.

Pages

Monday, September 30, 2013

கொடுப்போம்... நீரூற்றாய் !

கொடுங்கள் கொடுத்துக்கொண்டே இருங்கள் !
உங்களுடையது என்று ஏதுமில்லை !
அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,
வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,
அறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,
அனைத்துமே கொடுத்துதானே வளர்கிறது !

இலவசமாய் பெற்றதை
விற்றுப் பிழைப்பவராய்
இருப்பதை அழித்து
இனிமை காண்பவராய்
இரக்கத்தைக் கொன்று
அடித்துண்ணும் நரமாமிச பட்சியாய் !

இல்லாமை மனதில் சூடி
இருந்தென்ன லாபம் ?
கொண்டு வந்தாயா ?
கொண்டு போவதற்கு ?
இதயத்தைப் பூட்டி வைத்து
கைகளை முடக்காதே !

அன்பை வாரி வழங்குவோம் !
அறிவைப் பகிர்ந்து கொடுப்போம் !
கருணையாய் பார்ப்போம் ....
படைப்பில் ஊனமில்லை
நடக்க வேலை செய்ய
இன்பம் தேட ,இன்னல் ஒழிக்க
அன்பைப்பெற , அன்பு செய்ய
உழைக்க சம்பாதிக்க
படிக்க, எழுத , பாட என
அனைத்தும் நமக்கு அருளப்பட்டது .

அம்மா ,அப்பா ,உறவுகள்
கொடுக்கப்பட்டன ...

இதோ ...
அனாதைகளாய்
ஊன்முற்றவர்களாய்
பார்வை இழந்தோராய்
தெருவில் விடப்பட்டவராய் ...
பைத்தியங்களாய்
மனவளர்ச்சி குன்றியவராய் ..
கைம் பெண்களாய் ...
நோயின் பிடியில் சிககியவராய்...
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவராய்
படிப்பின் தவறுகளாய்..
தினம் தினம் உடலாலும்
மனதாலும் நொந்து வெந்து
மாய்ந்து சாய்ந்து கிடக்கும்
உள்ளங்கள் எத்தனையோ ?

வீட்டில் நாய்க்கு அடிபட்டால்
பொறுக்க மாட்டோம் ..
வீதியில் கிடக்கின்ற இதயங்களைக்
காப்பாற்ற இரங்க மாட்டோம்!
யாருக்கு வேதனை !
யாருக்கு துக்கம் !
கொடுத்து வாழ்பவன் வாழ்கிறான் !
கெடுத்து வாழ்பவனை
வேதனை தேடி வரும் ...
கொடுப்போம் ...நீரூற்றாய்!
சசிகலா

16 comments:

 1. அன்பை வாரி வழங்குவோம் !
  அறிவைப் பகிர்ந்து கொடுப்போம் !
  கருணையாய் பார்ப்போம் ....
  படைப்பில் ஊனமில்லை

  ஆழ்ந்த கருத்துச்செறிவுடன் அருமையான வரிகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 2. சகோதரி சசிகலாவின் ஆழ்மனதில் உதித்த சிந்தனை எனத்தெரிகிறது. உள்ளத்தை நெருடவைக்கும் அருமையான கவிதை. [கொடுப்போம்... நீரூற்றாய்]

  வாழ்த்துக்கள் சகோதரியே.!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பின்னூட்ட வரிகள் உற்சாகம் தருகின்றன. நன்றிங்க.

   Delete
 3. இல்லாமை மனதில் சூடி
  இருந்தென்ன லாபம் ?
  கொண்டு வந்தாயா ?
  கொண்டு போவதற்கு ?
  இதயத்தைப் பூட்டி வைத்து
  கைகளை முடக்காதே !

  அருமையான வரிகள்..!

  வாழ்த்துக்கள் சகோதரியே.!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் .

   Delete
 4. இல்லாமை மனதில் சூடி
  இருந்தென்ன லாபம் ?
  கொண்டு வந்தாயா ?
  கொண்டு போவதற்கு ?
  இதயத்தைப் பூட்டி வைத்து
  கைகளை முடக்காதே !

  அருமையான வரிகள்..!

  வாழ்த்துக்கள் சகோதரியே.!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க.

   Delete
 5. \\அன்பை வாரி வழங்குவோம் !//

  அன்பான வரிகள்! வாழ்த்துகளும் பாராட்டுகளும் அன்புச் சகோதரிக்கு.

  அள்ளிநீ கொடுப்பதால் குறைவிலாச் செல்வமாய்
  அளவிலா வகையினில் திரும்பிக் __ கிடைக்கும்
  அற்புதச் சூட்சமம் அறிந்தால் __ மீண்டும்
  உள்ளமே நிரப்பிடும் அன்பெனும் சுவையினை
  உலகெலாம் பரப்பிட நினைப்பாய் __ இந்த
  உன்னத விலையிலா அன்பை!

  (வேறு)

  அடைக்கின்ற தாள்களின்றித் திறந்த உள்ளம்
  அதனுள்ளே பொங்குகின்ற அன்பு வெள்ளம்
  தடையின்றி வெளியாகும் அன்பு ஊற்று
  தாகமெலாம் தீர்ந்திடவே அருந்திப் போற்று
  படைத்தவனின் அன்பினிலே நூறில் ஒன்றே
  படைப்பினங்கள் வைக்கின்ற அன்பு என்றே
  கிடைத்திட்ட வாய்ப்பான வாழ்வை யோசி
  கிளைகளையும் கேண்மையையும அன்பால் நேசி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தமிழ் ஊற்று மிக மிக அருமைங்க.

   Delete
 6. அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று- அது
  தன்னில் தருகிறது.
  வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம்- அது
  தன்னில் தருகிறது.
  அறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி- அது
  தன்னில் தருகிறது.
  அனைத்துமே தன்னிலிருந்தே தருகிறது.
  அதனால்
  அனைத்தும் குறைவடையவில்லை.

  மனிதா !
  நீ
  உன்னிலிருந்து தரவேண்டாம்
  உலகில் பெற்றதில் தா !
  உனது என்று உரிமை கொள்கிறாய்
  எது உனது ?
  எல்லாம் எல்லையற்றவனின் உடையது
  நீயோ !
  எல்லையற்றவனின் உடையது.
  அதை மறந்து
  எல்லாவற்றையும் உனதாக்க விரும்புகிறாய் !
  இது ஒரு அபகரிப்பு அன்றோ !
  உனக்கு ஆறறிவு
  அவைகளுக்கோ அதைவிட குறைவு
  அறிவு மிகுந்தவன் செயல் இதுதானா ?

  கொடுக்கும் உள்ளம்
  உன்னிடம் இருந்தால் போதும்
  குறைவற்றவன் தந்துகொண்டே இருப்பான்.
  ஆம் !
  உன்னை மட்டும்
  அவனிடம் கொடு
  அவன் தன்னையே தந்திடுவான் !
  மற்றவைகளுக்கு
  நீ பெற்றதில் கொடு !
  எனவே
  கொடுங்கள் கொடுத்துக்கொண்டே இருங்கள் !

  நன்றி ! சகோதரி.
  உங்கள் வரிகள்
  என்னை தூண்டியது
  விரல் வரைந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் விரல் வரைந்த வரிகள் அற்புதம் மிக்க நன்றிங்க.

   Delete
 7. அள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,
  வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,
  அறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,
  அனைத்துமே கொடுத்துதானே வளர்கிறது //
  என்று துவங்கும் தங்களின் கவி வரிகள்
  இயற்கையிடம் நாம் கற்றுக் கொள்ள சொல்ல வந்த கருத்தை அற்புதமாய் ஆரம்பித்துள்ளீர்கள்
  என்ன்ன கொண்டு வந்தாய் ..என்ற மஹா பாரத வரிகள்
  கவியூடே வந்ததும் குறிப்பிட தக்க வரிகள் ..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பின்னூட்ட வரிகளால் மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 8. அன்புள்ளங்களின் வாழ்த்து மழையில் நனைந்து தான் போனேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 9. வீட்டில் நாய்க்கு அடிபட்டால்
  பொறுக்க மாட்டோம் ..
  வீதியில் கிடக்கின்ற இதயங்களைக்
  காப்பாற்ற இரங்க மாட்டோம்!
  யாருக்கு வேதனை !
  யாருக்கு துக்கம் !
  கொடுத்து வாழ்பவன் வாழ்கிறான் !
  கெடுத்து வாழ்பவனை
  வேதனை தேடி வரும் ...
  கொடுப்போம் ...நீரூற்றாய்!

  அருமையான வரிகள் அனைத்தும் உண்மை வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers