.

Pages

Tuesday, June 25, 2013

உண்மையா !? இல்லையா !?

இது கவிதையும் இல்லை கட்டுரையும் இல்லை, என் மனதில் உதித்த சில வரிகள். “எத்தனையோ சங்கதிகளை நேரில் பார்த்ததினால் இப்படி எழுத தூண்டியது”.

இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் எதிலும் உண்மை என்பது அடியோடு அழிந்து விட்டது. 100க்கு 99.999 சதவிகிதம் பொய்யே தலை தூக்கி நிற்கின்றது. இதற்கெல்லாம் காரணம் பேராசை, பேராசையின் காரணத்தினால் சுரண்டல்கள், சுரண்டல்கள் காரணத்தினால் பொய்மை தலை விரித்து ஆடுகிறது. அப்போ உண்மை எங்கே ?

பெற்றோர்கள் பிள்ளைகள் மத்தியில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
கணவன் மனைவி இடையில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

அண்ணன் தம்பிக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.
அக்கா தங்கைக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.

திருமணங்களில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
அன்பு காட்டுவதில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

குடும்பத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
பங்களிக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.

தொழிலில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
நட்பில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

வாங்குவதில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
பள்ளிக் கூடத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

ஆசிரியர்களிடத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
மாணாக்கர்களிடம் சுரண்டல்கள், உண்மை இல்லை.

பணியாளர்களிடத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
அலுவலகங்களில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

ஊருக்குள் சுரண்டல்கள், உண்மை இல்லை.
இணையத்தில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

கவிதையில் சுரண்டல்கள், உண்மை இல்லை.
ஆக்கங்களில் சுரண்டல்கள், உண்மை இல்லை.

எதிலும் சுரண்டல்கள், உண்மை இல்லை.
அப்போ உண்மையின் நிலை !?
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

16 comments:

 1. பிறப்பதுவும்
  இறப்பதுவும்
  உண்மை

  இரண்டிற்கும்
  இடையில்???????????

  ஒருதாய்
  பிரசவ வேதனையில்
  பிரசவிப்பதை
  சுகப்பிரசவம் என்று
  முதல் பொய்யில்
  ஆரம்பிப்பது
  நம் வாழ்வு!?!?!?!?!?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   அப்போ பொய் பிறக்கும்போதே ...............!!??

   Delete
 2. உண்மையின் நிலை இனி 'தேடல்' தான்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   அப்படியே தேடினாலும் உண்மையான உண்மை கிடைக்குமா?

   Delete
 3. அறிவுகளின் முழு உருவம் அண்ணல் நபிகள்(ஸல்) அவர்களே. எனவே அவர்களிடம் அறிவை சுரண்டிதான் பலர் தங்களை அறிவாழி என்கின்றனர். அதில் தவறில்லை.
  ஆனால்! அவர்களின் அறிவில், அவர்களின் உண்மை நோக்கத்தை தவறான பகுத்தறிவு என்ற ஆயுதத்தால் சிதைத்து வியாபாரம் பூச்சு பூசி உடன் பெரும் பணக்காரர் ஆகிவிடுகிறார்கள்.

  என்ன நோக்கிற்கு எது பயன்படுத்தப்படுகிறதோ அதை பொறுத்து நல்லது அல்லது கெட்டது ஆகும்.

  பொது நன்மை அதில் சுயநன்மை பாதிக்காமல் எந்த செயலும் செய்யல்லாம் என்பது மனித வாழ்வு. மற்றவைகள் மிருக வாழ்வு.

  'மனித உரிமை ஆர்வலர்' அவர்களின் ஆதங்கம் ஒவ்வொரு மனிதனிடம் ஏற்படவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   சரியாக சொன்னீர்கள்.

   Delete
 4. அந்தோ பரிபாவம்!
  நம்பிக்கையில் நச்சூட்டப்பட்டு தேனைத்தடவி பலர்மனத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
  அது மனிதவாழ்வை அழித்து மிருக வாழ்வை வளர்க்கிறது.
  உங்கள் ஆதங்கம் அதனை அழகாக படம்பிடித்து காட்டுகிறது.
  ஐஸ்கிரீம் வேண்டாம் கெடுதல் என்றால் பிள்ளை அறிவு தெளிவில்லாததுதானே அதைத்தான் விரும்பும்.
  தாங்கள் எழுதியதுபோல் எல்லாம் பேராசை. பணப்பேராசை.
  வளரும் வாலிபம் அறிவு என்ற தவறான போதை மயக்கத்தில் சிக்குண்டு சீரழிகிறது.
  பொறுமை, சிந்தனை, ஆழ் சிந்தனை இதற்கு இப்பொழுது இங்கு வேலை இல்லை!
  ஆட்டைக் கழுதையாக்கின கதைபோல் திரும்பத்திரும்ப ஒன்றை சொன்னால் அது ஏற்க்கப்படுகிறது. அதில் சிந்திப்பதே இல்லை!
  நம் முன்னோர்கள் தவறு செய்தவர்களாக நம்ப வைத்துவிட்டானர்!
  முள்ளுக்குள் பலா இருப்பதை ஏனோ இளமைகள் ஏற்க்கவில்லை!
  கடிவளமிட்டு பழக்கப்படுத்திவிட்டனர்!
  மனிதன் மனிதனாக வாழ மனிதனாக வாழ்ந்தவர்கள் அவர்களை பின்பற்றினாலோழிய முடியாது.
  அவர்களை பின்பற்ற அவர்கள் சரித்திரங்களை படிக்கவேண்டும். சிந்திக்கவேண்டும்!
  ஒரு சிறிய பொடி. பெரியோர்களை அதாவது வயது மூத்தவர்களை யார் மதிப்பதில்லை!?
  இறைவன் அவர்களை மதிப்பது தன்னை மதிப்பது என்கிறானே!
  இறைச்சொல்லை மீறலாமா?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   இன்னும் உங்களின் தாக்கம் தீரவில்லை போலும்.

   Delete
 5. உண்மையா !?!?!?!?!?!?!?!?!?!?!?!
  இல்லையா !?!?!?!?!?!?!?!?!?!?!?!
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....!?!?!?!?!?!?!?
  ஹுஹுஹுஹு.....!?!?!?!?!?!?!
  கொழப்பமா இருக்கு காக்கா நா போயி பெனாடல் மாத்திரயெ போட்டுக்கிட்டு வந்துடுறேன்.?

  இந்த ஆட்டத்துக்கு நா வரல ஆள உடுங்க காக்கா ஹிஹிஹிஹி
  உடுங்க ஜூட்டெ.....


  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   எங்கும் ஓட வேண்டாம், மருந்து நம்மிடமே இருக்கின்றது.

   Delete
 6. எதிலும் உண்மையில்லை ...

  கணவனிடம் மனைவி எடுப்பதை சுரண்டல் என்று பாராமல்

  உரிமை என்ற கோணத்தில் பார்த்தால் உண்மையாக தோன்றும்

  எதையும் உறவாய் ..உரிமையை பார்ப்போம் ..

  தங்களின் பார்வை வித்தியாசமான பார்வை ..விழிப்புணர்வு

  அதிகமான ஆக்கம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   கணவனிடம் மனைவி எடுப்பதை நானும் அதை முழு உரிமை என்று சொல்வேன், எதுவரைக்கும் அது முழு உரிமையாக கருதப்படுகிறது எடுத்ததை கணவனிடம் சொல்லும்வரை; சொல்லாதவரை அது சுரண்டலே.

   உண்மை சம்பவத்தை நான் நேரிலேயே நம் பஜாரில் பார்த்தேன், அதாவது இரண்டு பெண்கள் புடவை வாங்குவதற்கு நமதூரில் உள்ள வெளிநாட்டு சாமாக்கள் விற்கப்படும் கடை ஒன்றுக்கு வந்தார்கள், புடவை எடுத்தார்கள், விலை ரூபாய் 1250/= பணத்தை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு இப்படி சொன்னார்கள் "என் கணவர் வந்து கேட்டால் இந்த புடவையின் விலையை 2750/=என்று சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்கள், அதாவது 1500 அதிகமாக, சற்று தூரத்தில் நிற்கும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது, அடப்பாவமே, கணவனிடம் இப்படியும் ஒரு சுரண்டலா?

   இதுபோல் நிறைய விஷயங்களை நான் பார்த்ததினால்தான்....!!??

   Delete
 7. நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என சத்தியம் செய்வோரை என்ன சொல்லலாம் !?

  உண்மை உண்மையாக இருக்க வேண்டும். போலி வேஷம் கலைக்கப்பட வேண்டும். குறுகிய மனப்பான்மை அகற்றப்பட வேண்டும். வாழ்வில் நலம் பெறுவோம் என்றென்றும் உண்மையான முகத்துடன்...

  ReplyDelete
 8. உங்கள் கருத்துக்கு நன்றி.

  நான் 100%சதவிகிதம் எல்லோரையும் குறிப்பிடவில்லை, நம் மத்தியில் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட நல்லவர்களும் உண்டு, இருந்தாலும் விகிதாச்சாரத்தின்படி பார்த்தால் உண்மை தாழ்ந்து விட்டது, பொய் உயர்ந்து விட்டது.

  ReplyDelete
 9. கவிதையும் கட்டுரையும் கலந்த கலவை , மனதில் பதித்த பல வரிகள்

  ReplyDelete
 10. உங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி.


  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers