.

Pages

Saturday, September 7, 2013

[ 10 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ அரபி டோய் ! ]

நமதூரில் நம்மவர்கள் மாலை நேரங்களில் எதோ ஒரு இடத்தில் ஒன்று கூடி அரட்டை அடிப்பது வழக்கம். அதே போன்றே துபாய், குவைத், பஹ்ரைன போன்ற நாடுகளில் நம்மவர்கள் ஏதாவது ஒரு இடத்தில நான்கைந்து பேர் குழுக்களாக அமர்ந்து அரட்டை அடிப்பார்கள். தாய் மொழியில் பேசி மகிழ்வார்கள்.

அக்கம் பக்கத்தில்  உள்ளவர்கள் வேற்று மொழி பேசுபவர்கள் அமர்ந்து இருந்தால் மிக அலச்சியமாக... இவன், ஏண்டா நம்ம பக்கத்தில் அமர்கிறான் நாற்றம் சகிக்கல என்பர். சிறு புண் முறுவலுடன் வேற்று மொழிக்காரரை அடாவடியாக திட்டுவது ..தர குறைவாக அழைப்பது சாதாரணமாக நிகழும்.

ஒருநாள்  நம்மவர் கூடும் இடத்தில் ஒருவர் அராபிய உடை அணிந்து வந்து அமர்ந்தார். என்றும் போல் நம்ம தமிழ் மொழியில் இந்த மடப்பய நம்ம இடத்திற்கு ஏன் வருகிறான் ? என்றார்.

சற்றும் எதிர்பாரத நிலையில் அரபி உடை அணிந்திருந்த நபர் யாரைப்பார்த்து மடையன் என்கிறாய் ? நீதாண்டா மடப்பய என்றார்.

மற்றவர் நிலை குலைந்து போனார். ஐயோ நீங்க அரபி என நினைத்து விட்டேன் என்றார். ஏன் அரபியாக இருந்தால் திட்ட வேண்டுமா என்றார் கோபமாக... பழக்க தோஷம் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். பிறகு இருவரும் நண்பர் ஆனார்கள்.

அரபி வீடுகளில் டிரைவர் வேலை பார்பவர்களை  சில அரபிகள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று கொள்வார்கள். உடை கூட அவர்கள் அணியும் உடை கொடுத்து மகிழ்வார்கள். நம்மவரை சந்திக்க சிலர் அரேபிய உடையில் வருவதால் ஏற்படும் விபரீத விளைவுதான் இது.

அரேபிய நாட்டில் சைவ உணவகங்களுக்கு நம்மவர்களிடையே நல்ல மவுசு விடுமுறை நாட்களில் அங்கு சென்று உணவருந்துவது நடைமுறை நம்மவர் அரேபிய உடையில் உணவகம் சென்று அமர பரிமாறும் சர்வருக்கு ஒரே திகைப்பு !

என்னடா அரபி நம்ம கடைக்கு வந்திருக்கான் என்ற ஆச்சரியத்துடன் அவரை அணுகி ஆங்கிலம் பாதி அராபிய மொழி மீதி திக்கி திணறி என்ன உணவு வேண்டும் என சர்வர் கேட்க...

அரேபிய உடையில் உள்ளவர் மிக சாதாரணமாக ரெண்டு இட்லி, ஒருவடை கொண்டு வாயா என்கிறார்.

தலையை சொரிந்த வண்ணம் அரபி என்னமா தமிழ் பேசுறான் என்றவாறே உணவெடுக்க செல்கிறார் வடிவேலை போல...

அட நான் தமிழன்தான்யா ...உடை மட்டும்தான் அரபியோடது பாத்து பேசுயா என்றார்

அதே நபர் ஒருநாள் நண்பரை பார்க்க அவர் வீட்டு கதவை தட்டுகிறார் நம்மவர் அரேபிய உடையில்.

நண்பர் அல்லாத மற்ற நபர் கதவருகே வந்து பார்த்து திகைத்தவாறு டேய் யாரோ ஒரு அரபி நம்ம வீட்டு கதவை தட்டுகிறாண்டா என்று சத்தம் போடா ஐயோ ! நான் அரபி இல்ல தமிழன் தாங்க...

நண்பரை பார்க்க வந்தேன் என்கிறார். கொஞ்ச நேரத்திலே கலங்க வச்சுட்டீங்களே என்றார் வீட்டிலிருந்தவர். காரணம் குறிப்பாக வெளிநாட்டவர் தங்கும் இடத்தில் அரபியர் வருவதில்லை. ஏதாவது பிரச்சனை என்றால் மட்டுமே வீடு தேடி வருவர் .

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு அராபிய உடை அணிந்து நம்மவரை காண அவர் வருவதே இல்லை.

முக்கிய தகவலோடு மீண்டும் வருகிறேன்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

14 comments:

  1. ஹா... ஹா... ஹா...

    படித்தவுடன் சிரிப்பை வரவழைத்து விட்டது இந்த பதிவு !

    அதுவும் வடிவேலுக்கு அரபு உடை அணிந்திருக்கும் படம் சூப்பர்.

    உடையால் ஒவ்வொருவரும் வேறுபடுத்தி காட்டப்பட்டாலும் அனைவரும் மனித இனமே

    சிந்தனை தரும் பதிவிற்கு நன்றி

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனித இனம் வேறு பட்டாலும் ...

      மனம் ஒன்றே ..சரியாக சொன்னீர்கள் தம்பி நிஜாம்

      Delete
  2. குலுங்க குலுங்க சிரித்தேன்.

    சிரிப்பு ஒரு நல்ல மருந்து.

    வாய்விட்டு சிரித்தால்
    நோய்விட்டு போகும்
    என்பார்கள்.

    அடுத்து வாய்விட்டு சிரிக்க வையுங்கள்.

    நன்றி, அதிரை சித்திக் அவர்களே !

    ReplyDelete
    Replies
    1. வளைகுடா வாழ்வில் பல தரப்பட்ட நிகழ்வுகள் ..

      இது போன்ற பல நிகழ்வுகள் உண்டு ...

      பதிவுகளுக்காக நகைச்சுவை நிகழ்வை பதிந்தேன் ...

      தங்களின் மனம் மகிழ்ந்ததில் ..எனக்கும் மகிழ்வே

      Delete
  3. அதிரை சித்திக்கின் வளைகுடா வாழ்க்கை பல கோணங்களில் சுவராசியமாய் போய்க் கொண்டிருக்கிறது.

    தாங்கள் சொல்லியிருப்பது போன்ற சம்பவங்கள் ஒரு நேரத்தில் நடந்தது உண்மைதான்.

    ஆனால் துபையை பொருத்தமட்டில் இங்குள்ள அரபியர்கள் நன்றாக ஹிந்தி பேசுகிறார்கள் இன்னும் சில அரபியர்கள் தமிழ் , மலையாளம் ஆகிய மொழியும் பேசுகின்றனர்.

    இது போன்ற நகைச் சுவையுடன் கலந்த பதிவை அடுத்த வாரமும் எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. துபையை பொருத்தமட்டில் இங்குள்ள அரபியர்கள் நன்றாக ஹிந்தி பேசுகிறார்கள் இன்னும் சில அரபியர்கள் தமிழ் , மலையாளம் ஆகிய மொழியும் பேசுகின்றனர்.

      நல்ல தகவல் தந்தீர்கள் ..இந்தியரின் சேவைக்கு அவர் தம்

      மொழியை பயிலும் அளவிற்கு அரபியருக்கு அவசியம்

      ஏற்பட்டது .நமக்கு பெருமிதமே

      Delete
  4. சிரிக்க வைத்த சித்திக் அவர்கள் சிந்திக்கவும் வைத்து விட்டார்கள்; நவரசமும் உங்கள் கை வண்ணம் என்பது என் எண்ணத்தின் திண்ணம்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கவியன்பரே ...

      நகைச்சுவை உணர்வு ..மன சுமை நீங்கும்

      Delete
  5. கலகலப்பா சுவாரஷ்யமா போகுது அரபு நாட்டு வாழ்க்கையை ஒவ்வொரு விதமாய் அவரவர் பாணியில் எவ்வளவுதான் எழுதினாலும் போரடிப்பது இல்லை
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ..

      நல்ல பல கருத்துக்களை நமது பாணியில் பதிவோம்

      Delete
  6. பதிவுக்கு நன்றி.

    சகோ, அதிரை சித்திக்கின் இந்த ஆக்கம் எல்லோரையும் பல வகைகளில் சிந்திக்க வைக்கின்றது.

    இதுபோல் பல ஆக்கங்கள் தொடர பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  7. உடைகளை வைத்து ஒருவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என எடை போடுவது தவறான கருத்து.

    ReplyDelete
  8. // உடைகளை வைத்து ஒருவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என எடை போடுவது தவறான கருத்து.//

    இவற்றை வலியுறுத்திதான் நகைச்சுவை பாணியில் கட்டுரை ஆசிரியர் படைப்பை நமக்கு வழங்கியுள்ளார்.

    ReplyDelete
  9. Thamelutru anna rompa santhosamaha erukku. Thamelutrum veallenelavum onru shearnthal kalaikatdum.... Palamuther solai.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers