.

Pages

Wednesday, October 2, 2013

நண்பேன்டா !

மாமா தந்த
ஐந்து காசில்
வாங்கி வந்தேன்
கமர்கட்டு
காக்காய்
கடிகடித்து
நானுந்தந்தேன்
நண்பனுக்கு

     ***
அவன்
வாங்கி வந்த
குச்சி ஐசில்
எங்களின்
நாவு சிவப்பு நிறமாய்
மாறிப்போனது

     ***
இணைபிரியா
நட்புக்கு
இனைந்து
எடுத்துக்கொண்ட
புகைப்படம்
இன்றும்
எங்களிடம்
பொக்கிஷமாய்!

       ***
பள்ளிப்படிப்போடு
அவர்தம்
சூழலால்
பிரிந்துவிட்டோம்
பிரியா விடையோடு

       ***
கடிதத்தொடர்பு
உறவின்
பாலமாய்
இருக்க

      ***
ரிடயர்மென்ட்
எனும் மூன்றாம்
நண்பன்
எங்களை
ஒன்று சேர்த்தான்

       ***
எங்கள்
பேரப்பிள்ளைகளும்
வாரிசுரிமைபோல்
நன்பர்களாய்
ஷேர் செய்கின்றனர்

       ***
புளுடூத்திலும்
பேஸ்புக்கிலும்
[ அவர்தம்
நட்பை ]

       ***
எங்கள் ஷேர்
கமர்கட்டும்!
குச்சி ஐசும்!
என்று சொன்னால்
ச்சி டர்ட்டி ஹேபிட்
என்கிறான்
என் பேரன் !
மு.செ.மு.சபீர் அஹமது

17 comments:

 1. // எங்கள் ஷேர்
  கமர்கட்டும்!
  குச்சி ஐசும்!
  என்று சொன்னால்
  ச்சி டர்ட்டி ஹேபிட்
  என்கிறான்
  என் பேரன் ! //

  என்ன செய்வது காலத்தின் மாற்றம் :(

  ReplyDelete
 2. நட்பின் பெருமை அருமை !

  யான் சபீராக்கா, உங்கள் நண்பர் சித்திக் காக்காவை நினைத்துதானே இந்தக்கவிதை !?

  ReplyDelete
 3. இன்றைய நிலை அப்படித்தான் ஆகி விட்டது... அன்றைய சந்தோசத்தை புரிய வைக்கவும் முடியாததும் உண்மை...

  ReplyDelete
  Replies
  1. நமது காலத்து share டர்ட்டி ஹேபிட் என்றால் இன்றைய share என்ன வகை தனபாலன் அவர்களே

   Delete
 4. கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்.காக்கா.

  ReplyDelete
 5. இவ்வுலக வாழ்வில் ஒரு உன்னதமான உறவு என்று சொன்னால் அது உண்மையான நட்பாகத்தான் இருக்கும்.

  ஆனால் இப்போது உள்ள நட்புக்கள் பெரும்பாலும் நட்பைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் சுய நலத்திற்காகவும் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் பயன் படுத்திக் கொள்வது தான் வேதனையாக உள்ளது.

  குச்சி ஐஸை கையில் கொடுத்து யோசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி.!

  ReplyDelete
 6. சேமியா ஐஸ்! நண்பர்களோடு, ஜமால் ஐஸ் கம்பனியில் சாப்பிட்டது உண்டா சகோ.மெய்சா அவர்களே

  ReplyDelete
  Replies
  1. அதிரையில் பிறந்த யாவரும் ஐஸ் சாப்பிடாத ஆளும் உண்டா ..?? சகோதரரே.!!!

   Delete
 7. சும்மா இருந்த
  எம்மா மனசில்
  கமர்கட்டு
  குச்சி ஐஸ்
  போட்டுவிட்டீர் !

  குதூகலம் கும்மியடிக்க
  அரைக்கால் டவுசர்
  அதுக்குமேல் வேட்டி
  அத்தோடு பள்ளிகூடம்.

  அந்தநாள் நினைவுகள்
  நண்பனோடு லூட்டி
  அப்பப்பா !
  அப்படியே உக்கார்ந்துட்டேன் !
  அரைமணி நேரம்
  அந்தநாள் நினைவுகள்
  சுகம் ! சுகம் !

  ஏன் ? நினைவு
  என்னை இங்கே
  மீட்டது !
  கசக்குது !

  எத்தனை சுகம்
  அப்போது !

  மீண்டும் என்னை
  அங்கே இருக்க
  வேண்டும் உந்தன்
  நன்பேண்டா !

  நன்றி !
  மு.செ.மு.சபீர் அஹமது அவர்களுக்கு.

  ReplyDelete
 8. என் அன்பு நண்பனின் அன்பு இன்னும் நான்கு தலைமுறை

  எங்கள் நட்பை பேசும் ...

  ReplyDelete
 9. அன்பின் தொழிலதிபரும், வளர்ந்துவரும் கவிஞருமான சபீர் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும். நட்பின் பெட்பை அதன் கியாபங்களை மறக்கவியாலது என்பதற்கு உங்கள் அணுக்கத் தோழரின் நட்பை விளக்கியதில் அறிந்தேன்.

  எனக்கும் என் ஆருயிர் நண்பன் உண்டு (மரியம்மா வீட்டு தமீம், (அமெரிக்கா).

  அவனை எண்ணி யான் வடித்த பாக்கள் இன்று மீள் பதிவு செய்ய வைத்து விட்டன, உங்களின் வரிகள்.


  நண்பனுக்கோர் நன்றி மடல்


  பலம்குன்றி நிற்கும் பொழுதினி லெம்மை
  நலம்பெற நாடுதல் நட்பு.

  யாப்பிலக்கணம்: குறட்பா

  உடைமாற்றிப் போட்டதையும்; உண்டதையும்; ஒற்றைக்
  குடைக்குள்ளே ஓருடலாய்க் கொட்டும் மழையில்
  நடைபயிற்சி செய்ததையும் நட்பால் இழைத்துத்
  தடையின்றிப் பொழிகின்ற தன்னிலைக் கூற்று
  விடைபெற்று வந்த விநாடியும் போற்றும்
  அடைபட்டுக் கிடக்கின்ற அன்பென்னும் வெள்ளம்
  மடைதாண்டி வழிகின்ற மாசிலா நட்புள்ளம்
  படைத்தோனே வழங்கும் பரிசு.


  யாப்பிலக்கணம்: வெண்கலிப்பா

  உன்பாலுள் ளன்பினா லுள்ளம் பதறுமே
  உன்பா விலும்பிழை யுண்டென்றால் நண்பரே
  தன்பால் வழங்கும் தகைசால் பரிசிலை
  அன்பா யெனக்கே அளித்திட வேண்டினாய்
  உன்போ லெவர்தான் உளர்.

  யாப்பிலக்கணம்: பஃறொடை வெண்பா


  உன்பாவில் குற்றம்
  உண்டென்பதே குற்றம்
  பஃறொடை வெண்பாவில்
  பகர்கின்றேன் நண்பா!!
  உன்களிப்பால் நேற்று
  வெண்கலிப்பாவின் ஊற்று

  நீளும் பட்டியல்
  கோடியே யாயினும்
  ஆளும் உன்மன ஆழத்தில்
  ஆரம்பமாய் நானும்

  உன்னிடத்தில் நானிருக்கும்
  என்னிடத்தை எவர்க்கும்
  விட்டுக் கொடுக்கவோ; நட்புப்
  பட்டுப் போகவோ விடமாட்டேன்....!!!!!!!!!!

  -புதுக்கவிதை-


  Oh! My Dear Friend
  Your list wouldn't be an end
  Event it reaches unto crore
  I am in your heart's core

  English Poem

  ReplyDelete
 10. அறிஞர் நபிதாஸ் அவர்களே,கவியன்பர் கலாம் காதிர் அவர்களே உங்களின் பாலிய வயது நண்பர்களை நியாபகப்படுத்தி விட்டேனோ நீங்களும் கவிவரிகளால் அழகாய் கருத்திட்டு இருக்கின்றீர்கள் எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

  ReplyDelete
 11. அந்த நாள் நினைவுகள் எத்தனை சுகம் என்பதை அழகான வரிகளால் உணர்ந்தோம். அப்படியே இந்த கால பிள்ளைகளின் மனநிலையையும் படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.

  ReplyDelete
 12. எங்கள் ஷேர்
  கமர்கட்டும்!
  குச்சி ஐசும்!
  என்று சொன்னால்
  ச்சி டர்ட்டி ஹேபிட்
  என்கிறான்
  என் பேரன் !
  Super சபீர்

  ReplyDelete
 13. தாஜுதினின் வருகை தொடரட்டும் [அஸ்ஸலாமு அலைக்கும் [ரஹ்]

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers