.

Pages

Friday, June 21, 2013

நபிதாஸின் 'காலம்'

வாழ்வது என்று
நேற்றைய நினைப்பில்
நாளைய எண்ணத்தில்
நிகழ்கால வாழ்வா !

இன்றும் வாழவில்லை
நாளையும் இதேநிலை
நேற்றும் கடந்தநிலை
என்றும் குழப்பநிலை !

நேற்றைய நினைப்பில்
இன்று இருந்தால்
நிகழ்காலம் நழுவி
இருமுறை வாழ்தலே !

நிகழ்கால வாழ்வில்
நடந்தவை வருபவை
நீங்கித்தான் வாழுதல்
நன்கென்பதும் இல்லை !

நேற்றைய அனுபவம்
நாளைய கனவு
நிகழ்கால வாழ்வில்
நேர்த்தியாய் நிற்கனும் !

காலம் வகுத்து
தேவை கேற்ப
கவனம் கலந்து
வாழ்தல் நலம் !

நோக்கம் நழுவி
நினைவு கனவு
காட்டும் வழியது
கலக்க வாழ்வு !

எதிர்கால சிந்தனை
எதிலும் குறிக்கிடாது
நிகழ்கால எண்ணத்தில்
நிம்மதியாய் வாழனும் !

ஒவ்வொரு நொடியும்
அர்த்தமுடன் செல்லுதல்
அதுதான் வாழ்க்கை
அறிஞனின் வாழ்கை !

புனிதரின் வாழ்கை
புரிய வேண்டின்
நேர நொடியில்
நிம்மதி வாழ்க்கை !

காலம் ஒதுக்கி
எதிர்கால சிந்தனை
நிகழ்கால வாழ்வில்
நிம்மதியாய் சிந்திப்பீர் !

கடந்த நினைவுகள்
அனுபவ வழித்தடம்
கவனமுடன் நிகழ்வில்
கலந்தே வாழ்வீர் !

திட்டம் தீட்டி
அனுபவ வழியில்
நடத்திடு வாழ்வை
நலமுடன் இருப்பாய் !

கொசு கடிக்க
நசுக்க வேண்டும்
காலம் கடந்தால்
விளைவு நோயாம் !

நினைவில் கனவில்
நிலைக்கும் அவனில்
அறிவு கொடுத்தும்
அசையா நிற்பான் !

நினைவு வந்ததும்
‘நேற்றில் இருந்தேன்
மீண்டு விட்டேன்’
மீண்டும் கேட்பான்!

காலம் பொன்னானது
கடந்தது திரும்பாது
கவனமுடன் இருத்தல்
நிம்மதி வாழ்வு !

உணர்வு சிரிக்க
உடம்பு இனிக்கும்!
உணர்வு அழ
உடம்பு வலிக்கும்.

உள்ள உணர்வு
உடம்பில் வெளிப்படும்
உள்ளம் உடம்பு
செழிக்க வேண்டும் !

தேவை நிமித்தம்
வளைய வேண்டும்
நிம்மதி ஒன்றே
நோக்கம் வேண்டும் !

நேற்று இன்று
நாளை என்று
காலம் பிரித்து
கணக்கு போட்டாய் !

காலம் ஒன்று !
கவனம் கொண்டால்
செயல் திறமை
செய்வது நிச்சயம் !

உண்டது உன்னது
எதிர்பார்த்து ஏங்காது
இருப்பதில் இன்றே
இதமாய் வாழ்ந்திடு !

ஏழு வார்த்தை
எழுதினான் வள்ளுவன்
ஒரே இலக்கணம்
உயர்ந்தான் உலகில் !

கடந்தவை உனது
வகுத்தவை சுமந்து
வாழ்ந்திடும் இவை
‘நான்’ என்றிடுமே!

கடந்தவை அனுபவம்
வகுத்தவை நற்குணம்
நிறைந்திவை வாழ்வு
வாழ்த்தப்படும் ‘நான்’!

வாய்த்தது ஒருமுறை
வாழ்ந்திடு வாழ்வது
நல்லவர் வாழ்க்கை
வல்லவன் விரும்புவது!

நல்லவர் வாழ்க்கை
உள்ளவர் மறைந்தும்
நாள்தோறும் மணத்திடும்
நன்கிதை ஏற்றிடு !

பூவது மறைந்தால்
வாசனை மறையும்
நல்லவர் மறைந்தால்
வாசனை மறையா!

மணப்பதும் வாசனை
புகழும் வாசனை
புரிபவர் இங்கு
புவியில் அரிதே!

காலம் வகுத்தலில்
கண்டது இவைகள்
கவனம் கொள்வாய்
காலமாய் நிற்பாய்!

நபிதாஸ்

14 comments:

  1. /// காலம் ஒன்று !
    கவனம் கொண்டால்
    செயல் திறமை
    செய்வது நிச்சயம் ! ///

    அருமையான வரிகள் பல... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பூமிபந்தில் இருக்கும்வரை

      நேற்று இன்று
      நாளை என்று
      காலம் பிரித்து
      கணக்கு போட்டாய் !

      பூமிபந்திற்கு அப்பால் முக்காலமும் இல்லை! ஒரே காலம்

      காலம் ஒன்று !
      கவனம் கொண்டால்
      செயல் திறமை
      செய்வது நிச்சயம் !

      காலத்தைப்பற்றி இறைவன் சொல்லும்போது,
      'காலம் நானாக இருக்கின்றேன்' என்று இறைவனை சொல்கிறான்.

      அவனை அறிந்துக்கொள்ள விரும்புவர்களுக்கு இது ஒரு படி போன்றது.

      அதன் மூலம் ஒன்றின் தத்துவம் அறிவார்களானால், அவ்வறிந்தவர்கள் அவர்கள் மூலம் செயல் திறமை நிச்சயம் வெளிப்படும் என்ற உண்மையை உள்ளடக்கிய இவ்வரிகளை "அருமையான வரிகள்" என்றது, என் உள்ளத்தை தொட்டது.

      திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உங்கள் வாழ்க்த்துக்கு நன்றி!

      எழுதிய கருத்துக்களில் எதுவும் முரண்பட்டால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான புரிதலுக்கு இருவரையும் கொண்டுசெல்லும் என்பதும் பொதுவான என்கருத்து.

      Delete
  2. கவி வரிகள் அருமை !

    // பூவது மறைந்தால்
    வாசனை மறையும்
    நல்லவர் மறைந்தால்
    வாசனை மறையா! //

    நல்லவர் யார் என்பதை தீர்மானிப்பதில் இறைவன் கையில் உண்டு ! இங்கே யார் நல்லவர் என்பதை நிர்மாணிப்பதில்தான் பெரும் குழப்பமே ஏற்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. குழம்ப வேண்டாம் அன்பரே!
      நல்லவர் யார் என்பதை தீர்மானிப்பதில்... அது இறைவன் கையில் உண்டு ! என்பதில் மாற்று கருத்து இல்லை!

      ஒருவன் தனக்கும் பிறருக்கும் அமைதி கெடாமல் வாழ்பவன் நல்லவன் என்ற வேதச்சாறுகள் விளக்கம் தருகிறது.

      கடந்தவை அனுபவம்
      வகுத்தவை நற்குணம்
      நிறைந்திவை வாழ்வு
      வாழ்த்தப்படும் ‘நான்’!

      ஒருவன் தனது கடந்தகால அனுபவங்களைக் கொண்டு அதன் தெளிவான நல்வழியில், வேதம் வகுத்த நற்குணகளை தனதாக்கிக்கொண்டு வாழ்வானேயானால் அது வாழ்தப்படும், புகழப்படும் நல்லவர் வாழ்க்கை தானே!

      எதோ எழுதுகிறேன். அதை கவி என்கின்றனர். வரிகளில் உண்மைகளை திணிப்பது என்போன்றவர்களுக்கு சிரமம்தான்.

      கவி வரிகள் அருமை ! என்று எழுதினீர்கள். நன்றி! சேக்கனா M. நிஜாம் அவர்களே!

      மேலும் உங்களைப்போன்று என்னால் கருத்திடவும் முடியவில்லை.

      Delete
  3. நேற்றைய அனுபவம்
    நாளைய கனவு
    நிகழ்கால வாழ்வில்
    நேர்த்தியாய் நிற்கனும் //

    நல்ல அறிவுரை வாழ்த்துக்கள்; கவி அருவி நபி தாஸ் அவர்களே

    ReplyDelete
    Replies
    1. ஒருவனின் நிகழ்கால வாழ்வில்
      முக்கால எண்ணங்களும் சிறப்பாக நோக்கிர்கேர்ப்ப கையாளப்படவேண்டும் என்றதை
      நல்ல அறிவுரை என்றமைக்கு நன்றி!
      அதிரை சித்திக் அவர்களே!

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    நபிதாஸ் அவர்களே உங்களுடைய கவிதையும் ஓகே, அனேக பின்னூட்டங்களும் ஓகே.

    வளர்க.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. மனித உரிமை காவலரே!
      தாங்கள்
      கவிதையையும், பின்னுட்டங்களையும் கவனமுடன் உள்வாங்கி உங்கள் தராசில் ஒவ்வொன்றுக்கும் சமமாக ஓகே எடை போட்டுள்ளீர்கள்.

      மிக்க நன்றி!

      Delete
  5. ''காலம்'' ஆன்மீக சிந்தனையுள்ள தேடல். கவி வரிகளால் வெளிக்கொண்டு வந்துள்ள விதம் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி! அதிரை.மெய்சா அவைகளே!

      மனைதனைவிட்டு ஆன்மாவை பிரிக்கமுடியாது! அதனால் அது மணப்பது இயற்கைதானே!

      நன்றி! உங்கள் வாழ்த்துக்களுக்கு!

      Delete
  6. நேற்றைய நினைப்பில்
    இன்று இருந்தால்
    நிகழ்காலம் நழுவி
    இருமுறை வாழ்தலே !

    குழப்பமில்லா கவி வரிகள்
    வாழ்க்கை பாடத்தை
    வரிவரியாய் வடித்துள்ளீர்

    ReplyDelete
    Replies
    1. காலம் பொன் போன்றது என்பார்கள்.

      காலம் பொன்னானது
      கடந்தது திரும்பாது
      கவனமுடன் இருத்தல்
      நிம்மதி வாழ்வு !

      ஆனால் சிலருக்கு ஒரு செயலை திரும்ப திரும்ப செய்யவேண்டும். அவ்வாறு பழகிவிட்டனர். எதை பழகினோமோ அது நம்மோடு இருப்பது இயற்கை.
      அது போல நேற்றிலே மறுபடி இன்றும் இருந்தால் இன்றைய வேலைகளை யார் பார்ப்பது? எனவே இவர்கள் இருமுறை ஒரே வாழ்வை வாழ்கின்றனர்.

      நேற்றைய நினைப்பில்
      இன்று இருந்தால்
      நிகழ்காலம் நழுவி
      இருமுறை வாழ்தலே !

      ஆனாலும் தேவையின் நிமித்தம் சிலசயம் இவ்வாறும் நடப்பது உண்டு!

      யாருக்கும் பாதிக்காமல் மன அமைதி ஒன்றை மையமாக வைத்து தேவைகளை திறம்பட அமைத்து வாழ்வது சிறப்பன்ரோ!

      நன்றி! உங்கள் பின்னூட்டத்திற்கு. மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்களே!

      Delete
  7. தத்துவக் கவிஞரைக் கண்டு
    முத்தமிடும் “காலம்” உண்டா?
    அதுவரை என் படைப்பில்
    காலம் சொல்லும் கோலம் படியுங்கள்:


    காலம்

    நிகழ்வுகளை

    நினைவுகளாய்ப்

    பதிந்து வைக்கும்

    ஒலிநாடா

    இன்றைய செய்திகளை

    நாளைய வரலாறுகளாய்ப்

    பாதுகாத்து வைக்கும்

    பேரேடு

    துக்கங்கள் யாவும்

    மறந்துப் போக வைக்கும்

    மாமருந்து

    வாய்ப்புகளாய்

    வாசற்கதவினைத் தட்டும்

    உருவமில்லா ஓர்

    உற்ற நண்பன்

    காத்திருத்தல்

    தவப் பயனாய்

    பொறுமை தரும்

    வரம்

    மேலும் கீழுமாய்ச்

    சுழற்றிப் போடும்

    சக்கரம்

    பிறப்பு, இறப்பு

    மறுமை யாவும்

    மறைத்து வைத்துள்ள

    இரகசியப்

    பெட்டகம்

    --

    ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கூற்றுகள் ஒருநாள் செயலாகிவிடும்.
      ஏனென்றால் அவைகள் தெளிவான ஏகத்தில் எடுக்கும் முத்துக்கள்.
      சில இலக்கண கணக்குகள் காலத்தில் அவைகளை தூரமாக்கிவிடுவதும் உண்டுதானே?
      கணக்கு விடை கண்டதும் கைவல்யம் ஆகிவிடும் கவலை வேண்டாம்! அன்பரே!

      கவிக்குயில் எடுக்கும் எல்லா சப்தங்களும் இனிமைதானே!

      எழுதிய எதயையும் ஒதுக்கமுடியாது அனைத்து உங்கள் வரிகள் யாவும் அழகான கோலங்கள். காலத்தைக் காட்டும் கண்ணாடிகள். கோலங்களை கண்ணாடியில் இரசித்துக்கொண்டே இருப்பேன்!

      நன்றி!”கவியன்பன்” கலாம், அவர்களே!

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers