.

Pages

Saturday, October 5, 2013

[ 14 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ குடும்பத்தை மறந்தவன் !? ]

மனைவி மக்களை மறந்த தலைவன்...
நான் கூறிவரும் தகவல்கள் 1990 களில் நடந்த நிகழ்வுகள். பொறுப்பற்ற இரு தலைவன் பற்றிய தகவல்கள் படிப்பினைக்காக தருகிறேன்.

குடும்பத்தின் வறுமையை போக்க உள்ளூரில் பொறுப்பில்லா ஒருவரை குடும்பத்தார் வளைகுடா நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆறுவயது பெண் குழந்தையின் தந்தையான அவர் தனது குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

பிள்ளையை பிரிய மனசில்லாமல் பிரிந்து சென்றார். அவர் சென்ற நாட்டை பார்த்து பிரமித்து போனார். உடனே வேலையும் கிடைத்தது. முதல் மாத சம்பளத்தில் .அன்பு மகளுக்கு ஆசையாய் ஒரு கவுன் வாங்கி வந்தார். எப்படி அனுப்புவது என்று புரியாமல் திகைத்தார். பெட்டிக்குள் வைத்துவிட்டு பிறகு அனுப்ப தருணம் பார்த்து கொண்டு இருந்தார்.

வேலைக்கு சென்று விட்டு வந்து பிள்ளை ஞாபகம் வரும் போதெல்லாம் பிள்ளையின் உடையை பார்ப்பார். காலம் செல்ல செல்ல... ஊர் ஞாபகம் மறந்து போக...

கூடாத நட்பு ..வேண்டாத பழக்கம் சேர்ந்து கொள்ள வேலைக்கு செல்லும் நேரத்தை சுருக்கி கொண்டு குடிப்பது, சூது விளையாடுவது என்று  நேரத்தை வீணடிக்க வருடங்கள் கரைந்தோடின...

மகள் வயதுக்கு வந்து விட்டாள். தொடர்பு குறைந்த சூழல் ..அந்த பிள்ளைக்கு நல்ல வரன் வரவே தந்தை வரவை எதிர்பார்த்தனர். எந்த தகவலும் இல்லை விடுப்பில் வருவோரிடம் செய்தி சொல்லி அனுப்பியும் பலனில்லை.

நல்ல வரனை கைவிட மனமில்லாமல் குடும்பத்தார் அப்பிள்ளைக்கு மணமுடித்து வைத்தனர். காலம் தனது பயணத்தை தொடர்ந்தது ஆறு வருடம் கடந்தது...

பொறுப்பில்லா அம்மனிதனின் உடல் நிலை நோய் வாய்பட உடன் இருந்தோர் வற்புறுத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர். தான் கொண்டு வந்த பொருட்களில் முக்கியமான ஒன்றை எடுத்து வைத்தார். மகளுக்கு வாங்கிய கவுனை காட்டினார். அந்த கவுன் மகளின் மகளுக்கு அதாவது பேத்திக்கு சரியாக இருந்தது.

கேட்கவே காமெடியாக  இருந்தாலும் மிக மோசமான நிகழ்வு என்பேன் ! வாழ்வையும் தொலைத்து எந்த பலனும் இல்லா வாழ்க்கை. பிழைக்க வந்த இடத்தில் தீய  பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்வை வீணாக்கி நம்பி இருக்கும் குடும்ப மகிழ்வையும் வீணடிக்காதீர் என்பதற்கான பதிவே இது.

அதே போன்று வேறு ஒரு நிகழ்வை பதிய விரும்புகிறேன்...
அன்பின் பரிமாற்றத்தின் முக்கிய பங்கு போன் பேசுவதில் உண்டு. நீண்ட காலம் வளைகுடாவில் வசித்து வந்த ஒருவர் தனது மனைவிக்கு போனில் தொடர்பு கொள்கிறார் ஏனோ தெரியவில்லை போனில் வாக்குவாதமாக மாறி போனது.

அக்காலகட்டம் தொலைபேசி வசதியான வீட்டில் மட்டுமே இருக்கும். கணவனுக்கு போன் பேச பக்கத்து வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்த பெண் அழுத வண்ணம் ஆவேசமாக தனது வீட்டிற்கு போய் தனது அறைக்குள் சென்று  தாழிட்டு  தூக்கில் தொங்கி தன்னை மாய்த்து கொண்டார்.

மனைவியை கோபமாக பேசிய நபருக்கு இது தெரியாது. வளைகுடாவில் கடிதம் வர ஏழு எட்டு நாட்கள் ஆகும். ஆனால் செய்தித்தாள் இரண்டாவது நாளே வந்து விடும். செய்தி தாளில் தனது மனைவி சாவு செய்தி கேட்டு அதிர்ந்து போனார். அவர் ஊருக்கே செல்லவில்லை. மனைவியின் சொந்தம் சும்மா விடாது என்பதால் அந்த முடிவு. வாழ்வை தொலைத்து வீணாகி போனார்...

வறுமையை போக்க வளைகுடா வரும் அன்பர்களே...
பணம் ஈட்டுவதில் மட்டுமே குறியாக இருங்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேல் தங்கி விடாதீர்கள் ! பணம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அன்பும் முக்கியம் !

அடுத்த வாரம் நாடாறு மாதம் காடாறு மாதம் !?
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

17 comments:

  1. சிந்தனை தரும் இரு நிகழ்வுகளும் நல்ல படிப்பினை

    இறுதியில் சொன்ன உபதேசம் அருமை

    வாழ்த்துக்கள் காக்கா...

    ReplyDelete
    Replies
    1. இவ்வாக்கத்தை ..நம் பதிப்பகத்தின் சார்பாக
      புத்தகமாக வெளியிடுவோம் இன்சா அல்லாஹ்

      Delete
    2. அஸ்ஸலாமு அ. அதிரை சித்தீக் என்பது சரி. பத்திரிகைத்துறை என்பதும் சரி. "நிபுணர்" என்று அடைமொழி இட்டுக் கொள்வது தவிர்ப்பது சிறந்தது. நிபுணர் என்று மற்றவர்கள் அழைத்தால் அது வேறு விஷயம்.

      Delete
    3. அஸ்ஸலாமு அ. அதிரை சித்தீக் என்பது சரி. பத்திரிகைத்துறை என்பதும் சரி. "நிபுணர்" என்று அடைமொழி இட்டுக் கொள்வது தவிர்ப்பது சிறந்தது. நிபுணர் என்று மற்றவர்கள் அழைத்தால் அது வேறு விஷயம்//ஆடை மொழி இட்டுகொண்டது நான் அல்ல ..சகோதரா ..வளைதலம் நடத்தும் அன்பு தம்பி நிஜாம் அவர்களே ...நான் நேசிக்கும் பத்திரிகை துறையில் நிபுனுத்துவம் அடைந்துள்ளேன் ..ஆனால் வெற்றி அடைய வில்லை ..உனது வரவு நல் வரவாகுக ...

      Delete
    4. சகோ. முஹம்மது ஷாஃபி அப்துல் காதர் அவர்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

      // பத்திரிகைத்துறை என்பதும் சரி. "நிபுணர்" என்று அடைமொழி இட்டுக் கொள்வது தவிர்ப்பது சிறந்தது //

      இந்த அடைமொழியை கட்டுரையாளர் விரும்பி போட்டுக்கொள்ள வில்லை மாறாக சகோ. சித்திக் அவர்கள் பத்திரிக்கை துறையில் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் விரும்பி அழைக்கப்படுவதாகும்.

      இவ்வாறு பிறரால் விரும்பி அழைக்கப்படும் இந்தப்பெயரால் உங்களுக்கு ஏதேனும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டதா என்ன !?

      Delete
    5. சகோ. முஹம்மது ஷாஃபி அப்துல் காதர் அவர்களுக்கு அன்புடன் தெரியப்படுத்திக் கொள்வது அதிரை சித்தீக். பத்திரிகைத்துறையில் இருந்து பல சேவைகள் செய்துள்ளார். ஆகவே ''நிபுணர்'' என்ற பெயரை இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் விரும்பி அழைக்கப்படுவதாகும் அன்றி இது அதிரை சித்திக் தாமாகவே இட்டுக் கொண்டதல்ல என்பது எனக்கும் தெரியும் என்பதால் தாங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்வதுடன் தொடர்ந்து இத்தளத்திற்க்கு வருகை தந்து ஆதரவு தாருங்கள்.

      Delete
  2. அன்பின் அதிரைத் தமிழூற்றே! உங்களின் அனுபவங்களை அழகான ஆக்கமாய்த் தருகின்றீர்கள்.

    இத்தளத்தில் மீண்டும் “மார்க்கம்” சம்பந்தமான ஆக்கம் தொடர்வதில்லை என்று வாக்களித்து விட்டு மீண்டும் தொடர்வதும், அதனால் விவாதம் நீட்டிப்பதும் எனக்கு உடன்படவில்லை; ஆதலால், இனிமேல், இத்தளத்தில் என் ஆக்கங்கள் வாரா. இதுவே இறுதிப் பின்னூட்டமாகும்,

    ம அ ஸலாம்

    ReplyDelete
    Replies
    1. குணம்ங்கள் கவிங்கனிடம் வாசம் புரியும். அதில் கோபம் மட்டும் விதி வழக்கல்ல ! ஞானிகளின் கோபம் ஒழுங்குபடுத்தும். மற்றவர்கள் கோபம் பெரும்பாலும் சீர்மை செய்வதைக்காட்டிலும் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

      இறை நெருக்கம் பெற விரும்புவர்களிடம் பொறுமை மிகுதம் இருப்பது நலம்.
      ஏனென்றால் ஈமானில் பாதி பொறுமை என்றதோடும் மட்டும்மல்லாது பொறுமையே ஈமான் என்றும் வழிகாட்டல் உள்ளதை தங்கள் போன்றோர் அறியாமல் இருக்கமாட்டார்கள்.

      இஸ்லாமியர்கள் நடத்தும் வலைதளங்களில் மார்கம் விளக்கங்கள் இல்லாது நடத்துவது மிகக்கடினம். எப்படியும் வரத்தான் செய்யும். எந்த வலைதளங்கள் நம் ஊரில் மார்கம் சம்பந்தமாக செய்திகள் போடாமல் இருக்கின்றது. இஸ்லாமியனின் வாழ்வை எப்படி மார்க சம்பந்தமாகவும், மார்க்க சம்பந்தமில்லாமலும் பிரிக்கமுடியும். அவ்வாறு நினைத்து வாழ்ந்தால் அது பொய்மை என்றுதான் சொல்லவேண்டும். இவைகளை விளக்கித்தான் இன்னும் "ஏன் மவ்னம்" கட்டுரை எழுதினேன். அதில் பாதி பிரசுரித்துவிட்டு மீதி ஏன் போடவில்லை என்பதை இப்பொழுது யூகிக்க முடிகிறது. அப்பாதியில் தெளிவுகள் உள்ளது. இஸ்லாமியனின் வலைதள செயல்பாடுகளிலும் சகோதர மத/மார்கத்தினர்கள் குறைகள் காண நடத்துதல் சரியாகாது.

      எதிலும் ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்பதற்கு தாங்கள் மாற்றமானவர் அல்ல தானே. முடிவுகள் என்றும் முடிவானதல்ல. மாற்றங்களே முடிவானது.

      Delete
  3. வளைகுடா வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் உண்மை நிகழ்வின் பக்கம் அனைவர்களுக்கும் மீண்டும் நினைவூட்டி நன்னடத்தை கொள்ள உதவும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவு நல்வரவாகுக ....
      இளம்தலைமுறை யினர் படித்து அதில் ஒருவர்
      திருந்தினாலும் நலமே

      Delete
  4. தாய் நாட்டை விட்டு விட்டு வெளிநாட்டில் பொருளீட்ட சென்றவர்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய அறிவுரைகள்.

    அதிரை சித்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி அறிஞர் நபிதாஸ் அவர்களே

      Delete
  5. அனைவர்களும் [சபுராளிகள்] படித்து உணர வேண்டிய வார்த்தைகள் சிந்திக்கத்தூண்டும் செய்திகள் இதுபோல் நிறைய எழுத வேண்டுகிறேன்-உன் நண்பன்

    ReplyDelete
    Replies
    1. நண்பா ...உனது ஊக்கம் என் எழுத்தில் தாக்கத்தை
      ஏற்படுத்தும்

      Delete
  6. பணம் காசு முக்கியம் தான் ஆனால் அதற்க்கு மேல் குடும்பம் முக்கியம் யாரும் மறவாதீர். அருமையான பதிவு சகோதர் சித்திக்.அவர்களே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அன்பின் சகோ ஹபீப் ..தங்கள் கருத்திற்கு நன்றி

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers