ஏர்முனையில் சிக்கிமாயும்
மண்புழுவின் தியாகங்கள்
அறிகின்ற அறிவிருந்தால்
விவசாயத்தின் கதைகளில்
வாழ்ந்திருக்கும் சோகம்புரியும்.
உழைப்பவன் அழுதிருக்க
உண்பவன் சிரிக்கின்றான்
உடைந்த மண்பாண்டமாய்
உலகத்தில் விவசாயி.
காசிருந்தால் வாங்கிடலாம்
கானல் நீர் போல் நம்பிக்கை
பொருளின்றி எதை வாங்குவது
விதைத்தால் தானே அறுத்தெடுக்க..
விளை நிலத்தில் விழுகின்ற
தானியம் மட்டும் விதையில்லை
இதயத்தில் விதைக்கப்படும்
நன்மை தீமையும் விதைகளே.
வாழ்வும் விளை நிலம்தான்
நாம்தான் சீர் செய்யவேண்டும்
நன்றாய் அதை உழுதெடுத்து
நன்மை வளர்த்தால் செழித்தோங்கும்.
சசிகலா
மண்புழுவின் தியாகங்கள்
அறிகின்ற அறிவிருந்தால்
விவசாயத்தின் கதைகளில்
வாழ்ந்திருக்கும் சோகம்புரியும்.
உழைப்பவன் அழுதிருக்க
உண்பவன் சிரிக்கின்றான்
உடைந்த மண்பாண்டமாய்
உலகத்தில் விவசாயி.
காசிருந்தால் வாங்கிடலாம்
கானல் நீர் போல் நம்பிக்கை
பொருளின்றி எதை வாங்குவது
விதைத்தால் தானே அறுத்தெடுக்க..
விளை நிலத்தில் விழுகின்ற
தானியம் மட்டும் விதையில்லை
இதயத்தில் விதைக்கப்படும்
நன்மை தீமையும் விதைகளே.
வாழ்வும் விளை நிலம்தான்
நாம்தான் சீர் செய்யவேண்டும்
நன்றாய் அதை உழுதெடுத்து
நன்மை வளர்த்தால் செழித்தோங்கும்.
சசிகலா
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு உள்ளது.
ReplyDeleteசிறந்த சிந்தனை தரும் படைப்பு !
தொடர வாழ்த்துக்கள்...
/// இதயத்தில் விதைக்கப்படும்
ReplyDeleteநன்மை தீமையும் விதைகளே... ///
வரிகள் சிறப்பு...
வாழ்த்துக்கள் சகோதரி...
எங்கள் மனவயலில் உங்கள் எழுத்து விதைகள் விதைத்து ஏர்கொண்டு உழுததுபோல், ஏற்றமுடன் கவியாத்து, நன்மைகள் என்னும் கதிர்கள் விளையச் செய்து விட்டீர்கள், சகோதரியே!
ReplyDeleteஇங்கு மண் புழுவிற்க்கும், விவசாயிக்கும் பெருசா வித்தியாசமில்லை இருவரும் தியாகிகள் தான்.
ReplyDeleteஉங்கள் எழுத்துக்களும் பலரது மனங்களில் நல்ல விதைகளை விதைக்க எனது வாழ்த்துக்கள்
விவசாயம் நம்நாட்டின் முதுகெலும்பு. அதில் மண்புளு மறைமுகமாக தன்னை விவசாய மண்ணுக்கு அர்ப்பணிக்கும் தியாகியாக திகழ்ந்து விவசாயம் தழைக்க பெரிதும் உதவுகிறது. அது விவசாயிகள் மட்டும் அறிந்த உண்மை.
ReplyDeleteஉணர்ந்து எழுதப்பட்ட வரிகள். வாழ்த்துக்கள் சகோதரியே.!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகாலங்கள் பல கடந்து போனாலும், ஏதோதோ உச்சியில் வளர்ந்து நின்றாலும், மண்புழுவை நினைவுகூர்ந்து ஒரு கவியாக்கம்,
உங்கள் சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்.
விவசாயம் ஒரு நாட்டின் முதுகு எழும்பு, நாடு வளர அன்று எல்லா மண்புழுக்களும் ஒத்துழைத்தன, இன்றைய மண்புழுக்கள் ஒத்துழைக்குமா?
இந்த மண் ஊர்ந்து செல்லும் அந்த புழுக்களுக்குமட்டும்தான் சொந்தமா? இரண்டு கால்களால் நடந்து செல்லும் புழுக்களுக்கு சொந்தமில்லையா?
உண்மையான தியாகம் ஊர்ந்து செல்லும் அந்த மண்புழுக்களுக்கே சொந்தம்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மண்புழுவின் தியாகங்கள் அதுபோல் விவசாயின் தியாகங்களும் இந் நாட்டுக்கு தேவை என்பதை மிக அருமையாக உணர்த்தி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரி சசிகலா அவர்களே.
ReplyDeleteமண்புழு தியாகம்
ReplyDeleteவிவசாய சோகம்
நம்பிக்கை கானல்நீர்
இவ்வாறு சென்று...
நன்மை தீமை
இதய விதைகள்.
வாழ்வு விளைநிலம்
நன்மை வளர்ப்பு
இவ்வாறு செல்கிறது...
சிந்தனை ஓட்டங்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteமண்ணுக்குள் மறைந்திருக்கும்
ReplyDeleteமண்புழுவின் தியாகங்கள் ..
வெளிகொணர்ந்த உங்களின் கவிக்கு
வாழ்த்துக்கள் ...மண் மீது உலாவும்
எத்தனையோ உறவுகளின் தியாகங்கள்
கண் முன்னே தெரிந்தாலும்
காணாது செல்லும் உலகமிது