.

Pages

Wednesday, June 5, 2013

மனைவியாகப்பட்டவளுக்கு இடமுண்டா !?

இஸ்லாத்தை பொறுத்தவரை
அவள் ஆடவனின் விலா எலும்பு
இல்லத்தை பொறுத்தவரை
அவள்தான் விழா !? முதுகெலும்பு
திருமண பந்தத்திற்கு பின்
தன் பிறப்பிடத்தின் விலாசத்தையும்
தன் இருப்பிடத்தின் விலாசத்தையும்
மாற்றிக் கொள்கிறாள்
தம் பிள்ளைக்கு
இரத்தத்தை
பாலாய் புகட்டுகிறாள்
முத்தத்தை ?
பாசத்தால் பொழிகிறாள் !
தம் குடும்பத்தின்
உணவுப்பசி,
பிள்ளையின்,
அறிவுப்பசி,
கணவனின்,
உடற்பசி,
அத்துனையும் போக்கிடும்
அக்ஷயபாத்திரம் அவள் !
தமிழரின் பண்பாட்டில்
இல்லத்து அரசி அவளே
கணவனின் வெற்றிக்கு
பின்னாலும் அவளே
பதின் பருவ ஆடவரின்
தறிகெட்ட வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைத்திட
கால்கட்டு அவசியம் என்பர்
நம் பெரியோர்கள் ?
அது மனைவியாகப்பட்டவளின்
மாண்பு தெரிந்துதான் !
மனையை போற்றுபவள் = மனைவி
துணையாய் நிற்பவள் = துணைவி
இல்லத்தை ஆள்பவள் = இல்லத்தரசி
அவள்தான் பெண் ஜாதி = பொஞ்சாதி
நம் வலைதளத்து கவிஞர்களை
கவிபாட வைப்பதும் அவளே !
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரமென்றால் ?
கணவனின் வரமும், வரபிரசாதமும்
அவளாகிறாள் !
தாரமாய்
தாயாய்
தள்ளாடும் வயதில்
பாட்டியாய்
இல்லத்தின்
அரசியாய்
என்றென்றும் நீங்கா
இடமுண்டு
மனைவியாகப்பட்டவளுக்கு
மு.செ.மு.சபீர் அஹமது

28 comments:

 1. பதிவுக்கு நன்றி.

  மனைவி.
  இப்பொருளை கருவாக வைத்துக்கொண்டு ஒரு கவிதை, அருமையிலும் அருமை.

  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று எழுதின கவிஞர், கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று ஏன் எழுதவில்லை?

  எப்பேர்பட்ட கணவனையும் நேரான வழிக்கு கொண்டு வருபவள் மனைவியாச்சே அதனால்தானோ!

  தலையணை மந்திரம் போடாமல் இருந்தால் சரி, மனைவிக்கு நூற்றுக்கு ஆயிரம் மதிப்பெண் கொடுக்கலாம்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 2. மனைவியின் மகத்துவத்தை கவிதையாக தொகுத்த விதம் அருமை !

  என்ன இந்த வாரம் முழுவதும் மனைவி புராணாம !? இருக்கே !? :)

  விஷேசம் ஏதும் உண்டா !? :)

  ReplyDelete
  Replies
  1. என்னது.
   இந்த வாரம் மனைவிகள் வாரமா?
   அப்புறம் என்ன?
   சரியான விசேஷம் என்று சொல்லுங்க.

   பள்ளிகள் திறக்க இன்னும் சில தினங்களே உள்ளன, பெற்றோர்கள் படு உஷாராக இருக்க வேண்டும்.

   Delete
  2. K.M.A.J...அவர்களே ..

   உறவுகள் பற்றி எழுத உள்ளேன் .

   அவசியம் கணவனின் சிறப்பை எழுதுகிறேன்

   Delete
  3. ஓ அப்படியா, ரொம்ப சந்தோசம்.
   கணவர்களைப் பற்றியா?
   பார்த்து எழுதுங்கோ, அப்புறம் எனக்கு தலைக்கனம் வந்திடப்போகுது.

   Delete
 3. // மனையை போற்றுபவள் = மனைவி
  துணையாய் நிற்பவள் = துணைவி
  இல்லத்தை ஆள்பவள் = இல்லத்தரசி
  அவள்தான் பெண் ஜாதி = பொஞ்சாதி //

  ஆஹா ! ஈக்கொல்ட்டு போட்ட விதம் அருமை !

  ReplyDelete
 4. // நம் வலைதளத்து கவிஞர்களை
  கவிபாட வைப்பதும் அவளே !//

  கவிபாட மட்டுமல்ல எழுத அனுமதிப்பதும் அவுங்களே :)

  ReplyDelete
 5. எல்லாம் அவங்க செயல்...! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. இன்றென்ன மனைவியர் தினமா?

  ReplyDelete
  Replies
  1. இன்று மட்டுமல்ல என்றுமே மனைவியர் தினம்தான் :)

   Delete
  2. மனைவி

   அவள் துணைவி இளமையில்

   வயோதிகத்தில் தாயவள்

   ஒரு கவலம் உணவு உட்கொள்ளும் முன் என்னங்க

   சாப்பிட வாங்க என்று அழைக்கும் பாங்கு

   இன்னும் வயதான பின் மகள் கொடுக்கும்

   உணவு உட்கொள்ள முன் ஏம்மா..அப்பா சாப்பிட்டாரா

   என நா தளுதளுத்து கேட்கும் மனைவி

   போற்ற தக்கவல் தான் ...இன்று மணமானவர்கள்

   மனைவிக்கு பரிசளித்து இவ்வாக்கத்தை சிறப்பிபோம்

   Delete
  3. நன்பனே எனதாக்கத்தை நன்றாய் கவனித்து இருக்கின்றாய் உனது கருத்திலேயே அதன் தாக்கம் தெரிகிறது வாழ்த்தியதர்க்கு மகிழ்கிரேன் வாழ்க உன் மனை

   Delete
 7. கோ.மு.அ.ஜ அவர்களின் பாராட்டு,சமூக ஆர்வளர் சகோ. நிஜாம் அவர்கள்,தி.தனபாலன் அன்னன் அவர்கள் மூத்த சகோதரி ரஞ்சனி நாராயனன் அவர்கள் ஆகியோர்களது பாராட்டுக்களும் உர்ச்சாகம் தருகின்றது

  ReplyDelete
 8. தொழிலதிபர் கவிஞரானது எப்போது..? அசத்திவிட்டீர்கள் சகோதரர் சபீர் அவர்களே.!

  மனைவியைப்பற்றிய விளக்கம் அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் போன்றோரின் கவிபடிக்க. வந்த விணை! வாழ்த்தியமைக்கு மகிழ்கிரேண்.

   Delete
 9. இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படையில்

  மனைவி கணவனின் விலா எலும்பு அவள் ...,

  இல்லத்தில் ...,"விழா.."அவள் ..,

  என்ன ..உணர்வு பூர்வமான ,உள்ளன்பான வார்த்தை

  பாராட்டுக்கள் ..ஒரு நபி மொழியை பதிய விரும்புகிறேன் ...

  யார் ஒருவன் ..மனைவிக்கு நல்லவனாக இல்லையோ

  பிறருக்கு நல்லவனாக இருக்க முடியாது ..

  நண்பா ..நல்ல சிந்தனை ..

  ரூம் போட்டு சிந்திப்பியோ ..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. நல்ல சிந்தனைகள் . பாராட்டுக்கள்.

  ஒரே ஒரு கேள்வி

  //திருமண பந்தத்திற்கு பின்
  தன் பிறப்பிடத்தின் விலாசத்தையும்
  தன் இருப்பிடத்தின் விலாசத்தையும்
  மாற்றிக் கொள்கிறாள்// ஆமாம் பொதுவாகத்தானே . நம் ஊரில் இல்லையே.

  ReplyDelete
 11. அருமையான பதிவு எல்லாம் அவங்க தான்.ஒண்ணுமே சொல்ல முடியலே. நமக்கு இடமுண்டா?

  ReplyDelete
  Replies
  1. நமக்கு இடமுண்டா என்பதை இங்கே ஒரு கவிதாயினிதான் சொல்லவேண்டும்

   Delete
 12. அவள் மெல்ல தான்

  நடந்தால் ஆனாலும்

  வலித்தது என் இதயம் ஏன் என்றால் அவள் சுமந்தது என் வாரிசை அல்லவா! மனைவி என்பதை வீட பெண்மையை மதிக்கிறேன் ...

  அருமையான பதிவு, தொடர வாழ்த்துக்கள்..........  ReplyDelete
 13. இ.அன்சாரி காக்காவிற்கு எனதுபதில் நாம் அதிரையராய் இருந்தாலும் இஸ்லாமிய மார்க்கம் என்ன சொல்கிறதோ அவைதான் நம் கருத்தாகவும் இருக்கவேணும்!சரிதானே?
  சகோ.ஹபீப்,கனடா மான் இருவருக்கும் எனது சலாம் ஆண்களை பொறுத்தவரை பெண்னை போற்றுபவர்தாம்

  ReplyDelete
 14. தம்பி சபீர் அவர்களுக்கு நீங்கள் சொல்வது மிகச்சரி. நான் சொல்ல வருவது அவற்றைக் கடைப்பிடித்தலில் உள்ள குறைபாடுகளைப் பற்றி. இனியாவது அதன்படி நடக்க அல்லாஹ் துணை இருப்பானாக!

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers