.

Pages

Thursday, August 15, 2013

எம் தந்தை !

[இறைவன் அருளால்]
விந்தை செலுத்தி
விந்தை புரிந்தவனே !
இப்பந்துலகம்
வந்துதிக்க
காரனியாணவனே
எந்தையே
என் விந்தையே

என் பிஞ்சிப்பாதம்
பூ உலகில்
கால் பதிக்க
விரல் தந்தவனே
உன் இடுப்பளவு
நான் வளர்கையில்
உயரப்பிடித்து
நீ காணாததை
நான் கண்டுகளிக்க
வைத்தவனே
உன் தோல் மட்டம்
நான் எட்ட
தோழனாய் பழகியவனே
எந்தையே
என் விந்தையே !

உன் காதலின் [ தாய் ]
அன்பை
எனக்கும்
பகிர்ந்தளித்தவனே
எந்தையே
என் விந்தையே !

உனது உரிமையை [ சொத்து ]
எனதுரிமையாக்கியவனே
எந்தையே
என் விந்தையே !

தந்தையின் பாசம், அவரின் அரவணைப்பு, கண்டிப்பு, கனிவு, செல்லும் இடமெல்லாம் படிப்பினைகள்,,, பல தருவார் அவர்தான் விந்தையிலும் விந்தை நம் தந்தை இது சிலர்க்கு கிட்ட வாய்ப்பில்லாமல் போகும் காரணம் வேலை நிமித்தமாக தொலைதூற இடங்களில் குடும்பத்தை பிரிந்து இருப்பதால் தான் அந்த துரதிஸ்ட நிலை.
 
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனும் கூற்றிற்கு தந்தையில் சொல் செல் வழியே தனையனை போய்சேர தந்தையின் அறிவுரை கேட்டு அவன் நடந்தானா என தரிந்துகொள்ள பிறரின் உதவிவேண்டும் தந்தைக்கு. போதனைகள் அனைத்தும் மெயில் வழியிலும் Skype யிலும் தான்.
 
பொருள் சேர்க்க தெரிந்த நமக்கு பிள்ளைகளின் வளர்ச்சியை நேரடியாய் பார்க்கும் அனுபவங்கள் மிக குறைவு தந்தையோடு வளரும் பிள்ளைகளுக்கு அவர் வெளியில் அழைத்து செல்லும் பொழுது வாங்கி கொடுக்கும் தீன் பண்டங்கள் பிள்ளைக்கு சேர்க்கிறது [ உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா ] எனவும் தந்தை பார்ப்பார் ஒத்துக்கொள்ளாத பண்டங்களை இனி வாங்கி கொடுக்கமாட்டார். இதுவெல்லாம் வெளிநாட்டு பிரிவில் கிடைக்காது நாம் அனுப்பும் பணம் பிள்ளையின் எல்லா தேவைகளையும் நிறைவு செய்கிறது அது அவன் ஆழ்மனதில் பதிந்துபோய் அவன் பெரியவனாகி நாம் முதியவனாகி பிள்ளையின் ஆதரவு வேண்டில் இருக்கையில் பணம் காசுகள் மட்டும் தாராளமாய் நமை வந்து சேரும் பிள்ளைகள் அருகில் இருக்கும் ஆதரவு தவறிவிடும்.
   
நீண்ட நாள் வெளிநாட்டில் இருந்த நண்பர் ஒருவரை சந்தித்தேன் நலன்கள் விசாரித்துவிட்டு மேல் சொன்ன விஷயங்களை கலந்துரையாடினோம் அத்துனைகளையும் ஒத்துக்கொண்டார் இந்த பிரச்சனைகளுக்காகவே செலவுகளை பார்க்காமல் நான் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டேன் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார் நான் கேட்டேன் உன் குடும்பம் என்றாயே உன் தாயும் தந்தையும் யார் குடும்பம் என்றேன் சிந்தனையை எங்கோ செலுத்தி சிலையாகிப்போனார். இத்துணைக்கும் அவருக்கு கூட பிறந்தவர் யாரும் இல்லை அவரின் பெற்றோர்க்கு அவரே ஆதரவு என்ன செய்ய பொருளாதாரம் படுத்தும் பாடு நமை எப்படியெல்லாமோ வாழவைக்கிறது அடுத்தவாரம் பொருளாதாரம் பற்றி பார்ப்போம்.
மு.செ.மு.சபீர் அஹமது

10 comments:

  1. நல்லதொரு படிப்பினை !

    பெற்றவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஆக்கம்

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தாய்பற்றியே எல்லோரும் எழுத தந்தை பற்றி எழுதி இருப்பதை நான் வரவேற்கிறேன்

    ReplyDelete
  3. ஒரு பொறுப்பான தந்தை பிள்ளை வளர்ப்பில் எப்படி பொறுப்புடன் இருக்கிறார் என்பதை பற்றி கவிதையாகவும் கட்டுரையாகவும் பதிந்திருந்தீர்கள். மிக சிறப்பு.!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies

    1. ///விந்தை செலுத்தி
      விந்தை புரிந்தவனே !
      இப்பந்துலகம்
      வந்துதிக்க
      காரனியாணவனே
      எந்தையே
      என் விந்தையே/// ஆனால் இந்த வரிகள் கொச்சைப்படுத்தியும் விகாரமாகவும் உள்ளது. இதனை இலைமறை காய்மறையாக சொல்லி இருக்கலாம் என்பது என் கருத்து.

      Delete
  4. உன் எண்ணமே உன்விதை
    நல் எண்ணம் உனதென்றால்
    உன் பிள்ளை உன்னைவிடாது.
    விதைத்ததை அறுவடை செய்கிறாய்
    விதைதரும் மரம் பன்பட்டதென்றால்
    விதைத்ததும் பன்பட்டதாகத்தானே வரும்.
    நல்லப் பிள்ளையை பெற
    நல்லவனாக வாழ்வது நம் கையில்.

    கருத்தாக்கத்தை கவனம்கொள்ளும்போது மலர்ந்தவைகள்.

    நல்ல சிந்தனை.

    வாழ்க !

    ReplyDelete
  5. \\விந்தை செலுத்தி\\

    இதில் “செலுத்தி” என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாம். தமியேனும் விந்து என்ற சொல்லை என் இரு கவிதைகளில் பயன்படுத்தியுள்ளேன்; அப்பாடலைத் திருத்தத்துக்கு அனுப்பிய பொழுது அதனுள் ஒற்றுப்பிழைகளும் தளைதட்டலும் மட்டும் திருத்திய ஆசான்கள் இருவரும் (மிகப் பெரும் புலவர்கள்- ஒருவர் முஸ்லிம்; ஒவ்ருவர் ஹிந்து) என் அவ்விரு பாட்லகளிலும் “விந்து” என்ற வார்த்தையைக் குற்றம் காணாமல் விட்டதால் யானும் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை; அவர்களின் திருத்தத்திற்குட்பட்டதால், அடியேனும் அப்படியே வெளியிட்டேன்; அக்கவிதைகள் என் சொந்த வலைத்தளத்தில் (”கலாமின் கவிதைகள்”) கீழ்க்காணும் தலைப்புகளில் காணலாம்:

    1) “பயணங்கள்” (இக்கவிதை இன்ஷா அல்லாஹ் நாளை இங்குப் பதிவில் வரும்)

    2)”பெண்ணைத் தாண்டி வருவாயா?”

    ஒருவேளை மார்க்கச் சட்டம் சொல்லும் வேளையில் கூட “விந்து” என்கின்ற சொல்லை அனுமதிப்பதனால் (”விந்து வெளியானால் குளிக்க வேண்டும்” என்ற சட்டம் சொல்லும் பொழுது) என்னுடைய கவிதைகளில் உள்ள அவ்வார்த்தைகளை ஏற்றிருக்கலாம்.

    ஆனால் இங்குச் செலுத்தி என்ற சொல்லில் அச்செயல் நம் மனக்கண் உருவாகுவது போன்ற ஓர் அசூசை உண்டாகும் என்பது இப்பொழுது புலப்படுவதாக அறிகிறேன்.

    உங்களின் “தந்தை” கவிதைக்கு முன்னர் என் மனத்தினிலுள்ளும் என் வாப்பாவைப் பற்றி (என் உம்மாவைப் பற்றி “அம்மா என்னும் அன்பை நேசி” கவிதை எழுதி விட்டேன்; அக்கவிதைக்குத் தான் எனக்குக் கவித்தீபம் பரிசு கிட்டியது) எழுத வேண்டும் என்று அவாவுற்றிருந்த வேளையில் உங்களின் “தந்தை” கவிதை எனக்கும் ஆர்வத்தை ஊட்டியது.

    தொழிலதிபரின் எழுத்தாற்றல் வளர்க!

    ReplyDelete
  6. கவியன்பனின் வார்த்தைகளை சிறமேர்க்கிறேன். கவிஞ்சர் கூட்டமே எனை வாழ்த்தியது கண்டு மெய்சிலிர்க்கிறேன் பாரதிராஜா படத்தில் வரும் அந்த நான்கு தேவதைகள்போல!

    ReplyDelete
    Replies
    1. ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா. மிக்க நன்றி. உங்களைச் சிறந்த கவிஞராக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன், இந்த கலாம்!

      Delete
  7. தந்தை மீது ..

    தனயன் தனயன் கொள்ளும் பாசம் ...

    வாலிப வயதை கடந்த பின் மரியாதை ..

    பொருளீட்ட ஆரம்பித்த பின்னர் அரவணைப்பு என்று ..

    அனைத்து எதிர்பார்ப்புகளை துளிர் விட செய்யும் படைப்பு

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers