.

Pages

Monday, November 11, 2013

எமனை அழைக்கும் மானுட வர்க்கம் !

இதம் தரும் காற்றை
கட்டிட இடிபாடுகளுக்குள்
தொலைத்து விட்டு...

கடல் அலை தேடி
ஓடும் காலமிது.

புழுதி பறக்கும் சாலையில்
உயிர் பிழைக்க
புகலிடம் தேடும்
இயற்கை காற்றும்...

வாகன புகையில்
சிக்கிச் சிதைந்து
சின்னா பின்னப் பட்டும்
தன் பணியை செய்யும்
பிரான வாய்வாக.

வாசலில் வந்து நிற்கும்
காற்றை தாளிட்டு மூடி
வஞ்சகரை விரட்டுவது போல்
ஜன்னலுக்கும் திரைச் சீலையிட்டு
காற்றை விரட்டி..
ஏசி அறைக்குள்
எமனை அழைக்கும்
மானுட வர்க்கம்.
 சசிகலா

10 comments:

  1. சிறந்த விழிப்புணர்வு !

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  2. வணக்கம்
    அருமையான விழிப்புணர்வுக் கவிதை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பசுமையையும் இயற்கையையும் மனிதன் தனது சுய தேவைகளுக்காக அழித்து வருகிறான். அப்படி அழிக்கப் படுவதால் இயற்கையான காற்றைக் கூட சுவாசிக்க முடியாமல் போய் விட்டதை நன்கு உணர்த்தியுள்ளீர்கள். அருமை.

    ReplyDelete
  4. ஜன்னலுக்கும் திரைச் சீலையிட்டு
    காற்றை விரட்டி..
    ஏசி அறைக்குள்
    எமனை அழைக்கும்
    மானுட வர்க்கம்./////

    சகோதரிக்கு ஒரு ஷப்பாஸ் நல்ல விழிப்புணர்வு

    ReplyDelete
  5. அக்கால வீடு
    அதில் நடுவே
    விசாலமாக இடம் விட்டு
    காற்றும் மழையும் வீட்டினுள்
    பாதுகாப்பான வாழ்க்கை
    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.

    இன்றோ
    இட நெருக்கடியில்
    காற்றுப்புகா சுவர் அடைப்புகள்.
    அதனால்
    காற்றைத் தேடி
    கடல் அலைகளைத் தேடி

    வீதியில் கிடைக்கும் காற்றிலும்
    பீதியைக் கிளப்பும்
    கரும் புகையும், கொடும் தூசுகளும்
    என்ன கொடுமை ?

    காசு கொடுத்து
    தண்ணீர் பாட்டலில்
    காற்றும்
    காசு கொடுத்து
    இனி சுவாசிக்க வேண்டுமா ?

    சுற்றுப்புற சூழலை
    நாம் கெடுக்கவில்லை !
    நம்மை நாம்
    கெடுத்துக் கொள்/ல்கிறோம் ?

    இதமான அன்றைய வீடுகள்
    இன்று இல்லை
    அதனால்
    பசுமை வீடுகள்
    இன்றைய காலத்து பேச்சு

    இயற்கை காற்றை
    இவன் காசு கொடுத்து
    ஏ சி காற்றாய்
    ஏற்றுக் கொள்/ல்கிறான்

    அதனால்
    மங்கை சசிகலா
    இங்கு புரியாமலா !
    எமனை அழைக்கும் மானுட வர்க்கம் !
    என்றார் !

    ReplyDelete
  6. பாட்டினால் விளக்கினீர் “பசுமை”ப் புரட்சி
    கேட்டிடு தோழா! கேடுகள் வாரா
    காட்டினை அழித்து கட்டிடம் கட்டினால்
    வீட்டினுள் காற்று வீசிடுமா என்ன?!



    ”ஏசி”க் காற்று எல்லார்க்கும் கிட்டிடுமா?
    யோசித்துப் பார்த்து உன்னறிவில் பட்டிடுமா?
    “ஓசான்” படலமும் ஓட்டை ஆனதால்
    சுவாசிக்கக் காற்று சும்மா கிட்டிடுமா?



    தென்றல் உன்னைத் தீண்டிட வேண்டும்;
    மன்றலில் மலர்கள் மணத்திட வேண்டும்;
    குன்றாது மழையும் கொட்டிட வேண்டும்;
    நன்றாய் மரங்களை நட்டிட வேண்டும்



    வீட்டில் தோட்டம்; வீதியில் மரங்கள்;
    நாட்டில் “பசுமை”; நம்வாழ்வும் செழுமை!!!
    உயிர்போல் மதித்து; உரமிட்டு வளர்த்து;
    பயிர்களைப் போற்று; “பசுமை”க் காத்திடு



    தாய்போல் உன்னைத் தாங்கிடும் மண்ணின்
    சேய்போன்ற மரங்களை சேதாரம் செய்தால்
    நோய்தீர்க்கும் மூலிகை நொடியில் கிட்டுமா?
    ஓய்வின்றி மரங்களை ஒடித்துப் போடாதே



    பிறப்பின் துவக்கம் படுத்திட்ட மரக்கட்டை
    இறப்பில் உனக்கு இடும்பெயர் “கட்டை”
    இடுகாடு சுடுகாடு இரண்டிலும் மரக்கட்டை
    கொடும்வெயில் சொல்லும் குளிர்நிழல் மரத்தினையே..!!!!!



    மரத்திலிருந்து வீழ்ந்தப் பூவே
    மரக்கிளையை நோக்கிப்
    பறக்கும் வண்ணத்துப் “பூ”ச்சியாய்..!

    காணாமற் போனவைகள்;
    காலம் பதித்தக்
    காலடிச் சுவடுகள்


    ReplyDelete
    Replies
    1. தீபாவளி ஸ்பெசல் என்று வார இதழ்கள் சப்ளிமன்ட்டறி தருவதுபோல் கூடவே உங்களது கவிதையும்

      Delete
  7. இயற்கைக்கு ஏது ஈடு.

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.

    தூங்கிக் கொண்டிருக்கும் எமனையும் தட்டி எழுப்புவதில் நம்மவர்கள் வல்லவர்கள்.

    சகோதரியின் அருமையான கவி வரிகள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  9. நல்ல கவி இரத்தின சுருக்கமான கவி ..

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers