.

Pages

Tuesday, November 12, 2013

புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொழியாக்கம் அவசியமா !?

ன்பு வாசகர்களே !
இவ்வுலகில் எத்தனையோ நாட்டுக்காரர்கள் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி சந்தைப்படுத்துகின்றனர் அந்த பொருள்கள் அவர்கள் மொழியிலேயே அறிமுகப்படுத்தப்படுகின்றது. அவைகளை நாம் உபயோகிக்கும் பொழுது நம் தாய் மொழியான தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்யப்படுகிறது அப்படி மொழியாக்கம் செய்கையில் சில வார்த்தைகள் நமக்கு புரியாமல் போகின்றது ஆதலால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மொழியின் உச்சரிப்பிலேயே நாமும் உச்சரிக்கலாமே ஏன் சிரமப்பட்டு வேறு நாட்டவர் கண்டுபிடித்ததற்கு நாம் பெயர் சூட்டி கொள்வது சரியா !? மாற்றான் பிள்ளைக்கு நாம் பெயர் சூட்டுவது என்ன நியாயம் ? என்று கேட்கின்றனர்

முதலில் ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஜப்பானிலோ, ரஷ்யாவிலோ, சைனாவிலோ ஆங்கிலம் கிடையாது. ஆனால் அவர்கள் கண்டுபிடித்த பொருட்கள் சந்தைப்படுத்தும் பொழுது நமக்கு ஆங்கிலத்தில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. என்ன காரணம் ? ஆங்கிலம் உலக மக்களால் அதிகம் பேசப்படுவதே ஏன் ஆங்கிலம் உலகமொழியானது அவர்களின் ஆதிக்க குணம் உலகில் பெரும்பகுதி ஆண்டதினாலும் மற்றும் மொழிப்பற்று இந்த இரண்டும்தான் காரணம். ஆங்கிலேயர்களை விரட்டிய நாம் ஆங்கிலத்தை வைத்துக் கொண்டோம் ! மட்டுமல்லாது புதிய கண்டுபிடிப்புக்களுக்கு ஆங்கிலப் பெயரே போதும் என்கிறோம் 2000 வருட பாரம்பரிய தமிழ் மொழிக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயரிடுவதை கிண்டல் செய்கிறோம் புதிய வரவுகளுக்கு தாய் மொழியில் பெயரில்லை என்றால் நரிக்குறவர்களின் கதிதான் நமக்கும் ஏற்படும் !

ஆம் ஒரு நறிக்குறவர் இறந்தால் அவர் மொழியும் இறக்கிறதாம் புரிந்திருக்குமே உங்களுக்கு நாம் உபயோகிக்கும் கை கடிகாரமும் மடிகணினியும் நாம் கண்டுபிடிக்காததுதான் அதற்கு நம் தாய் மொழியில் பெயர்கூட இல்லை என்றால் எப்படி காலம் செல்ல செல்ல கற்கால மொழியாக கருதப்பட்டுவிடும் நம் தமிழ் மொழி  ஒரு மனிதரின் பயோடேட்டாவை பூர்த்தி செய்ய அதில் கேட்கப்படும் கேள்வி

பெயர் :
வயது :
படிப்பு :
தந்தை / கணவர் பெயர் :
தாய் மொழி :

நன்றாக புரிந்துகொள்ளுங்கள் தாய் தன் தாய்பாலை மட்டுமல்ல தன் மொழியையும் ஊட்டுகிறாள், புகட்டுகிறாள் எந்த ஒரு வார்த்தையானாலும் பொருளானாலும் தாய் மொழியில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும் இல்லையேல் நாம் அம்மொழியை புறந்தள்ளுகிறோம் என்பது பொருளாகும்   உதாரணத்திற்கு அரேபிய உணவாகிய மந்தி எனும் உணவை நாம் மந்தி என்றே சொல்லிக்கொள்வதால் என்ன நடந்து விடப்போகிறது என்று நாம் நினைப்போமேயானால் ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்

முதல் நபர்: கலிகாலம் மனுஷாளுக்கு வெவஸ்தையே இல்லாமல் போய்யுடுத்து.

இரண்டாம் நபர் : என்னவோய் காலங்காத்தாலே புலம்புரீறு

மு-ந : பின்னே என்னவோய் பக்கத்தாலே ஒரு பிள்ளையாண்டான் செல் போனிலே என்ன பேசிக்கிறான் கேட்டியா ?

இ-ந : என்ன பேசுறான் ?

மு.ந : அபிஸ்டு ! அபிஸ்டு ! பிள்ளையாண்டான் சொல்றான் மாப்ளே இன்னைக்கி First டைமா மந்தி சாப்பிட்டேன்டா நல்ல டேஸ்ட் மீண்டும் மீண்டும் சாப்பிடன்னும்னு  ஆசையா இருக்குடா அப்டீன்னு பேசுறான்

இ.ந : அதுக்கென்ன இப்போ

மு.ந : அபிஸ்டு மந்தின்னா குரங்கு வோய் நமக்கு தெரியக்கூடாதுன்னு குரங்க ! மந்தின்னு சொல்றான் அந்த பிள்ளையாண்டான்  ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியா  குரங்கையும் சாப்பிடுறாங்களே பகவானே நீதான் இவாளை ஷேமிக்கணும்

இப்படி ஒரு சம்பவம் [ ஆமாம் கற்பனைதான் ] நடக்கணுமா ?

என் மகள் [ நான்காம் வகுப்பு  ] மாமாவிற்கு ஒரு ஒரு கடிதம் வரைக என்ற வினாவிற்கு கடிதம் வரைகிறாள்...

அன்புள்ள மாமா நலம் நலம் அறிய ஆவல் ! நீங்கள் என் பிறந்த நாளுக்காக அனுப்பிய கை கடிகாரம் மிகவும் அழகாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி. தாங்கள் அண்ணனின் பிறந்த நாளைக்கு மடிக்கணினி பரிசாக அனுப்பி வையுங்கள் உங்களோடு தொடர்பு கொள்ளவும் உலக விஷயங்களை அறிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும். அத்தைக்கு எனது அன்பான முத்தங்கள்.

இப்படிக்கு,
[ XXXXXX ]

என்று முடிக்கிறாள் இப்படி ஒரு கடிதம் முழுமையான தமிழில் எழுவதற்கு துப்பில்லாமல் போய்விடும் வாட்சையும், லேப்டாப்பையும் தமிழ் படுத்தாமல் விட்டிருந்தால், தமிழ்படுத்திய செல்போனும் Google தமிழும் நாம் படிக்கையில் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. காரணம் நாம் ஆங்கில வழிக்கல்வியில் பயின்றதும் தாய் புகட்டிய பாலும் தமிழும் மறந்ததே காரணம் என்னதான் தமிழ் பண்டிட்டானாலும் டீக்கடையில் டீ கொடுப்பான்னுதான் கேட்கமுடியுது காரணம் கோவணம் மட்டுமே கட்டிக்கொள்ளும் ஊரில்  வேட்டி சட்டை போட வெட்கப்பட வேண்டியிருக்கே ஆனால் கக்கத்திலாவது வேஸ்ட்டியும் சட்டையையும் வைத்துக்கொள்வோம்.

புதியதோர் உலகம் செய்வோம் ! அதில் தீய எண்ணத்தில் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் !

மு.செ.மு.சபீர் அஹமது

35 comments:

  1. தாய்மொழிப்படுத்துவதன் அவசியத்துக்கு அழகு விளக்கங்கள்.

    அனைத்துப்பொருளையும் மொழிப்படுத்துவதை விட குறைந்த பட்சம் நம் கண்டுபிடிப்புகளை தமிழ் பெயரிடுவதால் கட்டுமரம் போல மொழிப்பிரபலமும் அடையும்.

    ஜப்பானியர்கள் உலக சந்தைப்படுத்தனும் என்பதற்காக தன் மொழியை (நம்மைப்போல்) விட்டுக்கொடுப்பதில்லை.
    உதாரணம்
    மிட்சுபிஸி (மூன்று பிறை) ,
    நிப்பான் (ஜப்பானியன் தன் நாட்டை அழைக்கும் வார்த்தை),
    நிஸ்ஸான் (வாகனம்)

    ReplyDelete
  2. முதல் ஆதரவே என் குடும்ப ஓட்டாகிவிட்டது சந்தோஷம்

    ReplyDelete
  3. //தன் மொழியை (நம்மைப்போல்) விட்டுக்கொடுப்பதில்லை. //

    சிறு தவறு

    (நம்மைப்போல் அல்ல) என்று இருக்கனும். அதாவது மொழியை விட்டுக்கொடுப்பதில்லை.

    ReplyDelete
  4. இன்றைய உலகில் ஒவ்வொன்றிலும் பிற மொழிச்சொல் கலப்படங்கள் அதிகமாக காணப்பட்டு வருகின்றன. எழுத்துவதற்கு வேண்டும் என்றால் ' பிழை' யில்லாமல் தொடரலாம் ஆனால் பேசுவது என்பது இயலாத காரியம்

    ReplyDelete
  5. // புதியதோர் உலகம் செய்வோம் ! அதில் தீய எண்ணத்தில் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் ! //

    அட நம்ம மீச வச்ச பாரதி'யார்' சொன்னது :)

    ReplyDelete
  6. மொழி மொழின்னு அரசியல் ஈடுபாடுகொண்டோரும், இனையத் தொடர்பில் உள்ள சில மொழி வல்லூர்னர்க்கிடையேதான் 'வார்' ஸாரி போர் நடக்கின்றது. ஆனால் அவர்கள் தன் வீட்டு பிள்ளைகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்கவே முன்னே நிற்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. சகோ.சேக்கன்னா அவர்களே எல்லோரும் கோவணம் கட்டி இருக்க நாம் மட்டும் வேஷ்டியில் இருந்தால் எப்படி என்பதே இச்சுழளுக்கு காரணம் முதலில் அரசுதான் கவலைப்படவ்ண்டும் எட்டாம் வகுப்புவரை ஆங்கிலம் இரண்டாம் பாடமாகவே இருந்தால் தமிழுக்கு நலம் பயக்கும்

      Delete
  7. நாம் இப்பொழுது சுத்த தமிழில் பேசுவதாக நினைத்து வேற்று மொழிகள் சொற்களை அறிந்தும் அறியாமல் பயன் படுத்துகின்றோம்.

    ஆங்கிலத்திலும் அதுபோல் அந்நிய மொழி சொற்கள் அறிந்தே கலந்து பேசுகிறார்கள்.

    மூத்த மொழி தமிழ். ஆதிக்க மொழி ஆங்கிலம். ஆனால் ஆங்கில மொழி அதிக மக்கள் பேச நிர்பந்தங்கள் ஏற்படுகின்றது.

    ஆங்கிலத்தில் நடைமுறையில் உள்ள விஞ்ஞானங்கள் முறையாக அவ்வொப்பொழுது மொழி பெயர்கப்படுகிறது.

    மாணவன் உயிர் மாண்ட பின் தான் இப்பொழுது பெயரளவில் இரண்டு பிரிவுகள் மட்டும் பொறியியலில் மொழி பெயர்ப்பு செய்து பாடம் போதிக்கப்படுகிறது.

    இங்கு அரசியல் வெறித்தனமாக நடத்தப்படுகிறது. அதனால் எந்த வளர்ச்சியும் பாதிக்காமல் போவதில்லை.

    ஒற்றுமை என்பது தமிழனிடம் இல்லை. அதானாலும் மொழி தமிழனிடமே வளரவில்லை. தமிழ் பேசுகிறோம் என்று பழமொழிகளை வழக்கத்தில் கொண்டு பேசுகிறார்கள்.

    பொருளாதார முன்னேற்றங்களுக்கு ஆங்கிலம் ஒரு காரணியாக ஆங்கிலேயர்கள் கவனமாக செயல்படுத்திவிட்டனர்.

    இப்படி பல காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்து தமிழனிடம் தமிழ் பற்று இல்லை.

    கடைசியில் தாங்கள் எழுதிய குறவன் கதையாகிடுமோ என்ற பயம் எல்லோரிடமும் ஏற்பட்டால் திருந்த வாய்ப்புண்டோ என்பதற்கும் பதில் தெரியவில்லை !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவை கண்டு மகிழ்கிறேன் அறிஞர் நபிதாஸ் அவர்களே

      Delete
  8. தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்தே
    அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
    விழியாய்த் தமிழும் விழிக்க முழுதாய்
    மொழியாம் தமிழை மொழிந்து.
    .


    சூழவரும் சூழ்ச்சிகள் சூழாத் தமிழனாய்
    வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
    வழிகள் பிறழாது வாழ்வாய்த் தமிழாய்
    இழியும் பழியும் இழுக்கு.



    ஒழுக்கம் தழுவி ஒழுகுதல் வாழ்க்கை
    விழுப்புண் விழவே விழைவாய்த் தமிழுக்காய்
    வாழும் தமிழென வாழ்த்தும் வழிவழி
    சூழும் புகழ்ச்சி சுழல்.



    மொழியை அழித்தல்; முழியை மழித்தல்
    விழியை இழந்து விழுவாய்க் குழியில்
    மொழியைப் பழித்தால் முழுதாய் அழிந்தாய்
    பிழையில் உழலும் பிழைப்பு


    http://kalaamkathir.blogspot.ae/2010/10/16.html (செவ்வாய், 26 அக்டோபர், 2010)



    அன்னைத் தமிழுக்காய் ஆர்த்தெழுந் தாய்நண்ப
    உன்னைப் புகழ்ந்தேன் உவந்து

    ReplyDelete
  9. தமிழ் இந்துவே! தமிழ் அழிப்பு வேலையை நிறுத்து! இல்லையேல் உன் இதழை நிறுத்து!

    தமிழ் இந்துவே! தமிழ் அழிப்பு வேலையை நிறுத்து! இல்லையேல் உன் இதழை நிறுத்து!

    - இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
    ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்,
    அமைப்பாளர், தமிழ்க்கூட்டமைப்புகள்

    இந்து நிறுவனத்தார் தமிழ் முறைக்கு மாறான முறையில் பெயரைச் சூட்டிக் கொண்டு தமிழில் நாளிதழ் நடத்துகின்றனர். இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியல்ல; தமிழ்வாசகர்கள் மூலம் பணம் பெருக்குவதே! ஆனால், அதே நேரம் தமிழ் வாசகர்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுவருவதுதான் கண்டனத்திற்கு உரியதாக உள்ளது.
    ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் நாளிதழில் பல்துறைக் கட்டுரைகள் வெளிவந்தாலும், அவற்றின் நடை தமிழைச் சிதைப்பாகவே உள்ளன. இவ்வாறு தான் நடத்தும் ஆங்கில இதழில் ஆங்கில நடையைச் சிதைத்து எழுத முன்வருமா இவ்விதழ்? வராது! அங்கே, நல்ல ஆங்கிலத்தில் புதிய புதிய சொற்களைப் பயன்படுத்தி ஆங்கிலக் காவலராக விளங்குவதிலேயே பெருமை கொள்கிறது. இதே அளவுகோலைப் பயன்படுத்தித் தமிழ்க்காவலராகவும் விளங்கலாமே! ஏன், அவ்வாறு விளங்காமல் தமிழ் அழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது? மக்களால் விரட்டியடிக்கப்படும்வரை மோதிப்பார்ப்போம் என்கிறதா? இத்தகைய இதன் தமிழ் அழிப்புப் பணிகளில் ஒன்றுதான் தமிழறிவற்ற கதையாளர் ஒருவரைக் கொண்டு, “ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?” என வந்துள்ள கட்டுரை.

    கட்டுரைப் பிதற்றலில் உள்ள சில வரிகள் பற்றிப் பார்ப்போம்!

    ReplyDelete
  10. தொடர்ச்சி.....

    “தாய்மொழியைத் தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். . . . கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்” என்கிறார் இவர். தாய்மொழி மட்டுமல்ல, எல்லாப் பாடங்களுமே தேர்வு நோக்கில் கற்கும் வகையில்தான் நம் கல்விமுறை உள்ளது. மாற்ற வேண்டியது கல்வி முறையைத்தான். தாய்மொழிக்கல்வியை அல்ல! தமிழ்வழியில் அனைத்துக் கல்வியும் அமைந்தால் தமிழ் நிலைக்கத்தானே செய்யும்!

    “மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். . . . . குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன” என்பது மற்றோர் உளறல். இந்த மனப்பயிற்சி என்பது ஆங்கிலத்திற்கும் பொருந்தும் அல்லவா? அயல் மொழியில் மேற்கொள்ள வேண்டிய கடினமான பயிற்சியைவிடத் தாய்மொழியில் எளிதில் பயிற்சி மேற்கொண்டால் போதுமல்லவா?

    “மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படுகின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது” எனக் கதை சொல்வது மிகவும் தவறான வாதம். மலாய் மக்களில் பொது இடங்களில் பணியாற்றுபவர்களுக்குக்கூடப் பேருந்து எண்கள், நேரங்கள், கட்டண விவரங்கள், உணவுப் பொருள்கள் விலைகள், பிற பொருள்களின் விலைகள், முதலான பயணத்திற்குத் தேவையான எவ்விவரத்தையும் ஆங்கிலத்தில் சொல்லத் தெரியவில்லை. (ஆங்கிலம் தெரிந்திருந்தால்தானே இவற்றைப் புரியவும் சொல்லவும் முடியும்.) எனவே, ஒரு வரிவடிவில் மற்றொரு மொழியைப் படிப்பதால் அம் மொழியையும் அறிந்தவர் ஆவோம் என்பது அறியாமையே!

    ReplyDelete
  11. “இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும்” எனச் சரடு விடுகிறார். வரிவடிம்தான் மொழியின் அடையாளம். அவ்வாறிருக்க ஆங்கில எழுத்துரு எனச் சொல்லப்படும் உரோமன் எழுத்தில் படிக்கும் பொழுது, எந்த மொழி என எவ்வாறு அறிய இயலும்? மேய்ச்சலைக்குறிக்கும் ‘மேய்’ என்பதை ஆங்கில எழுத்தில் எழுதினால், அதனை மே மாதம் என்றாவது ஆங்கிலத்தில் உள்ள துணை வினை என்றாவது அறிவார்களே தவிர, தமிழ்ச்சொல் என எங்ஙனம் உணர்வார்கள்? தமிழே தெரியாமல் தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்தில் படித்தால் எங்ஙனம் தமிழ் எனப் புரிந்து கொள்வார்கள்?

    தமிழ் எழுத்துகள் அறிவியல் முறையில் அமைந்தவை. தமிழ் உயிர்மெய்யெழுத்துகள் எளிதில் சொற்களைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் உதவுவன. ‘த’, ‘மி’, ‘ழ்’ என மூன்றெழுத்தைச் சேர்த்தால் தமிழ் என வாசித்து விடலாம். ஆனால், ஆங்கிலத்தில் எழுதினால், ‘டி’, ‘எச்’, ‘ஏ’ - த, ‘எம்’, ‘ஐ’ - மி, ‘இசட்’, ‘எச்’ - ழ் > தமிழ் என எழுத்துக் கூட்டிவரும் எழுத்துகளைச் சேர்த்து வாசிக்க வேண்டும். தேவையற்ற உழைப்பும் நேரமும் இதில் செலவாகாதா?

    “மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரி வடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால், மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கி வந்த தமிழ் மொழி, புதிய புதிய வரி வடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக் கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச்சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ்நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை.” (எழுத்தைக் காப்போம் ! இனத்தைக் காப்போம்!- பக்கம் 6)

    ReplyDelete
  12. “எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல” என்று வரிவடிவ அழிப்பிற்குச் சப்பைக்கட்டு கட்டுகின்றார். இதற்குப் பின் வரும் குறிப்புகளைக் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.

    “கல்விக்கு அடிப்படையாய் அமைவன எண்ணும் எழுத்துமாய குறியீடுகள் என்பதை உணர்த்தவே எண்ணையும் எழுத்தையும் கண்களாகக் கூறுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

    இதனை நன்குணர்ந்த நம் முன்னோர் எண் எழுத்து உருக்களைப் பேணி வந்துள்ளனர். கல்வெட்டுகளில் உள்ள மாற்றங்களுக்கும் தமிழ் மொழி எழுத்து வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் தமிழ் எழுத்து மாறா வடிவுடன் நிலைத்து வருவதை உணரலாம். எனவேதான்
    “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்”
    என்கிறது நன்னூல். அதனை, அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் வழி மொழிகின்றது. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன.

    காலந்தோறும் சிலர் எழுத்து வடிவங்களில் குறை கண்டு மாற்ற வேண்டும் என்று துடித்ததால்தான்
    “எண்ணெழுத்து இகழேல்” (ஆத்திச்சூடி 7)
    என்று ஔவையார் தெளிவாகவே கூறிச் சென்றுள்ளார்.

    எண், எழுத்து வடிவங்களில் சிதைவு உண்டானால் அவை வெளிப்படுத்தும் அறிவு வளத்திலும் சிதைவு ஏற்படும் என்பதை உணர்ந்தே இவற்றை நம் முன்னோர் போற்றி உள்ளனர். மொழி வழித் தேசிய இனம் அழியாமல் இருக்க மொழி அழியாமல் காக்கப்படவேண்டும்; மொழி காக்கப்பட அதன் இலக்கியங்கள் பேணப்பட வேண்டும்; இலக்கியங்கள் போற்றப்பட மொழியின் எண்ணும் எழுத்தும் காப்பாற்றப்பட வேண்டும். இஃது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  13. இந்திய அரசியல் யாப்பும் (Constitution of India: பிரிவு 29(1)) இதை உணர்ந்தே எழுத்து வடிவங்கள் காக்கப்பட வேண்டும் என விதி வகுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் தேவநாகரியையும் கிரந்தத்தையும் புகுத்திப் பிற தேசிய மொழிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. (எழுத்தைக் காப்போம் - இலக்குவனார் திருவள்ளுவன், நட்பு இதழ்)
    1950 இல் உரோமன் எழுத்துகளில் தமிழை எழுத வேண்டும் என ஆங்கில நாளிதழ் ஒன்றின் வழிச் சிலர் முயன்றனர். பேராசிரியர் சி.இலக்குவனார் முதலானவர்கள் முயற்சியால் அதற்கு முடிவுரை கட்டப்பட்டது. இப்பொழுது மீண்டும் அம் முயற்சியில் 'இந்து' இதழ் இறங்கி மூக்குடைபடுவது தேவைதானா?

    எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
    மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே!
    இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே!
    என்னும் பாவேந்தர் பாரதிதாசன் முழக்கங்களை ஏற்று
    நம் தமிழ் மொழியின் எண்ணையும் எழுத்தையும் காக்கப் பெரும்திரளாய்த் தமிழன்பர்கள் உள்ளனர்.

    எனவே,
    தமிழ் இந்துவே,
    மொழிக் கொலையை நிறுத்திக்கொள்!
    தமிழ் அழிப்பு முயற்சிக்கான கட்டுரையை இணையப் பக்கத்தில் இருந்து எடுத்துவிடு!
    தமிழால் பெட்டியை நிரப்பும் இந்துவே!
    தமிழைக்காக்காவிட்டாலும் தமிழ் அழிப்பு முயற்சியில் ஈடுபடாதே!

    அல்லது
    உன் தமிழ்ப்பதிப்பை நிறுத்திவிடு! நிறுத்திவிடு! நிறுத்திவிடு!

    மக்களெல்லாம் தாய்மொழியைக் கற்பதற்கு
    மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
    சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்குச்
    செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
    தக்கஒரு தகுதியினைப் பெற்றாற் போன்று
    தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
    தக்கைகளாய்த் தலைநிமிர்ந்து ஆடல்வேண்டா
    (- பாவேந்தர் பாரதிதாசன்)

    ReplyDelete
    Replies
    1. கவியன்பன் அவர்களின் என்ணம் சிறக்க வாழ்த்துக்கள் உங்களின் கோபம் புரிகிறது ஒவ்வொரு தமிழனுக்கும் அவ்வாறே இருத்தல் வேண்டும் என்பதே என் அவா தமிழர்களின் நிலையை சொல்லவேண்டுமானால் ஒரு முதல்வர் செம்மொழி மாநாடு நடத்தி செம்மொழி நினைவு பூங்கா அமைப்பார் அடுத்துவரும் முதல்வர் அந்த பூங்காவை அழிப்பார் செம்மொழி மாநாட்டில் நடந்த தவறுகள் என்று கண்டுபிடித்து குற்றம் சொல்வார் பள்ளி பாட புஸ்தகத்திலும் செம்மொழி லோகோவை ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பார் வாழ்க தமிழ் வாழிய நம்மக்கள்

      Delete
    2. ஒரு பாரா எழுதுவதற்குள் இரண்டு ஆங்கில வார்த்தை கலப்பினம் ho my god

      Delete
  14. சிந்திக்க வேண்டிய பதிவு.

    ஆனால் எந்த மொழியையும் ஆங்கிலம் கலக்காமல் யாருமே பேசுவதில்லை.தம் தாய் மொழியை சுத்தமாக பேசுபவர்கள் அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றனர். தமிழ் பற்று உடையவர்கள் கூட தன் வீட்டுக் குழந்தைகளை இங்கிலீஷ் கான்வென்ட்டில் தான் படிக்க வைக்கிறார்கள்.இப்படியே போனால் தாய் மொழி எப்படி வளரும்.!?

    என்னதான் புதிய கண்டு பிடிப்புக்களுக்கு தாய் மொழியில் பெயர் சூட்டினாலும் நடை முறையில் அந்தப் பெயரை யாரும் உபயோகிப்பதில்லை. எல்லாம் ஒரு நாகரீகமாக ஆகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து உண்மைதான் மறுப்பதற்கில்லை ஆனால் பெயர் சூட்டுதலே தேவை இல்லை என்போர்க்குதான் இந்த கட்டுரை

      Delete
  15. தமிழ் மொழியின் தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ..அன்னியநாட்டின் உணவு பொருளின் பெயர் முதல் ..கணனி மென் பொருள் வரை அனைத்தும் தமிழிலேயே பேச முனைவது நல்ல ஆர்வம் தான் ..ஆனால் ஒவ்வொரு புதிய பொருளுக்கும் பெயர் வைப்பது எப்படி என்ற வரை முறை உண்டா..? அது காரண பெயரா ...
    அல்லது நேரடி தமிழாக்கமா.. தெரியவில்லை ..
    நாம் கற்ற கல்விக்கு சேவை நம் நாட்டிற்குள்ளே ..அதுவும்
    தமிழகத்துக்குள்ளே இருக்குமாயின் மென் பொருட்களின்
    பெயர் சூட்டல் நியாயம் ..அனால் நம் சேவையின் நுகர்வோர் அந்நிய தேசத்தில் இருக்கும் நிலை எனவே
    ஆங்கிலத்தில் பெயர் இருப்பது ..ஆங்கிலத்தில் கற்பது என்பதை நாம் ஏற்க வேண்டும் ..தமிழ் மொழியை ..நடைமுறைக்கு ஏற்ப கற்க வேண்டும் .
    எல்லாம் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் சில சமயங்களில் ஏற்புடையாகாது ..என்பதே ஏன் கருத்து

    ReplyDelete
    Replies
    1. நன்பரேதுவக்கத்திலேயே சரிசெய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் உதாரணம் மும்பையில் பேருந்தில் எண்கள் எழுதப்பட்டிருக்குமே அது மராட்டி மொழி எழுத்து நம் தமிழகத்தின் நிலை என்ன உங்களுக்கு தமிழின் எண்கள் வடிவ எழுத்துக்கள் தெரியுமா தெரியாமல் போனதற்கு என்ன காரணம் ஐந்தில் வளையாதது 5௦ல் வளையுமா ஆக துவக்கம் சரியாக வேண்டும் நம் அரசு தீவிர முயற்ச்சி செய்தல் வேண்டும் தமிழுக்கு

      Delete
  16. சிந்திக்க வேண்டிய பதிவு.

    ReplyDelete
  17. இன்றைய காலகட்டத்தில் அவசியமான பதிவு.

    நாம் இன்று ஆங்கில பெயருக்கு ஏற்ற தமிழ் பெயர் என்று அப்படியே மொழிமாற்றம் செய்து தான் பெயர் வைக்கிறோம். ஆகமொத்தம் என்னுடைய கணிப்பின்படி சுமார் 50000 ஆங்கில அறிவியல் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்கள் இல்லை என்று தான் கூறுவேன்.

    ஒரு கண்டுபிடிப்பு பற்றிய சொல் எந்த மொழியில் இல்லையோ அந்தமொழி பேசும் இனத்திற்கும் அந்த அறிவு இல்லை என்று தான் பொருள்.

    சொல்லாக்கத்திற்கு நம் பழங்காலத்திய சொல்லாக்க முறைகளை ஆராய்வது அவசியம்.

    இதைப்பற்றி விரிவான கட்டுரையை காண http://puthutamilan.blogspot.in/ பாருங்கள்.

    ReplyDelete
  18. ராஜு சரவணன் அவர்களின் வருகைக்கு வரவேர்ப்புக்களும் வாழ்த்துக்களும் நல்ல தகவல் உங்கள் link படித்தேன் நன்று

    ReplyDelete
  19. (தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது)

    கலைச்சொல் பேரகராதி-தொகுதி-11-->உளவியல் -->



    intense guilt = செறிந்த குற்றவுணர்வு
    locus of control = கட்டுப்பாட்டு மையம்
    intense stimuli = செறிந்த தூண்டல்கள்
    long term = நீண்டகால
    internal attribution = அக இயற்பண்பு
    longitudinal studies = நெடுநிலை ஆய்வுகள்
    internal environment = உட்சூழல்
    love needs = அன்புத் தேவைகள்
    internal locus of control = அகக் கட்டுப்பாட்டு மையம்
    low anxious = குறைபதற்ற
    internal stimulating environment = அகத் தூண்டுவிப்புச் சூழல்
    low consensus = தாழ்நிலைப் பொது இசைவு
    interposition = இடையீடு, இடைக்கூற்று
    low consistency = தாழ்நிலைச் சீர்மை(ப் பதம்)
    interpretation = விளக்கம்
    low distinctiveness = தாழ்நிலைத் தனித்தன்மை
    interpropositional logic = கூற்றிடை ஏரணம்
    lunacy and mental deficiency = பித்துநிலையும் வளரா மனநிலையும்
    intimate relationship = அணுக்க உறவு, நெருக்க உறவு
    lunatic = பித்தன், பைத்தியம்
    intravert (v) = அகநோக்கு
    magnetic resonance imaging (MRI) = காந்த ஒத்திசைவு உருவரைவு
    introversion = அகநோக்கல்
    maintenance rehearsal = பேணல் ஒத்திகை
    ipsilateral = தன்பக்கம்
    male erectile disorder = ஆண் கிளர்நிலைக் கோளாறு
    irony = வஞ்சப்புகழ்ச்சி
    male orgasmic disorder = ஆண் புணரின்பக் கோளாறு
    job stressors = பணிசார் இறுக்கமூட்டிகள்
    male sex hormones = ஆண் பாலின இசைமங்கள்
    justification = சரியென நிறுவுகை, எண்பிப்பு
    malingering = நோய்நடிப்பு

    ReplyDelete
  20. juvenile delinquency = இளமைக் குற்றச்செயல்
    mania = வெறி, வெறிமை, பித்தமை
    juvenile offender = இளங் குற்றவாளி
    manic depressive disorder = வெறிமை மனஇறுக்கக் கோளாறு
    kleptomania = களவூக்கம்
    manic disorder = வெறிமைக் கோளாறு
    korsakoff’s syndrome = கொர்சகொஃப் நோயியம்
    manic episode = வெறிமை நிகழ்வு
    laceration = சிராய்ப்பு
    manifest content = வெளிப்படையான உள்ளுறை, தெரிநிலைப் பொருண்மை
    language communication = மொழிவழித் தொடர்பு
    mantra = மந்திரம்
    language dominated memories = மொழி மேலோங்கு நினைவுகள்
    margin of attention = கவன வரம்பு
    latent content = மறை உள்ளடக்கம், மறைபொருள்
    margin of experience = பட்டறிவு வரம்பு
    latent learning = மறைமுகக் கற்றல்
    marital partners = திருமண இணையர்
    lateralization = பக்கமுனைப்பு, பக்கமுனைப்புறுதல்
    markers = அடையாள அறிகுறிகள்
    lateralized = பக்கமுனைப்புற்ற
    mate selection = வாழ்க்கைத்துணைத் தேர்வு
    law of closure = நிரப்புகை விதி
    maternal underweight = எடைகுறைந்த தாய்மை
    law of good figure = நல்வடிவ விதி
    medical model = மருத்துவப் படிமம்
    law of proximity = அணுக்க விதி
    meditative emotional state = அறிதுயில் வகை உணர்ச்சி நிலை
    law of similarity = ஒப்பமைவு விதி
    medulla = மூளை அகணி
    learned helplessness = கற்ற கையறுநிலை
    medulla oblongata = முகுளம்
    learning = கற்றல்
    melancholia = மிகுசோர்வு
    learning curve = கற்றல் வரை
    memory formation = நினைவு உருவாக்கம்
    learning disabilities = கற்றல் குறைபாடுகள்
    memory gap = நினைவு இடைவெளி
    learning disorder = கற்றல் கோளாறு
    memory impairment = நினைவுச் சிதைபு
    learning theorist = கற்றல் கோட்பாட்டாளர்
    memory improvement = நினைவு மேம்பாடு
    left brained people = இடது மூளையாளர்கள்
    memory interference = நினைவுக் குறுக்கீடு
    left handers = இடக்கையாளர்கள்
    memory machine = நினைவெந்திரம்
    left-sided paralysis = இடது பக்கவாதம்
    memory pegs = நினைவு முளைகள்
    legal commitment = சட்டநிலைக் கடப்பாடு
    meningitis = மூளையுறை அழற்சி
    leukocytes = வெள்ளணுக்கள்
    mental age = மனமுதிர்ச்சி வயது
    liaison psychiatry = தொடர்பு உளமருத்துவம்
    mental dictionary = மன அகராதி
    life crisis = வாழ்நிலை நெருக்கடி
    mental status examination = மனநிலை ஆய்வு
    life-change unit = வாழ்நிலை மாற்ற அலகு
    method of loci = இட அமைப்பு முறை
    lifestyle modification = வாழ்முறை மாற்றம்
    method of shaping = செம்மையாக்க வழிமுறை
    limbic system = உறுப்பு மண்டலம்
    method of successive approximations = தொடர்நிலைத் தோராயமாக்க முறை
    linguistic competence = மொழித்தகுதி, மொழியியல் தகைமை
    midbrain = இடை மூளை, நடு மூளை
    lipoprotein = கொழுபுரதம், கொழுமப் புரதம்
    midlife crisis = நடுவாழ்க்கை நெருக்கடி
    localised amnesia = காலச்சுட்டு நினைவிழப்பு
    misplaced size constancy = பிறழ் அளவு மாறாமை
    ********************


    ReplyDelete
  21. மேற்கண்டவைகள் சில காட்டுகள் மட்டுமேயாகும். மணவை முஸ்தஃபா (முந்நாள் யுனெஸ்கோப் பிரதிநிதி) அவர்கள் நடாத்தும் “அறிவியற்றமிழ்” என்னும் குழுமத்தில் தமியேனும் ஓர் உறுப்பினன்; எனக்குக் கிட்டியவற்றை எல்லாம் தனிக்கோப்பில் வைத்துள்ளேன்; இப்படிப்பட்டப் பேரறிஞர்கள் கடின உழைப்பால் கொணர்ந்த அருஞ்சொற் பொருட்களை உதாசீனம் செய்வதும் அறிவுடைமையாகாது. என் பள்ளிப்பருவத்தில் (1972 முதல்) எப்பொழுது யாப்பிலக்கணம் கற்க முயன்றேனோ, அன்று முதல் “தனித்தமிழ்” இயக்கத்திலும் ஈடுபாடுடையோனாய் இருக்கின்றேன்; இப்பொழுது “தூய தமிழ்” குழுமத்திலும் (உயர்திரு தமிழமல்லன் ஐயா அவர்களின் குழு) உறுப்பினராக இருக்கின்றேன். இப்படிப்பட்ட “தூயதமிழை” நாடி வந்து விட்டுப் பிடிபடாமல் ஓடி வந்தவர்கள் பலர்;

    காலத்திற்கேற்றப் பதிவுகளாய் வழங்கும் தொழிலதிபரும், வருங்காலக் கவிஞரும், எழுத்தாளரும், தமிழ்ப்பால் ஊட்டிய அன்னைத் தமிழைக் காத்து நிற்கும் காவலருமான , சகோதரர் மு.செ.மு. சபீர் அவர்கட்கு என் உளம்நிறைவான வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக!

    ReplyDelete
    Replies
    1. கையில் வென்னையிருக்க நெய்க்கு அலைந்தானம் என்பதுபோல் நம்மிடம் தமிழ் களஞ்சியமே இருப்பதை இன்றுதான் முழுவது உணர்ந்தேன் மாஷா அல்லாஹ் உங்களது ஈடுபாடு தமிழ்மேல் உள்ள ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது நீங்கள் நீண்ட ஆயுள் பெற எங்களது பிரார்த்தனைகளை உரித்தாக்குகிறோம்

      Delete
  22. என்னைப் போல் ஈடுபாடும், பாடுபட்டுத் தமிழையையும் அதன் செழுமையையும் உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம்; அஃதே என் உளத்தூய்மையானப் போக்கும். இடையில் புரிந்துணர்வில் குறைபாடும் செருக்கும் உடையோர் “விளம்பரப் பிரியன்” என்று குத்திக் காட்டுபவர்கட்கிடையில் உளம்போந்து எம்மை மகிழ்வித்து ஆசிர்வதித்தும் துஆவும் வழங்கிய உங்களின் தூய உளம் பார்த்துச் சொல்கின்றேன் என் வாழ்த்து,

    எம் அன்புக்கும், மதிப்பிற்கும் நன்றிக்கும் உரிய விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்கள் யான் விடுப்பில் தாயகம வரும் பொழுதெல்லாம் என்னை நேர்காணல் எடுக்க வேண்டும் என்று துடியாய் துடித்துத் தொடர்ந்து வருவார்கள்; ஆயினும், யான் முன் சொன்னபடி “புரிந்துணர்வில் குறைபாடு உடையோர் பலர் உளர் என்பதால் என் நேர்காணலைத் தவிர்க்கின்றேன்” என்றேன். ஆனால், சர்வேதச அளவிலான அமைப்பும் நேர்காணலை எடுத்ததை ஒத்துக் கொண்டேன்; அதே நேரத்தில் “சன் டிவி”யில் வந்த வாய்ப்பைத் தவற விட்டேன். என்னைப் பின்பற்றி என்னுடன் வருக என்றும் அழைப்பதும் ஒரே தூய நோக்கம் தான்.


    உங்களின் துஆவில்:

    இன்ஷா அல்லாஹ் வரும் விடுப்பில் கண்சிகிச்சையைச் செய்திட இருப்பதால் பயமின்றி நல்ல முறையில் சிகிச்சையைப் பெற்று என் கண்ணொளிக்குப் பாதிப்பின்றி இருக்கவும்,

    மற்றும், புலவர் பட்டயத்திற்கான படிப்பை முடித்து எம் சொந்த ஊரில் புலவர்கள் குறைந்துள்ள இடத்தை நிரப்பவும் எனக்காக துஆ செய்ய வேண்டுகிறேன்.

    என்னை இந்தத் தமிழின் மீதும், யாப்பின் மீதும் பற்றிப் பிடித்திட ஆர்வமும் ஆசியும் வழங்கிய என் அன்பின் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கட்காகவும் துஆ செய்க.

    ஜஸாக்குமுல்லாஹ் கைரன்

    ReplyDelete
  23. இன்ஷா அல்லாஹ் உங்கள் இருவருக்காகவும் நம் வலைதள சார்பில் துஆவும் வாழ்த்துக்களும் நிச்சயம் உண்டு

    ReplyDelete
  24. எங்கள் கவிதைக் குழுமத்தின் கவிஞர் “கவியருவி” வித்யாசாகர் (குவைத்திலிருந்து) எழுதி எனக்கு அனுப்பிய இந்தக் கவிதையை ஈண்டுப் பதிவது சாலப் பொருத்தம் என்றே கருதுகிறேன்.

    தலைப்பு: வாழ்க தமிழ் பேசுவோர்.

    வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத்
    துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை..

    அம்மா அப்பா மாறி
    மம்மி டாடியானது மட்டுமல்ல
    டிவி ரேடியோ கூட வெகுவாய்
    தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது;

    சுடுகாட்டுப் பிணத்தைக் கூட
    டெட்பாடி ஆக்கும் ஆசையை
    எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால்
    என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க
    தமிழாகித் தொலையுமோ... (?)

    எவனோ எடுத்தெமைப்
    புதைக்கும் குழிக்குள்
    தமிழ்தொலைத்து தொலைத்து
    விழும் மாந்தரை
    எந்த மொழி மனிதரெனயெண்ணி
    மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ?

    பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும்
    பேஸ்புக் பிசாவும் கூட
    மாற்றத்தின் புள்ளிகளுக்குள் அடங்கிய
    காலமாற்றத்தின் காட்சிகளாகிப் போகட்டும்
    பெயர்ச்சொல்லாய் வாழட்டும்
    மீறி மொழியைத் தொலைப்பதையோ – பாதி குறைத்து
    தங்க்லிஷ் எழுதுவதையோ
    நியாயமென்றுரைப்போர் நஞ்சினை –
    எந்த வாளிட்டு அறுப்பது?

    ஆங்கிலம் முக்கியம்
    அரபுமொழி முக்கியம்
    அந்நிய மொழிகள் முக்கியம்
    அதையெலாம் அதுவாகப் பேசுவதுபோல்
    தாய்மொழியும்
    தமிழர்க்கு அழகில்லையா ?

    மானம் போயின் தெருவில் பிணமான
    இனத்திற்கு
    தனதானமொழி தமிழது முகம் தொலைக்குமெனில்
    சினமின்றி எழுதும் கவிதையும் தீதன்றோ ?

    எனவே -
    எனவே உறவுகளே..

    அங்கமங்கமாக பிறமொழி கலந்து குழந்தைக்கு
    மில்கோடு ஹாட்கப்பில் தருவோரே,
    தமிழை தினம் தினம் பிளேட்டில்
    ரைசோடு போட்டுக் கொல்வோரே..

    இனி -
    கொஞ்சம் கொஞ்சமாக தனை மாற்றுங்கள்
    தமிழையினி யேனும்
    அழகு கொஞ்சப் பேசுங்கள்;

    மொழி நமக்கு உயிராக வேண்டாம்
    மொழியாகவே இருக்கட்டும்
    முழுதாகப் பேசமட்டும் முப்பொழுதும் கிடைக்கட்டும்
    வாழ்க தமிழ் பேசுவோர்!!
    -----------------------------------------------------------------------------------------------
    வித்யாசாகர்

    ReplyDelete
  25. அன்புத்தம்பி சமூக விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்,

    இந்தக் கவிஞர் கவியருவி வித்யாசாகர் அவர்களை, இத்தளத்தில் கவிதைகள் பதிய நீங்கள் அனுமதிப்பீர்களேயானால், உங்களின் சார்பாக யான் அவர்களிடம் தொடர்பு கொண்டு அறிவிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக உங்களது ஆசைக்கு எனது ஆதரவும் உண்டு நல்ல கவிஞ்சரை ஆரிமுகம் செய்துள்ளீர்கள்

      Delete
    2. உறுதியாக உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்பித்தான் நம் தளத்தின் நிர்வாகி அவர்களின் அனுமதியை எதிர்பார்த்து உள்ளேன். ஏற்கனவே, அதிரையின் வித்து- முத்துப்பேட்டையின் முத்து- வித்தகக் கவிதையின் புத்தகம்- கவியருவி மலிக்கா ஃபாரூக் அவர்களை அறிமுகம் செய்து அவர்களின் நேர்காணலை ஈண்டுப் பதிய சென்ற விடுப்பில் யானும் நிர்வாகி நிஜாம் அவர்களும் மிகவும் ஆவலுடன் ஆயத்தமான நேரத்தில் திடீரென்று எனக்குக் கண்ணில் அடிபட்டதால் நேரில் முத்துப்பேட்டைக்குச் சென்று அந்தக் கவிமுத்தைக் கண்டு நேர்காணல் பதிய முடியாமற் போனதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அன்புடன் குழுமத்தில் உறுப்பினர் என்பதால் ஆரம்பமாக :அன்புடன் மலிக்கா:” என்று அழைக்கப்பெற்றவர்; இதுபோல் ஈண்டுப் பதிவு செய்துள்ள கவிஞர் கவியருவி வித்யாசாகர் (குவைத்) அவர்களும் எங்களின் கவிதைக் குழுமத்தில் இருப்பவர்கள்; ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் கவிதைக் குழுமத்தில் இருக்கும் அனைவரையும் இந்தத் தளத்தில் பதிய வைப்போம், இன்ஷா அல்லாஹ், நிர்வாகி நிஜாம் அவர்களின் அனுமதி இருக்குமானால்...

      Delete
  26. அருமை வாசகர்களே! அடியேன் ஆங்கிலத்துக்கு எதிரி அல்லன்; யானும் 1981 முதல்(அதிரையில் தொடங்கி) இற்றை நொடி வரை (அபுதபியிலும்) இலவயமாக ஆங்கில அடிப்படை இலக்கணம் கற்பிக்கிறேன்; மேலும், அமெரிக்கப் பேச்சுப் பயிற்சியும் கற்பிக்கிறேன். எனவே, எவரும் என்னிடம் ஆங்கிலம் கற்றுக் கொள்ள விரும்பினால், என்மின்மடல் முகவரி :kalaamkathir7@gmail.com க்குத் தொடர்பு கொள்ளலாம்; என்னால் இயற்றப்பட்டச் சிறு கையேடும் அனுப்பி வைப்பேன்.

    எந்த மொழியையும் அதன் இலக்கணத் தூய்மையுடன் இருக்க வேண்டும்; எழுத வேண்டும்; பேச வேண்டும் என்பதே எம் கொள்கையும் நிலைபாடும். அதனாற்றான் யான் கற்ற யாப்பிலக்கணத்தைத் தழுவிப் பாக்கள் வனைகின்றேன்; என் வலைத்தளம் http:www.kalaamkathir.blogspot.com/ (கலாமின் கவிதைகள்) என்னும் என் கவிதைச் சோலை, தமிழ் மொழியிலும், , ஆங்கில மொழியில் GARDEN OF POEMSஎன்றும் இந்த முகவரியில் (http://gardenofpoem.blogspot.ae/ பதிந்து வருகின்றேன்.

    என்னைப் பற்றிச் சரியாகப் புரிந்தவர்களும் உளர் என்பதற்கு, அதிரை நியூஸில் என் கவிதையின் இசைவடிவம் கேட்டுப் பின்னுட்டமிட்ட ஓர் அன்பர் இவ்வாறு எழுதியுள்ளார்:
    \\
    DIGITECH10 November 2013 12:19
    கலாம் காக்கா

    தமிழ் கவிதையில் மட்டுமல்ல

    இவர் ஆங்கிலத்திலும் புலமைவாய்ந்தவர்








    இந்த இணைப்பில் காண்க

    http://theadirainews.blogspot.in/2013/11/blog-post_8311.html

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers