.

Pages

Wednesday, August 21, 2013

நபிதாஸின் அறிவுத்தேன் - குறுந்தொடர்

ஆதிகாலத்திலிருந்து மனிதனுக்கு ஒரு தேடல் இருந்து வருகிறது. தன்னை, மற்ற உயிரினங்களை, பூமி; வானுலகம்; பிரபஞ்சம் இவைகளை படைத்தது யார் ? என்பதே அத்தேடல். இன்றும் பல மதம், மார்கங்கள் வந்தும் இத்தேடல் இவ்வுலகில் தொடர்ந்து இருந்துதான் வருகிறது.

மதம்/மார்கங்கள் அதில் ஒன்றை ஏற்றுக்கொண்ட மனிதன், அதில் அவன் தெளிவின்மையாலும், தெளிவைத் தருபவர்களை தெரியாததினாலும் அல்லது இதற்காக தனி முயற்சிகொள்ளாததினாலும் அல்லது தனது கேள்விகளுக்கு தகுந்த பதில் தன்னைச் சுற்றிவுள்ளவர்களிடமிருந்து கிடைக்காததினாலும், கிடைக்கும் பதில் பொருத்தமின்மையினாலும், அல்லது அதை புரிந்துகொள்ள முடியாமைனாலும் இவ்வாறு பலப்பல காரணங்களினால் படைத்தவன் யார் ? என்புது பரிபூரணமாக புரியாததினால் இவ்வுலகில் இன்னும் இத்தேடல்  இருக்கத்தான் செய்கிறது. அதனாலும் மேலும் நம்பிக்கையில் மனிதன் கட்டுண்டாலும் நாத்திகமும் இவ்வுலகில் இல்லாமல்லாகிடவில்லை.

சிலர் நடத்தும் பாடம் தெளிவாக நன்கு புரியும் என்பதுபோல் சொல்பவர்கள் சொன்னால் புரிந்துகொள்ள முடியாமல் போகாது. அவர்கள் படித்தறிந்ததுமட்டுமல்லாமல் இறைவனை அறிந்தவர்களை அறிந்தவர்கள், அனுபவத்தாலும் இறைவனை அறிந்தவர்கள், அடைந்தவர்கள் அவர்களே மகான்கள் என்ற அந்த சிலர். குறிப்பிட்ட சில வருடங்கள் படித்தவர்கள் எல்லாம் ஞானங்களை, உண்மைகளை, தெளிவாக அறிந்தவர்களாகவும்; அதனை இவ்வுலகிற்கு அறியப்படுத்தியவர்களாகவும் ஆகிவிடவில்லை. இறைநாட்டம் பெற்றவர்களே ஞானங்களை, உண்மைகளை அறிந்து, அடைந்து இவ்வுலகத்திற்கு தந்தனர்.

சிலர் தன்தனது புரிதலுக்கேர்ப்ப ஒவ்வொருவிதமாகத்தான் இறைவனை அறிந்துள்ளனர். ஒவ்வொருவரையும் வினவினால் ஒவ்வொருவிதமான பதில் தருவார்கள்.  பல தீர்க்கதரிசிகள் வந்தும், பல ஞானிகள் தோன்றியும், இவ்வுலகில் தெளிவு புரட்சிகள் செய்தும் அறியாமையும் வாழ்ந்துதான் வருகிறது. அதனால்தான் இருக்கும் மதம்/மார்கங்களிலும் அதனுள் பலப்பிரிவுகள் உண்டாகிவிட்டது. இதை யாரும் மறுக்க முடியாது.
காலத்துக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு காலப்பரிணாம வளர்ச்சிக்கு ஏற்பவும்; அறிவு தெளிவிற்கு ஏற்பவும் தத்துவங்கள் பல வந்தன. துவைதம், விசிஷ்டா துவைதம், அத்வைதம் என்பன அவைகள்.

துவைதம் இதில் இரண்டு உள்ளமைகள் உள்ளன. இறைவன் ஒர் உள்ளமை.
மற்ற உள்ளமையிளிருந்து தனக்கு முற்றிலும் மாற்றமான படைப்பினங்கள் படைக்கப்பட்டுள்ளன என்ற தத்துவம் உடையது.

விசிஷ்டா துவைதம் இதிலும் இரண்டு உள்ளமைகள் உள்ளன.  இறைவன் ஒர் உள்ளமை.  மற்ற உள்ளமையிளிருந்து தனக்கு முற்றிலும் மாற்றமான படைப்பினங்கள் படைக்கப்பட்டுள்ளன. மற்றும் படைப்பினத்தில் சில நல்லொழுக்கமுடன் வாழ்ந்து வருபவர்களிடம் இறைவன் வாசம்புரிகிறான் என்ற தத்துவத்தில் உள்ளது.

அத்வைதம் இதில் இரண்டு உள்ளமைகள் இல்லை. ஒரே உள்ளமை அது தன் அறிவிலே கணக்கற்ற  படைப்புகளை படைத்துள்ளது. இருந்தபோதிலும் அவ்வறிவு தான் தானாகவே இருக்கின்றது. படைப்புகள் பின்பு அதனளவில் மீண்டுவிடுகிறது. இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒவ்வொரு தத்துவமும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. மூன்றும் வேவ்வேறு தத்துவம் உடையதாக இருந்தும் அவைகளில், அவர்கள் காண்பிக்கும் இறைவன், இது என்று கூறியும் இறைதேடல் இருந்ததுதான் வருகிறது. தான் எதோ ஒரு இலக்கணத்தில் மிக சக்திவாய்ந்தது என்று அறிந்ததை, இறைவன் என்று அத்வைதத்தைத் தவிர மற்ற கொள்கைக்காரர்கள் அமைத்துக் கொண்டனர்.

அவைகளில் உருவம் தெளிவாக தெரிந்ததும் உண்டு, உருவம் தெரியாததும் உண்டு. உருவம் தெரியாதவைகளுக்கு தன் கற்பனைகேற்ப அவர்கள் உருவங்கள் அமைத்துக்கொண்டனர். இவைகளை  இறைவன் என்றும் அல்லது அவைகள் அவர்கள் இறைவனின் பிரதிநிதிகள் என்றும் ஏற்றுக்கொண்டனர். அவைகள் மூலமாக அவ்விறைவனை அவர்கள் வழிபடுகின்றனர்.

இக்கொள்கைகளில் இவர்களின் அறியாமையாலோ அல்லது அறிவு திருத்தத்தாலுமோ காலப்போக்கில் ஒவ்வொன்றிலும் மற்ற கொள்கைகள் புகுந்து அதில் பலப்பல பிரிவுகள் உண்டாகிவிட்டது.
அறிவுத்தேன் தொடரும்...
நபிதாஸ்

25 comments:

  1. நல்லதொரு ஆரம்பம்... அறிவுத்தேன் பொங்கட்டும்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. ஓ... தொடரட்டும், வாசித்தேன்

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் அறிஞர், அவர்களே !

    உங்களது முதல் வருகை கண்டு ஆனந்தம்.

    உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

    விளக்கங்களில் உங்களது பங்கேற்பையும்

    விரும்புகிறேன். இடையிடையே யாவரின்

    தெளிவு நிமித்தம் வினவும் தேடல்களுக்கு

    பொருத்தமான பதில் எதுவோ அதனை ஆதரிக்க

    விரும்புகிறேன்.

    நன்றி !

    ReplyDelete
  4. கவிஞர் அன்புடன் புகாரி,அவர்களே !

    உங்களது வருகைக்கும் நன்றி !

    ReplyDelete
  5. நல்ல பதிவு சகோ நபிதாஸ்

    ReplyDelete
  6. அறிஞர் R.புரட்சிமணி வருகை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    உங்களது வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  7. நல்லதோர் ஆக்கம் ..

    தொடர் பல உள்ளங்களை விழிப்படைய செய்யும்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நல்ல சொற்கள் நல்லவர்களிடமிருந்து வருவதும் துவாவே. அவ்வாறே இருக்க வல்லவனிடம் வேண்டுகிறேன்.

      அறிஞர் அதிரை சித்திக்கின் வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  8. இப்படி ஒரு தொடர் எழுதப் படுவது அவசியம். இதனை தத்துவார்த்தமாக நபிதாஸ் அவர்கள் எழுதுவது குறித்து மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும். நிறைய எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது உயர்வான எண்ணத்தின் வார்த்தைகளுக்கு வல்லோன் பொருத்தமாக செயல்பட அருள்வானாக என வேண்டுகிறேன்.

      அறிஞர் இப்ராஹீம் அன்சாரி அவர்களின் வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  9. Replies
    1. வாழ்த்துகளுக்காக எழுதவில்லை. வாழ்த்துவோருக்கு நன்றி தெரிவிப்பது அறிவார்ந்த வழக்கம்.

      உள்ளதை, நல்லதை, வல்லதை சிந்தனையில் அப்படியே வடித்து நன்மை செய்யும் உங்கள் போன்றோர் வாழ்த்துக்கள் நல்லதே. அதனை பெற தகுமானதாக இருக்க வல்லவனிடம் வேண்டுகிறேன்.

      மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்களே !

      நன்றி !

      Delete
  10. பதிவுக்கு நன்றி.

    அருமையான கட்டுரை.
    இன்னும் எழுதுங்கள் சகோ. நபிதாஸ் அவர்களே.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் போன்றோர் ஊக்கம் ஆக்கம் அறிவு தெளிவாக அமைய
      எங்கும் நிறைந்தானை வேண்டியவனாய் ஏற்கின்றேன்.

      அறிஞர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்களே !

      நன்றி !

      Delete
  11. அருவித்தேனை சுவைக்க இன்னும் ஆசை

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  12. நபிதாஸ் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் :

    அனைவரின் வரவேற்பை பெற்றுள்ள இந்த குறுந்தொடரை நெடுந்தொடராக எழுதவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தி அதிரை நியுஸ் அதனை திறம்பட நடாத்திச்செல்லும் பரந்த மனதுடன், திறமைமிகு நல் நிர்வாகி சேக்கனா M. நிஜாம் அவர்களே !
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

      உங்களது 'உரைநடை விளக்கம் வேண்டும்' என்ற கேள்விக்கு பதிலே இத்தொடர். இப்பொழுது நெடும்தொடராகவும் வேண்டும் என்பதனை சிந்தையில் இடுகிறேன். வல்லவன் நன்மையாக்குவானாக என வேண்டி நிற்கின்றேன்.

      நன்றி !

      Delete
  13. ஆன்மிகம் வெளிப்பட்டிருக்கும் இக்குருந்தொடர் சிந்திக்க வேண்டிய வரிகள்.

    இன்னும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சிந்தனைகளை தூண்டுவதே எம் நோக்கம். தங்களது எதிர்ப்பார்ப்புகளுக்கு தகுமானதாக இருக்க வல்லவனை வேண்டுகிறேன்.

      அறிஞர் அதிரை.மெய்சா அவர்களே !

      நன்றி !

      Delete
  14. தத்துவம் விதையாக வந்து ஆன்மீக விழுதுடன் மரமாகி விஞ்சானத்தின் பழமாக கிடைக்கப் போகிறது கட்டுரை
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் போன்றோர் துவா முழுமையானதாக இவ்வாறுதான் இருக்கும் என்பதை காண்கிறேன்.
      எல்லாப் புகழும் எங்கும் நிறைந்தானுக்கே.
      தங்களது வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  15. அன்பின் குருநாதர் நபிதாஸ் என்னும் புனைபெயரில் ஞான ஒளி வீசும் அறிவுச் சூரியனிடமிருந்து கருத்துக் கதிர்களைப் பெற்று எங்களின் மனவயற்களின் நம்பிக்கைச் செடிகள் நலமுடனும் பலமுடனும் வளரும், இன்ஷா அல்லாஹ்!

    குருவின் முன்னால் கால்மடக்கி கைகட்டிப் பணிவுடன் ஞானப்பால் அருந்த உட்கார்ந்து விட்ட சிஷ்யனின் உளம்நிறைவான நன்றிகளை “ஜஸாக்குமுல்லாஹ் கைரன்: என்னும் துஆ- பிரார்த்தனையாகச் சமர்ப்பிக்கின்றேன்; ஏற்பீராக!

    ஞானத் தோட்டங்களில் கொய்தவைகள், “ஞானப் பேழை”யில் எடுத்தவைகள், குரு வாசத்தில் சுவாசித்தவைகள் இறையருளால் தமியேனிடம் இருந்தாலும், இன்று முதல் தொடரும் என்றன் புதிய குருவின் முன்னால் மீள்பாரவைச் செய்திட நல்லதொரு வாய்ப்பை நல்கிய அல்லாஹ்வுக்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ்.

    தங்களின் ஞானத்திற்கு முன்னால், என்னால் வாழ்த்த முடியவில்லையாதலால், இறையவனிடம் வழுத்துகிறேன் தங்களின் ஆயுளின் நீட்டிப்புக்கும் ஆரோக்கியத்திற்கும் என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய குருவே!

    இறையருளால், பதின்மூன்று வயதிலிருந்து ஞானவான்களின் தோட்டத்தில் பருகிய ஞானப் பழங்களின் சாறுகள் மூளையின் ஒரு மூலையில் தேங்கிக் கிடக்கின்றன; அவைகளை எல்லாம் கவிதைகளாய்க் கொணர்ந்தாலும், இன்று தொடரும் தங்களின் தொடர் மூலம் மீள்பதிவாகும் அந்த என் மூளையின் மூலைக்கும் மீண்டும்; மேலும் தங்களின் ஆக்கத்தைக் காண ஏக்கமுடன் மனமும் தூண்டும்.

    தங்களின் இத்தொடரின் கருத்துக்களை உள்வாங்கிய வண்ணமே, இறையருளால் இன்று அபுதபியில் இன்னும் ஒரு மணிநேரத்தில் நடைபெறவுள்ள தமிழக்த்திலிருந்து வருகை புரிந்துள்ள ஞானியின் சொற்பொழிவில் ஞானத் தேன் பருகச் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் தங்களின் “அறிவுத்தேன்” தடாகத்திலும் சிறிது நேரம் அமரும் ஓர் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளதும் ஒரு பொருத்தம் என்பதில் வியக்கிறேன்.

    தங்களிடம் ஈண்டுப் பெற்றுள்ள இந்தக் கருத்துக்களுடன், இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு மணிநேரத்தில் என் செவி வழியாய்ப் பாயப் போகும் புதிய ஞானத்தேனும் கலந்து ஒப்பீடு செய்யவும் ஓர் அரிய வாய்ப்பன்றோ?!
    மாஷா அல்லாஹ்!

    குழம்பிக் கொண்டிருப்பவர்கட்கு ஒரு தெளிவான நீரோடை இத்தொடர்!

    ReplyDelete
  16. சூரியனிடமிருந்து கண்ணாடி துண்டுகள் பிரதிபலிக்கத்தான் செய்யும். கண்ணாடி துண்டுகள் பெரும் பெருமை அந்த சூரியனுக்கேயாம்.

    தாங்கள் உயர் நிலையையடை வல்லவனிடம் வேண்டுகிறேன். எல்லாப்புகழும் வல்ல இறையோனுக்கே.

    தாங்கள் நீண்ட ஆயுளுடன் நிமதியுடன் மனநிறைவுடன் வாழ ஏகன் அல்லாஹ் அவனை வேண்டுகிறேன்.

    நன்றி ! கவிஞரே !

    ReplyDelete
    Replies
    1. ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா. மிக்க நன்றி.

      அந்தச் சூரியன் எந்தச் சூரியன் என்றும் அறிய அவா. இன்ஷா அல்லாஹ் அடுத்த விடுப்பில் உங்களுடன் அடுத்து இருக்க வேண்டும்; அதனால் அகமியங்களை அணு அணுவாய் உள்வாங்கித் தமியேனும் நிலவாய் ஒளிர வேண்டும் என்ற வேணவாவும் உண்டு.

      நிற்க., நேற்று நடைபெற்ற “பயானில்” கிடைத்த முத்துக்கள்:

      “தன்னை அறிந்தவன் தான் உண்மையான அறிவாளி”

      ”வாழ்க்கை என்பது: உண்டு கழித்ததும்- உடுத்திக் கிழித்ததும் தான்”

      சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் சுந்தர நபிகளார்(ஸல்) அவர்கட்கு ஈடுமுண்டோ?

      Delete
    2. //சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் சுந்தர நபிகளார்(ஸல்) அவர்கட்கு ஈடுமுண்டோ?//

      ஈடில்லை ! ஈடில்லை ! ஈடில்லை !

      ***
      கற்றிலார் என்பதைவிட, கல்விகள் அனைத்துமே அவர்கள் என்பதே உண்மை.
      ***
      முன்பே தெரிவித்துவிட்டேன்.
      பற்றியவர்களை கவனமுடன் பற்றுக.

      ***
      "தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிவான்"
      “தன்னை அறிந்தவன் தான் உண்மையான அறிவாளி”
      "தன்னை அறிவதற்கே மனிதன் படைக்கப்பட்டான்"
      ***

      நன்றி !

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers