.

Pages

Saturday, September 21, 2013

[ 12 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ அண்ணனை உறிஞ்சும் தம்பி !? ]

1960களில் பஞ்சம் நிறைந்த காலங்கள் ! ஆனால் வஞ்சம் இல்லா வாழ்வு. ஒவ்வொரு தம்பதியர்களுக்கும் ஐந்து, ஆறு குழந்தைகள். அவ்வப்போது கொள்ளை நோய்களால் குழந்தைகள் இறந்து போகும் அது போக  எப்படியும் நாலு பிள்ளைகள் பிழைத்து கொள்ளும்.

குடும்ப தலைவனின் உழைப்பு தலைமகன் வளரும் வரைதான்... நான் கூறும் காலகட்டம் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைத்த காலம்...

நான் கூற வரும் கருத்தின் நாயகன் வளைகுடா நாட்டிற்கு வேலை வாய்பிற்கு வருகிறான்... தந்தையின் கடமைகளை சுமந்தவனாக ...( இரு தங்கைகள் ஒரு தனயன் ) ஒரு தங்கைக்கு மணமுடிக்க மூன்று வருட உழைப்பு ஊர்வந்து தங்கையின் மணக்கோலத்தை கண்டு மகிழ்ந்து போனார். மறுகணமே வளைகுடா பயணம் இரண்டாவது தங்கைக்கு கல்யாண ஏற்பாடு ஆனால் அண்ணனுக்கு விடுப்பு கிடைக்கவில்லை.

ஆனால் பலவகையில் கடன்பட்டு தங்கை கல்யாணம் சிறப்பாய் நடந்தேறியது. ஆனால் அதன் கடன் அடைந்தேற நான்கு வருடம் ஆகியது. மறு விடுப்பு நான்கு வருடம் கழிந்தே வர முடிந்தது. அரைகுறையாய் பள்ளிகூடம் சென்று சரியாய் படிக்காத தம்பி வாலிபனாய் காட்சி தந்தான். தனக்கும் கல்யாணம் செய்ய குடும்பத்தாரின் நிர்பந்தம். விடுப்பு நாட்கள் இரண்டு மாதமே இருந்த நிலையில் கல்யாணமும் நடந்தேறியது.

மேற்படிப்பு  படிக்க திராணியற்ற நிலையில் உள்ள தம்பியை வெளிநாட்டிற்கு அழைத்து கொள்ள தீர்மானித்தார். மணமான இனிய நினைவுகளை சுமந்தவனாக வளைகுடா வருகிறார். வந்த சில மாதங்களில் தம்பி வரவழைக்கபட்டான்.

தனது கடமைகள் முடிந்து விட்டது என்று நிம்மதி அடைந்தார் அவர் ஆனால் வளைகுடா வந்த தம்பி சரியாக வேலைக்கு செல்லாமல் அண்ணனின் இடத்திற்கு வந்து அடைக்கலம் அடைந்தான். தான் வேலை பார்க்கும் நிலை தம்பிக்கு நன்றாகவே தெரியும். வாடகைகொடுப்பது, சாப்பாட்டு செலவில் பங்கு என்று தனது வருமானத்தின் மூன்றில் ஒரு பங்கு செலவாகும் நிலை அறிந்தும் அண்ணனின் கஷ்டத்தினை சற்றும் பொருள் படுத்தாது அவரது உழைப்பை உறிஞ்சும் உறவாய்  அமைந்தான் தம்பி. பெற்றோர் சுமந்த மூத்த மகனின் நிலை ஒய்வு நாள் வரை ஓயாமல் போனதுதான்  பரிதாபம் !

* தம்பிகளே நல்ல அண்ணனை உறிஞ்சும் அட்டைகளாக ஆகி விடாதீர்கள்.

* உறவுகளே  உதவிய உறவை வாழ்நாள் முழுவதும் மறவாதீர்.

அடுத்த வாரம்... சேமிக்க முன் யோசிக்கணும் !?
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

25 comments:

  1. ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு மெஸ்சஜை சொல்லி முடித்திருப்பது கட்டுரையாளரின் சமூக அக்கரையை காட்டுகிறது.

    தொடரட்டும் உங்களின் எழுத்துப்பணி...

    ReplyDelete
  2. // * தம்பிகளே நல்ல அண்ணனை உறிஞ்சும் அட்டைகளாக ஆகி விடாதீர்கள்.

    * உறவுகளே உதவிய உறவை வாழ்நாள் முழுவதும் மறவாதீர்.//

    இந்த வரிகளை திரும்ப திரும்ப வாசித்து மனதில் இருத்திக்கொண்டேன்.

    அழகிய பொன்மொழிகள் !

    ReplyDelete
    Replies
    1. நம்மால் முடிந்தவரை ..நல்லவைகளை

      பிறருக்கு கர்ப்பிபோம்

      Delete
  3. நிஜத்தைச்சொல்லிச் செல்லும் நிலை சகோ!தொடரட்டும் தொடர்!

    ReplyDelete
    Replies
    1. தனி மரம் ...தங்கள் வரவு நல் வரவாகுக ..

      தங்கள் வாழ்வில் உறவுகள் நிறைந்த தோப்பாக இருந்திட

      வாழ்த்துகிறேன்

      Delete
  4. உண்மையான நிலையை விளக்கிய விதம் அருமை...தொடருங்கள்...உங்களின் எழுத்து நடை நன்றாக உள்ளது..சிறுகதை எழுத முயற்சித்துப் பாருங்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..அன்பர் சக்தி முருகன் ...தங்கள் நல்வரவாகுக

      தமிழூற்று என்ற மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தவன்

      நல்ல சிறுகதை பல எழுதியுள்ளேன் ...நேரமின்மை ..

      வேலை ..,குடும்பம் என்று பல இனிய சுமைகளுக்கிடையே எழுத்து பணியை தொடர்கிறேன்

      Delete
  5. தலைமகனாய் பிறந்தாலே குறைவில்லா பொறுப்புகள் வந்து குமிந்து விடும். சிலர் சுமையை சுகமாய்ச் சுமப்பர். சிலரது சுமை எளிதில் இறக்கி வைக்க முடியாத சுமையாய் அமைந்து விடும்.

    இறுதியில் அவப்பெயரும் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கும்.

    அண்ணனின் அருமை தெரியாதவர்களுக்கு நல்லதொரு பகிர்வு வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. வளைகுடா வாழ்வில் ...

      இனிய நினைவுகள் பல இருந்தாலும் ..

      கண்ணீர் வாழ்க்கை பல உண்டு..அவை பலருக்கு

      படிப்பினை உடையதாக இருக்கும்

      Delete
  6. பொருப்பில்லா சகோதரன் இருக்கும் வரை // ஒய்வு நாள் வரை ஓயாமல் போனதுதான் பரிதாபம் !// என்ற நிலை தொடரத்தான் செய்யும்.
    இது வளர்பின் குற்றம்.

    அதிரை சித்திக் அவர்களே !
    அடுத்த வாழ்வுகள் தடம் பிறழாது செல்ல நல்ல அறிவுரை தந்தீர்கள். நன்றி !

    ReplyDelete
    Replies
    1. உடன் பிறப்புகளின் வாழ்வின் வெற்றிக்கு வழிவகுப்பது

      சால சிறந்தது .அதை சாதகமாக பயன் படுத்தி உருஞ்ச நினைப்பது சரியான செயல் அல்ல ..என்பதை தம்பியோ
      அண்ணனோ புரிந்து கொள்வது நல்லது ..என்பதே இவ்வார
      தொடரின் கருத்து ...
      வரும் தலை முறை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்

      Delete
  7. இந்த அண்ணனைப்போல் எத்துனையோபேர்கள் இந்த நிலையில் அவர்களின் சுயநலமில்லா உழைப்பு சிலரால் சுரண்டப்படுகிறது அவரின்[அண்ணன்]மனைவியிடம் இலிச்சவாயான் என்ற பட்டம்தான் கிடைக்கும்?! கூடப்பிரந்தவர்களின் சுமை இவரைப்பொறுத்தவரை சுகமான சுமை ஊர் இவரை ஏமாளி எனலாம் ஆனால் அவர் ஓர் கலங்கரை விளக்கு

    ReplyDelete
    Replies
    1. கூடப்பிரந்தவர்களின் சுமை இவரைப்பொறுத்தவரை சுகமான சுமை ஊர் இவரை ஏமாளி எனலாம் ஆனால் அவர் ஓர் கலங்கரை விளக்கு //

      நன்றாய் கூறினீர்கள் அன்பு நண்பரே

      Delete
  8. / * தம்பிகளே நல்ல அண்ணனை உறிஞ்சும் அட்டைகளாக ஆகி விடாதீர்கள்.

    * உறவுகளே உதவிய உறவை வாழ்நாள் முழுவதும் மறவாதீர். /

    அருமையாக கூறி இருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ..புரிதலுக்கு நன்றி ...

      உடன் பிறப்பின் உழைப்பை மதிக்கணும் ...

      அவர்தம் வெற்றிக்கு வழி விட வேண்டும் ..

      Delete
  9. மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், மறக்கப்பட்டும் இருக்கும் பேருண்மைகளை- மனத்திரைக்குள் இருந்ததால் வெளி உலகம் காணாதிருந்தவைகளை, வெளிக்கொணர்ந்து விட்டீர்கள்; இவற்றுள் தங்கைகட்காக அண்ணன்மார்கள் படும் துன்பங்களை அறியாமலிருக்கும் நிலைமைகளையும் உரக்கச் சொல்லுங்கள் என வேண்டுகிறேன்.

    சிறப்பான ஆக்கத்திற்குச் சிறப்பான வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ..கவியன்பரே ...

      தீபங்களாய் ...மெழுகுவர்த்தியாய் ..உருகி

      குடும்பத்திற்கு வெளிச்சம் கொடுத்த அண்ணனை

      மறத்தல் கூடாது ..நன்றி கடனை அன்பாய் திருப்பி

      செலுத்தலாமே

      Delete
  10. பொறுப்பில்லா தம்பிகளுக்கு அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பொறுப்பில்லா தம்பிகளுக்கு அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அருமை தம்பி ...ஹபீப் .

      நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வருகை

      உள்ளம் மகிழ்ச்சி கொள்கிறது ...

      Delete
  12. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம்.

    அண்ணனை தம்பி உறிஞ்ச்ஜிரானா இல்லையா, உங்களுடைய ஆக்கம் அனைத்தும் எங்கள் மனதை உறிஞ்சி விட்டது.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ..காக்கா..

      Delete
  13. வளைகுடா என்றில்லை தமது குடும்பத்தை விட்டு பிரிந்து மும்பை சென்னை போன்ற எந்த இடத்தில் வேலை செய்பவர்களுக்கும் இதே நிலைதான் . வளைகுடாவின் தகிக்கும் அனல் பற்றியும் மற்ற துயரங்களைப் பற்றியும் மற்றவர்கள் உணர்வதில்லை. பணம் அனுப்பும் அண்ணன் ,அக்கா, தம்பி மற்றும் தங்கை களின் கஷ்டம் புரிவதில்லை .

    ReplyDelete
    Replies
    1. வளைகுடாவின் தகிக்கும் அனல் பற்றியும் மற்ற துயரங்களைப் பற்றியும் மற்றவர்கள் உணர்வதில்லை. பணம் அனுப்பும் அண்ணன் ,அக்கா, தம்பி மற்றும் தங்கை களின் கஷ்டம் புரிவதில்லை .//மிக சரியாக கூறினீர்கள் ..
      அபயா அருணா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
      நன்றி

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers