.

Pages

Monday, October 7, 2013

சுயநலத்தின் முதல் குழந்தை !

சுயநலத்தின் முதல் குழந்தை,
யார் ? பதில்தான் தேடுகிறேன்!
வானில்லைப் புவியில்லை,
நீரில்லை, மலையில்லை,
மண்ணில்லை, மரமில்லை,
காற்றில்லை-பாவமனிதனுமில்லை.

எதுவுமில்லா வெறுமையின்,
வசந்தகாலம் கொன்றுவிட்டு,
இயற்கையெனும் விதையை,
ஊன்றியதின் நோக்கமென்ன!
என்பெயர் விளங்க வேண்டும்,
எனைவணங்க கைகள் தேவை,
என்ற சக்தியின் சுயநலத்தால்,
நாம் வந்து வீழ்ந்தோமோ?

முற்பிதாக்கள் செய்த பாவம்,
முல்லைப்பூவைச் சேருவதேன்,
அதைக்கொய்து உயிரெடுக்கும்,
இதயமற்ற செய்கையேன்,
பேசா மடந்தைகளை- நாம்,
நம் உணவாய் நினைப்பதேன்,
நமைக்காக்க சட்டங்களைத்,
தீட்டிவைத்து அழிப்பதேன்,
உறவென்ற பெயர்சொல்லி,
அடிமைத்தனம் வளர்ப்பதேன்,
எல்லாமே பொய்யுரைகள்,
சுரண்டும் சுயநலங்கள்!

திறந்துவிட்டால் பறந்துபோகும்,
என்பதினால் திருமணங்கள்!
நம்பிக்கைக்கு விலங்கிட்டு,
அரங்கேறும் நாடகங்கள்,
மனதைக் கேட்டால் தெரிந்துவிடும்,
வலியைச் சுமந்து பயணங்கள்,
பிரியங்களும்,பிரிவுகளும்,
ஒருகூட்டுப் பறவைகளாய்,
இறகைவெட்டிப் போட்டதனால்,
கூண்டில் இணை ஜோடிகளாய்.
என் உதிரம்,என் குடும்பம்,
என்பிள்ளை,என்வீடு,
என்சுற்றம்,என் சமூகம்,
என்சொத்துஎன் பணம்,
என்தேசம்,என் உலகம்,
எனதென்றே பாடுகிறோம்,
என் மூச்சிக் காற்றுக்கும்,
எனக்கும் பந்தமென்ன ?
எங்கிருந்தோ வருகிறது,
என்னுயிர் காக்கிறது!

எதையுமது கேட்டதில்லை,
எப்போது அதுபோகும்,
எனக்குச்சொல் மானுடமே!
அடங்காத  ஆழ்கடலும்,
அறியாத பெரும் புயலும்,
அமிலமான எரிமலையும்,
அறியாத தாதுக்களும் ,
அழகாய் ஒளிரும் கதிரவனும்,
அடியில்வாழும் பொக்கிஷமும்,
அத்தனையும் நமதேயெனறு,
அனைவருமே நினைக்கும்வரை,
அத்தனையும் சுயநலமே,
அமைதி வேண்டுமெனில்
அழுக்கான சுயம் அழிப்போம்!

நன்றியுடன்...
சசிகலா

18 comments:

 1. சுயநலத்தோடு செயல்படும் மனிதருக்கு நல்லதொரு சாட்டையடி !

  அடுக்குமொழியில் வார்த்தைகளை அழகாக அமைத்திருக்கிற அழகிய கவிதை

  தொடர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. வியக்க வைக்கிறது சொல்லாடல்...! வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 3. சுயநலம் கவிதை விளக்கம், அருமை

  ReplyDelete
 4. சுயநலத்தோடு வாழும் மனிதன் ஒரு நிமிடமாவது படித்து செல்லட்டும் உங்களின் அருமையான கவிவரிகளை வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 5. ஆழமான ஞானோதய மிக்க வரிகள். அருமை.வாழ்த்துக்கள்.

  சுயநலம் நம் அனைவர்களின் உணர்வோடு ஒன்றிப்போனது அவ்வளவு எளிதாய் நீங்கி விடாது என்பதே உண்மை நிலை.. !

  ReplyDelete
 6. சுயநலம் இல்லாத மனிதர்களே இல்லையென்று தான் சொல்ல வேண்டும். சகோ ஹபீப் சொல்வது போல ஒரு நிமிடம் பொதுநலம் பற்றியும் சிந்தித்தால் நல்லது. வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 7. வணக்கம்
  சிந்திக்க வேண்டிய கவி வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. சுயத்தின் நலம் சுயநலம்
  சுயத்தின் பிரசவம் அறிவு .
  சுயத்தின் குழந்தை அறிவு.
  சுயநலத்தின் குழந்தை அறிவு.

  வெறுமையின் பிரிவே அனைத்தும்
  பொறுமையாக புரியவே அனைத்தும்.
  அனைத்தும் இழந்தால் வெறுமை.
  வெறுமையின் நிலை ஒருமை

  ஒருமையின் குழந்தை அனைத்தும்.
  அனைத்தின் ஆதி வெறுமை
  வெறுமையில் இல்லாதது இல்லை
  அருமையாய் அறிய வணக்கம்.

  காலில் பட்ட வலி
  காயம் முழுதும் வலி
  கருத்தை புரிய தெரியும்
  பிதா செய்த பாவம்
  பிள்ள வழி வாழும்..

  நீயென்பது நின்சுவாசம் நீங்கியல்ல.
  நின்மனத்தை நன்கிருத்தி நோட்டமிடு
  எதுவுமின்றிநீ என்பது இல்லை.
  எல்லாமின் எடுத்த முடிச்சுநீயே !
  ஏகமென்ற சுயமும் நீயின்றியுண்டோ !!

  நன்றி சகோதரி ! உங்கள் சொற்களில் உண்டாகியது..

  ReplyDelete
  Replies
  1. மிக மிக சிறப்புங்க. நன்றியும்.

   Delete
 9. ,
  என்பிள்ளை,என்வீடு,
  என்சுற்றம்,என் சமூகம்,
  என்சொத்துஎன் பணம்,
  என்தேசம்,என் உலகம்,
  எனதென்றே பாடுகிறோம்,////
  மிக சரியாக சொன்னீர்கள் ...

  ReplyDelete
 10. //அமைதி வேண்டுமெனில்
  அழுக்கான சுயம் அழிப்போம்!//

  நல்லதொரு ஆக்கம், பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. வலைச்சரத்தில் இன்று நம் பக்கத்தை அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.

  ReplyDelete
 12. http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_10.html

  ReplyDelete
 13. எல்லோரையும் சற்று நின்று அவரவர் பற்றி சிந்திக்கச் சொல்லும் கவிதை வரிகள்.
  //எப்போது அது போகும்
  எனக்குச் சொல் மானுடமே//
  பிறப்பிலிருந்து உடன் வருவது
  அத்தனை சீக்கிரம் போகாது. நீங்கள் சொல்வது போல பொதுநலத்திலும் அக்கறை செலுத்தினால் கொஞ்சமாவது போகும்.
  ஒவ்வொரு சொல்லும் சம்மட்டி அடியாக மனதில் இறங்குகிறது.
  பாராட்டுக்கள், சசி!

  ReplyDelete
 14. "நம்பிக்கைக்கு விலங்கிட்டு,
  அரங்கேறும் நாடகங்கள்,"
  அமைதி வேண்டுமெனில்
  அழுக்கான சுயம் அழிப்போம்!" அர்த்தமுள்ள வரிகள். பாராட்டுக்கள்

  ReplyDelete
 15. வணக்கம்! வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன். வாழ்த்துக்கள்!

  இங்கு நீங்கள் கூறும் சுயநலம் போவது எப்போன்னு.. சிந்திக்க வைக்கும் வரிகள்!

  ஒவ்வொருவரும் இஅது சுயம் சுயநலம்ன்னு மனதில் ஊன்றி நினைத்தாலே பொதுநலம் தோன்றிடாதா....

  அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. வலைச்சரம் மூலம் வந்தால் இங்கு பெரும் பொக்கிஷம் உள்ளது போல ......//அமைதி வேண்டுமெனில்
  அழுக்கான சுயம் அழிப்போம்!//

  அவசியமான வரிகள் ....வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 17. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers