kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, October 17, 2013
[ 5 ] அறிவுத்தேன் [ இல்லாது இருப்பான் !? ]
வணங்கும் ஒருவன்
வணங்க 'அவனில்'
இணங்கி இழந்து
இல்லா திருப்பான் !
இல்லா திருப்பான் என்றால் என்ன ?
இல்லாது எப்படி இருக்கமுடியும் ? ஓர் உதாரனம் மூலம் காண்போம் அது மிகப் பொருத்தமன்று. இருப்பினும் விளக்கம் தரும். ( உதாரணத்திற்காக தங்கம் நிலையானது என்ற கருத்தில் உதாரணத்தை காணவும் ). தங்கத்தில் மோதிரம் இருக்கின்றது. மேலும் தங்கம் இல்லையேல் மோதிரம் இல்லை ! தங்கம்தான் நிலையாக இருக்கின்றது. தங்கம் இருக்கும்வரை மோதிரங்கள் இருக்கலாம், மோதிரங்கள் அல்லாமல் வேறு அணிகலங்களாகவும் இருக்கலாம். மோதிரம் இல்லாதது, நிலையற்றது, தங்கம் நிலையானது ஆனால் அது தங்கத்தில் இருக்கின்றது. தங்கம் இல்லையேல் மோதிரம் இல்லை.. ஆக, இல்லாத மோதிரம் எப்படி தங்கத்திலோ. அதுபோல இல்லது இருப்பான்.
இரண்டற ஒரே இருப்பு. வணக்கத்தில் அவன், இவன் என்று இரண்டு இருந்தால் வணக்கமாகாது. அதைத்தான் வணங்கும் ஒருவன் வணங்க 'அவனில்' இணங்கி இழந்து இல்லா திருப்பான் என்ற ஓர் உள்ளமை நிலையினை காண்பிக்கப்பட்டுள்ளது.
இல்லாது இருப்பான் என்றால் இவன் இல்லை என்ற அர்த்தமும்மல்ல. மாறாக வணக்கத்தின் எண்ணத்தில் ஒரே சுயமாக இருப்பான் என்பதாகும். இதைத்தான் மேற்கண்ட தங்க-மோதிரம் உதாரணம் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது. தங்க மோதிரத்தின் இருப்பின் நிலையில், மோதிரம் என்றும், தங்கம் என்றும் இரண்டு இருப்பில்லை. இவ்வாறு வணக்கத்தில் இருக்கவேண்டும்.
அவனல்லா திருப்பான் !
இவனில்லா திருப்பான் !
அவன்செயலா யிருப்பான் !
அருவுருவா யிருப்பான் !
மேற்கண்ட உதாரணமே இங்கும் தொடர்கிறது. பார்பவள் மோதிரத்தை பார்க்கின்றாள். அதன் அழகில் மயங்கி தங்கத்தை மறந்து மோதிரம் என்றுதான் சொல்கிறாள். அழகில் மயங்கி தங்கத்தின் தகுதியான விலையை காட்டிலும் அதிகம் விலைக்கொடுத்தும் வாங்கவும் துனிந்து வங்கிவிடுகிறாள். அவள் பார்த்தது மோதிரத்தைத்தான். மோதிரம் மட்டும் அவளுக்குத் தெரிகிறது.
அவன் தங்கத்தைப் பார்க்கின்றான். பணம் கொடுப்பவன் அவனன்றோ ! பொருமதியைக் காட்டிலும் அதிகம் விலை கொடுக்க தயங்குகிறான். இருப்பினும் அவளின் ஆசைக்காக வாங்குகிறான்.
வியாபாரியோ தங்கத்தையும் மோதிரத்தையும் ஒருங்கே பார்க்கின்றான்.
அவனல்லாது இருப்பான். வணக்கத்தில் இரண்டிருப்பில்லாத ஒரே இருப்பின் உணர்வில் அவன் என்ற தனித்த உணர்வு அற்று தங்கம் மோதிரமாகத் தெரிவது போல், ஒருமையில் இருப்பான். இருக்கவேண்டும். முற்றிலும் இணங்கி அவன் இவன் என்று வேறுபட்ட உணர்வுகள் இல்லாது ஒருமையில் ஒர்மையாக இருக்கவேண்டும். அதுவே அவன் இல்லாது இருக்கவேண்டும் என்பதாகும்..
இவனில்லாது இருப்பான். வணக்கத்தில் இவன், இவன் அவன் என்ற உணர்வு அற்று மோதிரம் தங்கமாகத் தெரிவது போல், இருப்பான்; இருக்கவேண்டும். முற்றிலும் இணங்கி இவன் இல்லாது இருக்கவேண்டும்.
அவன் செயலாக இருப்பான். வணக்கத்தில் தன்; தனது செயல் என்று இல்லாது வணக்குபவன் அவன் செயலாக இருப்பான்; இருக்கவேண்டும். அப்பொழுது தங்கம்; மோதிரம் என்றில்லாது தங்கத்தின் அருவும் அதுவே, உருவும் அதுவே என்ற அருவுருவாக இருக்கவேண்டும். ( இங்கு தங்கத்தை அரு என்றும், மோதிரத்தை உரு என்றும் உதாரணமாக காண வேண்டுகிறேன். அரு- தோற்றமற்றது. உரு- தோற்றம்கொண்டது.)
ஒன்றாய் இருப்பான் !
இல்லாது இருப்பான் !
இரன்டற் றிருப்பான் ! -இது
அரூப வணக்கம் !

அரூப வணக்கம் என்றால் என்ன ?
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
உதாரணங்களுடன் சொன்ன விதம் அருமை... தொடர்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎவ்வழியாயினும் அவ்வழி அறிந்து நடந்தால், பிறப்பு புண்ணியம் அடைந்திடும். அதுவே வெற்றி. வழிகளில் உண்மைகள் மறைந்தே உள்ளது. அதனை எடுக்கத் தெரிந்தவர் வெற்றி அடைந்தவர் ஆவார்.
Deleteதங்களது வாழ்துக்கு நன்றி !
இகத்தில் சேமமும்
ReplyDeleteஅகத்தில் ஞானமும்
உகப்பில் ஓங்கிட
விகற்பம் நீங்கிடும்.
(வண்ண வஞ்சித் துறை: தனத்த தானன/ புளிமா, கூவிளம்)
விடுத்த வார்ப்பினில்
Deleteகொடுத்த ஞானத்தில்
பிடிக்க வேண்டுதல்
வணக்க ஏற்றங்கள்.
விகற்பம் நீங்கிட
விரித்தல் வாங்கிட
மனத்தில் பூத்திட
கொடுத்த சூத்திரம்
நிலைத்து நீங்களில்
பொதித்து போற்றிடின்
அகத்தில் ஞானமும்
இகத்தில் சேமமும்.
ஒவ்வொரு முறையும் உங்கள் கவிகளை கண்டே அக்கவிதனை கற்கின்றேன்.
நன்றி !
ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா
Deleteஎனக்குப் பின்னர் இவ்வரியக் கலையாம் யாப்பெனும் மரபுப்பாவினை வனைந்திட எவரும் உளரோ எம் நட்பு வட்டத்தில் என்று ஏங்கினேன்; இறையவனை வேண்டினேன்; இக்கலையைக் கற்பிக்க - இலக்கணத்தைக் கைப்பு என்று கருதாமல் இன்பம் பொங்க ஆர்வமுடன் தேடி வருபவர்களுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே என் அவாவும்; என் ஆசான்களின் கட்டளையுமாகும். அதன்படி, அல்லாஹ் நாடினான், உங்களைத் தான் என்று நம்புகிறேன்.
ஞானப்பாட்டையில் உங்களின் அடியொற்றி நடக்கிறேன்; மரபுப்பாட்டில் என்றன் அடியொற்றி வருக; வளமார்ந்த பாக்கள் வனைக!
பிழைத்திருத்தங்கள் காண்க:
முதற்பாவில்:\\ஞானத்தில்\\=தேமாங்காய்; //ஏற்றங்கள்\\= தேமாங்காய்
இதனை,
விடுத்த வார்ப்பினில்
கொடுத்த ஞானமும்
அடுத்துப் பாடுமே
தொடுத்த பாவிலே!
என்று அமைத்தால் அசைகளும் அளவொத்து வரும்; மேலும், நான்கு அடிகளிலும் ஒரே எதுகை ஒன்றி வரும்.
மற்ற இரு பாடல்களில் அசைகள் வாய்பாட்டை ஒத்து வந்தாலும், எதுகைகள் அடிதோறும் இல்லாமையும் ஒரு குறையாகும்.
தொடரை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன்... கட்டுரையாளர் இறுதியில் கூறவரும் கருத்தை தெரிந்துகொள்ள
ReplyDeleteஎழுதிய கருத்துக்கள் உள்வாங்கினால் பின்னூட்டம் கேள்வி கேட்டோ அல்லது ஆதரித்தோ மனதில் எழும். அதுபோன்று வரவில்லையானால் எதோ ஒரு தடுக்கம். அது கருத்துக்களை புரிவதிலோ அல்லது ஏற்பதிலோ அல்லது மறுத்திடல் புரியாமையிலோ உண்டாகலாம்.
Delete>>>>>தொடரை உன்னிப்பாக கவனித்து வருகின்றேன்... கட்டுரையாளர் இறுதியில் கூறவரும் கருத்தை தெரிந்துகொள்ள<<<<<,
ReplyDeleteநானும் அப்படியே ....!
நல்லது. இருக்கும் கருத்தில் எதுவும் ஏற்புடையதோ அல்லது வேறோ , எதுவோ எழுதின் அது சம்பந்தமாக விளக்கங்கள் எழுதிக்கொள்ளலாம். அனைவரும் தெளிவை நோக்கியே.. அன்பரே .
Deleteநீங்கள் கொடுக்கும் விலக்ககள் ஓவ்வன்றும் எதிர் பார்க்க வைக்கின்றது எப்போது கிடைக்கும் முழு விபரம் என்று அருமை வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லது அன்பு ஹபீப் அவர்களே !
ReplyDeleteபகுதிகளை உள்வாங்கினால் முழுமை கிடைக்கலாம். முழுமைக் கென்று தனி ருசி இல்லை. பகுதியே முழுமையுடனுடையது. பகுதியின் ருசியும் முளுமையுனுடையதே.