.

Pages

Thursday, November 14, 2013

[ 9 ] அறிவுத்தேன் [ ஒன்றின் அரூபச் செயல் ! ]

ஒன்றே இருந்து
பார்த்தல் கேட்டல்
தன்னில் நிகழ்தல் -இது
அரூப மன்றோ !

ஒன்றின் பார்த்தல், கேட்டல் போன்ற செயல்கள் அரூபமா ? எவ்வாறு ?

ஒன்றாக உணரும் போது, அறியும் போது வேறில்லை என்ற தெளிவில் அரூபம் இருக்கும். ஒன்றே உருவாகி இருப்பதால் அதை தவிர்த்த வேறு இல்லாததால் எதைப் பார்க்க ? பார்வையே இல்லை ! உருவமும் இல்லை ! ஒன்றின் உருவம் என்பது அரூபமே என்று பார்த்தோம்.

'என்ன ! தத்ரூபமாக இறந்து போன எங்கம்மாவை கனவு கண்டேன். அது கனவாகவேத் தெரியவில்லை. முற்றிலும் நிஜ நிகழ்வினதுபோல் இருந்ததே ! ஏன்தான் விழித்தேனோ !' கனவை விட்டுப் பிரிய மனமில்லாமல் புலம்பல்.

'.என்னமோ கனவு கண்டேன், ஞாபகம் இல்லை.' மறதி. முந்தைய கனவானது நினைக்கும் அளவிற்கு ஞாபகப் பதிவாகி இருப்பது பிந்தைய கனவானது ஞாபகப் பதிவு மிகமிக குறைந்தது.

என் தாயார் என்னுடைய வாழ்வில் என்னை எவ்வாறெல்லாம் பாதுகாத்து வளர்த்தார்கள். தனக்கு என்று எதுவும் பார்க்காமல் எனக்கு என்றே பார்த்துப் பார்த்து கவனமாக வளர்த்தார்கள். சிறு வயதில் என் சுட்டித் தனத்தால் நான் செய்த தவறுகளுக்கு என்னை அடித்துவிட்டு அவர்கள் மனம் வேதனைப்பட்டு 'ஏன்தான் அடித்தோமோ' என்று என்னைக்காட்டிலும் கண்ணீர் மல்க அழுவார்கள். இது மனதில் பதிவான நீண்ட நாள் மறவாதச் செயல்.

நினைக்கும் போது கண்கள் குளமாகி வேதனையைத் தரும். அச்செயலால் மனதில் ஒருவித சுகமான வேதனை நினைக்கும் போதெல்லாம் தந்துகொண்டே இருக்கும். வேதனைத் தருகிறது என்று நினைக்காமல் மனம் இருக்காது. விட்டு விட்டு, திரும்ப திரும்ப நினைக்க ஆசைப்படும். திரும்ப திரும்ப நினைப்பதாலும் அது ஆழ் பதிவானச் செயல்.

விழுந்து விழுந்து படிக்கின்றேன் ஒரு வார்த்தைக்கூட ஞாபகம் இல்லை. பரிட்ச்சையில் மாணவனின் நிலை. இது பதிவில்லச் செயல். காரணம் பலவாகவும் இருக்கலாம். இருப்பினும் புரிந்து படித்தால் உணர்வு உண்டாகும். அதன்மூலம் மனதில் பதிவு உண்டாகும்.

ஒருவர் ஒருவரைப் பார்த்து 'பார்த்த ஞாபகம் வருகிறது. ஆனாலும் புரியவில்லை.', என்று சொல்லப் பார்த்திருக்கின்றோம். இது பதிவுகள் கரைந்த நிலை.

இவர் தூக்கத்தில் நடப்பார். காலையில் கேட்டால் 'அப்படியா !' என்பார். இது பதிவில்லா பழக்கமான தொடர் செயல்.

சொல்லச் சொல்ல 'அப்படியா ! அப்படியா !' என்று கவனத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டு கேட்ப்பார். 'என்ன சொன்னேன்', என்று கேட்டால் மறுபடியும் சொல் என்பார். இதுவும் முற்றிலும் கவனமில்லாச் செயல். இதனால் விளைவுகள் இல்லை.

நேரிலே நிற்பவரைத் தெரியாது எதோ உள் கவனத்தில் பிரம்மை பிடித்தவர் போல் இருப்பார். கண்கள் காணும். ஆனால் அவருக்குத்தெரியாது. பதிவில்லாச் செயல். அதனாலும் விளைவும் ஒன்றும் இல்லை..

அடுத்தவர் தோட்டத்தில் மேய்ந்ததால் அடிப்பட்டு கால் உடைந்தாலும், நொண்டி நொண்டி ஆடு அடுத்த நாளும் அங்கு மேயப் போகும். ஆடு அதற்கு நம்மைப் போல் மனப் பதிவுகள் இல்லை. அதனால் விளைவுகளை அது அறியாது. நம்மைப் போல் தான் என்ற தனித்த உணர்வும் அதற்கு இல்லை.

ஆறறிவு மாந்தரைத் தவிர்த்த மற்றவைகளுக்கு தான், நான் என்ற பிரிந்த உணர்வில்லை. தேவைக்கு எங்கு உணவு இருந்தாலும் சென்று சாப்பிடும். தான், நான் என்ற தனித்த உணர்வு அவைகளிடம் இல்லாததால் அவைகள் செய்யும் செயல்கள் அதன் மனதில் பொதுவாக தனது என்று பதிவாகாது. அது அறியாப் பதிவில்லாச் செயல் 

உண்டுமையில் ( Entity ) உள்ளமை ( Existence ) கொள்பவன் மனிதன். மற்றவைகள் உள்ளமை கொள்ளாது. தான், நான் என்று உள்ளமை கொள்ளும் மனிதனில் தனது, எனது என்பதுடன் அணைத்து செயல்களும் பதிவாகும். உண்டுமையில் உள்ளமை கொள்ளாத மற்றவைகள் அதனிடம் உண்டுமையின் சுபாவ அறிவைத் தவிர்த பொதுவாக வேறு அறிவுகள் இருக்காது. பழக்கப்படுத்தி பதிய வைத்தால் ஒலி நாட அல்லது ஒலிப் பதிவு வில்லைப் போல் பதிவு செயல்படும். பொதுவாக விபரமாக உணர்ந்து செயல்படாது. உணர்வில்லையேல் பதிவில்லை. அதனால் அதன் செயல்களின் பதிவும் இருக்காது. இது அறியா பதிவில்லாதச் செயல்.

பற்றற்று வாழ் என்பார். தாமரை இலை தண்ணீர் போல் சிலர் பற்றற்று வாழ்வார்கள். ஆனாலும் ஒன்றை மட்டும் விடாமல் பற்றி வாழ்வார்கள். அவர்கள் நீக்கமற நிறைந்திருப்போனை மட்டும் பற்றி வாழ்வார்கள். அவர்களைத்தான் எங்கும் நிறைந்தோனும் விரும்புவான். அவர்களே பிறவியின் நோக்கத்தை பூரணப்படுத்தியவர்கள். அவர்களே மனிதருள் மாணிக்கம். அவர்களின் தேவைகளை நீக்கமற நிறைந்தோன் நிறைவேற்றி தருவான், தந்துகொண்டே இருப்பான். இவைகள் பரிபாஷைகள். ஆனால் ஒன்றின் பதிவில்லச் செயல்கள். தன் தேவை ஒன்று நடந்து விட்டால் அது தன்னைக்கொண்டு நடந்ததென்ற நினைப்பே அற்றவர்கள். இது அறிந்த பதிவில்லாச் செயல். இவர்களின் தேவை என்பதே அனைத்துக்கும் நன்மை பயக்குபவையாக இருக்கும். இவர்களின் எண்ணங்கள் செயல் வண்ணங்களாகும்.

பிறந்த குழந்தை அப்பொழுது ஐயறிவு வேலை செய்யத் தொடங்கும். பார்கும், சப்தங்களை கேட்கும். ஆனால் ஏன், எதற்கு என்று அதற்கு தெரியாது; விளங்காது, விளங்கவும் முயலாது. இது அரூபச் செயல். உண்டுமையின் செயல். தான், நான், எனது என்ற தனித்த உணரவில்லை. அதன் மனதில் எதுவும் இருக்காது. எதுவும் இல்லை என்றால் மனதில்(உண்டுமையில்) அரூபம் தான் இருக்கும். அதன் செயல் பதிவற்ற அறியாச் செயல். இது அறியாப் பதிவில்லாச் செயல்.

பதிவு ஏற்பட்டல்தான் நன்மை, தீமை. அதனால் அதன் பலாபலன் அதற்கு இல்லை. அதன் எல்லாச் செயலும் பதிவில்லாச் செயல். தூய செயல். பல செயல்கள் இருந்தும் அவைகள் யாவும் உண்டுமையின் ஒரே செயல் பதிவின்மையால் அவைகள் அரூப நிலையில் இருக்கின்றது.

குழந்தை வளர்ந்து வரும்போது, இதன் ஐயறிவுடன் ஆறாவது அறிவு செயல்பட தொடங்கும். ஒரு குறிப்பிட்டவைகளை திரும்பத் திரும்ப பார்க்க அல்லது கேட்க கவனம் உண்டாகும். இக்கவனத்தில் புத்தி ஏற்பட்டு பிறரை பார்க்க தான், நான், எனது போன்ற பிரிவு அறிவு, உணர்வு உண்டாகும். தன்மீது அதிக அக்கறைக் கொள்வோர் மீது விருப்ப உணர்வு தோன்றும். அவர்களை விரும்பும். நாட்கள் செல்லச் செல்ல, பின் வருடங்களும் செல்லச் செல்ல தான், நான் என்ற உணர்வுப் பதிவு வலிமையாகிக் கொண்டே போகும்.

நன்கு வளர்ந்த பின் அறிவு, புத்திக் கூர்மை உண்டாகி பூரணப் பக்குவாமான வயதில் நுண்மைகள் புரிந்து தெளிவாகி தன் நிலைகளை பின்னோக்கி ப்பார்த்து, தான் எங்கிருந்து வந்தோம் என்ற தன் உண்மை சுயம் அறிந்து; புரிந்து; தெளிந்து தான், நான் என்ற தனித்த; பிரிந்த உணர்வு கரைந்து; இழந்து; தெளிந்து உண்டுமையின் அறிந்த பதிவில்லாச் செயல் அங்கு உண்டாகும். வேண்டின் அது வல்லமையுடைதாகவும் இருக்கும்.

அவ்வாறு அந்நிலையில் ஒன்றின் பார்த்தல், கேட்டல் போன்ற செயல்கள் நிகழ்ந்தால் அவைகள் அரூபச் செயல். அதனை அரூபமாக நிகழ்தல் என்று அறியலாம்.

பலவா பழுத்து
மாவது முளைத்து
வேறா உணர்கிறது
உருவ மாகிறது !

வேறா உணர்கிறது என்றால் ?
நபிதாஸ்

16 comments:

  1. அருமை சகோதரரே !

    ஒவ்வொரு தொடரையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்...

    நல்ல விறுவிறுப்பாக செல்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. விபரத்தோடு
      விறுவிறுப்பாக சென்றால்
      புதுமையாக
      புது உலகம் தெரியும்.

      Delete
  2. // தான் எங்கிருந்து வந்தோம் //

    இறைவனால் படைக்கப்பட்ட நாம் நிச்சயம் அவனிடமே போய் சேருவோம்

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாமிய மார்க்கத்தில் இறந்தவர் செய்தி கேட்டால் உடன் சொல்வது
      "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்."

      சகோதரா, தாங்கள் எழுதிய கருத்து சொரிவான "இறைவனால் படைக்கப்பட்ட நாம் நிச்சயம் அவனிடமே போய் சேருவோம்" என்ற கருத்தை அவ்வாக்கியம் பொதிந்துள்ளது.

      இதனை இறந்தவர் செய்தி கேட்கும் பொது மட்டும் சொல்லிவிடுதல் மட்டுமா ?
      இருப்பவர் அதனை ஆராய வேணாமா ?

      "நிச்சயமாக எங்கிருந்து வந்தோமோ அங்கேயே நிச்சயமாக செல்வோம்."

      நீர் வந்த இடமும் அங்கு. திரும்ப செல்லுமிடமும் அங்கு.
      ஆனாலும் அவன் அல்லாத
      இடமும் எங்கும் இல்லை,
      எதுவும் எங்கும் இல்லை !
      உள்ளவன் உற்று நோக்க
      வல்லவனை அறிவான்.
      நல்லிதை ஏற்பாய்
      அன்பு சகோதரா.

      Delete
  3. மரியாதைக்குரிய குருவே!

    அந்தத் தாமரை இலைத் தண்ணீர் போன்ற “பற்றற்ற” அல்லது இன்பத்தையும் துன்பத்தையும், போற்றுதலையும் தூற்றுதலையும் ஒன்றாகவே கணிக்கும் ஆற்றல் கிட்டவே தங்களிடம் கால்மடக்கிக் கைகட்டிப் பணிவுடன் நற்போதனைகளைக் கேட்டு வருகின்றேன்,

    ஒரு மனிதன் தன்னைக் குறை கூறுபவனை அல்லது அவன் தான் பெரியவன் என்றும் நினைப்பவனை வெறுக்க வேண்டா; அவனைப் பகையாளியாகவும் நினைக்க வேண்டா; “அவனை ஒரு சகப் போட்டியாளானாகவே கருதுக” என்று எனக்கு மனப்பயிற்சி அளிக்கும் வகுப்பில் கற்றுத் தரப்பட்டது. இப்பொழுதுத் தங்களின் ஆக்கம் அதனை மெய்பித்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மனிதன் எதை விரும்புவானோ அதனோடு அவன் இருப்பான். அதனை அடைவான். தாங்களின் தூய தேடுதல் நாட்டம் அதனை அடையச் செய்திடும்.

      கல்லோடு தங்க துண்டும் கிடந்தால் குழைந்தைக்கு எல்லாம் கல்தான். ஆனால் அறிந்தவனுக்கு அது தங்கம் எனப் பிரித்து காண்பான். அது போல் அறிவுகள் மனிதனோடு தினமும் மிக நெருக்கத்தில்தான் இருக்கின்றது. ஆனாலும் பலர் அறிவதில்லை.

      அதாவது சிந்திப்பதில்லை. சிந்தனையை தூண்டுபவர்கள், சிந்திக்கும் வழிகளை காண்பிப்பவர்கள், அவ்வறிவுகளை தன்னகத்தே கொண்டவர்களின் நெருக்கத்தில் தான் சில வெளிச்சமே தெரியும் என்பதனை தாங்கள் நன்கு அறிந்தவர்கள்.

      தாங்களுக்கு மனப்பயிர்ச்சியில் தந்தது நல்லவர்கள் தந்தது.

      தாமரை இலைத் தண்ணீர் போல் மனிதன் வாழத்தான் அனைத்து மார்க்கங்கள் வந்தன.

      மனிதனோ தாமரை இலைத் தண்ணீர் போல் தன்னை பிரிவினைவாதியாகத்தான் வேறுபடுத்தி வாழ்கிறான். மனிதனின் சிந்திக்கும் வழியில்தான் குறைபாடு உள்ளது அன்பரே.

      அனைத்தையும் சமமாக பார்க்கவேண்டும். சமம் என்பதில் தானும் இருப்பதால் தாமாக பார்த்தால் மிக உயர்வு. தனக்கு விரும்புவதையே அடுத்தவனுக்கும் விரும்பு என்பதின் தாத்பரியமும் அதுவாகத்தானே இருக்கமுடியும்.

      நன்றி !

      Delete
  4. அடுத்தவன் குறைகான்பவன் அரை மனிதன். தன் குறை உணர்பவன் முழுமனிதன். இப்பழமொழிகேற்ப ஒவ்வொருவரும் இதை உணர்ந்தாலே இவ்வுலகில் அரசியல் ஆன்மிகம் அனைத்திற்கும் தீர்வாகி விடும். நல்லதொரு ஆன்மீகப் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்தை எழுதினீர்கள். இதனை இன்னொருவழியில் பார்ப்போமானால்....

      அந்தக்குறை நம்மிடம் இல்லாமல் இருக்கவே அவன் அவ்வாறு குறைக் காண்கிறான் என்று நோக்குங்கால் நாம் நிறைவை யடையாலாம்.

      அதன் மூலம் அவனோடு நெருக்கம் மிகவும் அதிகமாகலாம் என்ற கருத்தை எழுத காரணமான தங்களுக்கு மிகுந்த நன்றி அன்பரே.

      தங்களது வார்த்தைக்கு நன்றி !

      Delete
    2. இன்றைய என் மனப்பயிற்சி வகுப்பில் என் ஆசான் கற்பித்தவைகளை அப்படியே ஈண்டுப் பதிகின்றேன்:

      \\ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.\\

      என்வே தான் ஞானிகள் எல்லாரும் “ தூற்றுவார் தூற்றட்டும்; போற்றுவார் போற்றட்டும்” என்று சமநிலையில் இருந்தார்கள் அல்லவா?

      Delete
    3. தங்கள் ஆசானைப் பொறுத்து அவர்கள் கூற்று சரியே. ஆனாலும்,

      ஞானிகள் தன்னைச் சார்ந்தவர்களில் தவறைக் கண்டால் திருத்தம் சொல்வார்கள். அதனைக் காணாமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் திருத்தம் தராவிடின் எவ்வாறு? பிறர் தூற்றலுக்கு என்றுமே அஞ்சார்கள். ஒரு கையில் சூரியனும் மறு கையில் சந்திரனும் தந்தாலும் உண்மையைத்தான் உரைப்பார்கள். சொல்வதைச் சொல்வார்கள். ஏற்பதும் ஏற்காததும் கேட்பவனைப் பொறுத்து. அதனால் மல்லுக்கட்டமாட்டர்கள்.

      Delete
  5. உண்மையை சொலப்போனால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தான் படிக்கிறேன் இரண்டு பாரா முடித்தது சற்று ஓய்வு எடுத்து படிக்கிறேன் விசுவின் வனம்போல் சற்று சுற்றல் விடுகிறது விஷயம் கூடுதல் இருந்தால் அப்படித்தானே இருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எதையுமே மறைக்காமல் சுவாரஸ்யமாக அறிவாக எழுதும் தங்களது எழுத்து நடை ஒரு கலை.

      கருத்துக்கள் கடினமாக இருக்கலாம். அக்கருத்துன்னுடே செல்லச் செல்ல இலகுவாகும்.

      எதிலும் விளக்கம் தரவும் கடமையாகக் கருதுகிறேன். ஆக்கம் அறியப்பட்டால் ஆக்கியோன் நோக்கம் திருப்தியாகும்.

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி !

      Delete
    2. இலக்கணமும் இப்படித்தான் இருக்கும் ஞான குருவே! ‘கைப்பு” என்று கருதினால் கைப்பாகவே இருந்து அதன் அருகில் கூட நெருங்க விடாமல் இறுதி வரை அதன் இனிமையும், ஓசையும் ஒன்ற விடாமல் தடுத்து விடும். அதே நேரத்தில் இலக்கணம் கைப்பன்று; அஃது ஓர் இனிய பாடம் என்று எண்ணினால் நமக்கு அறியாத பலவேறு உண்மைகள் அறியாத புறத்திலிருந்து ஊற்றுக் கண்களாய்த் தேடி ஓடி வரும். இவ்வண்ணமே, தாங்கள் நடத்தும் அறிவுத்தேன் என்னும் இந்த ஞானப்பாடமும். அல்ஹம்துலில்லாஹ். இயல்பிலேயே, இளமையிலேயே தமியேனுக்கு இலக்கணத்தின் மீதும், ஞானப்பாட்டையின் மீதும் ஆரிவமும் ஈடுபாடும் உண்டாகி விட்டதால் எனக்கு இவ்விரண்டும் எளிமையாகி விட்டன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எந்த ஒரு கல்வி, வேலையானாலும் “ஈடுபாடும் ஆர்வமும்” அதிகரித்தல் சுமைகளாய்த் தெரியாமல் சுகமாகவே தெரியும். தொழிலதிபர் அவர்களும் தொழிலைச் சுமையாக நினைக்காமால் சுகமாகவே நினைத்து ஈடுபாடும் ஆர்வமும் மிகுந்ததாற்றானே இற்றைக்கு எமக்குத் தொழில் பற்றிய நுணுக்கங்களை அள்ளித் தருகின்றார்கள். உறுதியாக, அவர்கள் இந்த ஞானப்பாட்டையும், என் இலக்கண விளக்கங்களையும் ஏற்பார்கள்; புரிந்து கொள்வார்கள் என்றே நம்புவோமாக!

      Delete
    3. அல்ஹம்துலிலாஹ்

      Delete
  6. அருமையான விழிப்புணர்வு ஆக்கம்.

    ReplyDelete
  7. மிக்க சந்தோசம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers