kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Saturday, July 20, 2013
[ 4 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ கப்பலுக்கு போன மச்சான் ]
ஒப்பந்தம் அடிப்படையில் சென்ற நம்மவர்கள் ஒப்பந்த காலம் முடியும் வரை அந்த கம்பெனியிலேயே வேலை செய்ய வேண்டும். சில கம்பெனிகளுக்கு தொடர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அது போன்ற தருணத்தில் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்கு தொடந்து வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மூன்று வருடத்திற்கு முன்பே ஊருக்கு செல்ல முடிவெடுத்து ஊர் சென்றவர்கள் ஐந்தாறு மாதம் பவனி வந்து பழைய நிலைமைக்கே திரும்பி வேலை இல்லாமல் கஷ்ட்டமான சூழலுக்கு தள்ளப்பட்டு அவதியுறும் நிலை வளைகுடாவில் தங்கி விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்து வரும் மற்றவர்களுக்கு தெரிய வரும். நான்கு ஐந்து ஆண்டு வரை விடுப்பு கேட்காமலேயே வேலை பார்த்து வருவர். இதனை கண்டும் காணமல் இருக்கும் இரக்கமற்ற நிர்வாகமும் உண்டு. சில நல்ல நிர்வாகமும் உண்டு.
வேலைக்கு சென்ற நேரங்களில் நல்ல அறிவிப்புடன் நிர்வாக அதிகாரிகள் வருவார்கள். ஊர் சென்று வர விமான டிக்கெட் மற்றும் விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் வழங்கி மகிழ்விப்பார்கள்.
ஊர் வந்து மீண்டும் வளைகுடா பயணம் மேற்கொள்ளும் இவர்களின் அனுபவம் நல்ல வழி காட்டுதலாக அமையும். ஊர் வந்து வளைகுடா பயணம் பற்றி விசாரிபவர்களுக்கு நல்ல தகவல்களை கொடுப்பார்கள் அதன் பிறகு முயற்சி செய்பபவர்கள் நல்லநிலை அடைந்தவர்களும் உண்டு.
ஓவ்வொரு அனுபவங்களுக்கு முன்னர் பல பரிட்சைகள் அதன் வெற்றி, தோல்விகளே ! வருங்கால சந்ததியினர்களுக்கு பாடம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மையால் உயிரிழப்பு ஏற்படும் நிகழவுகளும் உண்டு. தாய் மண்ணை பிரிந்து தன்சொந்தங்களுக்காக உழைக்க வந்த இடத்தில உயிரை இழந்த பரிதாப சம்பவங்களும் உண்டு.
கப்பலில் வேலை பார்க்கும் போது சரக்கு பெட்டகம் இறக்கும்போது சமிக்கைகள் புரியாது. பல டன் பாரமுள்ள சரக்கு பெட்டகம் விழுந்து நசுங்கியவர்களும் உண்டு. குளிரூட்டப்பட்டு பனிக்கட்டிகலாய் வரும் பெருட்கள் உள்ள பெட்டகங்களில் அடைபட்டு பனிக்கட்டியாய் மாண்டவர்களும் உண்டு. இதே போன்று வாகன விபத்தில் மாண்டவர்கள் பலபேர் !
கட்டிய கணவன் பல ஆண்டுகள் கழித்து பணம் காசுகளோடு வருவான் என்று காத்திருக்கும் பல பெண்கள் பரிதாபமாய் விதவையாய் வதங்கிய சரித்திரங்களும் உண்டு. கேலி கிண்டலால் வாழ்வை பறிகொடுத்த சம்பவங்களும் உண்டு. ஒவ்வொன்றாய் வரும் வாரங்களில் பார்போம்...
1975 லிருந்து 1980 வரை ஊடகங்கள் நவீனம் அடைந்திராத நிலை. நம்மவரின் வளைகுடா வாழ்கை பற்றி, கணவன் மனைவி பிரிவுகள் பற்றி வெளி உலகுக்கு காட்டிடவில்லை பத்திரிகைகள் கூட இதில் அதிகம் கவனம் செலுத்த வில்லை என்பது வேதனையான ஒன்று.
மூன்று மாதமே மணமான சூழலில் வளைகுடா பயணம் மேற்கொண்டு. இரண்டு மூன்று வருடம் பிரிந்து வாழும் தருவாயில் கணவன் மனைவிக்கிடையே கடிதமே வடிகால். இந்த சூழலை மைய்யப்படுத்தும் விதமாக பாடல்கள் வெளியாயின
அன்றைய சூழலில் மக்கள் இசை பதிவுகளை விரும்பி கேட்பார்கள் தொலை காட்சி, வீடியோ போன்றவை இல்லாத காலகட்டம் வானொலி, பதிவு நாடா எனப்படும் டேப் ரிக்கார்டர் மூலம் பாடல்கள் கேட்பார்கள் ..இஸ்லாமிய பாடல்கள் பாடும் பாடர்களில் நாகூர் ஹனீபா, காயல் சேக்முகமது இருவரும் பிரபலம். வளைகுடா வாழ்க்கை பற்றி சேக் முகம்மது அவர்கள் பாடிய பாடலைக் கேட்டுப் பாருங்கள் தலைவன் தலைவி பிரிவின் வலி தெரியும்...

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
படைப்பு அருமையாகச் செல்கிறது....
ReplyDeleteஇறுதியில் இவற்றை புத்தகமாக வெளியிடுவோம் - நல்ல வரவேற்பு கிட்டும்
இன்ஷா அல்லாஹ்
Deleteதிருமணத்தை முடித்துவிட்டு பணிக்காக உடனே வளைகுடா நாட்டிற்கு செல்லும் நம்மவர்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது
ReplyDeleteகணவன் - மனைவி பிரிவு மற்றும் அதன் வலியை எடுத்துச்சொன்ன விதம் அருமை !
ஆம் ..
Deleteநாம்மவரின் தியாகம் ..
விரயம் ஆவதுதான் வேதனை
//அன்றைய சூழலில் மக்கள் இசை பதிவுகளை விரும்பி கேட்பார்கள் தொலை காட்சி, வீடியோ போன்றவை இல்லாத காலகட்டம் வானொலி, பதிவு நாடா எனப்படும் டேப் ரிக்கார்டர் மூலம் பாடல்கள் கேட்பார்கள் ..இஸ்லாமிய பாடல்கள் பாடும் பாடர்களில் நாகூர் ஹனீபா, காயல் சேக்முகமது இருவரும் பிரபலம். வளைகுடா வாழ்க்கை பற்றி சேக் முகம்மது அவர்கள் பாடிய பாடலைக் கேட்டுப் பாருங்கள் தலைவன் தலைவி பிரிவின் வலி தெரியும்...//
ReplyDeleteஅடியேனும் அரேபியாவின் அல்கோபாரில் இருந்து கொண்டு தலையணை நனைய நனைய கண்ணீருடன் பாடித் தூக்கமில்லா இரவுகளில் ஏக்கம் மட்டும் நிற்கும் பகல்களில் பாடிக் கழித்த ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.
அந்த “|கேஸட்” என்னும் நாடாக்களைப் பற்றி இப்பொழுது என்றன நினைவு நாடாக்களைச் சுழற்ற வைத்து மீண்டும் அழ வைத்த உங்களின் ஆக்கத்தின் திறமைக்கு ஒரு ஷொட்டு!
ஜசாகல்லாஹ் ஹைரன் ..காக்கா
Deleteஆரம்ப காலத்தில் வளைகுடா செல்ல கஷ்டப்பட்டதையும் ,சென்ற பின் அங்கு நமது மனம் பட்ட கஷ்டங்களையும் மீண்டும் நினைவூட்டி விட்டீர்கள்.
ReplyDeleteRAMADHAN KAREEM
இன்னும் இருக்கிறது ..சகோ
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
வளைகுடா போய் முதுகெல்லாம் வளைந்து போனவர்கள் அநேகம் உண்டு. அந்த வளைந்து போன முதுகு பணத்தை பார்த்ததும் கொஞ்சம் நிமிர முயற்சிக்க அந்த நேரம்பார்த்து பணம் எல்லாம் சிலவு ஆகிவிடவே மீண்டும் முதுகு வளைந்து விட்டதாம்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நன்றாக கூறினீர்கள் காக்கா
Deleteவருகைக்கு நன்றி
ReplyDeleteரமலான் வாழ்த்துக்கள்
இன்று ஒரு தொலை பேசி அழைப்பு ..
ReplyDeleteஅமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருந்தது
சகோ ஹனீப் அழைத்திருந்தார் ..பழைய நினைவுகளை கண் முன்
கொண்டு வந்து விட்டீர்கள் ..அக்காலத்தில் மனைவி மார்கள்
பிரிவிலும் கணவனுக்காக பிரார்த்தனை செய்த வண்ணம்
இருப்பார்கள்..அது அந்த காலம் ...இன்னும் எழுதுங்கள் என்று
வாழ்த்துரைத்தார் .நன்றி ஹனீப் காக்கா