.

Pages

Saturday, August 10, 2013

[ 7 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ உழைப்பால் உயர்ந்தவன் ]

அரபியிடம் சேவை புரிபவர்கள் பொறுமையாக கனிவான சேவை செய்து அவர் தம் அன்பை பெற்று வாழ்வில் பெரும் முன்னேற்றம் அடைந்தவர்கள் பலர் உண்டு. அதில் நான் கண்ட நிகழ்வை இங்கு பதிய விரும்புகிறேன்.

அரபு நாடுகளில் கிளீனிங் கம்பெனி அதிக மாக உள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு ஆபீஸ் பாய் மற்றும் உதவியாளர் போன்ற சேவைகளும் உபரியாக செய்யும். உயர் பதவிகளில் உள்ள அரபிகளுக்கு நேரடி தொடர்புகள் உதவியாளர் மற்றும் ஆபிஸ்பாய் களுக்கு  மட்டுமே.!

இது போன்ற சந்தர்பங்களில் ஆபிஸ் பாய் இன்முகத்துடன் பெரிய பதவியில் இருக்கும் அரபிக்கு சேவை புரிவர் ஆனால் கம்பெனியின் நேரடி அலுவலராக செயல்படாத அந்த ஆபீஸ் பாய்க்கு க்ளீனிங் கம்பெனியின் சொற்ப தொகையே சம்பளமாக கிடைக்கும். இது அரபிக்கும் தெரியம் எனவே மாதமாதம் கணிசமான தொகையை அன்பாக அளிப்பார். இது பொதுவான நடை முறை.

ஒருவர் வாழ்வில் நடந்த சோதனைக்கு பிறகு கிடைத்த சாதனை பற்றி இந்த வாரம் கூறுகிறேன்...

ஒருநாள் ஆபீஸ் பாய் ..அரபிக்கு சேவை செய்யும்போது ..இன்முக சேவை இல்லாது சோகமாய் சேவை செய்தான் அந்த ஆபீஸ் பாய்...காலை நேரம் அலுவல் துவங்கும் தருவாயில் ஆபீஸ் பாயின் சோகமான முகம் கண்டு அதிர்ந்தார் !

ஏன் சோகமாய் இருக்கிறாய் ? என கேட்டார்...

எங்கள் கம்பெனியில் ஆள் குறைப்பு செய்கிறார்கள். பலரை ஊருக்கு திருப்பி அனுப்புகிறார்கள். மீதம் இருப்பவர்களுக்கு சம்பள குறைப்பு செய்கிறார்கள். இந்த வேலையால் எனக்கு எதிர் காலம் இல்லை என கூறினான்.

என்ன செய்வதாக உத்தேசம் ? என அரபி கேட்டார்.

இந்தியா சென்று ஜவுளி கடை வைக்க போகிறேன் என்றான்.

அப்படியா ! உனக்கு இந்த நாட்டிலேயே கடை வைத்து தருகிறேன். என கூறி அதன் படியே சிறிய கடையும் வைத்து கொடுத்தார்.

கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கடின உழைப்பின் மூலம் ஊரிலேயே பெரிய கடையாக மாற்றினான். அந்த அரபிக்கு கிடைத்த சம்பளத்தை விட மூன்று மடங்கு பணம் ஈட்டி கொடுத்தான். அவனும் நல்ல நிலைக்கு  வந்தான்.

எனவே அன்பு சகோதரர்களே... நல்ல வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீர்கள்..!

அடுத்த வாரம்... கிராமத்து ராசாவும் !? பட்டணத்து கூசாவும் !? காத்திருங்கள்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

11 comments:

 1. என‌க்கு வ‌ந்த‌ ஒரு மின்னஞ்சலில் ஒரு ஆங்கில குழ‌ந்தை பாட்டை இப்ப‌டி சுவ‌ராஸ்ய‌மாக‌ அர‌பு நாட்டு வாழ்க்கையுட‌ன் ஒப்பிட்டு குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து. இது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லி விட‌ இய‌லாவிட்டாலும் ப‌டிக்கும் பொழுது சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்த‌து. அது இதோ உங்க‌ளுக்காக‌.

  'O' my son ! 'O' my son !- Gulf version!!
  'O' my son ! 'O' my son... YES PAPA !
  Job in Gulf.. YES PAPA !
  Lot of Tension.. YES PAPA !
  Too Much Work.. YES PAPA !
  Family Life.. NO PAPA !
  BP-Sugar.. HIGH PAPA !
  Yearly Bonus.. JOKE PAPA !
  Annual Pay.. LOWEST PAPA !
  Personal Life.. LOST PAPA !
  Promotion Incentive.. HA ! HA ! HA !

  ReplyDelete
  Replies
  1. அபாரம் ..அபாரம் ..

   நான் சொல்ல வந்த கதையை

   ஒரு ரைம்ஸ் மூலம் அழகாய்

   சொல்லி விட்டீர்களே ..அன்பு சகோ ..

   Delete
 2. வளைகுடா வாழ்க்கையில் தனது இள‌மையை தொலைத்து குடும்பத்தினருடன் போதுமான கால‌ங்க‌ளை செல‌வ‌ழிக்க இய‌லாம‌ல் போய் இருக்க‌லாம். ஆனால் அவ‌ர்க‌ளில் பலர் தனது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளாமல் இல்லை என்பதை நாம் மறுக்க இயலாது.

  கிராமத்து ராசாவும் !? பட்டணத்து கூசாவும் !? இந்த வார்த்தையை வாசிக்கும் போதே சிரிப்பு வந்துடுச்சி :) அடுத்தவார தொடரை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றாக சொன்னீர்கள் ..தம்பி நிஜாம்..

   நலமுடன் வாழ்க....

   Delete
 3. வளைகுடா வாழ்க்கை பன்முகப்படைப்பாக சுவராஸ்யமாக செல்கிறது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ...சகோ ..

   படைப்பாளிக்கு .ஊக்கம் தரும் ..விழிப்புணர்வு பக்கம்

   ஒரு புறம் ...நம் வாசக வட்டம் குடும்பம் போல ..

   கலந்துரையாடல் இவைகளால் சுவை கூடத்தான் செய்யும்

   Delete
 4. இக்கட்டுரைக்கு இப்புகைப்படம் பொருத்தம் பலரின் அனுபவங்களை தொகுத்து அளித்தமைக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா ...!

   இந்த தொகுப்பு பிறருக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்

   Delete
 5. படிக்கும்பொழுது மனதில் ஒரு சுகம்.

  வாழ்க ! பாராட்டுகள் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ...நபி தாஸ் அவர்களே ...

   Delete
 6. ஒரு ஆபீஸ் பாய்,கிளினிங் லேபர்,என்பவர் நம்மை பொறுத்தவரை அண்ணனோ,தம்பியோ,மாமாவோ,பெரியப்பாவோ,மகனோ,எல்லாவற்றிர்க்கும் மேல் ஓர் தந்தையோ தான்
  தந்தையை பற்றி ஓர் சிந்தனை வரும் வாரத்தில் [வியாழன்]தங்களோடு பகிர்கிறேன்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers