kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, June 20, 2013
வேண்டும் அந்த வரம்
வாழை இலை விருந்து வேண்டாம்
வடை பாயச இனிப்பு வேண்டாம்
காலை மாலைத் தேனீர் வேண்டாம்
கழுத்துவரை விழுங்க வேண்டாம்
காய்ந்த வயிறு
பாய்ந்து உண்ணக்
கையளவு
சோறு போதும்
எட்டு மாடி கட்ட வேண்டாம்
எக்கச் சக்க அறைகள் வேண்டாம்
பட்டுத்திரைச் சீலை வேண்டாம்
பளபளப்புச் சுவர்கள் வேண்டாம்
கொட்டும்மழை
தலையை விட்டுத்
தள்ளிக் கொட்டும்
குடிசை போதும்
கழுத்துப் பட்டை எனக்கு வேண்டாம்
கோட்டு சூட்டு எதுவும் வேண்டாம்
கப்பல் விட்டுக் காற்றில் ஏறி
கண்டம் தாண்டிப் போக வேண்டாம்
பிழைக்க ஒரு
வழியைச் சொல்லும்
பிச்சை இல்லாப்
பிழைப்புப் போதும்
குடை விரிக்கும் கண்கள் வேண்டாம்
கொட்டும் அருவிக் கூந்தல் வேண்டாம்
நடை நிமிர்த்தும் படிப்பு வேண்டாம்
நல்லினியப் பேச்சும் வேண்டாம்
உடன் அழுது
குப்பை கொட்ட
ஒருத்தி வந்தால்
எனக்குப் போதும்
இப்படியாய் இருந்த தெல்லாம்
எப்படித்தான் மாறிப் போச்சோ
ஆகாயத்தை ஓட்டை போட்டு
அதுக்கு மேல கொடியை நட்டு
ஒய்யாரமா
வளந்து வளந்து
உசுரைத் தின்னு
வாழுதோ
வேண்டும்களின் பட்டியலில்
வேளைக் கொண்ணு மாறிப் போனா
மாண்ட பின்னும் நிம்மதிக்கு
மானிடரே வாய்ப்புண்டோ
தோண்டத் தோண்டப்
புதையல்கள்
தொலைந்து போகும்
இதயங்கள்
வேண்டாம் வேண்டாம் ஆசைகள்
வேதனையின் ஊற்றுக்கள்
வேணும் எனக்கு ஒற்றை வரம்
விபரமான மேன்மை வரம்
வேண்டாம் என்றே
எண்ணும் வரம்
வேண்டும் வேண்டும்
அந்த வரம்
வடை பாயச இனிப்பு வேண்டாம்
காலை மாலைத் தேனீர் வேண்டாம்
கழுத்துவரை விழுங்க வேண்டாம்
காய்ந்த வயிறு
பாய்ந்து உண்ணக்
கையளவு
சோறு போதும்
எட்டு மாடி கட்ட வேண்டாம்
எக்கச் சக்க அறைகள் வேண்டாம்
பட்டுத்திரைச் சீலை வேண்டாம்
பளபளப்புச் சுவர்கள் வேண்டாம்
கொட்டும்மழை
தலையை விட்டுத்
தள்ளிக் கொட்டும்
குடிசை போதும்
கழுத்துப் பட்டை எனக்கு வேண்டாம்
கோட்டு சூட்டு எதுவும் வேண்டாம்
கப்பல் விட்டுக் காற்றில் ஏறி
கண்டம் தாண்டிப் போக வேண்டாம்
பிழைக்க ஒரு
வழியைச் சொல்லும்
பிச்சை இல்லாப்
பிழைப்புப் போதும்
குடை விரிக்கும் கண்கள் வேண்டாம்
கொட்டும் அருவிக் கூந்தல் வேண்டாம்
நடை நிமிர்த்தும் படிப்பு வேண்டாம்
நல்லினியப் பேச்சும் வேண்டாம்
உடன் அழுது
குப்பை கொட்ட
ஒருத்தி வந்தால்
எனக்குப் போதும்
இப்படியாய் இருந்த தெல்லாம்
எப்படித்தான் மாறிப் போச்சோ
ஆகாயத்தை ஓட்டை போட்டு
அதுக்கு மேல கொடியை நட்டு
ஒய்யாரமா
வளந்து வளந்து
உசுரைத் தின்னு
வாழுதோ
வேண்டும்களின் பட்டியலில்
வேளைக் கொண்ணு மாறிப் போனா
மாண்ட பின்னும் நிம்மதிக்கு
மானிடரே வாய்ப்புண்டோ
தோண்டத் தோண்டப்
புதையல்கள்
தொலைந்து போகும்
இதயங்கள்
வேண்டாம் வேண்டாம் ஆசைகள்
வேதனையின் ஊற்றுக்கள்
வேணும் எனக்கு ஒற்றை வரம்
விபரமான மேன்மை வரம்
வேண்டாம் என்றே
எண்ணும் வரம்
வேண்டும் வேண்டும்
அந்த வரம்
அன்புடன் புகாரி
Subscribe to:
Post Comments (Atom)
/// வேண்டாம் என்றே
ReplyDeleteஎண்ணும் வரம் ///
சிறப்பாக முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...
வேண்டுவதும், வேண்டாமையும் பிரித்துக காட்டிய, தேன் பிழியும் தெவிட்டாத உன் கவிதை ஆசைகளை அடக்கக் கற்றுக் கொடுக்கும் ஞான வரம்; போதனைகள் பூக்கும் போதி மரம்!
ReplyDeleteசிறப்பான கவிதை
ReplyDeleteகேட்ட வரங்கள் அனைத்தும் அருமை !
நடையழகு சிறப்பாய் அமைந்துள்ளது
ReplyDeleteவாழ்த்துக்கள்
ஃஃஃஃவேண்டும்களின் பட்டியலில்
ReplyDeleteவேளைக் கொண்ணு மாறிப் போனாஃஃஃஃ
அருமையான வரிகள்
அன்புச் சகோதரன்
2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை
வரங்கள் அனைத்தும் அருமை. இப்படியான வாழ்க்கை முறை அமைந்து விட்டால் வரத்தினை நம் மனிதர்கள் மாற்றியும் கேட்பார்கள்.
ReplyDeleteஅன்பு கவி ..
ReplyDeleteநீங்கள் வேண்டாம் என்ற சொல்
வேண்டும் ..
போதும் என்ற மனமே
பொன் செய்யும் மருந்து