.

Pages

Monday, September 9, 2013

ஆதலால் காதல் செய்வீர் !?

காதல்
கொண்டவன்
அரிச்சந்திரனாயினும்
பொய்யுறைப்பதில்
தயங்குவதில்லை

காதல்
கொண்ட
மகாத்மாவும்
மற்றவரை
மனம் புண்பட
செய்திடுவார் !

கடமை,
கண்ணியம்,
கட்டுப்பாடு.
காதலுக்கு ?
அதுவெல்லாம்
படும்பாடு !?
பெரும்பாடு !!

காதலும்
மோதலும்
இரட்டை பிறவி

காமத்தோடு
காதலை
பார்க்காதீர்

கண்டதும்
காதல்
கண்டிக்கத்தக்கது

சாக்லேட்டும்
ஐஸ்கிரீமும்
முதல் படி
பியரும்
வென்சுருட்டும்
இரண்டாம்
ஆசை !
காதல் என்பது ?
மூன்றாம் தரம்

காதல் ஓர்
சுகமான
சுமை
இது காதலருக்கு !
பெற்றோருக்கு ?
சுமக்கமுடியாச்சுமை

தாயாய்
வயிற்றில்,
இடுப்பில்
சுமந்து

தந்தையாய்
தோளில்
பின்
பொருளாதார
சுமையை
சுமந்தவர்க்கு
மேலும் ஓர்
சுமையை
தரலாமோ ?

அவர்கள்
சுகமாய்
துயில் கொள்ள
நாமல்லவா
சுமக்கவேண்டும்

ஆதலால் காதல் செய்வீர்
நம் தாய் தந்தையரை !!!
மு.செ.மு.சபீர் அஹமது

7 comments:

  1. //
    தாயாய்
    வயிற்றில்,
    இடுப்பில்
    சுமந்து

    தந்தையாய்
    தோளில்
    பின்
    பொருளாதார
    சுமையை
    சுமந்தவர்க்கு
    மேலும் ஓர்
    சுமையை
    தரலாமோ ?
    //

    நல்ல கேள்வி.
    ஆனால் கதலருக்குத்தான் கண்ணில்லையே !
    அதான்
    அறிவுக்கண் !

    நல்ல புதுக் கவி.

    அறிஞர் மு.செ.மு.சபீர் அஹமது அவர்களுக்கு,
    வாழ்த்துக்கள்.

    நன்றி !

    ReplyDelete
  2. தலைப்பை வாசித்ததும் எதோ சினிமா படத்தின் தலைப்பை போலல்லவா உள்ளது என நினைத்தேன். கவிதையும் வாசித்ததுதான் சிறந்த உபதேசம் இதில் உள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.

    // ஆதலால் காதல் செய்வீர்
    நம் தாய் தந்தையரை !!!//

    இவர்களோடு மனைவி மக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...

    ReplyDelete
  3. காதல் என்பது ஒருவிதமான மயக்கம்
    அதில் பயணம் செய்யும் ஒருவர்
    அவனின் பாலவிதமான வித்தையே
    ஒருப் பெண்ணிடம் செலுத்த்கிறார்.
    இந்த வித்தையே தாய்,தந்தை,மனைவிகளிடம் விதைத்தால் உன்னையே அவர்கள் வழிநடத்த ஈஸியாக இருக்கும்,
    உனக்கு அப்பொழுது கிடைக்கும் சந்தோசத்திற்கு
    இவ்உலகில் இடு எதுவும் கிடையாது...

    ஆதலால் காதல் செய்
    நம் தாய்,தந்தை,மனைவியேயும் !!!

    ReplyDelete
  4. ஆதலால் காதல் செய்வீர்
    நம் தாய் தந்தையரை !!!

    எல்லா பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுக்க கூடிய ஆத்தி சுவடி நண்பா

    ReplyDelete
  5. காதல் என்பது இயற்கையாக அனைவருக்கும் மனதில் தோன்றும் ஒருவித உணர்வு. அதை ஆறறிவுள்ள மனிதன் அதன் பின் விளைவுகளை சிந்தித்து சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டானேயானால் வாழ்வில் அனைத்தையும் வெற்றி கொண்டு விடலாம். மனதில் தெளிவிருந்தால் வாழ்க்கையில் நலம் பெறலாம்.

    ஆதலால் காதல் செய். அதற்க்கு முன் யோசனை செய்.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    ஆதலால் காதல் செய்வீர், சொன்னதற்கு நன்றி.

    குறிப்பு:- சகோ. சேக்கனா M நிஜாம் அவர்கள் தன் தாயாரின் கண் மருத்துவத்திற்க்காக தாயை அழைத்துக் கொண்டு இன்று காலை மதுரை சென்று விட்டார்கள். எல்லாம் வல்ல நாயனின் உதவியால் அந்த தாயின் கண் மருத்துவம் இலேசாக முடிய துஆ செய்துடுவோம், ஆமீன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  7. சகோ.நிஜாம் அவர்களின் தாயாருக்கு குணமடைய எல்லாம் வள்ள அல்லாஹ்வை பிராத்திப்போம்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers