல கருத்து . நுகர்வோர்களாகிய நாமும் , சரியான தகவல்களை கொடுத்து இணைப்பு பெற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

      Delete
  9. அருமையான பதிவு இந்த ஆக்கத்தை ஒரு துண்டு பிரசுரமாய் வெளியிடலாம் மக்களுக்கு முழுமையாக போய் சேரவேண்டும்.

    அப்போதுதான் ஏன் இப்படி மின்சாரவாரியம் மற்றும் மக்களாகிய நாம் என்ன தவர்கள் செய்கின்றோம் என்று புரியும்.

    தொடர வாழ்த்துக்கள் மனித உரிமை ஆர்வலர் ஜமால் காக்கா அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

      உங்களுடை ஆவல் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நிறைவேறும்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers