kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Tuesday, July 2, 2013
நம்மால் முடியாதா ?
முயற்சி இது ஒரு வார்த்தையைக் கொண்ட தலைப்பு என்றாலும் முயற்சியை வைத்து பல வாக்கியங்களை அமைத்துக் கொள்ளலாம். அவற்றில் சில, விடா முயற்சி, தளராத முயற்சி, இடைவிடா முயற்சி, அந்த முயற்சி, இந்த முயற்சி, அதுக்கு முயற்சி, இதுக்கு முயற்சி, அப்படி முயற்சி, இப்படி முயற்சி, இன்னும் அனேக முயற்சிகள் இருக்கின்றன.
தளராத முயற்சி வெற்றியைத் தரும். நாம் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் தளராது முயற்சி வேண்டும். ஆக்கம், ஊக்கம், எல்லாம் இருந்தும் முயற்சி இல்லாவிட்டால் எந்தக் காரியமும் வெற்றி பெறுவதில்லை. மிகச் சிறந்த சாதனையாளர்களின் பட்டியலை எடுத்துப்பாருங்கள். அவர்கள் அனைவருமே தளராத முயற்சியின் மூலமே வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு:
மின்சார பல்பு அல்லது மின்சார இயந்திரம் ஏதேனும் இயங்க வேண்டும் என்றால் மின்சாரம் வேண்டும், அப்படியே மின்சாரமும் கிடைத்துவிட்டால் மட்டும் போதாது, வோல்ட் என்று சொல்லப்படும் மின்னோட்டம், வாட்ஸ் என்று சொல்லப்படும் மின்திறன், ஆம்பியர் என்று சொல்லப்படும் மின்வலிமை. இம்மூன்றும் ஒருங்கே இருந்தால்தான் 100-வாட்ஸ் பல்பு கூட தன் ஒளியை சரியாகத் தரும், ஒரு HP திறன் கொண்ட மின் மோட்டார் கூட தன் சரியான வேகத்தில் இயக்கும்.
தன் சுய தேவைகளுக்கு முயற்சி செய்து வெற்றியை பெற்றுக் கொள்ளலாம், பொது சேவைகளிலும் முயற்சி செய்து வெற்றியை பெற்றுக் கொள்ளலாம், தனியாக முயற்சி செய்தும் வெற்றியை பெற்றுக் கொள்ளலாம், கூட்டாக முயற்சி செய்தும் வெற்றியை பெற்றுக் கொள்ளலாம், தன்னுடைய முயற்சியில் அடுத்தவர்கள் வெற்றி பெறலாம், அடுத்தவர்கள் முயற்சியில் நாம் வெற்றி பெறலாம்..
இப்படி பல வகைகளில் நாம் வெற்றியை பெறமுடியும், மாணவச் செல்வங்களுக்கு நல்லதை செய்ய நாம் முயற்சியோடு அவர்களையும் முயற்சிக்க தூண்டும்போது அவர்கள் வெற்றி அடைகிறார்கள், சமூகத்தில் குடி கொண்டிருக்கும் பல அவல நிலைகளை விரட்ட நம் எல்லோரும் ஓன்று கூடி முயற்சிக்கும்போது சமூகம் வெற்றி அடைகிறது.
இன்று, நம் மத்தியில் எத்தனையோ காரியங்கள் வெற்றி அடைய நல்ல நல்ல வழிகள் இருந்தும் வெற்றி அடையாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
ஆக்கம் ஊக்கம் எல்லாம் இருந்தும் முறையான முயற்சி இல்லை, தோல்விகள் வருவது சகஜம் ஆனாலும் விடா முயற்சி வேண்டும். சமையல் செய்வதற்கு நெருப்பு வேணும், என்ன செய்வோம்? முதலில் தீயை பற்றவைக்க தீக்குச்சியை எடுத்து பற்றவைக்க முயற்சிப்போம், சில சமயம் ஒரு குச்சியில் தீயானது பற்றிக்கொள்ளும், சில சமயம் பற்றாது, மீண்டும் ஒரு தீக்குச்சியை எடுத்து முயற்சிப்போம். தீக்குச்சி பற்றவில்லையே என்று விட்டு விடுவோமா ? எந்த ஒரு காரியமும் முயற்சி இல்லாமல் வெற்றி அடைவதில்லை.
உங்களால் முடியும் என்றால், அவர்களால் முடியும் என்றால், நம்மால் முடியாதா ?

முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்.
'மனித உரிமை ஆர்வலர்'
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Subscribe to:
Post Comments (Atom)
எளிமையான விளக்கத்துடன் நல்ல ஆக்கம்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி. அய்யா.
Deleteஎன்ன ஒரு தத்துவத்தை சுலபமான நடையோடு சிறப்பாய் தந்துள்ளீர் வருகின்ற ரமலானை நல்ல முயர்ச்சியோடு சிறப்பாய் வணங்கிட வாழ்த்துகிறேன் அன்போடு
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி தம்பி.
Deleteதன்னம்பிக்கை வரவழைக்கின்ற ஆக்கம் !
ReplyDeleteநம்மால் முடியும் என்று சபதம் ஏற்போம் !
நம்பிக்கை தரும் ஆக்கம்
தொடர வாழ்த்துக்கள்....
உங்கள் கருத்துக்கு நன்றி தம்பி.
Deleteமுடியும் என்ற உந்தல்;
ReplyDeleteமுயற்சிக்கு வரவேற்புப் பந்தல்!
ஊக்கம் தரும் ஆக்கம் படைத்தளித்த மச்சானுக்கு உளம்நிறைவான நன்றிகள்!
உங்கள் கருத்துக்கு நன்றி மச்சான்.
Delete''அதென்ன தன்னம்பிக்கை.!'' எனும் கட்டுரை முன்பு நான் பதிந்திருந்தேன். அதற்க்கு ஊட்டச்சத்தாக முயற்ச்சியை தந்து முயற்ச்சித்துள்ளார். ஜமால் காக்கா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இன்னும் முயற்ச்சியுங்கள். நிறைய சாதிக்கலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி சகோ மெய்சா அவர்களே.
ReplyDelete