.

Pages

Wednesday, June 19, 2013

மரம் வளர்ப்போம் ! நல்லறம் செய்வோம் !

மழைகளின் வீழ்ச்சி
,,,நீர்
பூமியின் எழுச்சி
,,,மரம்

நம் கல்யாண
வைபோகத்தில்
பந்தல் அலங்கரிக்க,
,,,வாழை மரம்
வாசலில் தோரணமாம்
,,,மாவிலைகள்
வந்தோரை உபசரிக்க
,,,வெற்றிலை, பாக்கு
விருந்தோம்பளுக்கு,
,,,வாழை இல்லை
வயிறார உண்பதற்கு
,,,காய்,கனிகள்
அத்துனையும்
வேகவைக்க
மரங்களின் ஒத்துழைப்பு
விறகாய் !

மனிதன்
மறத்தால் கதவு செய்து
மரத்தாழ் இட்டு
தன்னை
தற்காத்துக்கொண்டான்

நான் என்ன
பணம் காய்க்கும்
மரமா ?
எனக்கேட்போர்க்கு
ஒன்று சொல்வேன்
பணத்தின் மூலக்கூறே
மரம்தான்!

மரம்
இருந்தாலும்
ஆயிரம் பொன்
இறந்தாலும்
ஆயிரம் பொன்

இறந்த மரம்
பூமிக்குள் புதையுண்டால்
மீண்டு வரும்
உந்து சக்தி
நிலக்கரியாய்

விலை மதிப்பில்லா
வைரங்களின்
முதாதையர்
மரங்கள்தாம்

மதி கெட்டோரை
மர மண்டை
என்று கூறாதீர்
மரங்கள்
கோபித்துக்கொள்ளும்

புத்தருக்கு,
,,,போதிமரம்
பிள்ளை இல்லார்க்கு
அரசமரம் [ அவர்களின் ஐதீகம் ]

மனிதனால்
வெட்டி வீழ்த்தப்பட்ட
மூங்கில்[ மரம் ]
எழுந்து நிற்கிறது
ஏணியாய் !

பிள்ளைய பெத்தா
கண்ணீரு
தென்னையை பெற்றா
இளநீரு

ஆளும்,வேலும்
பல்லுக்குறுதி.

நெருப்பில் போட்டால்
விறகு
நீரில் போட்டால்
கட்டுமரம்
வளரவிட்டால்
நிழல் குடை
அத்துனையும்
மனித பயன்பாடுதான்

வீழ்ச்சி கண்ட மனிதருக்கு
எழுந்து நின்ற மரம் சொல்லும்
ஆறுதலாய்
நானும் வீழ்ந்த விதைதான்
என்று

இருக்க இடம் தேடி
அழித்திட்டீர்
காடுகளை
அமைத்திட்டீர்
வீடுகளை

சரி
எதிர்கால
நம் சந்ததியினர்
உயிர் வாழ
உயிர் காற்றிர்க்கு
தினரத்தான் போகின்றீர்கள்

ஆகையால்
மரம் வளர்ப்போம்
நல்லறம் செய்வோம்
மு.செ.மு.சபீர் அஹமது

13 comments:

 1. /// வீழ்ச்சி கண்ட மனிதருக்கு...
  எழுந்து நின்ற மரம் சொல்லும்...
  ஆறுதலாய்...
  நானும் வீழ்ந்த விதைதான்...
  என்று...///

  அருமையாகச் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மனிதராக பிறந்த நமக்கு சில அடிப்படைக் கடமைகள் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்தல், உள்ளத்தை தெளிவாக உற்சாகமாக வைத்தல், தொழிலை நியாய-தர்ம அடிப்படையில் சமுதாயத்திற்கு பாதிப்பில்லாமல் செய்தல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்- இவ்வாறாக பல்வேறு கடமைகளை நாம் சரியாக செய்ய வேண்டியுள்ளது.

  மேற்கண்டவை போக, தம்மை உருவாக்கிய இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன. பொதுவாக சான்றோர்கள் தாங்கள் வாழுகிற காலத்தில் வருங்கால மக்கள் நலமாக இருக்க பல வகையில் சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டு தங்களுக்கு என்ன கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கவலைப்படாது நல்லது பல செய்கின்றனர். அவ்வாறு தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனையோ பெரியவர்கள் செய்த செயல்களின் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.

  அந்த வகையில் மரக்கன்றுகளை நட்டு அவற்றிற்கு தண்ணீர் ஏற்பாடு செய்து மரங்களாக உருவாக்குவது என்பது நம்முடைய முக்கிய கடமையாகும்.

  ReplyDelete
 3. மரம் வளர்ப்போம் ! மனிதநேயம் காப்போம் !!

  அழகிய விழிப்புணர்வு !

  தொழிலதிபர் பன்முக எழுத்தாளராக வளர்ந்துவருகிறார்.

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. இருவாரங்களாக வெவ்வேறு கோணங்களில் மரத்தைப் பற்றிய அழகிய விழிப்புணர்வு !

  வீட்டுக்கொரு மரம் அவசியம் !

  ReplyDelete
 5. பதிவுக்கு நன்றி.

  அத்தனை வரிகளும் மிகவும் அருமை, என்னை மிகவும் ஆட்கொண்ட வரிகள்.

  //வீழ்ச்சி கண்ட மனிதருக்கு
  எழுந்து நின்ற மரம் சொல்லும்
  ஆறுதலாய்
  நானும் வீழ்ந்த விதைதான்
  என்று//

  மரத்தை வைத்தே ஒரு சில மர மண்டைகளுக்கு மட்டையில் அடித்தாற்போல் சொல்லிவிட்டீர்கள்.

  திசை மாறிய எண்ணங்களில் உருவான உங்களின் கவி வரிகள் மிகவும் சுவை.

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 6. மரங்களின் மகத்துவத்தை மனிதன் உணரவேண்டும் இறைவன் படைத்த படைப்பினங்களில் தொடர் உன்னிகளைப்போல் மரங்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு give and take பாலிசி தான் [பண்டம் மாற்றும் முறை போல்]அது தரும் ஆக்ஜிசன் நம் உயிர் காற்று நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு அதன் ஆதார மூச்சு இப்படி இருந்தும் மரம் மனிதனுக்கு பல நன்மைகளை தருகிறது. இதை விளக்கத்தான் இப்படி ஒரு தத்துவ வார்த்தைகளை தங்களுக்கு சமர்பித்தேன்
  நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டியதுன் ஈமான் கொண்டோரின் கடமையல்லவா கருத்திட்டோற்க்கும் இதை படிப்போர்க்கும் எனது சலாம்

  ReplyDelete
 7. மரங்களின் மகத்துவத்தை மனிதன் உணரவேண்டும் இறைவன் படைத்த படைப்பினங்களில் தொடர் உன்னிகளைப்போல் மரங்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு give and take பாலிசி தான் [பண்டம் மாற்றும் முறை போல்]அது தரும் ஆக்ஜிசன் நம் உயிர் காற்று நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு அதன் ஆதார மூச்சு இப்படி இருந்தும் மரம் மனிதனுக்கு பல நன்மைகளை தருகிறது. இதை விளக்கத்தான் இப்படி ஒரு தத்துவ வார்த்தைகளை தங்களுக்கு சமர்பித்தேன்
  நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டியதுன் ஈமான் கொண்டோரின் கடமையல்லவா கருத்திட்டோற்க்கும் இதை படிப்போர்க்கும் எனது சலாம்

  ReplyDelete
 8. மரத்தை தலைப்பாய் எடுத்து கவிதை வடித்து இருக்கும் விதம் அருமை.

  முன்பொரு காலத்தி ஆலமரம், அரசமரம்,வேப்பமரம் என்று காற்று வாங்குவதெற்க்கென்று எங்கு பார்த்தாலும் மரங்கள் நிறைந்து காணப்பட்டன. ஆனால் இன்றோ மரம் நின்ற இடங்களிலெல்லாம் கட்டிடங்களாகவும் வீடுகளாகவும் மாறிபோய்விட்டன. மரங்களை அழித்ததன் காரணமாகவே இப்போது பல இயற்க்கை சீற்றங்களுக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை யார் உணர்கிறார்கள். மரங்களை வளர்ப்போம். மகிழ்வாய் வளம் பெற்று வாழ்வோம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கவிஞ்ஞரே மரம் நமக்களித்துவரும் உதவிகள் ஏராளம் நாம் அவைகளை அழித்துதான் வருகிறோம்

   Delete
 9. மரத்தின் முக்கியத்துவம் பற்றி இதற்குமேல் சொல்ல முடயாது

  மரம் பேசுவதுபோல் விதை வீழ்ந்து மரமாய் நிற்கிறேன் ..

  வீழ்த்திய மூங்கில் ஏனியாய் எழுந்து நிற்கிறேன் என்று நம்பிக்கை

  ஊட்டும் வரிகள் ..அபாரம் எழுது நண்பா ..எழுத்தாலும்

  வாழ்வில் எழுச்சி காண்பாய் ..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. ஏறிய ஏணியை எட்டி உதைத்தவரை நன்றி கெட்டவர் என்போம் வெட்டியமரம் வெட்டியவனுக்கே ஏணியாய் மாறிப்போனதை என்ன சொல்ல நண்பனின் வாழ்த்தை மனமார ஏற்கிறேன்

  ReplyDelete
 11. உங்களின் சிந்தனையில் உள்ளபடியே மரம் உங்களை வாழ்த்தும். இக்கவிதையைப் போட்டிக்கு அனுப்புங்கள் அல்லது இலண்டன் வானொலியின் விருப்புத்தலைப்புக் கவிதை நேரப் பகுதிக்கு அனுப்புங்கள்; உங்கள் வரிகளின் ஈரத்தமிழை அவ்வானொலியின் ஈழத்தமிழர்களால் வாசிக்கப்படவும் நேசிக்கப்படவும் விழைகிறேன்.

  ReplyDelete
 12. கவிஞ்சரே உங்களின் ஆலோசனைபடி நான் கவிதை போட்டிக்கு அனுப்பி அவர்களிடம் இருந்து பதில் அலைபேசி வழியாக வந்தது போட்டிக்கு எடுத்துக்கொண்டதாய் சொன்னார்கள். தங்கள் பெயரை கூறினேன் சந்தோசப்பட்டார்கள் மற்றும் இலண்டன் வானொலிக்கும் மெயில் செய்து விட்டேன் தங்களது ஆதரவு எனக்கு உற்ச்சாகப்படுத்துகிறது

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers