மனம்
தனது என்ற
தன் மனித உருவரை
உரிமைகொள்ள
அது
மனித மனம்.
மனம்
தனது என்ற
தன் பாரத
பிரதமர் பதவியில்
உரிமைகொண்டு பேச
‘பாரதம் பேசுகிறது’
அது
பாரத மனம்.
மனம்
தனது என்ற
தன் எல்லையற்ற பிரபஞ்சவரை
உரிமைகொள்ள
அது
பிரபஞ்ச மனம்.
அங்கு
பொதுநலமே
சுயநலம்.
தன் நாவாலும்
தன் கையாலும்
தனக்கும், பிறர்க்கும்
அமைதி குழையாமல்
வாழும் வாழ்வு
அங்கு
மலர்ந்திடும்.
உலகில்
வாழ்வுகள் வசந்தமாகும்
புனிதங்கள் வாழும்
அமைதி நிலவிடும்.
தனது என்ற
தன் மனித உருவரை
உரிமைகொள்ள
அது
மனித மனம்.
மனம்
தனது என்ற
தன் பாரத
பிரதமர் பதவியில்
உரிமைகொண்டு பேச
‘பாரதம் பேசுகிறது’
அது
பாரத மனம்.
மனம்
தனது என்ற
தன் எல்லையற்ற பிரபஞ்சவரை
உரிமைகொள்ள
அது
பிரபஞ்ச மனம்.
அங்கு
பொதுநலமே
சுயநலம்.
தன் நாவாலும்
தன் கையாலும்
தனக்கும், பிறர்க்கும்
அமைதி குழையாமல்
வாழும் வாழ்வு
அங்கு
மலர்ந்திடும்.
உலகில்
வாழ்வுகள் வசந்தமாகும்
புனிதங்கள் வாழும்
அமைதி நிலவிடும்.
நபிதாஸ்
சகோதரர் நபிதாஸ் தளத்தில் பதியும் முதல் ஆக்கம்
ReplyDeleteதொடர்ந்து ஆக்கங்களை படைக்க வாழ்த்தி வரவேற்கின்றோம்...
சகோதரர் நபிதாஸ் தளத்தில் பதியும் முதல் ஆக்கம்
ReplyDeleteதொடர்ந்து ஆக்கங்களை படைக்க வாழ்த்தி வரவேற்கின்றோம்...
சகோதரர் நபிதாஸ் தளத்தில் பதியும் முதல் ஆக்கம்
ReplyDeleteதொடர்ந்து ஆக்கங்களை படைக்க வாழ்த்தி வரவேற்கின்றோம்...
சகோ. நபி தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிரும்ப... திரும்ப... வாசித்துப் பார்க்கிறேன் பொருளை விளங்குவதற்காக !
புது கவிஞ்ஞருக்கு வரவேற்ப்புகள்
ReplyDeleteதீயதை கண்டால்
சொல்லால்
செயலால்
மனதாலேனும்
தடுத்திடல் நன்று
இது நாயகத்தின் கூற்று
உங்கள் கவிதையும் அதையே சொல்வதாய் உணர்கிறேன்
அருமை... நபி தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வரிகளும் சபீர் அவர்களது பின்னூட்டமும் சிறப்பு. நன்றிங்க.
ReplyDelete// நபி தாஸ் //
ReplyDeleteபெயரே வித்தியாசமாக இருக்கிறதே
கண்ணிமைக்கும் நேரத்தில் ..
ReplyDeleteநட்ச்சத்திரமாய் ..மின்னிய நபிதாஸ் அவர்களின்
கவிதை கண்டு மகிழ்ச்சி அடித்தேன்
சமூக விழிப்புணர்வு பக்கங்களை நிரப்பவந்த கவிஞர் சகோதரர் நபிதாஸ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
ReplyDeleteமுதல் கவியே அசத்தலாய் உள்ளது. வாழ்த்துக்கள்.
பரந்த மனம் படைத்தப் பக்கங்களில் சிறந்த ஓர் இடத்தில் சிறப்பிக்க வந்திருக்கும் கவிஞர் “நபிதாஸ்” அவர்களை ”வருக; வண்டமிழ்க் கவிதைகளைத் தருக” என்று உளம்நிறைவுடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDeleteஅன்பு நிர்வாகி விழிப்புணர்வு வித்தகர் - சகோதரர் நிஜாம் அவர்களே! இப்படிப்பட்டத் தத்துவ முத்தை இத்தனை நாட்களாய்க் காணாமல் விட்டீர்க்களே! இருப்பினும், இப்பொழுது நமக்குக் கையில் கிடைத்திருக்கும் இந்தக் கவிஞரை “த்த்துவக் கவிஞர்” என்ற அடைமொழியுடன் அழைக்கலாமே!
பிறரை ஊக்குவிப்பதில் முன்னணியில் இருக்கும் உங்களின் அடைமொழியிலேயே நபிதாஸ் அவர்களை இனி நாம் அழைப்போம்.
Deleteஎன் அன்புக்கட்டளையின் உள்நோக்கம் ஊக்குவித்தலே என்பதை உள்ளார்ந்து அறிந்து அதனைச் செயல்படுத்தும் உடனடி வேகமுள்ள விழிப்புணர்வு வித்தகர்க்கு நன்றி.
Delete“ஊக்கு விற்பதற்கும்
ஊக்குவித்தல் வேண்டும்”
-கவிஞர் வாலி.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகவிதையின் தலைப்பு "புனித வாழ்வு"
கவிதையின் முகமே இவ்வளவு அழகாக இருக்கும் பொது, கவிதையின் உள்ளமும் அழகு இல்லாமல் இருந்திடுமா?
வாழ்த்துக்கள் உங்கள் அழகான வருகைக்கு.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
சகோதரர் நபிதாஸ் முதல் பதிவு மிக அருமை வாழ்த்துக்கள் இன்னும் பல பதிவுகள் வர கண்விழித்து எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteசகோ நபிதாசின் முழு அறிமுகம் தந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஅன்பு சிந்தனையாளர்கள் தாங்கள் யாவருக்கும் என் நன்றி.
ReplyDeleteஅன்போடு வறவேற்கிண்றீர்கள். அகம் மகிழ்கின்றேன்.
'சொல்பவர் யார் என்பதைக்காட்டிலும் அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனி' என்ற இலக்கணத்திற்கு ஏற்ப எழுத விரும்புகிறேன். அதனால் அனைவரும் விருப்பு வெறுப்பு நீக்கி எழுதியவரிகளின் நோக்கத்தை அடையவேண்டும் என்பதே அவா. அன்பர், அறிஞர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அன்பர், அறிஞர் ஹபீப் HB அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகள் என்மீது கொள்வதால் அச்சப்படுகிறேன். அவ்வாறே கருத்துக்கள் அமைய கவனமுடன் இருக்கவேண்டும் என்ற தங்கள் வழிகாட்டுதல் உள்ளடக்கிய எதிர்ப்பார்ப்புக்கு வல்லவனை வேண்டுகிறேன்.
அறிஞர், கவிங்கர் அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் அவர்களின் 'பரந்த மனம்' கண்டு அகம் அச்சப்படுகிறேன். எத்தனை எதிர்பார்ப்பு! அதற்கு நான் தகுதியானவன? எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அறிஞர், கவிஞர் அதிரை.மெய்சா அவர்களின் உளமார வரவேற்ப்புக்கு மிகுந்த நன்றி.
அறிங்கர், அன்பர் அதிரை சித்திக் அவர்கள்
'கண்ணிமைக்கும் நேரத்தில் ..
நட்ச்சத்திரமாய் ..மின்னிய கவிதை', என்று புகழ்ந்துள்ளார்கள்.
அன்பரே நன்றி!
நட்சத்திரத்தை நெருங்க நெருங்க பிரகாசம் வெளியில் மட்டும் அல்ல உள்ளும் ஏற்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக எழுதப்பட்டது.
நன்றி அன்பரே!
அறிஞர், அன்பர் தமிழன் அவர்கள்
'// நபி தாஸ் //
பெயரே வித்தியாசமாக இருக்கிறதே' என்று எழுதியுள்ளீர்கள்.
வேறொன்றும் இல்லை, நபிகள் திலகத்தின் மீது தீராத காதல்.
'யாரை நாம் அதிகம் நேசிக்கின்றோமோ அவர்கள் நெருக்கம் கிடைக்கும்', 'அதன்மூலம் "அவன்" நெருக்கம் கிடைக்கும்' என்ற அவா!
நன்றி அன்பரே!
தங்கள் வாழ்த்துக்கும், சிறப்புக்கும் திண்டுக்கல் தனபாலன், சசிகலா அன்பர்களே,நன்றி!
அறிஞர், அன்பர் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)
அவர்கள்
'தீயதை கண்டால்
சொல்லால்
செயலால்
மனதாலேனும்
தடுத்திடல் நன்று
இது நாயகத்தின் கூற்று
உங்கள் கவிதையும் அதையே சொல்வதாய் உணர்கிறேன்' என்று இங்கு நாயக திருவாக்கியக் கருத்தை நினைவஊட்டியமைக்கு நன்றி!
அறிஞர், அன்பர் Almasm அவர்களின் வரவேப்புக்கு மிகுந்த நன்றி!
அறிஞர், அன்பர், நல்சேவகர் சேக்கனா M. நிஜாம் அவர்கள்
'சகோ. நபிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
திரும்ப... திரும்ப... வாசித்துப் பார்க்கிறேன் பொருளை விளங்குவதற்காக!' என்று எழுதியுள்ளீர்கள்.
மிக்க நன்றி!
புரியவில்லை என்பதும்... இல்லை வாசிக்க, வாசிக்க பொருள் வந்தவண்ணம் இருக்கின்றது என்பதும்... என்ற இருபொருள் உங்கள் எழுத்தில் மறைந்துள்ளது.
கவிதை என்பது கருத்து விதைகள் என்பதாலோ அவைகள், அவைகளின் பொருள்கள் பலவாறு படிப்பவர்களின் நோக்கிற்கு ஏற்ப விரிகின்றதோ!
ஆனாலும் ஒரு கருத்தில்தான் எழுதியுள்ளேன். விளங்கிக்கொள்வீர்கள், அன்பரே!
நன்றி!
அழகான, அடக்கமான- அருமையான ஏற்புரை. தங்களை நேரில் காணும் பேறு கிடைக்கும் என்று நம்புகிறேன், இன்ஷா அல்லாஹ்!
ReplyDeleteதத்துவக் கவிஞரை அறிமுகம் செய்தமைக்கு மீண்டும் மீண்டும் விழிப்புணர்வு வித்தகர் அவர்கட்கு நன்றிகள்.