.

Pages

Monday, October 14, 2013

உறவுகளின் மேன்மை !

உறவுகளே உறவுகளே ஒன்று கூடுங்கள்....
ஒற்றுமையே பலம் என்றுணருங்கள்..
தந்தை தாய் எவ்வழி வந்தால் என்ன ?
தரணியில் நிலையாம் அன்பைப் பயிலுங்கள்.

அள்ள அள்ள சுரக்கும் செல்வம்
நல்ல நல்ல சேதிகள் சொல்லும்
கள்ளமில்லா உள்ளம் கொள்ளும்
கன்னித் தமிழ் அங்கே கொஞ்சும்.

மழைத்துளி ரசிக்க வைக்கும்
மண் வாசம் நுகர வைக்கும்
வானவில்லை பார்த்து மகிழ்ந்து
வட்டமடித்து கூடி விளையாட வைக்கும்.

கூட்டாஞ்சோறு ஆக்க வைக்கும்
கூடி திருவிழா பார்க்க வைக்கும்
பகிர்ந்துண்டு மகிழ வைக்கும்
பார்ப்போரை உறவாய் இணையவைக்கும்.

பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்
பட்டுப் போன உறவை துளிர்க்கும்
சிரித்து நிற்கும் செம்பவழ முத்தும் (மழலை)
செழித்து வளரும் பண்பதனை கற்றும்.

விருந்தோம்பல் பழக வைக்கும்
வீட்டிற்கொரு தோட்டமமைக்கும்
தொன்றுதொட்டு வரும் ஒழுக்கமதை
தொலைத்திடாது வரும் தலைமுறை காக்கும்.

சசிகலா

20 comments:

  1. ''உறவுகளின் மேன்மை'' அருமை.

    ஒவ்வொரு வரியும் உறவை பலப்படுத்துவதாக உள்ளன. கூடிவாழ்வோம் கோடிநன்மை பெறுவோம்.

    வாழ்த்துக்கள் சகோதரியே.!

    ReplyDelete
    Replies
    1. கூடிவாழ்வோம் கோடிநன்மை பெறுவோம். நல்ல கருத்தை சொன்னீர்கள். நன்றிங்க.

      Delete
  2. பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்
    பட்டுப் போன உறவை துளிர்க்கும்///////

    கூட்டு குடும்ப உறவுகளில் பாட்டன் பேத்தி உறவுகள் இருக்க. பாட்டன் கதை கைபேசியில் கேட்க்கும் நிலையில் இன்று பேத்திகள்

    ReplyDelete
    Replies
    1. இன்றைய நிலையை நினைவுபடுத்திய தங்கள் வரிகள். நன்றிங்க.

      Delete
  3. உறவின் பிரிவில் இழந்தவைகள்
    ...உந்தன் மனதின் மகிழ்ந்தவைகள்
    பிறந்த வாழ்வில் பலபுயல்கள்
    ...பிரிந்த வாழ்வால் தடம்புரள்தல்
    சிறந்த குடும்பம் ஒற்றுமையில்
    ...சிறப்பு எதிலும் கண்டிடுமே
    பொறுப்பு மிகுந்த சசிகலாவின்
    ...படைப்பு கண்டே மகிழ்ந்தேனே !

    அன்பர்காள் !
    இது என் மா மா காய் மா மா காய்.
    ஆசிரிய விருத்தம்.
    முதல் வார்ப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரிய விருத்தப்பா கண்டு மிகவும் மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

      Delete
  4. ஒவ்வொரு வரியும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தந்தை தாய் எவ்வழி வந்தால் என்ன ?
    தரணியில் நிலையாம் அன்பைப் பயிலுங்கள்//
    ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத்திலும் பதிய வைக்க வேண்டிய சிந்தையுள்ள கருத்து

    ReplyDelete
  6. வணக்கம்
    கவிதையின் வரிகள் கருத்து மிக்கவை.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. உறவுகளை மேம்பட வைக்கும் சிறப்பான வரிகள் !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  8. உறவுகளின் மேன்மையை
    உன்னதமாக்கிய அருமையான கவிதை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  9. உறவுகளின் மேன்மையைச்சொல்லும் உன்னதமான ஆக்கத்திற்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நன்றியும் ஐயா.

      Delete
  10. உறவுகளை விட நட்பே உண்மையான உறவும், ”வணிகமில்லா அன்பும்” வாரி வழங்குதலை உணர்கிறேன். உங்களின் அபிப்ராயம் என்ன சகோதரியே?

    ReplyDelete
  11. குடுபத்தில் ஒற்றுமை ஓங்க நட்பின் ஆதிக்கம் வழுப்பெற உங்களின் வரிகள் அருமை வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers