.

Pages

Tuesday, August 27, 2013

சேராத இடம் தன்னில் சேர வேண்டாம் ! சேரனே உன் தந்தை மறக்க வேண்டாம் !!

காதல் எல்லோருக்கும் ஏதோ ஒரு சமயத்தில் வந்து போவதுதான் சிலருக்கு வந்து வந்து போகும். சிலருக்கு வந்தது வெந்து சாகும் அளவிற்கு நொந்து போகும் காதலித்து ஓடியவளை, தந்தையாகிய பொறுப்பாளன் காப்பாற்ற நினைக்கையில் அவன் பெற்ற மகளாலையே கொலை முயற்ச்சி பழி சுமத்தப்படுகிறான் இது ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதுபோல், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போல்.

காதல் தீண்டத் தகாததா ?
காதல் பெருங்குற்றமா ?
காதல் செய்வது என்ன பாவம் ?

என்று கேட்கும் காதல் ஆதரவாளர்களே !

காதலனோடு ஓடிப்போய் பெற்றோருக்கு எதிராக காவல் நலையத்தில் புகார் தருவது அவர்களை அலைகழிக்க வைப்பதும் என்ன நியாயம் சொல்வீர்கள், பாசமாய் வளர்த்து ஆளாக்கி கடைசியில் காதல் என்று காரணம் சொல்லி பெற்றோரை பரிதவிக்க விடுவது என்ன நியாயம்.

சேரனின் மகள் தாமினி விவகாரம் கோர்ட் வரை சென்று இரண்டு வாரம் கழித்து நான் அப்பாவுடனே செல்ல விரும்புகிறேன் என்று தாமினி கூற காதலன் அதிர்ச்சியில் உறைந்து போய் இவ்வளவு நேரம் என்னுடனே இருப்பேன் என்று கூரியவள் எப்படி மாறிப்போனால் என்னால் நம்ப முடியவில்லை என்று  பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கிறார் !

20 வருடங்களாக தாய் தந்தையரின் அரவணைப்பில் இருந்தவள் அவர்களை விட்டு உன்னிடம் வந்தாலே! அதற்காக பெற்றோர்தான் ஆச்சரியப்பட வேண்டும், கவலைப்படவேண்டும், கண்ணீர் சிந்த வேண்டும்.

பெற்றோரிடம் மகள் போய் சேர்ந்ததினால் காதல் தோற்பதாக நினைக்க வேண்டாம் பெற்றோர் பாசம் ஜெயித்ததாக நினையுங்கள் பெற்றோர் கரம் பிடித்து தந்தவளை காதலியுங்கள் கண்ணியமுடன் மாமனார், மாமியார்களை நேசியுங்கள் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

பெற்றோரிடம் போய் சேர்ந்த தாமினி பெற்றோரை மனம் குளிர செய்து விட்டால். சந்ரு [ காதலன் ]அவர்களே கவலையில் இருந்து விடுபடுங்கள் உங்கள் காதல் உண்மையெனில் நேரில் சென்று தாமினி பெற்றோரை அணுகி உங்கள் மீது தவறான எண்ணம் கொண்டிருந்தால் அதை தெளிவுபடுத்தி அவர்களுக்கு பிடித்தவராக நடந்துகொண்டு அவர்களிடம் போய் பெண் கேளுங்கள்... எந்த தகப்பனும் பாழுங்கிணற்றில் தன் பிள்ளையை தள்ளமாட்டான்.

'பிள்ளைய பெத்தா கண்ணீரு... தென்னைய வளர்த்தா இளநீரு...' என்று பாட வைக்காதீர் அன்பர்களே !
மு.செ.மு.சபீர் அஹமது

5 comments:

 1. ஆஹா அருமையான அறிவுரை !

  பட்டுதான் சிலர் திருந்த வேண்டுமென்று நினைத்தால் என்னதான் நாம் செய்ய முடியும் ?

  ReplyDelete
 2. சேரன் அவர்கள் சினிமா கலைஞராய் இருந்தாலும் அவரும் ஒரு சராசரி தகப்பன் தான் அவரின் பரிதவிப்பு எல்லா தகப்பனுக்கும் வருவதுதான்
  சிறு வயதில் ஐஸ்கிரீமுக்கும் சாக்லேட்டுக்கும் ஆசைப்படும் பொழுது பெற்றோர்கள் தடை போட்டது நாம் பெரியவங்க ஆன பின்பு அது சரியென்று படும் அதுபோல் காதல் இளமை காலத்தில் சரியாகப்பட்டது பெற்றோர்கள் ஆனபின்பு காதலை தோணும்

  ReplyDelete
 3. எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் வளரும் விதத்திலே.!

  அளவுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பதாலும் பிள்ளைகளுக்குப் பெற்றோகள் மீது உள்ள பய உணர்வு மறைந்து எதையும் செய்யலாம் என்ற மனத்துணிவு மேலோங்கி தனது வாழ்க்கையை இப்படி தானாகவே தேடிக்கொள்ளும் எண்ணம் ஏற்ப்பட்டு விடுகிறது.

  அது சிலருக்கு நல்லதாக அமையும் பலருக்கு பாதகமாக மாறிவிடும்.

  ReplyDelete
 4. சேரன் இயக்கம் சினிமாவில் காதலனே கதாநாயகன் ..

  நிஜ வாழ்வில் மட்டும் கதறி அழும் தந்தை

  சேரன் இனியாவது நிஜ வாழ்வின் நிதர்சன

  உண்மையை திளிவாய் சினிமாவில் காண்பிக்கட்டும் .

  பிள்ளைகளே தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

  என்பதை தெரிந்து கொள்ளுங்கள் ...

  ReplyDelete
 5. பதிவுக்கு நன்றி.

  அருமையான கட்டுரை, மனிதன் உணருவானா?

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers