.

Pages

Wednesday, August 28, 2013

நபிதாஸின் அறிவுத்தேன்-குறுந்தொடர்[2]

இக்கொள்கைகளில் இவர்களின் அறியாமையாலோ அல்லது அறிவு திருத்தத்தாலுமோ காலப்போக்கில் ஒவ்வொன்றிலும் மற்ற கொள்கைகள் புகுந்து அதில் பலப்பல பிரிவுகள் உண்டாகிவிட்டது.

ஒவ்வொரு மத/மார்கங்களில் அதில் அதனையேற்று பின்பற்றிவருபவர்கள் அம்மத/மார்கங்களில் ஒரே கொள்கை இல்லாமாமல் பல கொள்கைகள் இருப்பதை அம்மக்களே நன்கு அறிவர்.  அவைகள் அதனின் உட்பிரிவுகள் என்று மற்ற மத/மார்கத்தினர் பொதுவாக கூறினாலும் ஒரு பொதுப் பார்வையில் இவர்கள்ஒருங்கினைந்தாலும் அவர்களுக்குள் இவர்கள் வேறு வேறாகத்தான் இருந்து வருகின்றனர்.

வணக்கம், வழிபாடு இவைகள் இம்மத/மார்கங்களில் வேறுபாடு இருப்பினும் அதன் உள்ளார்ந்த தாத்பரியங்களை பொதுவாக விளங்குதல் நன்மை பயக்கும் என்ற நன்னோக்கில் அதனதன் கருத்துக்களை உள்வாங்கி கொள்ளுதல் நலம்.

வழிபாடு என்பதற்கு இரண்டு வேண்டும். ஒன்று வழிப்பட மற்றது வழிப்பாட்டை பெற. ஒன்றை ஒன்று வழிப்படவேண்டும். இதை வணக்கம் என்றும் வழிபாடு என்றும் சொல்லிக்கொள்வார்கள். இது அத்வைதத்தைத் தவிர மற்ற கொள்கைக்காரர்களையுடையது.

கற்பனைகளை உருவமாக சமைத்து அதனை வழிப்பட்டால் அது அந்த உருவத்தை வணங்கியது என்றும் அல்லது அந்த கற்பனையை வணங்கியது என்றும் தானே பொருள். உருவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவ்வாறு செய்யப்படும் வழிபாடு/வணக்கம் இவைகளுக்கு இரண்டு உள்ளமைகள் இருக்கும்.

வணக்கமும் வழிபாடும் ஒன்றாகது. வழிபாட்டிற்கு இரண்டு உள்ளமைகள் தேவை. ஆனால் வணக்கத்திற்கு இரண்டு உள்ளமைகள் தேவையில்லை.
வணக்கம் என்றால் அதில் முழு இணக்கம் வேண்டும், பரிபூரண அர்ப்பணிப்பு இருக்கவேண்டும். வணக்கத்தில் வணங்குபவன் அவனின்சுயம் வணங்கப்படுவத்தின் சுயமாக தன்னை முற்றிலும்  இணங்கி; இழந்து ஒரே சுயத்திலாகிவிடவேண்டும். வணக்கத்தில் இரண்டு உள்ளமை உணர்வு இருந்தால் அது குறை உள்ளது என்று சொல்வதைக்காட்டிலும் அங்கு வணக்கம் இல்லை வழிபாடுதான் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

எதாவது ஒரு மதத்தையோ/மார்கத்தையோ விளக்கம் தெளிவுபெற எடுத்தாள்வது புரிதலுக்கு துணைபுரியும் என்பதால், அவற்றில் ஒன்றான இஸ்லாமியத்தை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துதல் தவறாகா.

இஸ்லாமிய கொள்கை அத்வைதத்தை சார்ந்தது. ஆனால் இன்று இக்கொள்கையில் பிரிவுணர்வு சுபாவ அறியாமையின் காரணத்தால்,  மற்ற இரு தத்துவங்களும், அதில் புகுந்து பலப்பல பிரிவுகள் உண்டாக்கிவிட்டது.

எங்கும் நிறைந்தவன்.
அவனின்றி எதுவுமில்லை.
நீக்கமற நிறைந்தவன்.
எல்லாம் அவன் செயல்.
எங்கு நோக்கினும் அவன் முகமே.
ஏகன்.
எல்லமானவன்.
கிழக்கிலும் மேற்கிலும் அவனே.
உள்ளும் வெளியும் அவனே.
உண்டானதெல்லாம் அவனைக்கொண்டே.

இவைகளெல்லாம் அத்வைத கொள்கையைச் சேர்ந்தது.

இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவம் இல்லை. அவனே நீக்கமற நிறைந்துள்ளான். அவன் நிலையானவன். அவனுக்கு அழிவு என்பதே இல்லை. அவனது படைப்புகள் நிலையற்றது, அழியக்கூடியது.

உதாரணம் ஒன்றைக் கூறலாம் ஆனாலும் அது மிகப் பொருத்தம் அல்ல. இருந்தாலும் விளக்கம் தரும் என்பதற்காக இதனைப் பார்க்கலாம். தங்கம் நிலையானது என்று எடுத்துக்கொண்டால், அதில் செய்யப்படும் அணிகலன்கள் நிலையற்றது. பெண்டீருக்கு நகை தெரியும் ஆனால் தட்டானுக்கு தங்கம் தெரியும். நமக்கு இரண்டும் தெரியும் ( காரணம் பணம் கொடுப்பதால் ) ஒன்றில் இரண்டு. ஒன்று உண்மை மற்றது மாயை. அழியக்கூடியது மாயை. அழியாதது உண்மை. அரூபம் நிலையானது. உருவம் நிலையற்றது. உருவம் அழிந்து இல்லாமையாகிவிடும்.

புரிந்துகொள்வதர்க்காக இதையும் சொல்லலாம். பெட்ரோல் அதனில் தீயிட்டால், அது எரிந்து இல்லாமல் போய்விடும். அரூபத்திலிருந்து உண்டானது எரிந்து மறைந்துவிட்டது. எதிலிருந்து வந்ததோ பின் அதிலே மீண்டுவிட்டது.

சிலகேள்விகள் உங்களில் தோன்றும். அவை தோன்றாமல் இருக்க இவைகளையும் கவனத்தில்கொள்ளவும்.

(1) நல்ல புத்தி சுவாதீனம் உள்ள மனிதர். அவர் எதோ ஒரு அசம்பாவிதத்தில் புத்திமாறிவிட்டார். தான் யார் என்பதும் தெரியவில்லை. தான் ஏதும் செய்வதும் புரியவுமில்லை, நினைவுமில்லை.   அவர் அந்நிலையில் செய்த மன்னிக்கமுடியாத கொலைகூட மன்னிக்கப்பட்டுவிடும். கொலைக்கு கொலை தண்டனை தராமல் காப்பகத்துக்குத்தான் அனுப்பிவிடுவார்கள்.

(2) அம்பை எய்து ஒருவனை கொன்றால், தண்டனை எய்தவனுக்குத்தான் அம்புக்கில்லை.
'அறிவுத்தேன்' தொடரும்...
நபிதாஸ்

34 comments:

 1. மூலமே மெய்யென்பேன் மற்றவை பொய்யென்பேன்
  கோலமாய் மாறியே கொண்டாடும் மாயையாம்
  வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று
  நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி
  நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய்
  பார்க்கு மிடமெல்லாம் படைப்பினை யாய்வுசெய்
  பொய்யென்னும் திரையினைப் போக்கி மனக்கண்ணால்
  மெய்நிலை காண முயல்.

  ReplyDelete
 2. என்னால் இயற்றப்பட்ட மேற்காணும் மரபுப்பாவின் பொருளும், நீங்கள் மேலே பாடம் சொல்லிக் கொண்டிருக்கும் கருத்துக்களும் ஒன்றேன்றே நினைக்கிறேன். சரியா? அன்பின் குருவே!

  ReplyDelete
 3. நல்லது கவிஞரே !

  நான் சொல்வரும் கருத்திற்கு அடித்தளமிட, கருத்துக்கோர்வை செய்தவைகளில், தங்களது மரபுப் பா வழி விருந்தாகி நிற்பதிலும் சந்தோசம்.

  தங்களது எண்ணம் சூழ்ந்துள்ள கருத்து மையம் உயர்வானது.

  வாழ்க உங்கள் தாகம்
  வழர்க உங்கள் ஞானம்.

  ReplyDelete
 4. எழுத்துப் பிழை.

  நான் சொல்லவரும் கருத்திற்கு என்று படிக்கவும்.

  ReplyDelete
 5. நாம் இருவரும் ஒரே பாதையில் பயணிக்கின்றோம்; அந்த “ஞானப்பாட்டை”யை எமக்குக் காண்பித்து-ஞான குருவின் கரம்பிடிக்க வைத்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்!

  பிழிதேன் பருகவே காத்திருக்கும் உள்ளம்;
  விழித்தே இருக்கும் விரிந்து - மொழிந்தேன்
  அழகு கவிதையில் அன்பெனும் நன்றி
  பழகும் விதத்தினைப் பார்த்து
  .

  ReplyDelete
 6. அன்பின் நபிதாஸ்

  இறைவனுக்கு உருவம் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் பிஜே இறைவனுக்கு உருவம் உண்டு என்று குர்-ஆன் ஹதீதுகளின் ஆதாரங்களோடு தருகிறாரே, அது எப்படி?

  http://www.tntjpno.com/2010/07/tntj-vs.html

  விளக்கம் பெற்றால் மகிழ்வேன்.

  அன்புடன் புகாரி

  ReplyDelete
 7. அன்பின் அன்புடன் புகாரி அவேகளே !

  இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்று சிந்தனையில் கொண்டாலும்; முகம்மதியர்; முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களா அல்லது அல்லாஹ் சொல்லியிருக்கின்றானா என்றுதான் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  அண்ணல் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அதனால் உருவம் இருக்கின்றது என்ற எண்ணத்தோடு வேதத்தை பார்க்கவேண்டாம்.

  எங்களது கருத்தில் எழுத பட்டுள்ளதில் உங்களுக்குண்டான பதில் உள்ளது.

  "இஸ்லாமிய கொள்கை அத்வைதத்தை சார்ந்தது. ஆனால் இன்று இக்கொள்கையில் பிரிவுணர்வு சுபாவ அறியாமையின் காரணத்தால், மற்ற இரு தத்துவங்களும், அதில் புகுந்து பலப்பல பிரிவுகள் உண்டாக்கிவிட்டது." என்று எழுதப்பட்டுள்ளது காண்க.

  "எங்கும் நிறைந்தவன் இறைவன்" என்ற வாக்கியக் கருத்து ஏற்றுகொள்ளப்படுமாயின் உருவத்திற்கு இடமில்லை என்பது தெளிவு.

  சில உண்மைகள் எழுதப்பட்டாலும் தனது சிந்தனையில் உட்படுத்தினால் நன்மைகள்.

  நன்றி !

  ReplyDelete
 8. அன்பின் நபிதாஸ்,

  உங்கள் பதிலை வரவேற்கிறேன். இதைத்தான் எதிர்பார்த்தும் எழுதினேன்.

  குர்-ஆனையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் மக்கள் அனைவருக்கும் வலியுறுத்தவே நானும் ஏதோ எழுதி வருகிறேன், பாடுகிறேன்.

  பிஜேயின் உரையாடல்கள் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தன. வாய்விட்டுச் சிரித்தேன்.

  ஆனால், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் இவர் சொன்ன சொல்லுக்கே தலையாட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

  அறிவுடைமைக்கு அறியாமையிலிருந்து விமோசனம் எப்போ?

  இஸ்லாம் வாழ்வதெப்போ?

  அன்புடன் புகாரி

  ReplyDelete
 9. அறிஞர் நபி தாசின் ஆய்வு நன்றாக உள்ளது .

  சட்டென இஸ்லாமிய பார்வைக்குள் நுழைந்தது .ஏமாற்றம்

  அளிக்கிறது .வெளி உலகை ஆராய்ந்து முடயுரையில் .

  இஸ்லாமியத்தின் விளக்கம் தந்தால்நன்றாக இருக்கும்

  ReplyDelete
 10. அன்பின் அன்புடன் புகாரி அவேகளே !

  கால மாற்றத்தில் அல்லது காலப் பரிணாம மாற்றத்தின் சூழலில் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைகள், உலக நடப்புகள் யாவும் வேதத்தில் அப்படியே இருந்து வழிகாட்டுதல் இருக்கவேண்டும் என்பதல்ல. ஆனாலும் வழிகாட்டப்படும் அவைகள் வேதக் கருத்துச் சற்றின் உண்மைக்கு மாற்றமாக இருக்கக்கூடாது.

  வேதம் முக்காலத்திற்கும் வழிகாட்டும். அதனைத்தான் இமாம்கள் அவ்வப்பொழுது ஏற்படும் சிக்களுகளுக்கு வேதத்திலிருந்தே அதன் கருத்துக்கு மாற்றமில்லாமல் வழிகாட்டியுள்ளனர்.

  வேதத்தில் நேரடியாக தற்கால நிகழ்வுகளும் அப்படியே சம்பவமாக இருந்து வழிகாட்டுதல் இருக்கவேண்டும் என்று வழுக்கிவிடும் வழிகாட்டுதலில் இன்றையச் சூழலில் இல்லாமல் இல்லை. அதனால் இறைப் பொருத்தத்தை பெற்றவர்கள் வழிகாட்டுதல் தவறாக புறக்கணிக்கப்படுதல் அறிவுடமையாகா.

  ஏன் இதை எழுதுகிறேன் என்றால் ? தாங்கள் //குர்-ஆனையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் மக்கள் அனைவருக்கும் வலியுறுத்தவே நானும் ஏதோ எழுதி வருகிறேன், பாடுகிறேன்.// என்று எழுதியதில் என் கருத்து தவறாகப் புரிந்துவிட்டதோ என்ற எண்ணத்தில் எழுத நேர்ந்தது.

  நன்றி !

  ReplyDelete
 11. அறிஞர் அதிரை சித்திக் அவர்களே !

  //
  எதாவது ஒரு மதத்தையோ/மார்கத்தையோ விளக்கம் தெளிவுபெற எடுத்தாள்வது புரிதலுக்கு துணைபுரியும் என்பதால், அவற்றில் ஒன்றான இஸ்லாமியத்தை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்துதல் தவறாகா.
  //

  என்று எழுதிய இக்கருத்தை தாங்கள் படித்திருப்பீர்கள். எனது நோக்கம் எதயையும் மிகைப்படுத்தியோ அல்லது தாழ்வுபடுத்தியோ எழுதும் நோக்கம் இல்லை. பெருமானாரின் வழிகாட்டுதலும் அவ்வாறுதானே உள்ளது.

  எழுதும் கருத்துக்கள் பொதுவானது. ஆனாலும் உண்மைகள் வழியுறுத்தப்படும்.

  நன்றி !

  ReplyDelete
 12. அன்பின் நபிதாஸ்,

  சற்றே முரண்படுகிறீர்கள் பாருங்கள்.

  >>>>வேதம் முக்காலத்திற்கும் வழிகாட்டும். அதனைத்தான் இமாம்கள் அவ்வப்பொழுது ஏற்படும் சிக்களுகளுக்கு வேதத்திலிருந்தே அதன் கருத்துக்கு மாற்றமில்லாமல் வழிகாட்டியுள்ளனர்.<<<<<<

  >>>>>>இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்று சிந்தனையில் கொண்டாலும்; முகம்மதியர்; முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களா அல்லது அல்லாஹ் சொல்லியிருக்கின்றானா என்றுதான் கவனத்தில் கொள்ளவேண்டும்.<<<<<<

  இதனால்தான் குர்-ஆனை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். குர்-ஆனில் என்ன சொல்லப்படவில்லை என்று சிந்தித்துப் பாருங்கள். அப்படி ஏதும் இல்லை. சற்றே அறிவோடு அனுகினால் போதும், குர்-ஆனில் எல்லாம் உள்ளது என்பது புரியும். அதையன்றி வேறேதும் அவசியம் இல்லை.

  அறிஞர்களிகளின் கருத்துக்களை வாசிக்கிறேன். ஆனால் அது அவர் கருத்து, குர்-ஆன் சொல்வதல்ல என்பதில் திடமாய் இருக்கிறேன்.

  ஆகவேதான் எனக்கு பி.ஜே, சாகிர், பிலால் பிலிப்ஸ் போன்று ஆயிரம் பேர் சொன்னாலும், குர்-ஆன் என்ன சொல்கிறது என்று உடனே குர்-ஆனைத் திறந்துவிடுவேன்.

  இவர்களெல்லாம் இவர்களின் அறிவுக்கேற்பவும் அனுபவத்திற்கேற்பவம்தான் சொல்வார்கள். அதைத்தாண்டி சொல்ல முடியுமா என்ன?

  ReplyDelete
 13. அன்பின் அன்புடன் புகாரி அவேகளே !

  முரண்பாடுகள் கருத்துக்கோர்வையில் இல்லை. முரண்பட்ட வாக்கியங்கள் ஒருங்கே காண எவ்வாறு அவ்வாறில்லாமல் போகும்.

  இன்று இவ்வாறுதான் வேதத்தில் இடையிடையே கருத்துக்களை வெட்டி தன் நோக்கத்தை நிறைவு செய்து தன்னை ஏமாற்றிகொள்கிறார்கள்.

  அவரவர் பழக்கங்களை குறைகாண்பது வேண்டியதில்லைதான். அவர்களுக்கு நன்மை பயக்குமானால் அவர்கள் அதனை கைவல்யம்கொள்வது அவர்களுக்கு நியாயமாகப்படலாம்.

  நோக்கிற்கேற்ப கவனம் செல்லத்தானே செய்யும்.

  விளக்கம் எழுதியதில் ஒரு எழுத்துப்பிளையைத்தவிர கருத்துப்பிழை இல்லை. ( வேதக் கருத்துச் சற்றின் என்பதை வேதக் கருத்துச் சாற்றின் என்று படிக்கவும். )

  பெருமான் (ஸல்) அண்ணவர்களின் கொள்கை, மாற்றமில்லாது விளக்கங்களை தந்தவர்கள் இமாம்கள். அவ்வாறு தானே வழிகாட்டமுடியும்.

  தாங்கள் தந்த இணைய விலாசத்தில் சொடிக்கியத்தில்
  கிடைத்தவை இதோ...

  சுன்னத் ஜமாஅத் நிலைப்பாடு:
  இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனையோ, ஹதீசையோ விளங்கமுடியாது. எனவே சில வசனங்களையும் சில ஹதீஸ்களையும் இமாம்கள் இல்லாமல் புரியவும் விளங்கவும் முடியாது.

  தவ்கித் ஜமாஅத் நிலைப்பாடு : மேற்கண்டவைகளுக்கு முற்றிலும் மாற்றமானவைகள்.

  ReplyDelete
  Replies
  1. >>>>>>>>>>>>>>
   சுன்னத் ஜமாஅத் நிலைப்பாடு:
   இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனையோ, ஹதீசையோ விளங்கமுடியாது. எனவே சில வசனங்களையும் சில ஹதீஸ்களையும் இமாம்கள் இல்லாமல் புரியவும் விளங்கவும் முடியாது.

   தவ்கித் ஜமாஅத் நிலைப்பாடு : மேற்கண்டவைகளுக்கு முற்றிலும் மாற்றமானவைகள்.<<<<<<<<<<<<<<<<<

   இவர்கள் வாழ வேண்டுமே ;-)

   இதைத்தான் நபிதாஸ் ஆரம்பம் முதலே இடைத்தரகர்கள் வேண்டாம் என்றேன்.

   இறைவனும் நாமும் நேர் கோட்டில் இருக்கிறோம்.

   இறைவன் நம் பிடரி நரம்புக்கும் அருகாமையில் இருக்கிறான்.

   இவர்கள் எங்கே இருக்கிறார்கள் ;-)

   குர்-ஆனை பொருள் உணர்ந்து வாசிப்போம், இறைவன் என்றும் நம் துணை நிற்பான்.

   மற்றபடி இந்த முரண்பாட்டுக்காரர்களை புரிந்துகொள்வது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஏற்றது.

   அன்புடன் புகாரி

   Delete
 14. //இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனையோ, ஹதீசையோ விளங்கமுடியாது. எனவே சில வசனங்களையும் சில ஹதீஸ்களையும் இமாம்கள் இல்லாமல் புரியவும் விளங்கவும் முடியாது.//

  ஆம். உதாரணமாக, “நீங்கள் மதுவருந்திய நிலையில் தொழ வேண்டாம்” என்னும் கருத்துப்பட ஒரு வசனம் இருக்கின்றது என்றால், நேரடியாக விளங்குவது தவறான பொருளைத் தரும், ஆனால், அவ்வசனம் இறங்கிய வரலாறு, பின்னணி, சம்பவம் இவைகளை வைத்து கண்மணி நபிகளார்(ஸல்) அவர்கள் விளக்கியதை சஹாபாக்கள் (ரழி அன்ஹூம்) குறிப்பெடுத்து ஹதீஸ்களில் கோத்ததை வைத்து அதனடிப்படையில் இமாம்களின் தஃப்சீர் கொண்டு விளக்கினாற்றான் நாம் அதன் உண்மையான பொருளை விளங்க முடியும்.

  அவ்வசனம் ஆரம்ப கட்டத்தில் வந்தது என்றும், பின்னர் முழுவதுமாக மது தடை செய்யப்பட்டது என்றும் எப்படி விளங்குவீர்கள், அதற்கு மேலே கூறிய அம்சங்களான,

  வசனம் இறங்கிய இடம், காலம், பின்னணி, சம்பவம் யாவும் கோத்து ஒரு விளக்கவுரை இன்றி எளிதில் உணர இயலாது, இது ஓர் உதாரணம் மட்டும் தான், அல் குர் ஆன் உடையாக விளக்க உரையாகவே நபிகளார் (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என்ற கருத்தின் ஆழமான பொருள் இதுதான்!

  “உங்கள் மனைவிகள் உங்கட்கு விளைநிலங்கள் போல” என்ற கருத்துபட ஒரு வசனம் இருக்கின்றது என்றால், அதனை விளக்க நபிகளார்(ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் பதியப்பட்ட ஹதீஸ்கள் நமக்குப் பதவுரை=பொழிப்புரை=விளக்கவுரை.

  எல்லாவற்றிற்கும் மேலாக, இக்லாஸ் என்னும் உளத்தூய்மை, அறபு மொழி இலக்கணத்தில் நுண்மான்நுழை புலம் என்னும் பேராற்றல் மிக்கப் புலமை, பேணுதல் என்னும் சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் இன்னபிற நற்குணங்களின் சிகரங்களாய் விளங்கிய இமாம்களின் ஆய்வுரைகளின்றியும் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களை உணர இயலாது..

  புத்தகங்களைப் படிக்கலாம்; ஆனால் குர் ஆனைப் படிப்பதல்ல;ஓதுதல் என்னும் பேணுதலான முறையில் இருந்து ஓதியுணர்ந்தாற்றான் அந்த குர் ஆனும் நமக்கு விளக்கம் தரும்; வெறும் நுனிப்புல் மேய்வதல்ல அது!
  அப்படி ஓதவும்; அதனை உணரவும் சும்மா கால் மேல் கால் போட்டுப் படிக்கும் சாதாரண மனித நூலன்று; அல் குர் ஆன் இறைவேதம்;அதனைச் சொல்லிக் கொடுப்பவர் முன்னிலையிலும், விளக்கம் தருபவர் முன்னிலையிலும் கால்மடக்கி, கைகட்டிக் கேட்டால் தான் அந்த “வஹி”யின் பர்கத் என்னும் ஆசி கிட்டும்!

  பொத்தாம் பொதுவான ஒரு நூலாக எண்ணியும், நுனிப்புல் மேய்ந்தும் “பகுத்தறிவு” மட்டும் போதும் என்றும் படித்தால் இப்படிப் பட்ட விதண்டாவாதங்களால் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும்.

  இற்றைப் பொழுதில் உள்ளக் கல்வியின் தரம் /ஒழுக்கம் இன்மைக்குக் காரணம் என்ன?

  அற்றைப் பொழுதின் ஆன்மீகம், பேணுதல், குருமார்கள், ஆசான்கள், இமாம்கட்குக் கொடுத்த கண்ணியம் மரியாதை எடுபட்டதே காரணம்.

  ReplyDelete
 15. \\ அல் குர் ஆன் உடையாக\\ அல் குர் ஆன் உடைய என்று திருத்தி வாசிக்கவும்; அச்சுப்பிழைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 16. அன்பு நண்பர் கவித்தீபம் அப்துல் கலாம்,

  அஸ்ஸலாமு அலைக்கும்.

  நாமெல்லாம் குர்-ஆனைப் பொருள் உணர்ந்து வாசிக்கக் கூடாது என்கிறீர்களா?

  பிடரி நரம்புக்கும் அருகாமையில் உள்ள இறைவன் இதனால் நம்மை தீய பாதையில் செலுத்திவிடுவானா?

  நீங்கள் மனனம் செய்வதற்காகவே குர்-ஆனை மிக எளிமையாக யாம் தந்துள்ளோம் என்று இறைவன் கூறுகிறான்.

  வேறு யார் கூறவேண்டும்?

  குர்-ஆன் முழுமை பெற்ற நூல் என்று குர்-ஆன் சொல்கிறது. வேறு யார் சொல்ல வேண்டும்?

  அன்புடன் புகாரி

  ReplyDelete
 17. அன்பின் நண்பா, கனடாக் கவிஞர் புகாரி, வ அலைக்கும் சலாம்.

  நீங்களும் ஒரு மனிதர் தான்; அல் குர் ஆன் இப்படி சொல்லுகின்றது என்று நீங்கள் சொன்னதும் நாங்கள் உங்களின் கருத்தை ஏற்கின்றோம் என்றால், அல்லாஹ் நேரடியாக எமக்குச் சொல்வதை உங்கள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்வதாகத் தானே அதன் பொருள். ஆனால் உங்களை ஏற்கலாம்; பல ஆண்டுகள் ஆய்வுகள் செய்த ஒழுக்கம் பேணுதல் நிறைந்த அந்த ஆசான்களை மதித்து அவர்கள் அறிவுக்கு எட்டிய விளக்க்த்தை (இறைவனும் குர் ஆனிலேயே சொன்னபடி “அறிவுடையோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்”)க் கேட்டுத் தெளிவு பெறலாம் அல்லவா>

  குர் ஆனில் தொழுகைக் கடமையாக்கப்பட்டுள்ளதை அறிந்த நாம், எத்தனை ரக் அத், எப்படி நிற்பது, குனிவது என்ன ஓதுவது என்பதற்கு வழிகாட்டுதல் நபிகளார்(ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் கோத்த ஹதீஸ்களும் அதிலிருந்து நுணுக்கமான விடயங்களை சேகரித்த இமாம்களும் நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்,

  மாதா, பிதா போல் குரு-ஆசான் - உஸ்தாத்- இமாம் இன்றி நமக்கு வழிகாட்டுதல் எப்படிக் கிட்டும்?

  குர்-ஆனை இறக்கி வைத்து மட்டும் இருக்காமல், இந்தக் குர் ஆனை உங்கட்கு விளக்கும் அந்த நபிகளார்(|ஸல்) அவர்களைப் பின்பற்றுங்கள் என்றும் கூறியது ஏன்? நமக்கு அந்த நபிகளார்(ஸல்) அவர்களைத் தெரியாது அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வு வாக்குகளைக் கஷ்டப்பட்டுக் கோத்துத் தொகுத்தளித்த இமாம்கள் தான் நமக்குக் காட்டித் தந்தவர்கள்;முன்னோடிகள். அவர்கட்குப் பின் வந்த உலமாக்களில் வேறுபாடுகள் இருப்பினும் நாம் தெளிவுடன் அணுகினால் நமக்கு விளக்கம் கிட்டும்.

  ReplyDelete
 18. அன்பின் கலாம்,

  நான் சொல்கிறேன் என்பதற்காக எவராவது நான் சொல்வதைக் கேட்டால், அதைவிட கேடு இஸ்லாத்திற்கு வேறில்லை.

  குர்-ஆன் கண்முன்னே இருக்கிறது. நான் சொல்வதை அதனோடு ஒப்பிட்டு பின் ஏற்றால்தான் அது அறிவுடைமை. அந்த அறிவுடைமையை இஸ்லாம் ஒவ்வொரு இஸ்லாமிடமும் எதிர்பார்க்கிறது.

  எனக்கு அறிஞர்கள் சொல்லும் கருத்துக்களோ, விளக்கங்களோ ஏற்றுக்கொள்ள முடியாதவையோ கசப்பானவையோ அல்ல. ஆனால் அவர்கள் குர்-ஆனை விட்டுவிட்டு சொந்தக் கதை பேசத்தொடங்கினால் அங்கே நான் விலகிநிற்பேன்.

  அதை எனக்குக் கற்றுத் தருவது குர்-ஆன் தான்.

  குர்-ஆன் வசனம் ஒன்று, இறைவனால் தடுக்கப்படாதவற்றைத் தடுத்ததாகக் கூறுவது நிச்சயமாக கூடாதது என்று சொல்கிறது.

  அதை நாம் செவிகொண்டு கேட்கவேண்டும் அல்லவா?

  அன்புடன் புகாரி

  ReplyDelete
 19. அன்பின் புகாரி அவேகளே !

  இறைவசனத்தை யார் உதவியுமின்றி விளங்கிகொள்ளுதல் என்ற உயர்நிலை உண்மையில் மிகச் சிறந்த நிலை.

  தாங்கள்
  //இறைவன் நம் பிடரி நரம்புக்கும் அருகாமையில் இருக்கிறான்.//
  என்ற வசனத்திற்கு விளக்கம் தந்ததால் மிகவும் நன்று.

  நன்றி !

  ReplyDelete
  Replies
  1. அன்பி நபிதாஸ்,

   அந்த உயர்ந்த நிலையை அடையவே இறைவன் மனிதர்களுக்கு குர்-ஆனை எளிமையாகத் தந்திருப்பதாகக் கூறுகிறான்.

   மொழி அறிஞர்கள், எளிமையான மொழியாக்கங்களை ஏராளமாகக் கொடுத்துள்ளனர்.

   குர்-ஆனைக் கற்றுணர்வதில் யாதொரு சிக்கலும் இல்லை. இல்லவே இல்லை.

   இதோ மொழியறிஞர்களின் சேவைகளைப் பாருங்கள்:

   * * *

   50:16.
   நாம் மனிதனைப் படைத்தோம்
   அவன் மனம் அவனிடம்
   என்ன பேசுகிறது என்பதையும்
   நாம் அறிவோம்
   அன்றியும்
   அவன் பிடரி நரம்பை விட
   நாம் அவனுக்குச்
   சமீபமாகவே இருக்கின்றோம்.

   50:16 வசனம்
   وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ

   http://quran.com/50/16
   http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=50&verse=16#(50:16:1)

   * * *

   Sahih International
   And We have already created man and know what his soul whispers to him, and We are closer to him than [his] jugular vein

   Muhsin Khan
   And indeed We have created man, and We know what his ownself whispers to him. And We are nearer to him than his jugular vein (by Our Knowledge).

   Pickthall
   We verily created man and We know what his soul whispereth to him, and We are nearer to him than his jugular vein.

   Yusuf Ali
   It was We Who created man, and We know what dark suggestions his soul makes to him: for We are nearer to him than (his) jugular vein.

   Shakir
   And certainly We created man, and We know what his mind suggests to him, and We are nearer to him than his life-vein.

   Dr. Ghali
   And indeed We already created man, and We know whatever his self whispers within him, and We are nearer to him than the jugular vein.

   * * *

   இதோ வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு
   Translation Arabic word Syntax and morphology
   (50:16:1)
   walaqad
   And certainly CONJ – prefixed conjunction wa (and)
   மேலும் நிச்சயமாக
   EMPH – emphatic prefix lām
   CERT – particle of certainty
   الواو عاطفة
   اللام لام التوكيد
   حرف تحقيق

   (50:16:2)
   khalaqnā
   We created V – 1st person plural perfect verb
   நாம் படைத்தோம்
   PRON – subject pronoun
   فعل ماض و«نا» ضمير متصل في محل رفع فاعل

   (50:16:3)
   l-insāna
   man N – accusative masculine noun
   மனிதனை
   اسم منصوب

   (50:16:4)
   wanaʿlamu
   and We know CONJ – prefixed conjunction wa (and)
   மேலும் நாம் அறிவோம்
   V – 1st person plural imperfect verb
   الواو عاطفة
   فعل مضارع

   (50:16:5)

   what REL – relative pronoun
   என்ன
   اسم موصول

   (50:16:6)
   tuwaswisu
   whispers V – 3rd person feminine singular imperfect verb
   ரசியமாகச் சொல்வதை
   فعل مضارع

   (50:16:7)
   bihi
   to him P – prefixed preposition bi
   அவனுக்கு
   PRON – 3rd person masculine singular personal pronoun
   جار ومجرور

   (50:16:8)
   nafsuhu
   his soul, N – nominative feminine singular noun
   அவன் மனம்
   PRON – 3rd person masculine singular possessive pronoun
   اسم مرفوع والهاء ضمير متصل في محل جر بالاضافة

   (50:16:9)
   wanaḥnu
   and We CONJ – prefixed conjunction wa (and)
   மேலும் நாம்
   PRON – 1st person plural personal pronoun
   الواو عاطفة
   ضمير منفصل

   (50:16:10)
   aqrabu
   (are) nearer N – nominative masculine singular noun
   நெருக்கமாக
   اسم مرفوع

   (50:16:11)
   ilayhi
   to him P – preposition
   அவனுக்கு
   PRON – 3rd person masculine singular object pronoun
   جار ومجرور

   (50:16:12)
   min
   than P – preposition
   விட
   حرف جر

   (50:16:13)
   ḥabli
   (his) jugular vein. N – genitive masculine noun
   பிடரி நரம்பு
   اسم مجرور

   (50:16:14)
   l-warīdi
   (his) jugular vein. N – genitive masculine noun
   பிடரி நரம்பு
   اسم مجرور
   Delete
 20. //எனக்கு அறிஞர்கள் சொல்லும் கருத்துக்களோ, விளக்கங்களோ ஏற்றுக்கொள்ள முடியாதவையோ கசப்பானவையோ அல்ல. ஆனால் அவர்கள் குர்-ஆனை விட்டுவிட்டு சொந்தக் கதை பேசத்தொடங்கினால் அங்கே நான் விலகிநிற்பேன்.//

  அல்-ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்; உங்களின் இந்த வரிகள் அனைத்தையும் முழுமையாக வழிமொழிகிறேன்; உடன்படுகிறேன்; ஒப்புக்கொள்கிறேன்.

  இதுபோதும்.

  ReplyDelete
 21. நன்றி நண்பர் அபுல்கலாம்

  ReplyDelete
 22. அன்பின் புகாரி அவர்களே !

  மீண்டும் தங்களுக்கு நான் எழுதுகிறேன். தாங்கள் வேத வசனங்களுக்கு இலகுவாக புரிந்த விளக்கங்களை எங்களுக்கும் தெரிவித்தால் மிகவும் நல்லது.

  அவசியம் தாங்கள் புரிந்ததை மட்டும் எழுதவும்.

  மற்றவர்கள் உதவி வேண்டியதில்லை என்பது உங்கள் கருத்து. இருப்பினும் நாங்கள் நீங்கள் புரிந்து கொண்ட விளக்கங்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவசியம் எழுதுங்கள்.

  இறைவசனத்தை யார் உதவியுமின்றி விளங்கிகொள்ளுதல் என்ற உயர்நிலை உண்மையில் மிகச் சிறந்த நிலை.

  தாங்கள் வேதத்தில் இருந்து எடுத்து எழுதிய
  //இறைவன் நம் பிடரி நரம்புக்கும் அருகாமையில் இருக்கிறான்.//
  என்ற வேத வசன மொழிபெயர்ப்பிற்கு தங்கள் புரிந்ததை எங்களுக்கு விளக்கம் தந்ததால் மிகவும் நன்று. விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறோம்.

  நன்றி !

  ReplyDelete
 23. அன்பின் நபிதாஸ்,

  நீங்கள் சொல்வது புரியவில்லை.

  >>>தங்கள் புரிந்ததை எங்களுக்கு விளக்கம் தந்ததால் மிகவும் நன்று. <<<

  என்று விளக்கம் தந்துவிட்டேன் என்கிறீர்கள்

  >>>>விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறோம்.<<<<

  இப்படி எழுதி விளக்கம் இனியும் தாருங்கள் என்கிறீர்கள்.

  என்னதான் கேட்கிறீர்கள் நபிதாஸ்?

  எனக்கு விளங்கவில்லையே?

  ReplyDelete
 24. அன்புடன் புகாரி தங்களுக்கு,

  //இறைவன் நம் பிடரி நரம்புக்கும் அருகாமையில் இருக்கிறான்.//

  இதற்கான விளக்கம் தாங்கள் இலகுவாக புரிந்திருப்பீர்கள். அதனை எங்களுக்கு விளக்கவும்.

  நன்றி !

  ReplyDelete
 25. அன்பின் நபிதாஸ்,

  இதில் விளக்குவதற்கே ஏதும் இல்லையே. தெளிவான வசனமாகத்தானே இருக்கிறது?

  உங்களுக்கு எதிலேனும் ஐயம் இருந்தால் கூறுங்கள். என் சிந்தையின் விளக்கத்தைத் தருகிறேன்.

  தெளிவான எளிய குர்-ஆன் வசனத்திற்கு ஏன் விளக்கம் என்று அறியாமல் நான்....

  அன்புடன் புகாரி

  ReplyDelete
 26. அன்புடன் புகாரி அவர்களே !

  பிடரி நரம்பு எது ?
  பிடரி நரம்புக்கும் அருகாமை எது ?
  மற்ற நரம்புகளுக்கு அருகாமையில் அவன் நிலை என்ன ?

  தாங்கள் விளக்கம் தாருங்கள்.

  நன்றி !

  ReplyDelete
 27. அன்பின் நபிதாஸ்,

  பிடரி நரம்பு என்பது ஒரு குறியீடு. அதன் பொருள். இறைவன் உனக்கு மிக மிக நெருக்கமாக இருக்கிறான்.

  உன் இதயம் உன்னிடம் பேசுவதையும் அவன் அறிபவனாக இருக்கிறான்.

  அவனறியாமல் நீ ஏதும் செய்வதற்கில்லை.

  அவனறியமாட்டான் என்று நீ தவறாக எண்ணாதே.

  My manager is strict. he is always on my shoulder என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுவும் ஒரு குறியீடுதான். அதன் பொருள் எப்பவும் என் மேலதிகாரி என்னைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறான்.

  குர்-ஆன் அழகிய உரைநடையும் அற்புதமான கவிதை நடையும் கலந்த ஒருவ்கையான புதுக்கவிதை நடையில் ஓசை நயத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

  ReplyDelete
 28. அன்புடன் புகாரி அவர்களே !

  //பிடரி நரம்பு என்பது ஒரு குறியீடு. அதன் பொருள். இறைவன் உனக்கு மிக மிக நெருக்கமாக இருக்கிறான்.//
  நல்லது.
  உங்கள் விளக்கப்படி மிக மிக நெருக்கமாக இருக்கிறேன் என்றிருக்கலாமே.
  ஏன் பிடரி நரம்பு என்று சொல்ல வேண்டும் ?

  நன்றி !

  ReplyDelete
 29. அன்புடன் புகாரி அவர்களே !

  //உன் இதயம் உன்னிடம் பேசுவதையும் அவன் அறிபவனாக இருக்கிறான்.//
  அவ்வாறானால் இறைவனே என்று சதா தன்னை அர்ப்பணித்தவர்கள், அவன் கருத்துக்கு மாற்றமாகவும் சொல்வார்களா?

  நன்றி !

  ReplyDelete
 30. அன்பின் நபிதாஸ்,

  >>>ஏன் பிடரி நரம்பு என்று சொல்ல வேண்டும் ?<<<<<

  குறியீடு என்று சொன்னேனே? உதாரணமும் தந்தேனே?

  >>>>இறைவனே என்று சதா தன்னை அர்ப்பணித்தவர்கள், அவன் கருத்துக்கு மாற்றமாகவும் சொல்வார்களா?<<<<

  சொல்லக்கூடும் ஏனெனில் அவர்களுக்கும் அறியாமை உண்டு. சொந்தக் கருத்து உண்டு.

  அன்புடன் புகாரி

  ReplyDelete
 31. அன்புடன் புகாரி அவர்களே !

  //
  >>>ஏன் பிடரி நரம்பு என்று சொல்ல வேண்டும் ?<<<<<

  குறியீடு என்று சொன்னேனே? உதாரணமும் தந்தேனே?
  //

  அவ்வாறு வேதத்தில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரம் தாருங்கள்.

  //
  >>>>இறைவனே என்று சதா தன்னை அர்ப்பணித்தவர்கள், அவன் கருத்துக்கு மாற்றமாகவும் சொல்வார்களா?<<<<

  சொல்லக்கூடும் ஏனெனில் அவர்களுக்கும் அறியாமை உண்டு. சொந்தக் கருத்து உண்டு.
  //

  சொல்லக்கூடும் என்ற பதில் யார் எழத வேண்டும் ?

  அர்ப்பணிப்பு என்பதில் தாங்கள் புரிந்த விதம்தான் என்ன ?

  நன்றி !

  ReplyDelete
 32. பதிவுக்கு நன்றி.

  அருமையான குறுந்தொடர், தொடர வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers