.

Pages

Monday, July 1, 2013

மறைக்க முற்படும் இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்கள் !?

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள் என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது 20/12/1975 அன்று வெளிவந்தது. இதைப் படிக்க நேர்ந்த பிறகு, முஸ்லிம்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்று பல இணையதளங்களை தேடிப்பார்த்து படித்த போது பல வரலாற்று உண்மைகள் புலப்பட்டன. அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பியே இந்தப் பதிவு.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம் . வரலாற்றைப்  படிங்கள் தெரியாதவர்களுக்கு தெரியப் படுத்துங்கள்  பெருமையோடு! இதில் பல கண்ணீர் காவியங்கள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்கள் ஏதோ ஒரு தலைச்சுமை போல ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாள்கின்ற அவலம் ஒருபுறம் ; சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் மறுபுறம்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூ­த்து தந்தவர்கள் ஆதவனை கரங் கொண்டு மறைத்து விடலாம் என்று நினைக்கலாம், ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.

(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.

பேரரசர் பகதூர் ஷா:
சூரியனே எங்களின் ஆட்சிக்குட்பட்ட பரப்பில் மறைவதில்லை என்ற இறுமாப்பு கொண்ட ஏகாதிபத்திய ஆங்கில ஆட்சியை அகற்ற நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் 1857 –ள் மொகலாய அரசின் கடைசிப் பேரரசர் பகதூர்ஷா தலைமையில் நடைபெற்ற போர்தான். இந்தப் போர்  ஆங்கிலேயரின் குரல்வளையை நெறித்த நேரம் மன்னர் பகதூர்ஷாவுக்கு வயது எண்பத்தி இரண்டு. மன்னர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹால் மாளிகையில் சிறைவைக்கப் பட்டார்.

ஒருநாள் காலை உணவு என்ற பெயரில் தினியால் மூடப்பட்ட ஒரு பெரிய தட்டு மன்னர் பகதூர்ஷாவின் முன்னாள் கொண்டு வரப்பட்டது. அதைக் கொண்டுவந்த மேஜர் ஹட்சன் உடைய முகத்தில் ஒரு விஷச்சிரிப்பு. துணியை அகற்றிப் பார்க்கிறார் பகதூர்ஷா. அவரது இரண்டு மகன்களான மிர்ஜாமொஹல் மற்றும் சிலுறு சுல்தான் ஆகிய இருவரின் தலைகள் அந்தத் தட்டில் இருந்தன. இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தன அந்த வாரிசுப்  பிள்ளைகளின் தலைகள்.  இதைப் பார்த்த மன்னர் கலங்காமல் தைமூர் வம்சத்தின் தோன்றல்கள் தங்களின் புனிதத்தை இறந்து காட்டி உயிர் துறந்தும் நிரூபிப்பார்கள் என்று சொன்னார். அரசர்கள் அழுவதில்லை.

தாய்மண்ணில் சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என்று எண்ணிய மன்னர் பகதூர்ஷா இறந்தபின் தனது தாய்மண்ணில் அடக்கம் ஆகும் பாக்கியம் கிடைக்காது என்று நினைத்த பகதூர்ஷா இறந்த பின் தனது சமாதியில் தூவுவதற்கு ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளிக் கொண்ட பின்  ரங்கூனுக்கு நாடு கடத்தப் பட்டார். அங்கேயே பத்து வருடங்களுக்குப் பிறகு இறைவனடி சேர்ந்தார்.  

மாவீரன் திப்பு சுல்தான்:
''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிஞ்சமிருக்க அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் 'இது ஒரு கற்பனைக் கதை' என்று தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்?அப்படியானால் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் திப்பு சுல்தான் உடைய அரண்மனையின் திடலில் திப்பு சுல்தானின் உடல் கண்டெடுக்கப் பட்ட இடம் என்று எழுதிவைத்திருப்பது வரலாற்று அயோக்கியத்தனத்தின் அடையாளம் அல்லவா ?

பேகம் ஹஜ்ரத் மஹல்:
டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய் ! இதை எப்படி மறந்தார்கள் ? இல்லை மறைத்து விட்டனர்.

அஸ்வ குல்லா கான்:
பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் சேர்த்து தூக்கி­டப்பட்ட மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்து விட்டார்கள் இல்லை மறைத்தது விட்டார்கள்

வேலூர் சிப்பாய்க் கலகம்:
ஒரு சுதந்திரத்துக்கான முதல்  போராட்டத்தைக் கூட முஸ்லிம்கள் தொடர்புடையதால்  செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்கிறார்கள். இந்தப் பாவிகள்  1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களாவார்கள். இந்த தியாகத்தைக் கூட  மறந்துவிட்டு வரலாற்றுப் பாடங்களில் இரண்டு மார்க் கேள்விக்கு பதிலாகவே  இந்த சம்பவம் சித்தரிக்கப் படுகிறது.

மாவீரன் கான் சாஹிப்:
மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம் ! அப்படியாவது அந்த படம் வெளியே வந்ததா ? இல்லை . வரவே வராது.  விலை போகும் நடிகர்கள் மருதனாயகத்தை மூட்டை கட்டி இராமேஸ்வரம் கடலில் வீசிவிட்டு வினை அறுக்க விஸ்வரூபம் எடுக்கும் நிலைக்கு மாறிவிட்டார்கள். பிரிட்டிஷ் ராணியைக் கொண்டு வந்து போட்ட பூஜை சில கோடிகளை சுருட்டவே பயன்பட்டது.

மாப்பிள்ளைமார்கள் போராட்டம்:
1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டார்களே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறக்க முடியும்?

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19 பேரில் 10 முஸ்லிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன் ?

அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அணாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்கள் ; வேண்டும் என்றே மறைத்துவிட்டார்கள் .

காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்

அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்லிம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே !

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி  என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)

2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)

3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)

4.முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)

5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை 
வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)

6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)

7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)

8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)

9. அப்துல் ஹமீது

10. மௌலானா அப்துல் காதர்

1973 ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் விபரம் வருமாறு:

பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம்
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரகப்பேட்டை தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்

மௌலானா ஹஜ்ரத் மொஹானி மற்றும் அபித் அலி மற்றும் இன்னும் எவ்வளவு முஸ்லிம் போராளிகள் சஹித் ஆகினார்கள்

மறந்து விட்டார்கள்... மறைத்து விட்டார்கள்...

உண்மையே சொல்லுவோம் உறக்க !  இதை எவராலும் மறுக்க முடியாது !

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

29 comments:

 1. இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளைப் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி !

  மறைக்கப்படுவது, மறந்துவிடுவது, மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.

  ReplyDelete
 2. தகவலுக்காக :
  தஞ்சை மாவட்டம் அதிரையைச் சார்ந்த தியாகிகள் “பெரிய மின்னார் “ மர்ஹூம் ஜனாப் மு. முகம்மது ஷரிப், மர்ஹூம் ஜனாப் செய்யது முகம்மது, மர்ஹூம் S.S. இப்றாஹீம் மற்றும் அப்துல் ஹமீத் ஆகியோர்களும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள்.

  இதுபோன்ற எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளனர். அன்னார்கள் அனைவரும் வரலாற்றில் பதியப்பட வேண்டும்.

  ReplyDelete
 3. மௌலானா அபுல்கலாம் ஆசாத் பெயரை அவர்களும் மறந்து விட்டார்கள்; நீங்களும் எழுத மறந்து விட்டீர்களே?

  தன் இயற்பெயரான முஹியிதீன் என்பதை விட தான் சுதந்திரத்திற்காகப் பேசிய உரைகளால் மக்களால், “ அபு அல் கலாம் ஆசாத்” (சுதந்திர பேச்சின் தந்தை) என்று அடைமொழியால் அன்பொழுக அழைக்கப் பெற்று அதுவே நிரந்தரப் பெயராகும் வண்ணம் அமையப்பெற்ற ஒப்பற்ற தலைவர் ஆனார்கள்: அன்னாரின் பெயரை எனக்கும் அளிக்கப் பெற்றதாற்றானோ, தமியேனுக்கும் “நாட்டுப்பற்று” மிகந்துள்ளதை உணர்கிறேன்!

  ReplyDelete
 4. அந்நிய நாட்டிலிருந்து வந்த இஸ்லாம் மன்னர்(திப்பு மாற்ற பிற) எந்த உரிமையில் அன்னியர்களை எதிர்த்து போராடினார்கள்?அவர்கள் அடித கொள்ளையை வேறு ஒருத்தன் பங்கு போட்டதால?அந்த முஸ்லிம் களுக்கும் இப்பொழுது நாட்டில் இருக்கும் நம் மண்ணின் முஸ்லிம் களுக்கும் என்ன ரத்த சம்பந்தத்தில் உறவுகளை நிலை நாட்டி கொள்ள
  முயற்சி வேண்டியிருக்கிறது.மார்க்கத்தை,மதமாக பார்த்து,இன்று எல்லாவற்றிலும் அந்நியப்பட்டு நாங்கள் எல்லாம் ஒரிஜினல் முஸ்லிம்கள் என்று ஒரு பிரிவு மற்ற முஸ்லிம்களிடம் பறை சாடிகொல்கிறது?முதலில் மனிதனகாவும்,இரண்டாவது இம்மண்ணின் மைந்தனாகவும் உணர்ந்து கொண்டு,எந்த மதத்தையும்,மார்க்கத்தையும் பின்பற்றுவதே உண்மையான நிலை.இதில் நான் இந்த மதம்,எங்களை பெருமைபடுதுங்கள் என்ற கேட்பது முதல் இரண்டு நிலைகளையும் மறந்தவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த கட்டுரையின் நோக்கம் ...

   இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர் மீதும் காழ்ப்புணர்வோடு

   நடந்து கொள்ளும் நம் நாட்டில் ..இது போன்ற வரலாற்று

   சுவடுகள் மறைக்க பட்டதால் ஏற்பட்டதே ...

   இக்கட்டுரையில் குறிப்ப்ட்டுள்ள சம்பவங்கள் ...தியாகிகளின்

   பெயர் நினைவு கூறும்போது ..அந்த சமூகத்தின் மீது ..

   அந்த தியாகிகள் மீது நல்லெண்ணம் ஏற்படும்

   எனவே நல்ல நோக்கத்திற்காக உயிர் நீத்த தியாகிகளை

   போற்றுவோம் ...நல்ல கட்டுரை அனைத்து தரப்பும்

   பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது ..ஜசாகல்லாஹ் ஹைரன் காக்கா

   Delete
  2. @அதிரை.மெய்சா,நன்றி,அதை கட்டுரையின் நோக்கில் உணரமுடியவில்லை.என்னுடைய,கருது,இங்கே எவருடன் பங்களிப்பையும்,மறுபதர்காகனது இல்லை.இன்று,தமிழகத்தில்,தனி ஒவ்வொரு மனிதனும்,மதத்தின் பால்,வேற்று மதத்தினரை வேருபடுதவில்லை.ஆனால் சமூக கட்டமைப்பில்,வருகின்ற பொழுது,மதம் என்ற போர்வை,மனிதனை,பிரிக்கின்றன.நாம் எலோரும் ஒரு தேசிய இனம் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.ஆனால் அந்நிய நாடு அரசர்கள்,இங்கு செய்த அநியாயங்களை,நம் மண்ணின் அரசர்கள் செய்த அக்கிரமங்களை,நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.அவர் எந்த மதத்தை பின்பரியவர்கள் என்று நமக்கு இரண்டாம் பட்சம் தான்.தமிழகத்தில்,இன்று வரை,சங்க பரிவார்களும்,ஆர் .எஸ்.எஸ்.உம் கால ஊன்ற முடியாததற்கு காரணம் இங்கு உள்ள சகோதரத்துவம் தான்.திருக்குறளில் சொல்லாத எதையும் இந்த உலகின் எந்த மதங்களும் புதிதாக சொல்லவில்லை.என்னை பொருத்தவரை,நம்பிக்கை ஒருவரி தனி சுதந்திரம்,ஆனால்,பெரியாரின் கருத்துக்கள் இன்றும் உண்மை,மதம் மனிதனை மிருகமாக்கும்.இன்று இம்மண்ணில் சிந்தப்படும் ரத்தம் மதத்தினால் மட்டுமே.அப்படியென்றால், நாம் ஏன் அதை கொஞ்சம் தள்ளி வைக்ககொடது?எனக்கு எம்மதமும் சம்மதமில்லை,இங்கே மணித ரத்தம்,கடவுள்,மதத்தின் பெயரால் சிந்தபடுவது நிற்கும்வரை.என்னுடைய நோக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்பதை நபுகிரேன்,தொடர்ச்சியாக இந்த வலைப்பூவை படித்து வந்திருக்கிறேன்,இனிமேலும்.இங்கே வேற சில நண்பர்களும் தவறான புரிதல்கள் என்னுடைய பதிலில் எடுத்து கொண்டார்கள்.அது அவர்கள் கருது.உங்களுடைய பதில் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது,ஆனால் என்னுடைய சந்தேகங்கள் என்னுடைய எதிர்வினையில் கேடிருக்கிரேன்,அவர்கள் அதற்கான நேரிடை எந்த பதிலும் கொடுக்கவில்லை,,,,,உங்கள் பணி சிறக்க வால்த்து க்க்கள்.

   Delete
 5. //அந்நிய நாட்டிலிருந்து வந்த இஸ்லாம் மன்னர்(திப்பு மாற்ற பிற) எந்த உரிமையில் அன்னியர்களை எதிர்த்து போராடினார்கள்?//

  பொறாமை பொங்கி இப்படித்தான் எழும்!

  அந்நிய நாட்டிலிருந்து வந்த இஸ்லாம்தான் தங்கிய நாடு தாய் நாடு என்று எண்ணம் கொள்ளவைத்தது. அந்த உரிமையில்தான் அந்நியன் வெள்ளையனை எதிர்தனர்.
  அரபு நாட்டிற்கு விசா எடுத்துக்கிட்டு போய் அள்ளிக்கொண்டுதானே வருகிறீர்கள். அதுபோல் அவர்கள் அவ்வாறு அல்லாது அங்கிருந்துதான் உலக அதிசய கலையை இங்கு கொண்டுவந்து நம்மை வெள்ளை அந்நியர்களோடு சளைத்தவர்கள் அல்ல என்ற தகுதியை தந்தார்கள்.
  பிரிவினையை வைத்தே வாழ்க்கை நடத்துபவருகளுக்கு இவைகளெல்லாம் எப்படித்தெரியும்?
  இப்ப எங்கு பல பில்லியன் மதிப்பு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது என்று எழுதினால் எப்படியிருக்கும்?
  தனதென்றால் ஏன் பதுக்கவேண்டும்?

  பிரித்தாளும் வல்லுமை இதோ காணுங்கள்!
  //அந்த முஸ்லிம் களுக்கும் இப்பொழுது நாட்டில் இருக்கும் நம் மண்ணின் முஸ்லிம் களுக்கும் என்ன ரத்த சம்பந்தத்தில் உறவுகளை நிலை நாட்டி கொள்ள
  முயற்சி வேண்டியிருக்கிறது.//

  பரந்த மனம், எண்ணம், சமம் அனைவரும் என்ற கொள்கை ... இப்படிப்பட்ட கொள்கை உறவுகளைவிட வேறு உறவும் வேண்டுமோ? இந்த பரந்த அறிவுகள் இருப்பவர்கள் இப்படி எழுத நினைப்பாரா? இரத்தமும் உறவு. அறிவும் உறவு. நல்ல அறிவுகள் எல்லோரிடமும் அடைக்கலம் ஆகாது பரந்த மனம் படைத்தவர்களிடம் தான் அது குடிகொள்ளும்.

  //முதலில் மனிதனகாவும்,இரண்டாவது இம்மண்ணின் மைந்தனாகவும் உணர்ந்து கொண்டு,எந்த மதத்தையும்,மார்க்கத்தையும் பின்பற்றுவதே உண்மையான நிலை.இதில் நான் இந்த மதம்,எங்களை பெருமைபடுதுங்கள் என்ற கேட்பது முதல் இரண்டு நிலைகளையும் மறந்தவர்கள்.//

  மனிதனாக இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகளை எழுதியிருக்கமாட்டார்கள்!
  நாங்கள் மனிதனாக இருப்பதால்தான் இம்மண்ணை எங்கள் உயிர் மண் என்று எண்ணுகிறோம். நாங்களே இம்மண்ணின் மைந்தன் என்பதில் என்ன சந்தேகம்? அப்படித்தான் மார்க்கம் வழிகாட்டுகிறது.இப்படியெல்லாம் எழுதி எம்மண்ணை எம்மைவிட்டு அந்நியமாக்கும் நீர்தான் அந்நியன்! எந்த மதத்தையும் பின்பற்றுங்கள் என்பது அவரவர் விருப்பம். மண்ணுக்கும் மார்க்கத்துக்கும் வேறுபாடு கண்டால் இன்றைய நவீனங்களை நீ உபயோகப்படுத்க்கூடது. வெளிநாட்டினர் கல்விகளை கர்ககூடாது. எல்லா நாட்டினரும் கண்டுபிடித்வைகள் தான் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி.
  அறிவுகளை ஏற்பதை தடுப்பது அறிவீனனின் செயலன்றோ!

  உளியின் வேலை பிரிப்பது தானே? அதைதான் காட்டுகிறது உந்தன் எழுத்து.

  மனிதனாக வாழ்ந்துபார் வாழ்வு இனிக்கும். மனிதன் தன்னைப்போல் எல்லாரையும் எண்ணுவான். அவனுக்கு பெயர்தான் இஸ்லாமியன்.

  ReplyDelete
  Replies
  1. ஆழமான ஆய்வுக்குரிய வாதத்தை எடுத்து ”நெத்தியடி” பதில் கொடுத்துள்ள, “உங்களுக்கு நண்பன்” உண்மையில் பாராட்டுக்குரியவர்!

   ஆம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் நயவஞ்சக நெஞ்சகத்தார்கள் தான், வாழ வைத்த இஸ்லாமிய நாடுகளில் “பசை போல்” ஒட்டிக் கொண்டே, இஸ்லாத்தை வசை பாடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்பதும் ஒரு வேடிக்கையே!

   Delete
 6. பதிவுக்கு நன்றி.

  ///மறைக்க முற்படும் இஸ்லாமிய வரலாற்றின் பக்கங்கள் !?///

  இந்த தலைப்பில் உங்களின் ஆக்கம் படிப்பதற்கு நன்றாக இருக்கின்றது.

  (அ)உங்களை இப்படி எழுத எது தூண்டியது?
  (ஆ)வாசகர்கள் இப்படி பின்னோட்டம் இட எது தூண்டியது?
  (இ)நான் இப்படி எழுத என்னை எது தூண்டியது?

  யாருக்காவது தெரியுமா?

  பதில் தாருங்கள், பின்பு நான் என்னுடைய விளக்கத்தை தருகின்றேன்.

  இந்த ஆக்கத்தை எழுதின உங்களுக்கு நன்றி காக்கா.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. //யாருக்காவது தெரியுமா?// இந்த கேள்வி இன்னும் முற்று பெறவில்லை.
   இருப்பினும் எனக்கு மனதில் தோன்றியவைகளை எழுதுகிறேன்.

   (அ)இக்கேள்விக்கு ஆசிரியர் பதில் தந்துவிட்டார்.

   (ஆ)பதில் சொல்லவேண்டிய நேரத்தில் சும்மா இருப்பது எழுதிய கருத்துக்களை ஏற்றதாக ஆகிவிடும். உண்மைகளை வெளிக்கொண்டுவரும் தருனமும் தவறிவிடக்கூடது என்பதால்.

   (இ)ஆர்வம்

   Delete
 7. இந்திய வரலாற்றில் இஸ்லாமியர்களின் பங்கையும் தியாகத்தையும் மறைக்கப்பட்ட உண்மைகளையும், ஆதார பூர்வ எழுத்துக்களில் வெளிக்கொண்டு வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் காக்கா.

  ReplyDelete
 8. @ Vinosubra //நான் இந்த மதம்,எங்களை பெருமைபடுதுங்கள் என்ற கேட்பது//

  நான் இந்த மதம் ஆகவே எங்களை பெருமைப் படுத்துங்கள் என்று கேட்கவில்லை. நாங்கள் இவ்வளவும் செய்திருக்கிறோம் ஆகவே எங்களின் தியாகத்தை அங்கீகரியுங்கள்- இருட்டடிப்பு செய்யாமல் உண்மையை எழுதுங்கள் என்று கேட்பதுதான் இந்தப் பதிவின் நோக்கம். பிரச்னைகளை உருவாக்குவதல்ல நோக்கம். பிரச்னைகளை சுட்டிக் காட்டுவதே நோக்கம். திசை திருப்பி பாகுபாடுகளை உருவாக்க வேண்டாமென்று அன்புடன் கோருகிறேன்.

  சுதந்திரப் போராட்ட வரலாற்றில் யார் யார் என்னவெல்லாம் சர பட்டங்களையும் திவான் பட்டங்களையும் சூட்டிக் கொண்டு சுதந்திரப் போராட்டத்தை நசுக்க ஆங்கிலேயர்களுக்கு எப்படி ஜால்ரா அடித்து வாழ்ந்தார்கள் சதஇ செய்தார்கள் செய்தார்கள். பிறகு சுதந்திரம் கிடைத்ததும் எப்படி ஒட்டிக கொண்டார்கள் இன்று சிறிய சதவீத மக்கள் தொகை கொண்டோர் அனுபவிக்கும் பதவி சுகங்கள் யாவை என்பதையெல்லாம் பட்டியல் போட வைக்க வேண்டாம்.

  முஹலாயர் ஆட்சியை எதிர்த்து பெருமளவில் சுதந்திரப் போராட்டம் நடைபெறவில்லை. ஆங்கில ஆட்சியை எதிர்த்தே நடந்தது. இன்னும் மறைக்கப் பட்ட/ திரிக்கப் பட்ட வரலாறுகள் வெளிவரும்.

  ReplyDelete
  Replies
  1. @ ibrahim ansari,,அதிரை.மெய்சா,avargalukku naan alitha padhil.ungalukkum idhu,nandri,,,நன்றி,அதை கட்டுரையின் நோக்கில் உணரமுடியவில்லை.என்னுடைய,கருது,இங்கே எவருடன் பங்களிப்பையும்,மறுபதர்காகனது இல்லை.இன்று,தமிழகத்தில்,தனி ஒவ்வொரு மனிதனும்,மதத்தின் பால்,வேற்று மதத்தினரை வேருபடுதவில்லை.ஆனால் சமூக கட்டமைப்பில்,வருகின்ற பொழுது,மதம் என்ற போர்வை,மனிதனை,பிரிக்கின்றன.நாம் எலோரும் ஒரு தேசிய இனம் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.ஆனால் அந்நிய நாடு அரசர்கள்,இங்கு செய்த அநியாயங்களை,நம் மண்ணின் அரசர்கள் செய்த அக்கிரமங்களை,நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.அவர் எந்த மதத்தை பின்பரியவர்கள் என்று நமக்கு இரண்டாம் பட்சம் தான்.தமிழகத்தில்,இன்று வரை,சங்க பரிவார்களும்,ஆர் .எஸ்.எஸ்.உம் கால ஊன்ற முடியாததற்கு காரணம் இங்கு உள்ள சகோதரத்துவம் தான்.திருக்குறளில் சொல்லாத எதையும் இந்த உலகின் எந்த மதங்களும் புதிதாக சொல்லவில்லை.என்னை பொருத்தவரை,நம்பிக்கை ஒருவரி தனி சுதந்திரம்,ஆனால்,பெரியாரின் கருத்துக்கள் இன்றும் உண்மை,மதம் மனிதனை மிருகமாக்கும்.இன்று இம்மண்ணில் சிந்தப்படும் ரத்தம் மதத்தினால் மட்டுமே.அப்படியென்றால், நாம் ஏன் அதை கொஞ்சம் தள்ளி வைக்ககொடது?எனக்கு எம்மதமும் சம்மதமில்லை,இங்கே மணித ரத்தம்,கடவுள்,மதத்தின் பெயரால் சிந்தபடுவது நிற்கும்வரை.என்னுடைய நோக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்பதை நபுகிரேன்,தொடர்ச்சியாக இந்த வலைப்பூவை படித்து வந்திருக்கிறேன்,இனிமேலும்.இங்கே வேற சில நண்பர்களும் தவறான புரிதல்கள் என்னுடைய பதிலில் எடுத்து கொண்டார்கள்.அது அவர்கள் கருது.உங்களுடைய பதில் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது,ஆனால் என்னுடைய சந்தேகங்கள் என்னுடைய எதிர்வினையில் கேடிருக்கிரேன்,அவர்கள் அதற்கான நேரிடை எந்த பதிலும் கொடுக்கவில்லை,,,,,உங்கள் பணி சிறக்க வால்த்து க்க்கள்.

   Delete
 9. தம்பி கோ. மு. அ. ஜமால் //(அ)உங்களை இப்படி எழுத எது தூண்டியது?//

  வரலாறுகள் தீர்த்துக் கூறப்பட்டவைகளை ஆதாரபூர்வமாக படிக்க நேரிட்டபோது ஏற்பட்ட தாக்கம்.

  இன்னும் இருப்பதையெல்லாம் கொட்டினால் அதிர்ச்சி அடைவீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இருப்பதையெல்லாம் கொட்டியே ஆகவேண்டும், உலகம் அதிர்ச்சி அடையணும்.

   Delete
  2. தட்டுங்கள் திறக்கப்படும்
   கொட்டுங்கள் உறைக்கப்படும்!

   Delete
 10. அன்புள்ள தம்பி கோ மு அ ஜமால் மற்றும் பாசமிகு கவியன்பன் அவர்களின் கட்டளைப்படி இன்னும் கொட்ட வேண்டியவை தொடர்ந்து கொட்ட முயற்சிப்போம். இறைவனுதவியால்/ நாடினால்.

  ReplyDelete
 11. நாம் கொட்டுவது பலருக்கு தேள் கொட்டுவது போல் இருக்கும் அது நம் தவறல்ல.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன் அன்புடன் உங்கள் தம்பி

   Delete
 12. vinosubra அன்பரே!

  உங்கள் ஆரம்ப எழுத்து நடையே "அந்நிய நாடு, கொள்ளை" இப்படி இருக்கிறது.
  இரத்த சம்பந்த உறவு பற்றியும் எழுதியுள்ளீர்கள். அவர்கள் வேறு நாட்டினர் இவர்கள் இந்தியர்கள் என்ற கருத்தில் எழுதியுள்ளீர்கள். உங்கள் உள்ளத்தில் எது உள்ளதோ அதுவே எழுத்தாக வரும்.

  தமிழ் ஞானிகள் மாத, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறார்கள்.
  அவ்வாறானால் முதலில் மாத, இரண்டாவதாக பிதா, மூன்றாவதாக குரு, நான்காவதாக தெய்வம்.
  தெய்வத்தில் அனைத்தும் அடக்கம் என்பதும் அதில் பொதிந்துள்ளது தானே! குருவில் மாதாவும், பிதாவம் அடக்கம் என்றும் தானே பொருள்!

  மாத, பிதா இரத்த சம்பந்தம். குரு அறிவு சம்பந்தம். ஆக இரத்த சம்பந்தத்தைவிட அறிவே உயர்வானது என்ற கருத்ததில் பொதிந்துள்ளது என்பதை கற்றவர்கள் அறியாமலா போவார்கள்.

  மனிதன் மனிதனாக வாழவேண்டும். இறைவனை அறிந்தவன் அடைந்தவன் அவ்வாறு வாழமுடியும்.அதற்குத்தான் மதங்களும் மார்கங்களும் உண்டாகியது.

  இரத்த சம்பந்த அறிவு மேலானது என்று எந்த மதமும் மார்கமும் சொன்னதாக இல்லையே. அப்படியானால் உங்களது மத வழிகாட்டியவர்கள் உங்கள் இரத்த சம்பந்தமுடையவரா?
  அதனை பின்பற்றும் நீங்கள் அனைவரும் ஒரே இரத்தம் சம்பந்தம் உடையவர்களா? எதோ புரியாத காழ்புணர்வு தெரிகிறது.

  நமது நாட்டில் தோன்றியது ஒரு மதமா? மதம், மார்கங்களுக்கு நாடுகள் திரையல்ல. காற்று எப்படியோ அது போலத்தான் மார்கங்களும்.

  அறிந்த உண்மைகளை தன்னை சார்ந்தவர்கள் தவிர மற்றவர்களும் அறிவதில் குறுக்கீடுகள், அதனை கொண்டு பணமாக்கும் வித்தைகள், அதைவைத்தே மனிதனில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுத்துதல் சரியாகுமோ!

  அவ்வாரல்லாமல் அனைவரும் சமம், உண்மைகளை அனைவரும் அறியவேண்டும் என்ற வழிகாட்டுதல் பின்பற்றதக்கதுதானே!

  அனைவரும் சமம் என்றுள்ள மார்கம், அவ்வாறு நடைமுறைபடுத்தும் மார்கம் எல்லாத் தடைகளையும் வென்றுவிடும். மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டும்.

  குஷ்வந் சிங் ஒரு எழுத்தாளர். அவர் சொல்லை நினைவூட்டுவது, வரலாற்றை நினைவூட்டுவது ஏன் எரிச்சலைத் தருகிறது என்பது புரியாத புதிரன்று!

  தானும் நலமுடன் சக மனிதரும் நலமுடன் வாழ்தல் வேண்டும். அதற்கு அமைதியை மையமாக வைத்து சிந்திக்கவேண்டுமல்லவா?

  ReplyDelete
  Replies
  1. nandri,ungal karuthukku,,,,தானும் நலமுடன் சக மனிதரும் நலமுடன் வாழ்தல் வேண்டும். அதற்கு அமைதியை மையமாக வைத்து சிந்திக்கவேண்டுமல்லவா?மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டும்.
   idhu thaan en karuthum,nabar adhiraikku naan eludhiyulla ulla padhil ungal parvaikkum.

   Delete
 13. அறிவுக்கண் திறந்த அற்புத ஞானியார், நபிதாஸ் அவர்கள் எமக்குக் கிடைத்தது யாம் பெற்ற பேறு என்போம்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

  அகக்கண் திறக்கும் ஞானியாரை ஆரத்தழுவும் என் ஆசை தான் நிறைவேறாமல் தாயகம் விட்டு இன்ஷா அல்லாஹ் நாளை பயணமாகி என் பணியிடம் (அபுதபி) நோக்கிப் போகிறேன். அல்லாஹ் நாடினால் சந்திப்போம்!(ஆமீன்)

  உங்களனைவரின் துஆ வை வேண்டியவனாக.....

  ReplyDelete
  Replies
  1. ஆஹா வட போச்சே நான் கூட சந்திக்க முடியலையே

   Delete
 14. vinosubra அவர்களே!
  // என்னுடைய சந்தேகங்கள் என்னுடைய எதிர்வினையில் கேடிருக்கிரேன்,அவர்கள் அதற்கான நேரிடை எந்த பதிலும் கொடுக்கவில்லை,,,,,// என்று எழுதியுள்ளீர்கள். உங்கள் கேள்விகளே புரியமுடியவில்லை. தெளிவாக எழுதுங்கள். இருப்பினும் சில பதில்கள் தொடர்கிறது.

  //திருக்குறளில் சொல்லாத எதையும் இந்த உலகின் எந்த மதங்களும் புதிதாக சொல்லவில்லை//.

  எல்லா மதங்களையும் நன்கு அறிந்தவர்போல் உங்கள் எழுத்துநடை உள்ளது. அப்படியா ? பதில் வேண்டும்.

  திருக்குறளை மதிக்காதவர் எவரும் இருக்கமாட்டார். இஸ்லாம் மார்க்கமும் எந்த மதத்தையும் குறைகூறும்படி வழிகாட்டவில்லை. ஏன் எந்தமதமும் அவ்வாறு மற்ற மதத்தை குறைகூறும்படி சொல்லி இருக்காது. அப்படியிருக்க தாங்கள் ஒட்டுமொத்தமாக எல்லா மதத்தையும் குறைகூறும்படி // திருக்குறளில் சொல்லாத எதையும் இந்த உலகின் எந்த மதங்களும் புதிதாக சொல்லவில்லை// என்று சொல்வது என்ன இது தங்களுடைய புது மதமோ?!
  அதன் கொள்கை இதுதானோ?
  எதற்கு இதை எழுத வேண்டும்?
  ஏதாவது புது பிரச்சினையை கிளப்ப ஏற்ப்பாட?
  அமைதி விரும்பிபோல் எழுதுகிறீர்கள். ஆனால் கருத்துகளில் ஏன் இந்த நச்சு?
  இவைகளுக்கு அவசியம் பதில் வேண்டும்.

  அறிவுகளை சொல்வது எளிது. ஆனால் அதன்படி வாழ்ந்து காட்டி மனித வாழ்வியலை கற்றுத்தந்தவர்கள் யார்?என்பது இவ்வுலகம் சரித்திரம் அறிந்த ஒன்றுதானே!

  உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அதனால் எழுதுகிறேன்.
  யாரிடமும் கல்வி கற்கவில்லை! எழுதவும் தெரியாது!
  ஆனால் எக்காலத்திற்கும் பொருத்தமான ஒரே பல்கலைகழகம் எம்பெருமான்(ஸல்). அவர்களையன்றி சுட்டிக்காட்ட என்றுமே யாரும் இல்லை என்பதில் மாற்றுக்கருத்து எங்கும் தோன்றத்தான் முடியுமோ?!

  இந்த உண்மையை இப்படித்தானே எழுதமுடியும். அதில் அன்னியமார்க்கம், மண்ணின் மதம் என்று குதர்க்கம் பேச எப்படி சிந்தனை தோன்றுகிறது?

  அறிவு எங்கு தோன்றினாலும் அது எல்லா மனிதருக்கும் உரிமையுள்ளது. அதில் பிரிவினை காண்பவன் யாராக இருக்கமுடியும்?

  ReplyDelete
 15. vinosubra அவர்களே!

  //எனக்கு எம்மதமும் சம்மதமில்லை,//என்று எழுதியுள்ளீர்கள்.

  அப்படிஎன்றால் என்ன? ஒரு புது மதம் தோற்றுவிக்க ஏற்பாட? வேண்டுமானால் உங்கள் சொந்த கருத்தாக இருக்கலாம். எந்த வழிகாட்டலும் இல்லை என்றால் அதை என்னவென்று சொல்வது? சொல்வது புது ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் அர்த்தம் இல்லை. எந்த மத கோட்பாடுகளையும் ஏற்க்கவில்லை என்றால் எப்படி வாழ்வது? அது யாருடைய வாழ்க்கை?

  ReplyDelete
 16. vinosubra அவர்களே!

  //முதலில் மனிதனகாவும்,இரண்டாவது இம்மண்ணின் மைந்தனாகவும் உணர்ந்து கொண்டு,எந்த மதத்தையும்,மார்க்கத்தையும் பின்பற்றுவதே உண்மையான நிலை.//
  நீங்கள் எழுதியுள்ளீர்களே அந்தமாதிரி மனிதனாகவா ?

  செய்த தியாகங்களை மறைத்தால் நினைவூட்டுவது மனிதத்தன்மை இல்லை என்று எந்த இலக்கணம் சொல்கிறது ?

  அவ்வாறு எழுதாவிட்டால் நீங்கள் இந்நாட்டில் வாழ என்ன உரிமைகள் உள்ளது என்று எழுதவும் கை நீளாத?
  நாங்கள் மனிதனாகத்தான் வாழ்கிறோம்.

  //இம்மண்ணின் மைந்தன் // என்றெல்லாம் எழுதுவது பண்பட்ட வார்த்தைகள் அல்ல. அது தமிழ் மன்னுக்குரியது அல்ல. "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று சொன்ன இம்மண்ணின் கருத்துக்கு மாற்றமானது.

  // முதலில் மனிதனகாவும்,இரண்டாவது இம்மண்ணின் மைந்தனாகவும் உணர்ந்து கொண்டு,எந்த மதத்தையும்,மார்க்கத்தையும் பின்பற்றுவதே உண்மையான நிலை.// என்று தாங்கள் எழுதியதின் பொருள் என்ன?
  தாங்கள் எழுதியதின் நோக்கம் என்ன?
  "அந்நிய நாடு, அன்னிய மதம் " " எந்த மதத்தையும்,மார்க்கத்தையும் பின்பற்றுவதே உண்மையான நிலை" ஒரே கருத்துக் குழப்பம்.

  ReplyDelete
 17. vinosubra அவர்களே!

  //மார்க்கத்தை,மதமாக பார்த்து,இன்று எல்லாவற்றிலும் அந்நியப்பட்டு நாங்கள் எல்லாம் ஒரிஜினல் முஸ்லிம்கள் என்று ஒரு பிரிவு மற்ற முஸ்லிம்களிடம் பறை சாடிகொல்கிறது// என்று எழுதியுள்ளீர்கள்.

  அண்ணன் தம்பி சண்டை எந்த மதத்தில் இல்லை ? எதாவது ஒரு மதம் சொல்லமுடியுமா ?

  அதற்காக என்ன ? என்ன சொல்ல வருகிறீர்கள் ?

  அமைதி விருப்பி என்று எழுதும் தாங்கள் இப்படித்தான் அமைதி விரும்புகிறீர்களா ?

  நடந்ததைச் சொன்னால் எரிச்சல்படாதீர்கள் !

  ReplyDelete
 18. vinosubra அவர்களே!

  //அந்நிய நாட்டிலிருந்து வந்த இஸ்லாம் மன்னர்(திப்பு மாற்ற பிற) எந்த உரிமையில் அன்னியர்களை எதிர்த்து போராடினார்கள்?அவர்கள் அடித கொள்ளையை வேறு ஒருத்தன் பங்கு போட்டதால?அந்த முஸ்லிம் களுக்கும் இப்பொழுது நாட்டில் இருக்கும் நம் மண்ணின் முஸ்லிம் களுக்கும் என்ன ரத்த சம்பந்தத்தில் உறவுகளை நிலை நாட்டி கொள்ள// என்று எழுதியுள்ளீர்கள்.

  கைபர் போலான் கனவாய் சரித்திரம் தெரியாதா ?

  எந்த கொள்ளை அடித்து எங்கே கொண்டு சென்றுவிட்டனர் ?

  கட்டுரை எழுதியவற்றை படித்தால் இந்திய மண்ணை ஒருபிடி தன் கல்லறைக்கு அள்ளிச்சென்றது தெரியவில்லையா ? எதற்க்காக என்பதும் புரியவில்லையா ?

  வேண்டாம் துவேசம் !

  வேண்டும் அமைதி !

  வேண்டும் ஒற்றுமை !

  // அந்த முஸ்லிம் களுக்கும் இப்பொழுது நாட்டில் இருக்கும் நம் மண்ணின் முஸ்லிம் களுக்கும் என்ன ரத்த சம்பந்தத்தில் உறவுகளை நிலை நாட்டி கொள்ள//

  தெரியாத உங்களுக்கு இரத்தத்தில் மனிதவாழ் நல்அறிவு பொக்கிஷம் சம்பந்தப்பட்டுள்ளது என்று.

  இப்படியெல்லாம் தங்கள் எழுதுவது... ஆனாலும் அதாவது அமைதியை மையமாகவைத்து எழுதுவது என்று சொல்வது... எந்த வழிகாட்டலில் சொல்கிறது ?


  கடைசியில் நான் அப்படி எழுதினேன் தவறாக புரிந்துகொண்டார்கள் என்று எழுதுவது புரியாத புதிர்தானே !

  ReplyDelete
 19. முழுமையான சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?

  1929 � ஆம் ஆண்டு டிசம்பர் 29 – இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை � என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார்.

  1929 � ஆம் ஆண்டு டிசம்பர் 29 – இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற


  மேலும் விரிவான தகவல்களை படிக்க :
  http://inruoruthagaval.com/freedom-fighter-2/

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers