kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, October 31, 2013
அம்மிக்கும் மிக்சிக்கும் போட்டியாம்ல :)
மிக்சிக்கும்
போட்டியாம்
அம்மாவின்
ஓட்டு
மிக்சிக்கும்
அப்பாவின்
ஒட்டு
அம்மிக்கும்
என்றானது
மம்மியிடம்
கேட்டேன்
ஏன் மம்மி
அம்மிமேல்
கோபமா ?
அம்மா சொன்னால்
உன்னை
ஸ்கூலுக்கும்
அப்பாவை
அலுவலகத்திற்கும்
சோற்றோடு
அனுப்பிவத்து
அத்தோடு
உன் தாத்தாவிற்கு
அருகம்புல் சாரெடுக்க
இவை
அத்துனையும்
காலைப்போழுதிலேயே
செய்து முடிக்க
மிக்சியே
சூட்டபில்
என் மகனே
மம்மிக்கு புடிக்காத
அம்மியை
ஏனப்பா தேர்ந்தெடுத்தாய் ?
அம்மியில் தானப்பா
ஆரோக்கியம்
சேர்ந்திருக்கு
நான் கூறும்
"அம்மாவின்
கைருசியே தனிதான்"!
என்பதற்கும்
அம்மியின் மகத்துவம்தான்
மகனே
அம்மியோ, மிக்சியோ
அறைபடப்போவது
அம்மாதான் !
மாற்றங்கள்
பல நடந்து
அம்மி மிக்சியானது
ஆட்டாங்கல் கிரைண்டரானது
விறகடுப்பு, கேசடுப்பானது
ஆனால்
அம்மாக்களுக்கு
மட்டும்
மாற்றங்களே
இல்லாது
அடுப்படியே
கதியானது !?
மு.செ.மு.சபீர் அஹமது
Subscribe to:
Post Comments (Atom)
சகோ. சபீர் அவர்களின் 50 வது படைப்பு இது !
ReplyDelete50 என்ன ! இன்னும் 500 படைப்புகளை படைக்க வாழ்த்தி வரவேற்கின்றோம் !
சிறந்த விழிப்புணர்வு !
தொடர வாழ்த்துக்கள்....
வணக்கம்
ReplyDeleteநல்ல விழிப்புணர்வுப்பதிவு அருமை வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தீபாவளியை சிறப்பாய் கொண்டாட தங்களை வாழ்த்துகிறேன்
Delete//அம்மிக்கும் மிக்சிக்கும் போட்டியாம்ல :)//
ReplyDeleteநல்ல நினைவூட்டல் கவி வடிவில். வாழ்த்துக்கள்.
மனிதன் நவீனத்தை நோக்கி புறப்பட்டு விட்டதால் இத்தனைகாலமாக தனது திடகாத்திரத்திற்கு பல வகையில் பக்கபலமாக இருந்த பழைமைககளை மறந்து இன்று பல புதுப் புது நோய்களுக்கு புகலிடம் கொடுத்து தனது நீண்ட ஆயுளை சுருக்கிக் கொண்டான்.
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeletehappy diwali my friend
Deleteஎன் ஓட்டு இந்த “சூப்பர்” கவிஞர்க்கு!
ReplyDeleteகவிதையில் காட்சியை முன் கொணர்வு கவிஞனின் திறமை அது கொட்டி கிடக்கிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅது என்ன? அம்மிக்கும் மிக்ஸ்சிக்கிம் போட்டியா?
அது அப்படிங்க? அம்மி மேலே மிச்சி உட்க்கார்ந்தாளுமோ அல்லது மிச்சி மேலே அம்மி உட்கார்ந்தாளுமோ நசுங்க போவது மிச்சிதானே.
நல்ல கவிதை., நல்லா நசுக்கி எழுதுங்க.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
புதுமை உலகம்
ReplyDeleteஇளமை கெடுக்கும்
முதுமை நெருங்கும்
இனிமை போகும்.
ஆக என்ன ஒரு வரிகள் அருமை
ReplyDeleteஅம்மாக்களுக்கு
மட்டும்
மாற்றங்களே
இல்லாது
அடுப்படியே
கதியானது !?
என் ஒட்டு அம்மீக்கு தான் அதில் அரைக்கப்படும் பொருளின் ருசியோ தனி சுவை.