kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, June 28, 2013
இறைவனின் கை !?
இரண்டுகைகள் கொண்டுதானே
இயன்றவைகள் செய்கிறாய்
இனியென்ன நம்பிக்கை
இயலாதவை செய்திடுமே
இன்றதுவுன் மூன்றாம்கை !
இருக்கட்டுமே இதயத்திலே. .
இறைவன் தந்தான்
இயற்கை மந்திரம்
இனியநம் பிக்கை.
இன்னுமேன் கவலை
இன்றே ஏற்றிடு !
நம்பிக்கை நினைவது
நம்மிலேநி றைந்து
நழுவாது நிலைத்திடின்
நினைவதுநட க்குமே !
நம்பிக்கை எண்ணம்
நின்மனதி லிருத்தி
நாயகனே நடத்தும்
நல்நியதி அதுவே !
நம்பிக் கைஉள்ளம்
நாயனின் இல்லம் !
இருகைகள் கொண்டு
இயன்றதைச் செய்தாய்
இனிநம் பிக்கை -இது
இறைவ னின்கை!
இயலா ததையும்
இனிதே செய்யுமே!
நீயென் பதென்ன ?
நானென் பதென்ன ?
அவனென் பதென்ன ?
நீநா னவனிது
உலகின் உணர்வு
ஒன்றின் உணர்வு.
ஒன்றினுள் அசைவு
தன்னில் மாற்றம்
நிகழ்த்திட நிகழும்
தவறா துடனே !
உண்மை இருந்தும்
உன்னில் தோன்றும்
நினைவுகள் பலவும்
நம்பும் நிலையில்
நடக்கவும் இல்லையே ?
இதனிலும் மறுப்பு
மதியிலும் தவறு
இருக்கவும் இல்லை !
விரிவு விளக்கம்
விளங்க வேண்டுமே !
உன்னில் உண்மை,
நினைவில் பிடிப்பு,
நம்பிக் கைமுழுமை
உன்னில் இல்லை !
உலகில் உள்ள
உலவும் மனிதன்
தன்னில் தோன்றும்...
தானும் வேறு
உலகும் வேறு
எண்ணம் இயல்பே.
பேசா மரமது
தானே பேசினால் !
மரமென பழத்தால்
மரம்பேசும் தன்னை !
பகுக்கா மரமென
பழம்தனை உணருமே !
மனிதனோ மூலமறியா
பிரிந்தே நிற்கின்றான்.
ஏகத்தில்நல் உலகம்
உலகத்தில் மனிதன்
ஏகமேஎல் லாமென
எதார்த்தம்தான் அறியான் !
என்பதாலே அவனில்
உண்மையது இல்லையே !
உருவுள் இயன்றது
வெளியில் இயலா
நம்பும் இயல்பு
உன்னில் இருக்க
நினைவில் பிடிப்பு
உன்னில் இல்லையே !
பிரிந்த உணர்வுகள்
நிறைந்த உன்னுள்
நம்பிக் கைமுழுமை
நம்ப இயலுமோ ?
இடிந்திடா தேநீ !
இதோவழி உண்டு !
இன்றே ஏற்றிடு !
நம்பும் மனதில்
வேறுகள் இல்லை
ஒன்றின் உணர்வு.
ஒன்றின் உணர்வதுதான்
ஒன்றின் நம்பிக்கை
ஏகமின் நம்பிக்கை
ஏகனின் நம்பிக்கை !
நடந்தே தீருமது!
நன்குநம் பிடுவாயே !
இரு கைகள் கொண்டு
இயன்றதைச் செய்தாய்
இனிநம் பிக்கை - இது
இறைவ னின்கை !
இயலா ததையும்
இனிதே செய்யுமே !
நபிதாஸ்
இயன்றவைகள் செய்கிறாய்
இனியென்ன நம்பிக்கை
இயலாதவை செய்திடுமே
இன்றதுவுன் மூன்றாம்கை !
இருக்கட்டுமே இதயத்திலே. .
இறைவன் தந்தான்
இயற்கை மந்திரம்
இனியநம் பிக்கை.
இன்னுமேன் கவலை
இன்றே ஏற்றிடு !
நம்பிக்கை நினைவது
நம்மிலேநி றைந்து
நழுவாது நிலைத்திடின்
நினைவதுநட க்குமே !
நம்பிக்கை எண்ணம்
நின்மனதி லிருத்தி
நாயகனே நடத்தும்
நல்நியதி அதுவே !
நம்பிக் கைஉள்ளம்
நாயனின் இல்லம் !
இருகைகள் கொண்டு
இயன்றதைச் செய்தாய்
இனிநம் பிக்கை -இது
இறைவ னின்கை!
இயலா ததையும்
இனிதே செய்யுமே!
நீயென் பதென்ன ?
நானென் பதென்ன ?
அவனென் பதென்ன ?
நீநா னவனிது
உலகின் உணர்வு
ஒன்றின் உணர்வு.
ஒன்றினுள் அசைவு
தன்னில் மாற்றம்
நிகழ்த்திட நிகழும்
தவறா துடனே !
உண்மை இருந்தும்
உன்னில் தோன்றும்
நினைவுகள் பலவும்
நம்பும் நிலையில்
நடக்கவும் இல்லையே ?
இதனிலும் மறுப்பு
மதியிலும் தவறு
இருக்கவும் இல்லை !
விரிவு விளக்கம்
விளங்க வேண்டுமே !
உன்னில் உண்மை,
நினைவில் பிடிப்பு,
நம்பிக் கைமுழுமை
உன்னில் இல்லை !
உலகில் உள்ள
உலவும் மனிதன்
தன்னில் தோன்றும்...
தானும் வேறு
உலகும் வேறு
எண்ணம் இயல்பே.
பேசா மரமது
தானே பேசினால் !
மரமென பழத்தால்
மரம்பேசும் தன்னை !
பகுக்கா மரமென
பழம்தனை உணருமே !
மனிதனோ மூலமறியா
பிரிந்தே நிற்கின்றான்.
ஏகத்தில்நல் உலகம்
உலகத்தில் மனிதன்
ஏகமேஎல் லாமென
எதார்த்தம்தான் அறியான் !
என்பதாலே அவனில்
உண்மையது இல்லையே !
உருவுள் இயன்றது
வெளியில் இயலா
நம்பும் இயல்பு
உன்னில் இருக்க
நினைவில் பிடிப்பு
உன்னில் இல்லையே !
பிரிந்த உணர்வுகள்
நிறைந்த உன்னுள்
நம்பிக் கைமுழுமை
நம்ப இயலுமோ ?
இடிந்திடா தேநீ !
இதோவழி உண்டு !
இன்றே ஏற்றிடு !
நம்பும் மனதில்
வேறுகள் இல்லை
ஒன்றின் உணர்வு.
ஒன்றின் உணர்வதுதான்
ஒன்றின் நம்பிக்கை
ஏகமின் நம்பிக்கை
ஏகனின் நம்பிக்கை !
நடந்தே தீருமது!
நன்குநம் பிடுவாயே !
இரு கைகள் கொண்டு
இயன்றதைச் செய்தாய்
இனிநம் பிக்கை - இது
இறைவ னின்கை !
இயலா ததையும்
இனிதே செய்யுமே !
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
சிந்திக்கத் தூண்டுகிறது...
ReplyDeleteஎழுதிய எனது நோக்கமே சிந்திக்க துண்டுவது தான்.
Deleteஎழுதிய கருத்தில் விளக்கம் வேண்டும் என்றோ அல்லது கருத்து நிலையில் பரிமாற்றம் வேண்டுமென்றோ எனில் மனம் திறந்து அதனை வரவேற்கின்றேன். அப்பொழுதுதான் ஆரோக்கிய புரிதல் ஏற்ப்படும்.
நன்றி, அன்பரே!
/// உருவுள் இயன்றது
ReplyDeleteவெளியில் இயலா
நம்பும் இயல்பு
உன்னில் இருக்க
நினைவில் பிடிப்பு
உன்னில் இல்லையே ! ///
அருமையான வரிகள் பல... வாழ்த்துக்கள்...
//
Deleteதன்னில் தோன்றும்...
தானும் வேறு
உலகும் வேறு
எண்ணம் இயல்பே.//
//
மனிதனோ மூலமறியா
பிரிந்தே நிற்கின்றான்.
//
ஏகத்தில்நல் உலகம்
உலகத்தில் மனிதன்
ஏகமேஎல் லாமென
எதார்த்தம்தான் அறியான் !//
//
பேசா மரமது
தானே பேசினால் !
மரமென பழத்தால்
மரம்பேசும் தன்னை !
பகுக்கா மரமென
பழம்தனை உணருமே !//
மேக்கண்டவைகள் ஒன்றே பலவாக உள்ளது என்ற கருத்தை மையமாக கொண்டுள்ளது.
ஆனால்! ஒன்று, தான் பலவாக இருப்பதை அறியவில்லை!
மனிதன் காற்று இல்லாமல் அவன் இருக்கமுடியாது. நிலம் இல்லாமலும் அவன் இல்லை. அதுபோல் மற்ற மூன்று பூதங்களும் இல்லாமல் அவன் இருக்கமுடியாது, அவன் இல்லை. அவ்வாறானால் அதில் ஒன்று இல்லாவிட்டால் அவனில்லை. அவ்வாறு என்றால் அந்த ஒன்றும் சேர்ந்துதான் அவன் மனிதன்.
என்றைக்கு ஒன்று இல்லாமல் அவன் இல்லையோ அந்த ஒன்றும் சேர்த்துதான் அவன் மனிதன். அவ்வாறானால் மற்ற நான்கு பூதங்களும் இன்றியும் அவன் இல்லை. இப்பொழுது அவனைப்பற்றி சிந்தித்தால் அவன் உண்மை விஸ்வரூபம் விளங்கலாம்.
ஆனால் மனிதன் ஆதியிலிருந்து தன உருவரையே தான் என்று அசைக்கமுடையாதை நம்பிக்கையில் இருந்துவந்துவிட்டன். இவனுடைய அசைக்கமுடியாத உரிமை நம்பிக்கை எதுவரையோ அதுவரை அதன் செயல்பாடுகள் இயங்கும்.அதனையே
///
உருவுள் இயன்றது
வெளியில் இயலா
நம்பும் இயல்பு
உன்னில் இருக்க
நினைவில் பிடிப்பு
உன்னில் இல்லையே ! ///
என்ற வரிகளின் உண்மைத் தத்துவம் இரசித்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு, நன்றி!
கருத்துப் பரிமாற்றம் இருத்தல் படிப்பதற்கு சுகமாக இருக்கும். ஏற்புடையதையும் ஏற்காததையும் மனதில் தோன்றுவதை எழுதும்பொழுது ஆரோக்கிய புரிதல் இனிமையாக ஏற்படுமல்லவா! என்ற என் விருப்பத்தை பதிகிறேன்.
நன்றி!
//
ReplyDeleteஏகத்தில்நல் உலகம்
உலகத்தில் மனிதன்
ஏகமேஎல் லாமென
எதார்த்தம்தான் அறியான் !
என்பதாலே அவனில்
உண்மையது இல்லையே !//
இந்த ஒன்றின் தத்துவத்தை உதாரணம் மூலமும்
//
பேசா மரமது
தானே பேசினால் !
மரமென பழத்தால்
மரம்பேசும் தன்னை !
பகுக்கா மரமென
பழம்தனை உணருமே !//
என்று விளங்க வைத்தது சிந்தனையை கிளறிவிட்டது நபிதாஸ் அவர்களே!
பேசாத மரம் பேசினால்...
Deleteஅதன் வாய் பழம் என்று கொண்டால்,
பழம் தன்னை மரம் என்றுதான் பேசும்.
நான் பழம் அது மரம் என்று எப்படி பேசும்?
வாய் பேசினால் மனிதன் பேசுகிறான் என்றுதானே சொல்கிறோம்!
பழத்திடம் நீ யார்? என்றால்
நான் மரம் என்றுதானே சொல்லும்!
அதுபோல்...
//
ஏகத்தில்நல் உலகம்
உலகத்தில் மனிதன்
ஏகமேஎல் லாமென
எதார்த்தம்தான் அறியான் !
என்பதாலே அவனில்
உண்மையது இல்லையே !//
இப்பொழுது ஏகம் பேச விரும்பினால் எப்படி பேசும்?
என்ற சிந்தனைகள் கிளரிவிட்டதோ!
நன்றி! unkalukku nanbanனே!
தாங்களின் சிறப்பான ஞானக்கவி வாசித்து ஞானமதில் மூழ்கிப்போனேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி!
Deleteஅதிரை.மெய்சா அவர்களே!
நான் எழுதியதின் நோக்கம் ஞானமதில் மூழ்கிப்போவதற்கு அல்ல.
ஞானமதில் மூழ்கி முத்தெடுப்பதற்குத்தான் கவிஞரே!
கணினி கோளாறால் பின்னூட்ட பதில் எழுத காலதாமதம் ஆகிவிட்டது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇறைவனின் கை,
இது இந்த கவிதையின் தலைப்பு.
எது மாதிரி பின்னோட்டம் இட்டால் பொருத்தமாக இருக்கும், நாடும் இந்த நிமிஷம் வரை சிந்தித்து பார்த்து விட்டேன், ம்ம்ம்ஹூம், வெளிப்பட மாட்டேன்கிறது.
இருந்தாலும் இதை மட்டும் சொன்னால்......
அதாவது - பாராட்டுக்கள் அண்டு வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
சிந்தித்து பின்னுட்டம் எழுத வரவில்லை என்றால் என் கருத்துக்களில் எதுவும் மனதை கவ்வும் விதத்தில் நான் எழுதும் கலையில் பின்தங்கியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது மனித உரிமைக்காவலரே!
Deleteஇனி நான் என்னை தீட்டிக்கொள்கிறேன்.
இருப்பினும் பாராட்டுக்கள் அண்டு வாழ்த்துக்கள்.
தத்துவக் கவிஞரின் ஞானக் கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்துக் குளித்த இம்முத்து பெரும் ஞானச் சொத்து!
ReplyDelete//
ReplyDeleteகருவறையில் உறங்கிட
கருணையாளன் வழங்கிடும்
அருமையான முறைகளே
அளவற்ற தாலாட்டு !//
தாங்கள் தாலாட்டு பாடுகிறீர்கள்.
தத்துவக் கவிஞரின் ஞானக் கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்துக் குளித்த இம்முத்து பெரும் ஞானச் சொத்து! என்று
எனக்கு தாலாட்டு பாடுகிறீர்கள்.
நான் அதில் உறங்கமாட்டேன்!
நீங்கள் விழித்து நான் உறங்கினால்...!
நல்முறையல்ல,
அதனைக் கண்டு இரசிப்பேன்.
நன்கு விழித்து இரசிப்பேன், கவியன்பரே!
இன்ஷா அல்லாஹ் விழித்துக் கொண்டிருக்கும் உங்களின் “ஞான விழிகட்குள்” பிரகாசம் கண்டு இரசிக்கக் காத்துக் கொண்டிருக்கும்,
Deleteஉங்களின் ஆன்மீக சீடன்.