.

Pages

Monday, September 23, 2013

உங்கள் வாழ்த்தோடு தொடர்கிறேன்...

தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
நடக்கப் பழகிய தென்றலின்று,
இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
பயணம்தொடர விரும்புகிறேன்!
இந்தியராய்ப் பிறப்பதென்பது,
இனிமையான ஓர் வரனென்பேன்,
அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
தரணியில் பெரும் பேரென்பேன்!

இமயம்முதல் குமரிவரை,
இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
நானுமொரு பாத்திரமாய்,
உடன் வாழ வரம் பெற்றேன்.
மனம் பாடும் பாட்டு இதுவே !
என்னினிய உறவெல்லாம்,
எனதருமை நட்புகளே!

எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
ஆராதனைப் பொருளாக-அதை,
ஆராதிப்பேன் உயிருள்ளவரை!

நேற்றுவரைப் பிறை நிலவு,
இன்று வளர் பிறையாய்!
பௌர்ணமியாய் வளர்கவென,
வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
பாதம் தொழுது வளர்கின்றேன்,
பயணத்தைத் தொடர்கின்றேன்!
 
உங்களில் நானுமாகி!!
மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
விண்மீனாய் வானில்பறந்து,
கார்முகிலாய் கவிதைபாடி,
காற்றாகி ,தென்றலாகி,
ஊற்றாகி தாகம் தீர்த்து
இந்தியத்தாயின் மடியினலே,
தமிழாய் மடியவேண்டும்.
அழைப்பு வரும்வரையில்,
எழுதும் என் எழுதுகோல்!
நீதிக்காய்-அநீதியெதிர்த்து!

தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
அன்புக்காய்-தலைவணங்கி,
உண்மைக்காய்-போராடி,
அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
இல்லார்காய்-நாழும் அழுது,
தொடரும்  பயணமதை!
உங்கள் வாழ்த்தோடு!
தொடர்கிறேன் முடிந்தமட்டில்...
சசிகலா

16 comments:

 1. அன்புச்சகோதரியின் முதல் பதிவுக்கு வரவேற்பு

  தொடர்ந்து எழுத வாழ்த்துகள் !

  ReplyDelete
 2. சிறப்பான ஆரம்பம்... வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 3. சமூக விழிப்புணர்வு பக்கங்களில் நல்ல பல ஆரோக்கியமான பின்னூட்டங்களை இட்டு தட்டிக்கொடுக்கும் அன்பின் சகோதரி சசிகலா அவர்கள் இன்று முதல் சக பங்களிப்பளர்களில் ஒருவராக இணைந்திருக்கும் தாங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

  முதல் கவிதையை தமிழுக்காகவும் தாய் நாட்டிற்காகவும் படைத்து இருக்கிறீர்கள் அருமை. வாழ்த்துக்கள் .!

  இனி தொடர்ந்து தாங்களிடமிருந்து நல்ல பல விழிப்புணர்வு ஆக்கங்களை எதிர் பார்க்கிறோம்.

  ReplyDelete
 4. சமூக விழிப்புணர்வு பக்கங்களில் சக பங்களிப்பாளராக இணைந்திருக்கும் திருமதி சசிகலாவிற்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் பயணத்தை - நாங்களும் வருகிறோம் உங்களுடன், உங்கள் படைப்புகளைப் படிக்க.

  ReplyDelete
 5. அன்புச்சகோதரியின் முதல் பதிவுக்கு வரவேற்பு

  தொடர்ந்து எழுத வாழ்த்துகள் !

  ReplyDelete
 6. தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
  அன்புக்காய்-தலைவணங்கி,
  உண்மைக்காய்-போராடி,
  அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
  நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
  ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
  இல்லார்காய்-நாழும் அழுது,
  தொடரும் பயணமதை!
  உங்கள் வாழ்த்தோடு!
  தொடர்கிறேன் முடிந்தமட்டில்...

  பல காய்களை தந்து பழுத்த பழமாய் சுவைகிரீர் அச்சுவையோடு தொடர்ந்து எழுதிடுங்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete


 7. வாழ்க வளமுடன்
  சூழ்க பலமுடன்

  வருக வருக
  வண்டமிழ்த்தேன் தருக
  வண்டெனத் தேடும்
  வாசக/ வாசகிகள் கூட்டம்
  வனையும் வார்த்தைத் தோட்டம் நோக்கி..

  உங்களின்
  எழுதுகோல்
  சமூக விழிப்புணர்வின்
  ஒரு நெம்புகோல்

  உங்களின் எழுதுகோல்
  கவியாட்சியின் செங்கோல்!

  ஒற்றை நாவாய் வந்து
  உலகத்தைப் பாடும்
  நற்றமிழ் ஆக்கம்
  நங்கையின் எழுத்தில், இனி..

  உங்களின்
  மொழி விளக்கால்
  தங்கமென மின்னும்
  தமிழும், தமிழர் வாழ்வும்!

  உங்களின் கைவிரல்கள்
  கணியியில் தட்டச்ச
  திரைகளில் பூக்கும்
  தித்திக்கும் தமிழ்மலர்கள்!

  பேனாவின் முள்ளில்
  தானாய் வந்து விழும்
  மலர்களைக் கோத்து
  மணம் வீச வைப்பீர்!

  உதிரும் உறவுகளில்
  உதிராத ஓர் உன்னத
  வாடா மலராக
  வார்த்தைகள் மலரும்!

  உங்கள் பேனா மை
  உண்மை என்னும் “மை”
  ஊற்றப்பட்டு
  பெண்மையின் வீரம்
  பேசிடும் தன்மை!

  மதத்தைக் கீறாத
  பதமான மனிதநேய
  இதமானவைகளாய்
  இருக்கட்டும்!

  பெண் வைத்துள்ள
  ”pen" ன்னால் எழுதிபவைகளை
  கண் வைத்துக் காணுவதற்கு
  கணினிக்கும் மகிழ்ச்சிதான்
  இனியென்ன மாக்கோலம்
  இடுகின்றவர் தாய்த்தமிழில்
  இடப்போகின்றார் பாக்கோலம்!  ReplyDelete
 8. தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்தே
  அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
  விழியாய்த் தமிழும் விழிக்க முழுதாய்
  மொழியாம் தமிழை மொழிந்து.

  ReplyDelete
 9. தங்களின் எழுத்துப்பணி சிறந்தோங்க வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 10. அன்புச்சகோதரி அவர்களின் முதல் பதிவே உங்களின் கவி ஆர்வம் தெரிகிறது இன்னும் பல பதிவுகள் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. பதிவுக்கு நன்றி.

  சமூக விழிப்புணர்வு பக்கங்களில் சக பங்களிப்பாளராக இணைந்திருக்கும் திருமதி சசிகலாவிற்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் பயணத்தை - நாங்களும் வருகிறோம் உங்களுடன், உங்கள் படைப்புகளைப் படிக்க.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 12. வேகம், விவேகம், பணிவு, இறக்கம், அர்ப்பணம் அனைத்தும் கலந்த உணர்வுகள்.
  அதில் சமைந்த நல் அறிவுகள்.

  வாழ்க ! தங்கள் ஆர்வம் !
  வழர்க ! உங்கள் தமிழ் பற்று !

  நன்றி ! சகோதரி சசிகலா.

  ReplyDelete
 13. அன்புடன் வரவேற்கிறேன். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. சில நாட்களாக வலைப்பக்கம் வரஇயலவில்லை. ஆதலால் தங்கள் அனைவரின் வாழ்த்துக்களை தாமதமாக பெற்றேன். வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 15. தமிழ் மண்ணில் தமிழ் தாயின் மடியில் வளர்ந்த தமிழ் பெண்ணே! தமிழ் தேனை மையாக்கி தமிழனுக்கு அதை அமுதாக்கி அருசுவை படைக்க வந்த கவி பெண்ணே! உன் எழுத்துப்பணி, தமிழுக்கு உரமாக தமிழர் ஒற்றுமைக்கு அறமாக விளங்க வாழ்த்துகிறேன். வணக்கம்! நம்மை படைத்த படைப்பாளி இறைவனுக்கே சமர்பனம்.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers