.

Pages

Tuesday, July 23, 2013

ஹலோ, எப்படி இருக்கின்றீர்கள் ?

ன்பானவர்களே,

நாம் எல்லோரையும் மனிதர்களாக படைத்த இறைவன் நமக்கு எதுவெல்லாம் முடியுமோ அதுவரைக்கும் பெலத்தையும் திறமையையும் கொடுத்துள்ளான், ஆனால் நாம்தான் அதை முறையாக பயன்படுத்த தெரியாமல் திண்டாடி வருகின்றோம். நம்மில் ஒரு சிலரே சரியான இலக்குகளை அடைந்து வெற்றியும் அடைந்துள்ளனர். அடைந்து கொண்டும் இருக்கின்றனர்.

ஒரு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு நாள் செய்தித்தாளை பார்த்த ஒருவர் தன்னுடைய மரண செய்தியை காண நேரிட்டது, தவறுதலாக வேறு யாருக்கோ பதிலாக அவருடைய பெயரும், புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்து, அவருடைய புகைப்படத்தின் கீழ் டைனமெட் உண்டாக்கிய இராஜா என்றும், மரணத்தின் வியாபாரி என்றும் எழுதப்பட்டிருந்தது.

அதை பார்த்தவுடன் அந்த மனிதர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை, மரணத்தின்  வியாபாரி என்றா என்னை மக்கள் நினைவு கூறுவார்கள் என்று திடுக்கிட்டு துயரத்தில் ஆழ்ந்தார், அந்த திருப்புமுனை அவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டது. தன்னை யாரும் அப்படி அழைப்பதை அவர் விரும்பவில்லை, உடனே அந்நாளில் இருந்து அவர் ஒரு முடிவு எடுத்தார், அதாவது இனிமேல் மக்களுக்காகவும் சமுதாயத்துக்காகவும் சமாதானத்திற்கான காரியங்களில் ஈடுபட ஆரம்பித்தார். அவர் யார் தெரியுமா ? அவர்தான் ஆல்பர்ட் நோபல் ஆவார். அவர் பெயரில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சமாதானத்திற்காகவும், மற்ற அறிவியல் ஆராய்ச்சிகளை கண்டுபிடித்ததர்காகவும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நம் ஒவ்வொருவருக்கும் எல்லோரையும் போல ஒரு வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, அந்த வாழ்க்கையின் முடிவில் நாம் மற்றவர்களால் எப்படி அறியப்படுகின்றோம்? சரியான கோபக்காரன் என்றோ, சரியான குடிகாரன் என்றோ, தொல்லைகளைக் கொடுக்கின்றவன் என்றோ எப்படி அறிந்து கொள்ளப் படுவோம்? அல்லது மற்றவர்களால், இவரைப் போன்ற நல்ல மனிதரை காண்பது அரிது என்று போற்றப்படுவோமா? நாம் இல்லாமற்போனால் மற்றவர்கள் நம்மை உண்மையாகவே இழந்து தவிப்பார்களா ?

இந்நாட்களில் ஒரு அரசியல் தலைவர் மரித்தவுடன், எங்கள் கட்சி ஒரு மாபெரும் மனிதரை இழந்து விட்டது என்று உடனே அறிக்கை விடுவார்கள், அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரைக் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள். இவையெல்லாம் அரசியல் சகஜம்.

அதுப்போன்று நம்மை பெயரளவில் இழந்திருக்கின்றோம் என்று சொல்லி, இருதயத்தில் இவன் போனது எத்தனை நல்லது என்று நினைப்பார்களானால் அது எத்தனை பயங்கரம் !

நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது? மற்றவர்கள் போற்றும் வகையில் நம் வாழ்க்கை இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதா? அல்லது யாரும் விரும்பாவண்ணம், மூர்க்கமான, பிரயோஜனமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

மனிதனை ஏமாற்றி விடலாம், இறைவனை ஏமாற்ற ஒருக்காலும் முடியாது, இன்று பொறுப்பில் உள்ள எத்தனை மனிதர்கள் உண்மையாக இருக்கின்றனர் ? மானிடம் இதை சிந்திக்குமா ? சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுக்குமா ?

உடம்பில் பெலமும் கையில் பணமும் இருக்கும் வரையில் மட்டும்தான் ஆட்டமும் பாட்டமும், அது இரண்டும் நம்மை விட்டு போய்விட்டால் ? பியூஸ் போன பல்பு மாதிரிதான். பின்னர் எதுவுமே திரும்பி பார்க்காது. வாழ்க்கைக்கு அது இரண்டு முக்கியமாக இருந்தாலும் நிரந்தரம் கிடையாது, கூடவே வராது.

மனிதன் இந்த அற்ப உலகில் எதை விதைக்கின்றானோ, அதைதான் அவன் மறுமை நாளில் அறுவடை செய்வான். நல்லதுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும், தீயதுக்கு தீய விளைச்சல் கிடைக்கும்.

மனிதன் மாறனும், மனித நேயம் வளரனும், அன்பு பெருகணும், ஒற்றுமை ஓங்கணும், உதவிகள் உயர்ந்து நிற்கணும், இல்லாதோர்களுக்கு இருப்பவர்கள் கொடுக்கனும், எல்லோரும் எல்லாமும் பெற்று சந்தோஷமாக வாழனும், நாளை மறுமை நாளிலே நல்ல விளைச்சலை பெற்று வாழ்வோமாக.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

8 comments:

  1. நற்சிந்தனைகள் நடக்கட்டும்...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அனைத்தையும் வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய நல்லதொரு உபதேசங்கள் !

    // உடம்பில் பெலமும் கையில் பணமும் இருக்கும் வரையில் மட்டும்தான் ஆட்டமும் பாட்டமும், அது இரண்டும் நம்மை விட்டு போய்விட்டால் ? பியூஸ் போன பல்பு மாதிரிதான்.//

    சரியாகச்சொன்னீர்கள்

    ReplyDelete
  3. ஜமால் காக்காவின் வித்தியாசமான சிந்தனையில் இதுவும் ஒன்று. நல்லுபதேசத்தினுடனான ஆக்கம். மனிதநேயம் வளர பாடுபடுவோம்.!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மனிதம் வளர மகிமை மிகுந்த
    புனிதம் செழித்துப் புடமிடும் மாதம்
    இனியும் பயிற்சி இலாது கழிந்தால்
    கனியைத் தவிர்த்தலாய்க் காண்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers