.

Pages

Friday, June 28, 2013

கவியன்பன் கலாமின் 'தாலாட்டு'

கருவறையில் உறங்கிட
கருணையாளன் வழங்கிடும்
அருமையான முறைகளே
அளவற்ற தாலாட்டு !

தூளியை ஆட்டி
தாயவள் பொழிவாள்
தோளில் சாய்த்து
தந்தையும் தருவார்

தாலாட்டுப் பாடலாய்த்
தணிக்கும் அழுகையை
வாலாட்டும் மழலையும்
வாய்பொத்தி உறங்கவே

கற்றவர் சபையிலே
கண்ணியமாய்க் கைதட்டிப்
போற்றப்  படுதலும்
புண்ணியமாய்த் தாலாட்டு

வணிகமும் தொழிலும்
வளம்தரும் ஆக்கம்
பணிகளும் சீர்பட
பயன்தரும் ஊக்கம்

அரியதாய்த் தாலாட்டு
அஃதொரு சீராட்டு
பெரியதாய்ச் சாதிக்க
பேறுபெற்ற பாராட்டு

மனைவிதரும் அன்பு
மடிமீது சாய்ந்து
மனமெங்கும் பூசும்
மகிழ்வானத் தாலாட்டு

படகுக்குத் துடுப்பும்
படிப்புக்குத் துடிப்பும்
கடலுக்கு அலையும்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 27-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. 

16 comments:

 1. நல்லதொரு கவிதை தோழரே , வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி தோழரே!

   Delete
 2. பதிவுக்கு நன்றி.

  கவியன்பன் கலாமின் 'தாலாட்டு'

  கவிதையின் தலைப்பே மிகவும் நன்றாக இருக்குது, தாலாட்டுக்களில் பலவகைகள் உண்டு, இந்தக் கவிதையின் கோர்வையும் அப்படித்தான் இருக்குது, படிப்போர் உள்ளம் நெகிழச் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.
  ================
  "பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி, அவன் பாடாத பாட்டு தாலாட்டு"

  இதில் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பதமாக கருதப்பட்டு அந்த வார்த்தையைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திரைப்பட பாடல்களையும் தெரிவு செய்து அனுப்பவேண்டும்.

  இது "பாட்டும் பதமும்" என்ற நிகழ்ச்சியில் 1978களில் இலங்கை வானொலி ஆசிய சேவையில் என்னுடைய பெயரில் ஒளிப்பரப்பான ஒரு ஆக்கமாகும்.
  ================
  மச்சான் நீங்கள் "தாலாட்டு" இந்த வார்த்தையை பயன்படுத்தி என் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய கால ஓட்டத்தை இழுத்து இந்த தருணத்தில் நினைவு படுத்தினமைக்கு நன்றி.

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. மச்சானின் பாராட்டு என்னும் தாலாட்டு என் மனத்தினில் ஆழ்ந்த நிம்மதியை ஊட்டும்! மிக்க நன்றி மச்சான்!

   Delete
 3. தூளியை ஆட்டி
  தாயவள் பொழிவாள்
  தோளில் சாய்த்து
  தந்தையும் தருவார்///

  nice god bless u

  ReplyDelete
 4. சமூக அக்கறையுள்ள தாலாட்டு !

  தாலாட்டிய கவிக்குறளுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ஆதரவு தான் எங்களின் ஆக்கம் என்னும் குழந்தைக்கு அரியதொரு தாலாட்டு!

   மிக்க நன்றி, சமூகச் சேவகரே! விழிப்புணர்வு வித்தகரே!!

   Delete
 5. கவியன்பரின் தாலாட்டு
  காண்போரை காவி வந்த சீறாட்டு.
  போட்டிருந்த புது மெட்டு
  புகழ் சூழ்ந்திடுமாம் மனம் தொட்டு.

  ReplyDelete
  Replies
  1. சந்தங்களைச் சொந்தங்களாய்க் கொண்டுச் சந்தக் கவியில் தந்த உங்களின் பாராட்டு, என் கவிக்குழந்தைக்குத் தாலாட்டு!

   அகம்நிறையும் நன்றிகள், அதிரை கவிஞர் மெய்சா அவர்கட்கு!

   Delete
 6. தாயுள்ளமே தாலாட்டு பாடும்

  கவியன்பர் கலாம் அவர்களின் உள்ளமும்

  தாயுள்ளமே

  ReplyDelete
  Replies
  1. என்றன் கவியுள்ளத்தை ஈடில்லாத் தாயுள்ளத்துடன் ஒப்பிட வேண்டா. தாயின் அன்புக்கும் ஈரமுள்ள ஹ்ருதயத்திற்கும் தரணியில் ஈடில்லை!

   உங்களின் உளமார்ந்த வாழ்த்துக்கு, என்றன் உளம்நிறைவான நன்றிகள்!

   Delete
 7. கணினி தன்னை கவனி என்று ஓய்வு எடுத்துக்கொண்டது. அதனால் கொஞ்சம் காலதாமதம்.

  உங்கள் தாலாட்டுக்கு வருசையாக பல அறிஞர்களின் தாலாட்டு கண்டேன். அதிலும் புதியவர்கள் தாலாட்டு. உங்கள் தாலாட்டு உள்ளத்தை கவ்வியதால் தாலாட்டிவிட்டார்கள்.
  //
  கற்றவர் சபையிலே
  கண்ணியமாய்க் கைதட்டிப்
  போற்றப் படுதலும்
  புண்ணியமாய்த் தாலாட்டு. //

  ஆமாம்! தாங்கள் போற்றபட்டு புண்ணியம் பெற தாலாட்டுத் தானே! மேற்கண்டவர்களின் தாலாட்டு!

  வாழ்க நீங்கள் ! வளர்க உங்கள் கவியாக்கம்! கவியன்பரே!

  ReplyDelete
 8. என்றன் நீண்ட நாள் ஏக்கம் தீர்த்த பெருமகனார் நபிதாஸ் அவர்கட்கு என் நயமான நன்றிகள்! ஆம். உங்களின் பாராட்டு என்னும் தாலாட்டு இதுகாறும் என் கவிதைகள் என்னும் குழந்தைகட்குக் கிட்டவில்லையே என்பதே அந்த ஏக்கம்!

  உங்களின் இப்பாராட்டு முத்தத்தால்; அதன் ஒசை நயமென்னும் சத்தத்தால் என் கவிக்குழந்தையும் சிரித்திடும் அழகைக் காண்கிறேன்!

  கவிஞர்கள் என்னும் தாய்மார்கள் கவிதை என்னும் குழந்தையைப் பிரசவிக்கப் படும் கஷ்டங்களின் வலிகள் எல்லாம், அக்குழந்தையை “சமூக விழிப்புணர்வு பக்கங்கள்” என்னும் தொட்டிலில் இட்ட உடன் கிட்டிடும் உங்களின் பாராட்டு முத்தங்களே அக்கவிக்குழந்தைக்குத் தாலாட்டு!

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers