kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, June 26, 2013
வாங்கைய்யா பழகலாம் 'பழமொழி' :)
பழமொழிகள், தத்துவங்கள், பொன்மொழிகள் அன்றாட வாழ்க்கையில் மானுடர்களுக்கு பயன்தரும் நல்ல விஷயங்கள் பழமொழியை பொருத்தவரை நாடு, மொழி, சமயம், ஊர், மாநிலம் போன்றவற்றை சார்ந்திருக்கும்.
ஒரு சமயத்தின், ஊரின் மொழியின் பழமொழிகள் வேறு ஊரின் சமயத்தில் மொழியில் பொருந்தாது
உதாரணத்திற்கு...
ஆடிக்காத்தில் அம்மியும் நகரும் இது தமிழகத்தின் பழமொழி மும்பைக்கோ வேறு நாட்டிற்கோ பொருந்தாது ஆடியில் காத்தடிப்பது தென்நாட்டில்தான் வடநாட்டிற்கு பொருந்துவது இல்லை.
அதுபோல்,
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பன் இப்பழமொழி ஆங்கிலேயருக்கு பொருந்தாது காரணம் அத்தையை ஆண்டி என்றும் சித்தப்பா மற்றும் மாமாவை அங்கிள் [ Uncle ] என்றே அழைப்பர் அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பன் எனும் பழமொழி ஒரு தாய்க்கு இரண்டு ஆண்மகன் ஒரு பெண் மகள் எனும் பச்சத்தில் மூத்த மகனின் மகன் இரண்டாம் மகனை சித்தப்பன் என்றும் மூன்றாம் மகளை அத்தை என்றும் சொல்வதைத்தான் அப்படிச்சொல்கிறார்கள்.
பழமொழிகளில் சில...
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தம்பிள்ளை தானாக வளரும்
5ல் வளையாதது 50ல் வளையாது
சிறியார் விளைத்த வெள்ளாமை வீடுவந்து சேராது
தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்
குறை குடம் தழும்பாது
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
தத்துவங்கள் சொல்பவர்கள் நல்ல கல்வியாளர், அறிஞ்ஞர், கட்டுரையாளர்கள் கூறும் பண்பட்ட வார்த்தைகளே, மானுடர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே தத்துவங்களாகும். ஒரு தத்துவத்தைச் சொல்லும் போது அதை யார்சொன்னது என்று குறிப்பிட்டால் தான் அந்த தத்துவத்திற்கு மதிப்பு.
சில தத்துவங்களை இங்கே சமர்பிக்கின்றேன்...
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே - பெஞ்சமின்
ஒவ்வொரு பொருளின் விளையும் தெரிந்திருக்கலாம் ஆனால் அந்த பொருளின் சரியானமதிப்பு தெரியாமல் இருந்தால் பயனில்லை - ஆஸ்கார் ஒயில்டு
நல்லவராய் இருப்பது நல்லதுதான் ஆனால் நல்லது கேட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்து - பெர்னாட்ஷா
செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள்அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில்பலரால் நிராகரிக்கப்பட்டவைதான் - கால்லைல்
யார் ஒருவன் தனக்கு உள்ள கவுருவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடிஇருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான் - விவேகானந்தர்
ஒரு மனிதனின் நடத்தையை அறியவேண்டுமா அவன் கையில் அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்
முறிந்த கையைக்கொண்டு உழைக்கலாம் உடைந்த மனதைகொண்டு உழைக்க முடியாது - கெண்டார் செட்
உங்கள் எதிரிகளை தாராளமாக மன்னியுங்கள் மன்னிப்பைவிட அவர்களை உருத்தக்கூடியது வேறொன்றும் இருக்காது மன்னிக்கப்பட்ட எதிரிகளே உங்களுக்கு நண்பர்களாய் மாறிவிடுவர் - ஆபிரஹாம் லிங்கன்
பொன்மொழிகள் இந்தவகை மொழிகளுக்கு படிப்பறிவு அவசியமில்லை பட்டறிவு, ஞானம் போன்றவை பொன்மொழிகளை தரும் எனக்கு பிடித்த பொன்மொழிகளை தந்தவரில் ஒருவரை சொல்கிறேன் அவர் எழுதவோ, படிக்கவோ தெரியாதவர் அவரிடம் உள்ளதெல்லாம் இறைவனின் அருள்மட்டும் தான் அவர் கூறும் வார்த்தைகள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகளே காலத்தால், மொழிகளால் வேறுபட்ட பழக்கவழக்கங்களால் மாறுபடாத எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொன்னான மொழிகள் சிலவற்றை தருகிறேன் அனுபவியுங்கள்.
உழைத்தவனின் வியர்வைதுளிகள் உலரும் முன்பே கூலியை கொடுத்துவிடுங்கள்.
தந்தையின் பொருத்தத்தில் [ இறைவனின் ] அல்லாஹ்வின் பொருத்தம் உள்ளது.
தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது
மனிதர்களில் யாரையும் பரிகாசிக்காதீர்
பெற்றோர்க்கு மாறு செய்யாதே
மனோ இச்சைப்படி நடக்காதீர்
குள்ளமான ஒருவரை குள்ளனென்று கூறாதீர்
சத்தியத்தை நிலைநாட்டுங்கள்
வீண் விளையாட்டில் காலத்தை கழிக்காதீர்
இது போன்ற பொன்மொழிகளை கண்மணி நாயகம் முஹம்மது [ ஸல் ] அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.
அன்பர்களே உங்களுக்கு தெரிந்த தத்துவங்கள், பொன்மொழிகள் சுவையான பழமொழிகளை பகிர்ந்திடுங்கள் அனுபவிப்போம்.
மு.செ.மு.சபீர் அஹமது

Subscribe to:
Post Comments (Atom)
மேடைப் பேச்சாளர்களிடம் பலமுறை பழமொழிகளை நான் கேட்டதுண்டு.கேட்பதற்கு இனிமையாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.
ReplyDeleteசிறந்த பழமொழிகளை பட்டியலிட்டு தந்தமைக்கு மிக்க நன்றி !
தொழில்அதிபரின் எழுத்தாற்றல் வாராவாரம் வளர்ந்து நிற்பது சிறப்பு !
ReplyDeleteதொடரட்டும் எழுத்துப்பணி...
எனக்கு தெரிந்த இணையத்தில் சுட்ட பழமொழி :)
ReplyDeleteதைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது
கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்
அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது
அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்
ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்
உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்
ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை
ReplyDeleteகெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்
உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்
உடையார் பா¨ளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?
உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்
கண்ணால் காண்பதும் பொய்யே;
காதால் கேட்பதும் பொய்யே;
தீர விசாரித்து அறிதலே மெய்.
ச.வி.வித்தகரின் பழமொழிகள் சுவாரஸ்யம். ரசித்தேன், சிரித்தேன், வாழ்த்தியமைக்கு மகிழ்ந்தேன்!
ReplyDeleteசிறப்பான பொன்மொழிகள்...
ReplyDeleteசேக்கனா M. நிஜாம் அவர்களின் ரசிக்க வைக்கும் பழ(ல)மொழிகளுக்கும் நன்றிகள்...
வாழ்த்துக்கள்...
பழமொழி பழங்கள் தரும்
ReplyDeleteபழமொழிகள்
அவை பழுத்த மொழிகள்.
அவைகளில் நல்லதை
உண்டு உணர்வாக்கினால்
வாழ்வுகள்
அவை வசந்தமாகும்.
அதன்முலம்
சுவர்க்கத்தில்
பழங்களே உணவாக கிடைக்கும்.
பழமொழி..ஒவ்வொன்றும் வாழ்வின் அனுபவங்கள்
ReplyDeleteநண்பர் சபீர் கூறிய மொழிக்கு மறுமொழி தம்பி நிஜாமிடம்
வந்தது சுவை குறையாது இருந்தது .வாழ்த்துக்கள்
welcom thanabaalan,nabithas,and nanban sithik
ReplyDeleteபழமொழி என்பது அந்தந்த மொழியைச்சார்ந்த சமுதாயத்தினர் விழிப்புணர்வுடன் இருந்துகொள்ள அக்காலத்து முன்னோர்கள் சொன்ன சொற்களே.! அது இன்றுவரை பேசப்படுகிறது.
ReplyDeleteஇக்காலத்து புது மொழியாக ஏதாவது வந்துள்ளதா..? அறியப்படுத்துங்கள்.
நினைவூட்டலுக்கு வாழ்த்துக்கள் நன்றி.
பழமொழி;பல் போனால் சொல்போச்சு
Deleteபுது மொழி;செல்[cell] போனால் சொல் போச்சு
கடலுக்கு fishing நெட்டு
Deleteகாதலுக்கு internet
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபழமொழிகள் பல உண்டு, அதில் ஒரு சிலவற்றை எடுத்து, கருத்துக்களைச் சொல்லி, ஞாபகப்படுத்தி சிந்திக்க வைத்து, இப்படி ஒரு பின்னூட்டம் இடச்செய்து, சந்தோஷப்படுத்திய உங்களுக்கு நன்றி சகோ மு.செ.மு.ச.அ, அவர்களே.
இன்னும் நிறையத் தாருங்கள்.
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
ச.வி.வித்தகர் நிறைய தந்துள்ளாரே போதவில்லையா ம.உ.காவலரே
Deleteம்ம்ம்ஹூம்
Delete