.

Pages

Saturday, October 26, 2013

[ 17 ] 'வளைகுடா வாழ்க்கை' [ படித்தால் மட்டும் போதாதுங்க !? ]

படித்தால் மட்டும் போதாதுங்க !?
கல்லூரி காலங்களில் வாலிப துடுக்கு தன்னோடு படிக்கும் சக மாணவர்களோடு அரட்டை என்று தனது வாலிப வயதை கழித்தவர்கள் படிப்பு
முடிந்து கல்லூரியை விட்டு வெளியே வரும்போது வாழ்க்கை பாடத்தை படிக்க துவங்குவர்.

சிலர் பட்டென வாழ்க்கை என்றால் என்ன ? என்பதை தெரிந்து இலகுவாக
முன்னேற்ற பாதைக்கு பயணிக்க துவங்குவர். ஆனால் சிலரோ தான் படித்தவன் ! நான் பட்டதாரி எனது தகுதிக்கு ஏற்ற வேலை வேண்டும் என்று நிபந்தனை விதித்து தனியாக தனி தீவாக காணப்படுவார்கள். அவர்களின்
வாழ்வில் பல கஷ்டங்கள் பாடம் எடுக்கும். அதன் பின்னர் வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் கலந்து பயணிப்பர்.

இதனை போன்று இரு நிகழ்வுகள் வளைகுடா வாழ்வில் நடந்த நிகழ்வை இங்கு விளக்க விரும்புகிறேன்...

ஒருவர் : கல்லூரி இளங்கலை படிப்பை முடித்து கையோடு வளைகுடா பயணமானார். ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லாது அங்கு சென்று வேலை தேடும் வசதியோடு சென்றார். என்னதான் படித்திருந்தாலும் வேலைக்கு புதியவர் என்பதால் அலுவலகத்தில் எந்த பொறுப்பும் இல்லாது அலுவலக உதவியாளர் பொறுப்பு கொடுக்க ஒரு கம்பெனி முன் வந்தது. ஆனால் அவரோ நான் படித்த படிப்பிற்கேற்ற வேலைவேண்டும். நான் இந்த
வேலையை செய்ய மனமில்லை என்று நிராகரித்து விட்டார்.

இப்படியாக பல வேலைகளை நிராகரித்து ஒரு வருடம் வீணாக கழிந்தது. அவர் பல கஷ்டங்களுக்கு பிறகு தன் நிலை அறிந்து ஒரு வேளையில் சேர்ந்தார் காலம் செல்ல செல்ல வேலையின் அனுபவம், மொழி புலமை கூடியதன் காரணமாக அலுவலகத்தில் நல்ல நிலையில், நல்ல சம்பளத்தில் உள்ளார்.

மற்றொருவர் : கல்லூரியில் இளங்கலை பயின்று பின்னர் முதுகலையில்  ( M.B.A ) தேர்ச்சி பெற்று, வளைகுடா பயணமானார். வேலை தேடும் படலம் அவருக்கும் ஒரு வேலை கிடைத்தது இளங்கலை பட்டதாரிக்கு தனி செயலாளர் பணி. சற்றும் தயக்கம் காட்டாது உடனே ஏற்று கொண்டார். அந்த வேலையை நேர்த்தியாக செய்தார். கம்பெனியின் தலைமைக்கு இவரின்
தனி திறமை பளிச்சென தெரியவந்தது. ஆச்சரியப்பட தக்க வகையில் கம்பெனியின் பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.

அவரிடம் நான் கேட்டேன், நீங்கள் முதுகலை பட்டதாரியாக இருந்தும்
சராசரிக்கு கீழ் செகரட்டரி வேலைக்கு சம்மதித்ததேன் என்றேன். வளைகுடா நாட்டிற்கு வந்தது பணம் ஈட்டத்தான் முதலில் சூழ்நிலை அறிய ஏதாவது ஒரு வேலையை பார்க்க வேண்டும். பின்னர் நமது திறமையை காட்ட வேண்டும். அதன் பின்னர் நமது கல்வி தகுதியை கூற வேண்டும் .நான் முது கலை பட்டதாரி என்று கூறி இருந்தால் சர்ராசரி வேலை தர தயங்குவார்கள். நான் எனது வேலையை சரியாக செய்தேன் பலன் தானாக தேடி வந்தது என்றார். இருவரின் நடவடிக்கைகளில் நான் உணர்ந்து கொண்டது.

"படித்தால் மட்டும் போதாதுங்க... 
பணிவும் வேண்டுமுங்க "
                     
கைத்தொழில் ஒன்றை கற்று கொள் ! அடுத்த வாரம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

13 comments:

 1. ஒவ்வொரு தொடரிலும் சிறந்ததொரு படிப்பினைகளை போதித்து வருகின்றீர்கள். பிறர் பயனுற உறுதுணையாக இருக்கும்.

  அதிக பார்வையாளர்களால் தொடர்ந்து வாசித்து மகிழும் உங்களின் இந்த தொடர்களால் இத்தளம் மேலும் சிறப்பை பெறும் என்பதில் ஐயமில்லை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ...அன்பு தம்பி நிஜாமின் பின்னூட்டம்
   எனக்கு புத்துணர்வை தருகிறது ..

   Delete
 2. உங்களது இந்த வளைகுடா வாழ்க்கை. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நிகழ்வுகளை தாங்கி வந்து கொண்டிருப்பதால் உங்களின் பதிவு வரும் கிழமையை எதிர் நோக்கி இருக்கும்படி உள்ளது.

  நல்ல பலனுள்ள செய்திகளை அள்ளி வழங்கிக் கொண்டு இருக்கும் உங்களுக்கு ஒரு சல்யூட்.நண்பர் சித்திக் அவர்களே.!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ..சகோ அதிரை மெய்சா அவர்களே ..
   தங்களின் புரிந்துணர்வு ...எனக்கு மகிழ்ச்சியினை
   தருகிறது

   Delete
 3. வணக்கம்
  'வளைகுடா வாழ்க்கை பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோ ரூபன் அவர்களே ...
   தங்களின் ஆதரவிற்கு நன்றி

   Delete
 4. //"படித்தால் மட்டும் போதாதுங்க...
  பணிவும் வேண்டுமுங்க "//

  இதனை படிக்க...மனதில் மலர்ந்தவைகள்.

  நல்ல தொண்டனே, நல்ல தலைவனாவான்.
  பணிவுகளே பணிவுயர்வு தரும்.
  ஆக, பணிவுயர்வுக்கு சிபாரிசு பணிவே.
  படித்தவனிடம் பணிவு இல்லையேல் அவன் வாழ்வியலை படிக்கவில்லை. ஆனாலும் அவன் வாழ்வில் அதனை படித்தேதீருவான்.

  நல்ல ஆக்கங்கள். வாழ்க ! அதிரை சித்திக்.

  ReplyDelete
  Replies

  1. பணிவுகளே பணிவுயர்வு தரும்.
   ஆக, பணிவுயர்வுக்கு சிபாரிசு பணிவே.
   படித்தவனிடம் பணிவு இல்லையேல் அவன் வாழ்வியலை படிக்கவில்லை. ஆனாலும் அவன் வாழ்வில் அதனை படித்தேதீருவான்///
   மிக சரியாக சொன்னீர்கள் அறிஞர் நபி தாஸ் அவர்களே

   Delete
 5. "தலை குனியும் போது - உன்றன்
  நிலை உயரும்”

  இந்தப் பொன்மொழியைச் சொன்ன இறைநேசர் யார் என்று ஞானியார் நபிதாஸ் அவர்கட்குத் தெரியும், இந்தச் சொற்றொடர்ச் சுமார் 40 வருடங்கட்கு முன்பாக அடியேன் அந்த இறைநேசரின் வாழ்க்கை வரலாற்றினைப் படித்த வேளையில் என்றன் மனத்தினில் இருத்திக் கொண்டேன். அன்றும், இன்றும், என்றும் என் கண்முன்னால் இசொற்றொடர் நின்று எனக்கு வழிகாட்டுகின்றன. இதனைச் சோதித்தும் பார்த்திருக்கின்றேன்.

  இற்றைப் பொழுதினில் இந்த இலக்கணத்திற்கு உட்பட்டவர்களாக என்னுடைய ஆசான் ஒருவர் இருக்கின்றார்கள். எப்பொழுதும் அவர்களிடம் நிறைகுடமாகத் தமிழறிவும் ஞானமும் பெற்றிருந்தும் அவ்வளவு எளிமையாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். அவர்களைத் தேடித்தான் பட்டங்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஆயினும் அவர்கள் ஒரு சாதாரண மனிதனைப் போலவே இருப்பார்கள். தமிழ்மாமணி, கவிவேழம், கவிமாமணி என்றெல்லாம் அவர்களைப் புகழ்கின்றோம்; அப்படிப்பட்ட பட்டங்களை அங்கீகார முத்திரையுடனே பெற்றவர்கள்; அவர்கள் தான் எங்கள் அகில உலக யாப்பிலக்கணக் குழுமத்தின் நிறுவனரும் தலைமை ஆசானுமாவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் தான் அடியேனும் என் எல்லாச் செய்யுட்களையும் பிழைத் திருத்தம் வேண்டி அனுப்பி வைப்பேன். உடனுக்குடன் சளைக்காமல் திருத்தம் அடுத்த நொடியில் மின்மடலில் அனுப்பி விடுவார்கள். அப்படிப்பட்ட மேதையான அவர்கள், ஒருமுறை ஒரு கதைப்போட்டிக்கு என்று சிறுகதை எழுதி விட்டு அதனைத் திருத்தம் செய்யவும் அதனுள் இருக்கும் உரையாடல்களில் பிழைத்திருத்தம் வேண்டியும் என்னிடம் வேண்டிக் கொண்டார்கள் என்பதை இன்றும் நினைக்கின்றேன், உங்களின் இந்த ஆக்கத்தைப் படித்ததும் என் நினைவில் நிழலாடும் அவர்களின் பண்பை, பணிவை எண்ணி வியக்கின்றேன்!

  ReplyDelete
 6. உங்களின் ஆழமான தொடர் என்னை ஆழமாய்ச் சிந்திக்க வைத்தது. மிக்க நன்றி; வாழ்த்துகள்!

  மேலும், இத்தளத்தின் சகப் பதிவாளராக இருக்கும் ஞான ஒளி- நபிதாஸ் அவர்களும், இப்படிப்பட்ட பண்பை, பணிவைப் பெற்றிருக்கின்றார்கள்; அப்படிப்பட்ட பேறும் அவர்கள் செல்லும் ஞானப்பாட்டையினாற்றான் கிட்டும் என்பதும் அறிகின்றேன.

  புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், “இவனிடம் நான் ஏன் கற்க வேண்டும்?” என்றெண்ணும் மனோயிச்சை என்னும் ஷைத்தானியம் “ஈகோ” தான் இந்த அரிய பண்பை- பணிவை அடைய முடியாமல் தடுக்கின்றது.

  அலுலவலகப் பணி முதல் அருந்தமிழ் இலக்கியம்- இலக்கணம் வரைக்கும் யான் மேற்கூறியவைகள் பொருந்தும் கற்றுக் கொடுக்க ஆயத்தமாக இருப்பவர்களிடம் சென்று கற்றுக் கொள்ளாமல் தடுப்பது இந்தச் செருக்கு என்ற ஷைத்தானியம் தான்.

  இந்தச் செருக்கை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றி, எங்கெங்குக் கற்பிக்கப்படுதோ அங்கங்குத் தேடிச் சென்று கற்கும் பணிவை வழங்குவானாக(ஆமீன்)

  ReplyDelete
 7. கவியன்பரின் கூற்று மிக சரியானதே ..
  தங்களின் கல்வி தேட்டம் ...கவி தேட்டம் ..பற்றி நான்
  நன்கு அறிந்துள்ளேன்

  ReplyDelete
 8. 'வளைகுடா வாழ்க்கை பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  அருமையான ஆக்கம் படித்த படிப்புக்கு கிடைக்காத வேலை கிடைத்த வேலை பார்ப்பது நல்லது அதை கொண்டு முன்நேரவேண்டும் என்பது தான் சாபத்தியமானவன்.

  ReplyDelete
 9. நன்றி ..சகோ ஹபீப் அவர்களே ..
  நீங்கள் கூறும் அறிவுரை நம்மவர்களிடம் போய் சேரட்டும்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers