.

Pages

Thursday, October 10, 2013

தொப்பை !?

தொப்பை என்பது யாதெனில் கொழுப்பு கூடுதலாகி வயிறு பெருக்கும் சூழலே தொப்பையாகும் அதை தொந்தி என்றும் ஏளனமாய் சொல்வர் உண்ணும் உணவு அதிகமாவது, உண்ட உணவிற்கு ஏற்றாற்போல் உழையாமையே தொப்பை உருவாக காரணம் ஆகிறது கேஸ் உருவாகும் உணவு உட்கொள்ளலும் தொப்பை உருவாக காரணமாகும் .
   
என்னதான் பேன்ட் பெல்ட்டை இறுக்கி கட்டினாலும் சட்டையை கொஞ்சம் லூசாக அணிந்தாலும் தொப்பையை மறைப்பது கடினம் இன்று தொப்பையை குறைக்கிறேன் பேர்வழிகள் நிறைய முளைத்திருக்கின்றனர். வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்ச்சி செய்யலாம் என்று நிறைய சாதனங்கள் விற்றுத்தீர்கின்றன. சாப்பபிட்டு சாப்பிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் வந்த தொப்பை மீண்டும் வீட்டுக்குள்ளேயே பயிற்சி என்ற பெயரால் சாதனங்கள் !? எங்கு போய் இந்த அநியாயத்தை போய் சொல்ல !
   
உணவு பழக்கத்தால் வரும் இந்த தொப்பை உணவு உற்பத்தி செய்யும் விவசாயியிடம் காணமுடியாது காரணம் அதிகாலையில் வயலில் வேலை செய்ய கிளம்பிவிடுவார்  [நம்மில் வாக்கிங், ஜாக்கிங் செல்லும் நேரம் ] பழையதையே காலை உணவாக உண்பர் குனிந்து செய்யும் வேலைக்கு தொப்பை வராது என்பது விவசாய பெருமக்களே ஆதாரம்.
   
நான் ரயிலில் சென்று கொண்டிருந்த சமயம் ஒரு வயல் வெளியில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார் அவரில் ஒரு மாற்றம் அதாவது அவருக்கு தொப்பை பெருத்திருந்தது குனிய முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டு வேலை செய்து கொண்டுருந்தார் என்ன காரணமாக இருக்கும் என்று யோசனை செய்து கொண்டு வந்தேன் ஆம் பொறிதட்டியது...
 
முன்பெல்லாம் முப்போகம் விளைந்த நிலங்கள் இன்று ஒரு போகத்திற்கே விளைச்சல் இல்லை விளையும் ஒரு போகமும் சில சமயம் மழை அதிகரிப்பால் நாசம் ஆகிறது தொடர்ந்து வேலை செய்தால் தானே ஆரோக்கியம் இருக்கும், தொப்பை போடாமல் இருக்கும் ?
 
மற்றொரு விஷயம் ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சியவர்கள் இன்று  மோட்டார் சுவிச்சு போட்டு விவசாயம் செய்கின்றனர்   தொடர்ந்து எட்டு மணி நேரம் மின்சாரம் இருக்குமா என்றால் அதுவும் இருக்காது எப்படி தொடர் உழைப்பு வரும் ? தொப்பை பெருக்கத்தான் செய்யும்
 
மின்சார வாரியம் பற்றி இன்று உலாவரும் ஓர் நகைச்சுவையை சொல்கிறேன் "எங்கள் வீட்டில் இட்டலிக்கு தொட்டுக்கொள்ள சட்டினியா ? பொடியா ? என்பதை மின்சார வாரியமே முடிவு செய்கிறது" இது தான் நிலை ! விவசாயத்திற்கு இலவச கரண்ட் என்று கூறிவிட்டு மின்சாரமே தருவதில்லை நடு இரவில் மின்சாரம் கிடைக்கும் அந்த நேரத்தில் எப்படி விவசாயம் செய்வது
 
விவசாய நிலங்களெல்லாம் குடியிருப்பு காலனியாக்கி விட்டன விவசாயிகலேல்லாம் ப்ரமோட்டர்களாகி விட்டனர் பிளாட் வியாபாரிகள் ஆகிவிட்டனர் பெயருக்கு கொஞ்சம் நிலங்களை வைத்துக்கொண்டு அரசு மானியங்களை பெற்றுக்கொண்டு வயிறு பெருத்த விவசாயிகளாய் திரிகின்றனர்
   
போதிய உணவு கிடைக்கப்பெறாதவர்கள் வேலைக்கேற்ற ஊதியம் இல்லாதவர்கள் தான் இன்று தொப்பை இல்லா மனிதர்கள்.
   
போலீஸ் உத்தியோகம் செய்வதற்கு ஆட்கள் தேர்வு செய்யும்பொழுது வயிறு புடைத்தோர்க்கு அனுமதி இல்லை ஆனால் வேலை கிடைத்த சில வருடங்களிலேயே தொப்பையோடுதான் காவலர்களை காண்கிறோம் போலீசின் அடையாளமே தொப்பையாக இருக்கிறது என்ன காரணம்? வேலை குறைவு, கட்டுப்பாடு இல்லாத உணவு,..! முன்பெல்லாம் அரைக்கால் டிரவுசரோடு சைக்கிளில் போலீஸ் காரர்களை கண்டிருப்போம் இன்று அப்படியா ?

வயிறு பெருத்தால் தொப்பை என்கிறோம்! ஏளனமாய் பேசுகிறோம்! ஆனால் ஒருவருக்கு வயிறு பெருக்க அவரை நாம் தொப்பை என்று கூறுவது கிடையது! மாராக அவரை மாண்போடு கர்ப்பிணி என்போம், தாய்மை அடைந்தவள் என்போம்.நம் நாட்டில் சட்டம் இயற்ற வேண்டும் கர்ப்பிணிகள் தவிர மற்ற வயிறு பெருத்தோர்க்கு ரேஷனில் பொருள்கள் கிடையாது என்று சட்டம் இயற்ற வேண்டும்  தாய்மையை போற்றுவோம் தொப்பையை குறைப்போம்.
மு.செ.மு.சபீர் அஹமது

19 comments:

  1. உழைக்க சோம்பேறித்தனம் தான்... எப்படியோ பணம் வந்தால் போதும் என்று நினைத்தால் இப்படித்தான்... நல்லதொரு ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நமது அழகான உடலின் அழகை அட்டகாசமாக மெருகூட்டுவது எது தெரியுமாங்க ? நிச்சயமாக “தொப்பை” யாகத்தான் இருக்கும்............

    என்ன ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், சிரிப்பாகவும், கிண்டலாகவும் இருக்குதா !

    வேணும்டா ஆட்டையே கழுதையாக்குன ( ! ? ) நம்மூர் நகைச்சுவை பாணியிலே “PhD” அல்லாத ஆய்வுக்கு இதை உட்படுத்தாலம் சரியா ?

    ReplyDelete
  3. 1. முதலில் ஆளில்லா ஓர் அறையின் சுவர் எதிரே நிண்டுகொள்ளவும்.

    2. கண்டிப்பாக குனியாமல் நேராக நிண்டுகொள்ளவும்.

    3. அப்படியே கண்ணை சைலண்டா மூடிக்கொள்ளவும்.

    4. அப்படியே சத்தம் போடாமல் மெதுவாக நடந்து செல்லவும்.

    5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் “உம்மா” “உம்மம்மா” என்ற சப்தம் போட்டு மோதி நிற்பீர்கள்.

    6. அப்படியே வலியையும், அழுகையையும் அடக்கிக்கொண்டு மெதுவாக கண்களை திறந்து பார்த்தால்...

    7. இப்ப சொல்லுங்க உங்கள் உடலின் எந்த பாகம்ங்க சுவரில் மோதி ஈக்கிது ?

    கண்டிப்பாக மலை விழுங்கி “தொப்பை”யே ! எப்பூடி நம்ம ஆய்வு ( ? ! )

    ReplyDelete
  4. என்னதாங்க பயன் ?

    1. கீழே குப்புற விழுந்து மண்ணைக் கவ்வும்போது முகத்தில் அடிபட்டு மூக்கும், சோடாப்புட்டி கண்ணாடியும் உடையாமல் நம்மை காப்பாத்தும்ங்க.

    ReplyDelete
  5. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்தும்ங்க . உதாரணமாக பெரிய பெரிய தொப்பையைக் கொண்ட போலீசாரைக் கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்துதுங்க.

    ReplyDelete
  6. 4. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் பயன்படுதுங்க........ . உதாரணமாக வேலையில்லாமெ ச்சும்மா தில்லா வெட்டியா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொப்பையை மெதுவா தட்டிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாதுங்க.

    5. உறங்கும்போது குறட்டையை வரவழைத்து அருகிலுள்ள நம்ம பக்கத்து பெட்டு எதிரிகளை ( ! ? ) படுக்க விடாமல் தடுக்கலாமுங்க.

    6. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் ஏறி சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்ங்க.

    7. கூகுள் பேராண்டிகள் ஆழ்ந்து அயர்ந்து படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட யாஹு “அப்பா”வின் தொப்பையைத் தானுங்க.

    ReplyDelete
    Replies
    1. மல்லாக்க படுத்த சறுக்கு விளையாட்டு குப்புற படுத்தால் தலையில் ஒரு பையன் காலில் ஒரு பையன் தராசு போல் பேலன்சிங் ஆடலாம் [ஆடினது போதும் மாமாவுக்கு வயிறு வலிக்கும்]

      Delete
  7. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொப்பையை வாக்கிங், சைக்கிளிங், ஜாக்கிங் போன்றவற்றை தினமும் சைலண்டா செய்வதை மறந்துவிட்டு...

    நொறுக்குத்தீனிகள், பொரிச்ச கோழிகள், குளிர் பானங்கள், சைடிஸ்கள் போன்றதை மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு...

    கண்டிப்பாக தொப்பையை நாம் போற்றி வளர்ப்போம் ! கண்டதையும் உள்ளே போட்டு வளர்ப்போம் !!

    ReplyDelete
  8. வயிறு பெருத்தால் தொப்பை என்கிறோம்! ஏளனமாய் பேசுகிறோம்! ஆனால் ஒருவருக்கு வயிறு பெருக்க அவரை நாம் தொப்பை என்று கூறுவது கிடையது! மாராக அவரை மாண்போடு கர்ப்பிணி என்போம், தாய்மை அடைந்தவள் என்போம்.நம் நாட்டில் சட்டம் இயற்ற வேண்டும் கர்ப்பிணிகள் தவிர மற்ற வயிறு பெருத்தோர்க்கு ரேஷனில் பொருள்கள் கிடையாது என்று சட்டம் இயற்ற வேண்டும் தாய்மையை போற்றுவோம் தொப்பையை குறைப்போம்.

    கடைசியாக பதிந்த வரிகள் அருமை ஆனால் வயிறு பெருத்தோர்க்கு ரேஷனில் பொருள்கள் கிடையாது என்று சட்டம் இயற்ற வேண்டும் இந்த சட்டம் வந்தால் 100க்கு 95 பேருக்கு ரேஷன் கார்டு இல்லாமல் தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  9. தொப்பைகளில் பலவகை உண்டு
    1.பண தொப்பை
    2.சாப்பாட்டு தொப்பை
    3.ஊரான் பணத்தை உலையில் போட்ட தொப்பை
    5.வேலையில்லாமல் வெட்டிப்பேச்சு பேசியே வளர்ந்த தொப்பை [வளர்த்த தொப்பை]

    ReplyDelete
  10. உண்டு உறங்கி இருப்பது மட்டுமே வேலையாக செய்தால் தொப்பை பெருகாமல் என்ன செய்யும். இன்றைய தலைமுறைக்கு தகுந்த நேரத்தில் விழிப்புணர்வாய் இருக்க பகிர்ந்த விதம் சிறப்புங்க. ரேசனில் பொருள் கொடுக்க கூடாது... மிகவும் நல்ல யோசனை.

    ReplyDelete
    Replies
    1. ரேஷனில் பொருள் வழங்கமைக்கு ஆதரவளித்த தம்பி.ஹபீப், சகோதரி.சசிகலா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் [வாழ்க வளமுடன்]

      Delete
  11. பணத்தொப்பை,பதவித்தொப்பை, சந்தோசத்தில் தொப்பை, சாப்பாட்டினால் தொப்பை,வாயுத்தொல்லையில் தொப்பை,உடலில் கொழுப்பு அதிகமானால் தொப்பை, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தால் தொப்பை, இப்படி தொப்பை வர ஆயிரத்தெட்டு காரணங்கள் உள்ளன.

    ReplyDelete
  12. நல்ல விழிப்புணர்வு.

    1 தொப்பையை குறைக்கிறேன் பேர்வழிகள் நிறைய முளைத்திருக்கின்றனர். வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்ச்சி செய்யலாம் என்று நிறைய சாதனங்கள் விற்றுத்தீர்கின்றன. சாப்பபிட்டு சாப்பிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் வந்த தொப்பை மீண்டும் வீட்டுக்குள்ளேயே பயிற்சி என்ற பெயரால் சாதனங்கள் !? எங்கு போய் இந்த அநியாயத்தை போய் சொல்ல !

    2 உணவு பழக்கத்தால் வரும் இந்த தொப்பை உணவு உற்பத்தி செய்யும் விவசாயியிடம் காணமுடியாது காரணம் அதிகாலையில் வயலில் வேலை செய்ய கிளம்பிவிடுவார் [நம்மில் வாக்கிங், ஜாக்கிங் செல்லும் நேரம் ]

    3 போதிய உணவு கிடைக்கப்பெறாதவர்கள் வேலைக்கேற்ற ஊதியம் இல்லாதவர்கள் தான் இன்று தொப்பை இல்லா மனிதர்கள்.

    4 உண்ட உணவிற்கு ஏற்றாற்போல் உழையாமையே தொப்பை உருவாக காரணம்

    மொத்தத்தில் படு சூப்பர் !

    ReplyDelete
  13. நல்ல நகைச்சுவை:

    "எங்கள் வீட்டில் இட்டலிக்கு தொட்டுக்கொள்ள சட்டினியா ? பொடியா ? என்பதை மின்சார வாரியமே முடிவு செய்கிறது"

    ஆனாலும் சிலசமயம் பொடிக்கும் மிசாரம் தேவைப்படுகிறது. ரெடிமேட் பொடி கிடைக்காவிட்டால்...

    கட்டுரை சுகமாக கொண்டுசெல்கிறது.
    மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்களே, வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  14. பொருளியல்:

    *விவசாயத்திற்கு இலவச கரண்ட் என்று கூறிவிட்டு மின்சாரமே தருவதில்லை நடு இரவில் மின்சாரம் கிடைக்கும் அந்த நேரத்தில் எப்படி விவசாயம் செய்வது

    #உற்பத்தி இருக்காது.
    விலைவாசி ஏறும்.
    தொப்பை குறையும் !

    ReplyDelete
    Replies
    1. என் ஆக்கத்திற்கு தங்களின் கருத்துரை மிகவும் பயனுள்ளது அறிஞ்ஞர் ந.தா.அவர்களே

      Delete
  15. தொப்பை தலைப்பில் நாட்டு நடப்பையும் சேர்த்து
    அழகாய் கட்டுரை வரைந்த நண்பர்க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. சப்பாத்திக்கு மாறுங்கோ சட்டென குறைந்து விடும் தொப்பை; செல்லுங்கள் “குட்பை”

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers