.

Pages

Saturday, July 6, 2013

[ 2 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' !

தொலை தொடர்பு வசதி குறைந்த காலமது. அதே போன்று பயண காலமும் அதிகம் தேவைப்பட்ட காலமது... அந்த சூழலில் சென்னையிலிருந்து மூன்று நாள் பயணம் மேற்கொண்டு பம்பாய் சென்ற நம்மவர். அரபு நாட்டு பயண கனவுடன் காத்திருக்கும் நாட்கள்... பதட்டமான நாட்கள்,  காரணம் போலி ஏஜண்டுகளின் அட்டகாசம் நிறைந்த காலமது எழுபதுகளில் அரபு நாட்டுக்கு  ஆட்கள் தேவை அதிகமாக  தேவைப்பட்ட காலமாக இருந்தமையால் விசா கிடைக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதில்லை. நல்ல கம்பெனிகள் பயணம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து நலமாய் அழைத்துச்செல்வர்.

அரபு நாடு சென்ற நம்மவர்களின் வாழ்கையில் மொழி பிரச்சனை மூன்று மாதம் வரை நீடிக்கும். அது போன்ற சந்தர்ப்பங்களில் நிகழந்த நிகழ்வுகள் நகைச்சுவையான நிகழ்வுகள் நண்பர் மு.செ.மு. சபீர் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட நிகழ்வு போன்றது .மொழி தெரியாமல் அரபி இடும் கட்டளைக்கு எதிர்மறையான செயல்களை செய்து அரபியின் கோபத்திற்கு ஆளாகும் நிலை தவறு மொழி பிரச்சனையால் என்பதை உணர்ந்து இரு மொழி தெரிந்த ஊழியரால் வழி நடத்தபடுவதும் உண்டு.

தரமான, ஊட்டமான உணவு, பழவகைகள் என எல்லாம் மிக மலிவாக கிடைத்த சந்தோசத்தில் ஒருபுறம், கை நிறைய சம்பளம் மறுபுறம் இவைகளால் குடும்பத்தை பிரிந்த சோகம் குறைந்திருக்கும்.

அந்த காலகட்டம் தொலைப்பேசி மூலம் பேசுவது என்பது இயலாத காரியம். கடிதம்  சென்றடைய இரண்டு வாரம் ஆகும். வீட்டிலிருந்து  வரும்  கடிதம் உழைத்து வரும் நம்மவருக்கு ஒத்தடம் கொடுப்பதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சூழலை சுட்டி காட்டும் கடிதங்கள் ஒருவர் கடிதத்தை படித்து கொண்டிருக்கும்போதே அழுவார். மற்றவரோ  கடிதம் கண்டு சிரிப்பார். இப்படி பலதரப்பட்ட மனநிலை காணப்படும் சூழல் வேறு சிலரோ வேலை பார்த்து விட்டு வந்த மனச்சோர்வில் அயர்ந்து தூங்கி  விட்டு விடிந்து கடிதம் படிப்போம் என தலையைனைஅடியில் வைத்து நிதானமாக படிப்பவரும் உண்டு.

ஒன்றாய் உறங்கி ஒன்றாய் உணவுண்டு ஒரு  குடும்பமாய் வாழும் சூழலில் மாதங்கள்   நாட்களாய் ..வருடங்கள்  மாதங்களை போல மிக வேகமாக கரைந்து ஓடும்... [ ஆனால் தலைவனை பிரிந்து வாடும் மனைவிக்கு ஒரு நாள் வருடமாக காட்சி அளிக்கும் அது பற்றி வரும் வாரங்களில் காண்போம் ] சம்பளம்  கிடைத்த மறு நிமிடமே வங்கி மூலம் காசோலையாக மாற்றி ஊர் வந்து சேரும்.

பணம் கிடைத்தது என்ற செய்தி கிடைக்கும் வரை கடிதம் வரவை எதிர்பார்த்து காத்திருப்பர். இப்படி ஒரு வருடம் கழிந்து விடும் ஊர் நினைவு நம்மவரை தொற்றிகொள்ளும் ஊருக்கு பணம் அனுப்புவதை பகுதியாக குறைத்து கொண்டு பொருட்கள் சேர்க்க ஆரம்பிப்பார்கள்  அப்படி அவர்கள் சேர்க்கும் பொருட்கள் தனது பயணத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதை அறியாத அவர்கள் பிள்ளைகளின் விளையாட்டு பொருள் முதல் வயதான பாட்டிகளுக்கு தேவையான பொருள் வரை வாங்கி குவிப்பார்கள்.

தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக தங்குவதற்கு நகருக்கு வெளியே கேம்ப் எனப்படும் தொழிலாளிகளின் குடியிருப்பு இருக்கும். வேலை முடிந்து இருப்பிடம் மறுநாள் வேலை இப்படியே நம்மவரின் வாழ்க்கை நகர்ந்து செல்லும். வார விடுமுறையில்   தொழிலாளிகள் கடை வீதிகளுக்கு  சென்று தனக்கு தேவையான பொருளை வாங்க செல்வர். கடை வீதியில் உள்ள மலையாளிகள் மிக தந்திரமாக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள கேம்ப்லிருந்து வந்திருக்கிறார்கள் என்பதை பேச்சு வாக்கில் தெரிந்து கொண்டு அவர்களிடம்  பொருட்களை அதிகமான விலைக்கு விற்பார்கள் பாவம்  ரத்த பாடுபட்டு உழைத்து சேர்த்த பணத்தை விரயம் செய்கிறோம் என்று அறியாமல் அள்ளி கொடுத்து விட்டு வருவார்கள்.

இப்படியே இரண்டரை வருடம் கழிந்து விடும். ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விடுப்பு கேட்பார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று சில ஓநாய்கள் காத்திருக்கும், அதாவது மேனேஜர் என்றழைக்கப்படும் மலையாளிகள் பணம் பார்க்க சந்தர்ப்பத்திற்கு  இந்த அப்பாவிகளின் வேலைக்கு உலை வைக்கும் சதி தான் அது ! என்ன சதி !? அடுத்த வாரம் காண்போம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

18 comments:

 1. கட்டுரையில் நீங்கள் குறிப்பிடும் இனம் கூட இருந்தே குழிப்பறிப்பவர்கள்.

  நல்ல வேலை நான் பணி புரிந்த அலுவலகத்தில் ஒருவரும் இல்லை !

  மேலும் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயம் என்றால் அது ஒற்றுமைதான் தன் இனத்தை தூக்கி நிறுத்தப் பார்ப்பார்கள். இவை நம்மவரிடம் சற்றுக்குறைவாகவே காணப்படும்.

  ReplyDelete
  Replies
  1. தம்பி ...நிஜாம்

   நீங்கள் தப்பித்தீர்கள்

   Delete
 2. அன்றைய கடிதத்தொடர்புகள் குறிப்பாக புதிதாக திருமணம் ஆனவர்களின் கடித எதிர்பார்ப்புகள் கூடுதலாகவே காணப்படும். இன்றைய பொழுதில் நவீன தொலைத்தொடர்பு வசதியின் மூலம் இவை குறைந்து காணப்பட்டு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. கடிதம் ..என்ற சொல்

   மட்டுமே பயன்பாட்டில் உள்ளது

   ஈ மெயில் மூலம் கடித போக்குவரத்து நிகழும் காலத்தில்

   நாம் வாழ்கிறோம் .இது இளம் தலைமுறையினருக்கு

   ஒரு தகவல் தரும் பதிவே ...

   Delete
 3. அது ஒரு கனாக்காலம். நான் சவுதியில் இருந்த காலத்தை நினைவூட்டி விட்டீர்கள். ஏக்கத்தை மனதில் சுமந்து தூக்கத்தை கண்களில் சுமந்து வாழ்ந்த காலம். அயல் நாட்டு வாழ்க்கையை புரிய வைத்தகாலம். சுதந்திரப்பறவையின் சிறகை ஒடித்து ஒருவட்டத்திர்க்குள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட காலம். அன்று பழகிய நெருக்கமான என் நண்பரில் ஒருவர்தான் நமது விழிப்புணர்வுப்பக்கத்தில் வெள்ளியன்று கவி காவிவரும் அன்பிற்குரிய அன்புடன் புகாரி அவர்கள்.என்பதை இவ்வேளையில் நான் அறிமுகமாக்கிக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வரவேற்கிறேன் ..அதிரை மெய்சா அவர்களே

   Delete
 4. தகவலுக்கு நன்றி நான் பத்து வருடம் சவுதியில் இருந்து
  தற்போது திரும்ம்பி வந்தேன் நீங்கள் சொல்வது சரி

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோ சுடலை முத்து அவர்களை அன்புடன்

   வரவேற்கிறேன் ..தொடர்ந்து படியுங்கள் ..பல தகவல் தருகிறேன்

   Delete
 5. பதிவுக்கு நன்றி.

  நான் முதன் முதலில் சவூதிக்குதான் சென்றேன்.

  1982 பம்பாய், செம்பூர், கமலா லாட்ஜ், முஹம்மத் அலி சௌக், ஏஜென்ட் கேம் கார்டன், 21 நாட்கள், விசா, இரவு எட்டுமணி, பம்பாய் ஏர்போட், சவூதி ஏர்லைன்ஸ், சவூதி ரியாத் ஏர்போட் இந்திய நேரம் இரவு பதினோரு மணி, வெளியில் கம்பெனி கார், ரியாத்தில் நசீம் என்ற இடம், மறுநாள் வெள்ளிகிழமை, ஜும்மா தொழுகை, பல மொழி மக்கள் அதில் நம் தமிழ மக்கள், சனிக்கிழமை வேலை காலை ஒன்பது மணிக்கு.

  இப்படியாக 1994 வரை ஒரே கம்பனி, ஒரே ரூம், ஒரே கட்டில், ஒரே பாத் ரூம், ஒரே சமையலறை, பல நண்பர்கள், பல அனுபவங்கள், பல மொழிகள், வருடம் ஒன்றரை மாதம் வெகேஷன், படு ஜாலியாக நாட்களும், மாதங்களும், வருடங்களும் உருண்டோடின. இது அன்று.

  இன்று பல தொல்லைகள், பல சுரண்டல்கள். சம்பளம் இல்லை, ஏமாற்று வேலை, சொன்னது ஒன்று நடப்பது வேறு. ச்சே. இதெல்லாம் வாழ்க்கையா? இது இன்று.

  ஆக மொத்தத்தில் அன்றும் இன்றும்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
  Replies
  1. நன்றாக தகவல்களை பரிமாறி கொண்டீர்கள்

   இன்னும் பல தகவல்களுடன் பின்னூட்டத்தில் வாருங்கள்

   காக்கா

   Delete
 6. பலரின் நினைவலைகளை தூண்டி விட்டீர் நண்பரே தமது அனுபவங்களும் அதில் உண்டோ
  இரண்டு வருடத்திற்கு மேல் தங்கிவிட்ட கணவனை மனைவியாகப்பட்டவள் தமது மகன் கடிதம் எழுதுவதுபோல் வாப்பா நீ எப்ப வருவே என்ற மழலை வார்த்தைகளை எழுதச்சொல்வாளே யாருக்காவக்து உண்டோ அப்படி அனுபவம் இருந்தாலும் இங்கே பகிரமாட்டீர்!ஹ ஹா ஹா
  மனைவியின் கடிதம் பார்த்து தூங்கி கொண்டிருந்த சிங்கம் தட்டி எழுப்பப்பட்டதுபோல் சிலர் மேலாளரிடம் சென்று ஏதாவது காரணம் சொல்லி விடுப்பு கேட்போமே நம் நிலை அந்தோ பரிதாபம்
  தும்கோ ஹிந்தி மாலும் என கேட்கும் இந்தியருக்கு அழகாய் பதில் சொல்வோம் மாளாது என்று

  ReplyDelete
  Replies
  1. ஒரு பதிவாளனுக்கு தகவல் மற்றும் அனுபவம் எல்லாம்

   கலந்த கலவைதான் ..மொத்தத்தில் வளைகுடா வாழ்க்கை

   நல்ல தகவல்களை அள்ளி தரும் ..பின்னூட்டத்தில்

   கலகலப்பை அள்ளித்தாருங்கள் அன்பு நண்பா

   Delete
 7. மிக அருமையான பகிர்வு,
  அமீரகமாவது பரவாயில்லை , சவுதியில் இங்கு ஏதாவது பிரச்சனை , அல்லது ஏதேனும் தகவல் தெரிவிக்கனும் என்றால் கடிதம் போட்டு சேர்ந்து , மறுகடிதம் பதில் வருவதற்குள் , வந்து சென்ற பிரச்சனைகள் மற்ற தகவல் எல்லாமே மறந்தே போய்விடும்.அவ்வளவு நாட்கள் ஆகும் கடிதம் போய் சேரவும் வந்து சேரவும்

  ஆனால் இப்ப வீட்டில் இருந்து கொண்டே ஆபிஸிலும் வேலை பார்க்கிறார்கள், ஸ்கைப் மூலம் ..

  //அந்த காலகட்டம் தொலைப்பேசி மூலம் பேசுவது என்பது இயலாத காரியம். கடிதம் சென்றடைய இரண்டு வாரம் ஆகும். வீட்டிலிருந்து வரும் கடிதம் உழைத்து வரும் நம்மவருக்கு ஒத்தடம் கொடுப்பதாக இருக்கும். //

  இப்ப எல்லாரும் கடிதம் எழுதுவதை மறந்து விட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. கடித பரிமாற்றம் முதல் ஸ்கைப் வரை அலசுவோம் ..

   துபாய் ,பஹரைன் ,சவூதி ,கத்தார் ,குவைத் ,ஓமன் போன்ற

   நாடுகளில் நடந்த நடப்புகளே வளைகுடா வாழ்க்கை ..

   தொடர்ந்து படியுங்கள்

   Delete
 8. வளைவான வாழ்வை நேராக்க
  வளைகுடா வாழ்வை நாம் ஏற்க
  தொலைவாகிப் போனது உறவும்
  தொலைந்தே போனது உணர்வும்!

  ReplyDelete
  Replies
  1. நமக்கு தக்க தருணத்தில் வளம் சேர்த்த வாழ்க்கை

   கவியால் கருத்துரைத்த கவியன்பரை வரவேற்கிறேன்

   Delete
 9. வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் வளமான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வளமான எழுத்துக்கு சொந்தக்காரர்

   அருமை காக்கா அவர்களின் கருத்து மகிழ்வை தருகிறது

   வரவேற்கிறேன்

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers